மணிக் கூண்டு
மயிலாடுதுறை - எனது வாழ்வில் இரண்டற கலந்துவிட்ட ஊர். உலக நாடுகள் எங்கு சென்றாலும்வசித்தாலும் அது எப்படிப் பிறந்த ஊரின் மேல் எண்ணற்ற ஏராளமான உணர்வுகள், ஏக்கங்கள், சிந்தனைகள்? அதுவும் தாய் மண்ணைவிட்டு பல மைல்கள் தூரம் பிரிந்து இருக்கும் பொழுது அதன் மேல் ஏற்படும் உணர்வுகளை வார்த்தையில் எப்படி சொல்வது அல்லது வடிப்பது?
மயிலாடுதுறை என்றாலே எனக்கு முதலில் நினைவில் வருவது "மணிக்கூண்டு". இந்த மணிக் கூண்டைசுற்றிதான் முக்கியமான கடைவீதிகள், வியாபார கடைகள் எல்லாமே. எனது நண்பர்கள் பலரின்வியாபாரம் முழுக்க இந்த மணிக் கூண்டைச் சுற்றிதான் உள்ளன.
இந்த மணிக் கூண்டில் மிகப் பெரிய கடிகாரம் ஒன்று அதன் மேலை இணைக்கப் பட்டிருக்கும். இந்த மணிக் கூண்டுதான் மயிலாடுதுறையின் நினைவுச் சின்னம். ஆகையால் இதன் பெயரிலே இந்த வலைப் பூவை எழத திட்டம்.
நன்றி...
4 Comments:
வாங்க சிவா..வாங்க.
உங்களுடைய வரவு நல்வரவாகுக...
ஆமாம், மணிக்கூண்டுல கடிகாரம் இருக்கும்னு கேள்விப்பட்டதே இல்லையே ? ? :-)
( சும்மா ..தமாஷுக்கு..)
Welcome Siva...
Mooks, Manikoondu is there.. as usual not functioning!
மயிலாடுதுறை கடை வீதியில் நடு நாயகமாக விளங்கும் மணிக்கூண்டு இன்றுமு; அப்துல் காதரின் பெயரைச் சொல்லிக் கொண்டிருக்கிறது.
இந்த மணிக்கூண்டு அவர் நிறுவியது. இதன் திறப்பு விழா 1943 நவம்பர் 23ந் தேதி நடந்தது. அப்போதைய சென்னை மாநில (தமிழ்நாடு) ஆளுநர் ஹோப் என்ற வெள்ளைக்காரர் வந்து, மணிக்கூண்டை திறந்து வைத்தார்.
இந்த விழாவில் ஆளுநரை வரவேற்று மாலை சூட அப்துல் காதர் ஒருவருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டது.
1943லேயே இந்த மணிக்கூண்டு “நீடூர் மாயவரம் பாத்திரக் கடை ஹாஜி சி.ஈ. அப்துல்காதர் சாகிப் அவர்களால் டூனிஷ்யா வெற்றிக்காகக் கட்டிய மணிக்கூண்டு” என்று மணிக்கூண்டில் பொறிக்கப்பட்ட வாசகம் இன்றும் இருக்கிறது.
ஹாஜி சி.ஈ. அப்துல்காதர் சாகிப் எனது தந்தை (தகப்பனார்)
Please visit
http://nidurseason.wordpress.com/?p=573&preview=true
டுநீசியா வெற்றிக்காக மயிலாடுதுறையில் மணிக்கூண்டு
அன்புடன் மிக்க நன்றி
Post a Comment
<< Home