Tuesday, January 04, 2005

(ஸ்வேதஸ்) - Swades

நான் வசிக்கும் அப்பார்ட்மெண்ட்ஸில் இருந்து 5 நிமிட நடைப் பயணத்தில் இந்திய திரைஅரங்கம் உள்ளது. இங்கு தினமும் ஹிந்தி திரைப் படமும், வருடத்திற்கு 4 அல்லது 5 முறை தமிழ்த் திரைப் படமும் வெளியாகின்றது.

கடந்தவாரம் நான் ஹிந்தித் திரைப் படமான ஸ்வேதஸ் (Swades) படம் பார்க்கப் போய் இருந்தேன். இத்திரைப் படம் வந்து கிட்டதட்ட 6 வாரங்கள் ஆன பின்பும் திரை அரங்கில் கிட்டதட்ட 250 வந்து இருந்தார்கள்.

ஹிந்தி நடிகர்களில் Shah Rukh Khan மனம் கவர்ந்த நடிகர். நல்ல திறைமையான நடிகரும் கூட. இந்தப் படத்தை இயக்கிய இயக்குனர் Ashutosh Gowariker நல்ல திறைமையான இயக்குனர், ஏற்கனவே Lagaan என்றப் படத்தை எடுத்து Osacar வரை உயர்ந்தவர்.

Shah Rukh Khan NASAவில் வேலைப்பார்த்துக் கொண்டு விடுமுறையில் தான் வசித்த இந்தியாவிற்கு செல்லுகிறார். அங்கு அவரை வளர்த்த தாயை(ஆயா) பார்த்து அவரை அழைத்து வரப் போகிறார். அங்குச் சென்ற அவர் அந்த ஊர் மக்கள் படும் துயரங்கள் மற்றும் அவர்கள் வாழும் வாழ்க்கை முறை
இவற்றைப் பார்க்கிறார். அங்கு ஓர் பள்ளி ஆசிரியை (Gayatri Joshi) பார்த்து அவரை காதலிக்கவும் ஆரம்பித்து விடுகிறார். தன்னுடைய காதலிக்கு வரவேண்டிய குத்தகைநில பாக்கியை வசூலிக்க ஒர் சிறிய கிராமத்திற்க்கு செல்லும் வாய்ப்பு எற்படுகிறது.

கதையின் ஒட்டுமொத்த கருவும் இந்த பயணத்தில் நிதர்சனமாக, கிராமத்தில் அந்த எழை விவசாயி படும் துயரங்களை விவரிக்கும் பொழுது, நம் இந்திய கிராமங்களில் நம் கிராமத்து மக்கள் படும் வேதனைகளை காட்சி அமைப்பில் பார்க்கும் பொழது மனம் படும் வேதனைக்கு அளவேயில்லை.
இயக்குனரின் சமுதாய சிந்தனை உண்மையில் பாராட்டப் படவேண்டிய விசயம்.

Shah Rukh Khan இரயிலில் திரும்ப வரும் போழுது, சின்ன ஒர் நிலையத்தில் நிற்கும் பொழுது 25 பைசாவிற்கு தண்ணீரை ஓர் டம்ளரில் கொடுத்துவிட்டு, பாக்கி சில்லரைக்கு அந்த சிறுவன்
கையில் உள்ள காசுகளை எண்ணும் பொழது, Shah Rukh Khan கண்களில் கண்ணீர் மட்டும் அல்ல. நம் இதயமும் அதனோடு கரைவதை கட்டுப் படுத்த முடியவில்லை. அதுமட்டும் அல்ல படம் முழுவதும் அவர் சுத்தப்படுத்தப் பட்ட தண்ணீரை குடித்துவிட்டு அந்தப் பையன் கொடுக்கும் அந்த டம்ளரில் அவர் வேகமாக குடிப்பது நம் நெஞ்சைத் தொடுகிறது.

இந்தியா / தமிழகம் திரும்பச் செல்ல வேண்டும், மீண்டும் அங்குச் சென்று குடியேறே வேண்டும், நம்மால் ஆன உதவிகளை செய்ய வேண்டும் என்ற சிந்தனை உள்ளவர்களுக்கு நிச்சயம் இந்தப்
படம் ஒர் உந்துதல். மற்றப் படி படத்தில் நிறைய குறைகள் தென்படலாம், சொல்லவந்த கருத்தை ஆழமாக சொல்லமால் இயக்குனர் இருந்து இருக்கலாம். ஆனால் என்னைப் பொறுத்தவரை Shah Rukh Khan நடிப்பு மற்றும் Ashutosh Gowariker இயக்கம் அருமை.

ஒய்வாக இருக்கும் பொழுதும், நம் ஊர் நினைவு உள்ள பொழது, இந்தப் படத்தை DVDயில் பாருங்களேன்..

நன்றி
மயிலாடுதுறை சிவா...

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

0 Comments:

Post a Comment

<< Home

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது