நடிகர் விவேக்கின் அகங்காரம்...
கடந்த ஆண்டு நடிகர் விவேக் வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை விழாவிற்கு அழைக்கப் பட்டார். வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை ஒவ்வொரு ஆண்டும் சூலை மாதம் 4,5,6 தேதிகளில் ஏதாவது ஒர் மாநிலத்தில் நடைபெறுவது வழக்கம். நான் கடந்த 5 ஆண்டுகளாக அவ்விழாவிற்குச் சென்று வருவது வழக்கம். இந்த ஆண்டு எங்கள் வாசிங்டன் தமிழ்ச் சங்கம் சார்பாக இவ்விழாவை எடுத்துப் போட்டு செய்தோம். இந்த விழாவிற்கு கிட்டதட்ட 1800 பேர்கள் வந்து இருந்தார்கள். கிட்டதட்ட 50% மக்கள் நடிகர் விவேகின் நிகழ்ச்சிக்காக ஆவலாக காத்து இருந்தார்கள். விழா மொத்தம் 2 தினங்கள். ஏகப் பட்ட குழந்தைகள் மற்றும் சில பெண்கள், சில ஆண்கள் விவேக் உடன் புகைப் படம் எடுத்தக் கொள்ள ஆவலாக இருந்தார்கள். விழா ஒருங்கிணைப்பு குழுவில் நானும் ஓர் அங்கம். விழா முதல் நாள் அன்று ஓர் 10 வயது சிறிமி என்னிடம் வந்து Unlce "விவேக் Uncle" எப்போழுது வருவார்கள் என்று மிக ஆவலாக கேட்டாள். நான் அச்சிறுமியிடம் சீக்கரம் வந்து விடுவார்கள் என்றுச் சொல்லிவிட்டு, மதியம் நடிகர் விவேக் தங்கி இருக்கும் அறைக்குச் சென்று அவருடன் பேசிக் கொண்டு இருந்தப் பொழுது விழா அரங்கத்தில் நிறையப் பேர்கள் உங்களிடம் பேச வேண்டும், பார்க்க வேண்டும், புகைப் படம் எடுத்துக் கொள்ள வேண்டும் என பிரியப் படுகிறார்கள் நீங்கள் வர முடியுமா? என்று கேட்டதற்கு அவர் என்னிடம் எனக்கு நாளை மதியம் 3 மணிக்குதான், என்னுடைய நிகழ்ச்சி என்றும் அதற்கு முன்னால் என்னால் வர இயலாது என்று சொல்லி விட்டார். என் மனம் அடைந்த வேதனைக்கு அளவேயில்லை. காரணம் நாம் திரையில் பார்க்கும் "நபர் வேறு, நேரில் பார்க்கும் நபர் வேறு". பாழாய்ப் போன மனம் எல்லாவற்றையும் நம்பி விடுகிறது. அதுமட்டும் அல்ல, அடுத்த நாள் விழாவில் அவருடைய தனி நடிப்பு, சிறு நாடகம் எல்லாவற்றையும் நீக்கிவிட்டு, அவர் நடித்தத் திரைப் படத்தில் இருந்து பல முக்கியமான காட்சிகளை (அதற்கு VCD or DVD தயாரிக்க தமிழ்ச் சங்கப் பேரவை பணம் கொடுத்த கதை தனி கதை) மீண்டும்த் திரையில் காண்பித்து (அதில் பலவற்றை நாம் ஏற்கனவே பலவற்றை பார்த்து இருப்போம்) அதற்கு பின் கேள்வி பதில் நிகழ்ச்சிகளாக நிகழ்ச்சி சென்றது. இதில் இடை இடையே விழா ஒரிங்கிணைப்பார்களை கிண்டல் வேறு, நேரத்திற்கு காபி வரவில்லை என்றும், சாப்பாடு வரவில்லை என்றும். தமிழ்த் திரை உலகில் விவேக் தன்க்கென்று ஓர் தனி பாணியை ஏற்படுத்திக் கொண்டு முண்ணணி நடிகர் வந்தத்தில் மகிழ்ச்சியே, ஆனால்
அந்த நிகழ்ச்சி முழுக்க முழுக்க தற்பெருமைகளை பேசிக் கொண்டு இருந்தார். தமிழ் மொழி மிக சிறந்த மொழி என்றும், அமெரிக்க வாழ் தமிழர்களை பார்க்க வந்த்தில் ஏகப் பட்ட மகிழ்ச்சி என்றும் சொன்னார்.
ஆனால் நேரில் பழகும் பொழுது சுத்தமாக தமிழ் ஆர்வமும் இல்லாத, பழக எளிமையான மனிதர் போல் தெரியவில்லை.
எல்லாவற்றையும் விட மகா கொடுமை அவர் தனக்கென்று ஓர் உதவியாளர் வைத்து உள்ளார். அவர் போடுகின்ற கெடுபிடிகளைப் பார்த்து நொந்து போய்விட்டோம்.
அதாவது விவேக் வருகின்ற, நிற்கின்ற, உட்கார்கின்ற எல்லா இடத்திலுன் அவர் மேல் Focus Lamb வைக்க வேண்டுமாம்...
அவர் வருகிறப் பாதை மக்கள் நிறைய அமர்ந்து இருக்கிற கதவு வழியாக வந்து முழு மக்களின் கவனத்தைப் பேறவேண்டுமாமம்...
அவருடைய நிகழ்ச்சி முடிந்தவுடன் சிறுது நேரம் இருந்துவிட்டு உடன் சென்று விடுவாராம்...
நம்முடைய பணத்தில் வந்திவிட்டு ஏகப்பட்ட கெடுப்பிடிகள் வேறு...
ஆனால் மேடையில் தமிழ், தமிழ், தமிழ்...
இவரைப் பற்றி முன்னரே நான் கவனித்த விசயம், சன் தொலைக்காட்சியில் டாப் 10 பாடல்கள் தொகுத்து வழங்கிய காலத்தில் இவருக்கும் சன் தொலைக்காட்சிக்கும் ஏதோ தகராறு வர, அவர் அதனை சமாளிக்க முடியாமால் " நான் சார்ந்து இருக்கும் 1 கோடி (என்ன கணக்கோ) தேவர் இனம் என்னை காக்கும் என்றார்" என்ன கேவலமான சிந்தனை? இவரால் மிகப் பெரிய சக்தியை எதிர்க்க முடியாமல், உடன் தன்னுடைய சாதியை துணைக்கு இழத்துக் கொண்டார்.
திரைப் படத்தில் தந்தைப் பெரியாரின் கருத்துகளையும், நடிகவேள் எம்.ஆர்.ராதாப் போலவும் பேசி சமுதாயச் சிந்தனை உள்ளவர்ப் போல ஒர் மாயை உருவாக்கிக் கொண்டவர்...
திரைப் படத்தில் கோவில்களையும், கடவுளையும் பழித்து வந்தார், இந்து முண்ணனி அமைப்பாளர் ராமா கோபாலன் மிரட்டியவுடன், உடனே விவேக் நான் வெள்ளி கிழமை தோறும் கோவிலுக்குச் செல்லும் வழக்கம் உண்டு எனவும், என் விருப்பத் தெய்வம் பிள்ளையார் என்றும் பயந்துப் போய் அறிக்கை விட்டார்...
நம் தமிழ் மக்கள் "நடிப்பு " என்பது மற்றொரு ஒருத் தொழில் என்றும், நடிகர் வானத்தில் இருந்து குதித்தவர்கள் அல்ல என்றும் இதுப் போல சம்பங்களில் இருந்து நன்கு தெரிந்துக் கொள்ளலாம்.
இந்த வாரம் முதல் "Best கண்ணா Best" குங்குமத்தில் "ஒரு தினுசு கண்ணா தினசுகாக" எழதப் போகிறராம். முதலில் இவர் தன்னுடைய குண நலன்களை நன்கு மாற்றிக் கொண்டு பிறரைப் பற்றி எழிதினால் நன்று...
திரைப்படத்தில் "மனதில் உறுதி வேண்டும்" முதல் ஆரம்பத்தில் இன்று வரை தன்க்கென்று தனி இடத்தை மக்களிடம் பெற்றவர். அவரின் மீது எனக்கும் ஒர் தனி மதிப்பு இருந்தது. ஆனால் அருகில் நெருங்கி பழகும் வாய்ப்பு ஏற்பட்டப் பொழது எனக்கு அவரின் மீது இருந்த மதிப்பு தற்பொழது இல்லை. நமக்குப் பிடித்த ஓருவர் சமுதாயத்தில் நல்ல நிலையில் இருக்கும் பொழது அவரைப் பற்றி நமக்கு நல்ல அபிப்பிராயம் இருக்கும் பொழுது அவர் நாம் எதிர்பார்க்கின்ற ஏதார்த்தவாதி இல்லை என்றால் மனம் வருத்தம் அடையத்தான் செய்கிறது.
இதற்கு நேர்மாறாக பிரபல கவிஞர் அறிவுமதி அண்ணனைப் பற்றி அடுத்தக் கட்டுரையில் எழதுகிறேன்...எளிமையின் இலக்கணம்...அண்ணனைப் பற்றி விரைவில்...
நன்றி
மயிலாடுதுறை சிவா...
7 Comments:
நீங்கள் சொல்வது மிகச் சரி கணேசன்,
மிகப் பெரிய விழா எடுக்கும்ப் பொழுது பெரும்பான்மையான
மக்கள் நடிகர், நடிகை தேவை என்கிறார்கள். அதுமட்டும் அல்ல விளம்பரம் கொடுக்கும் பொழது அது உதவியாகவும், கவர்ச்சியாகவும் உள்ளது. மக்கள் மனம் மாற மாற நிச்சயம் அது நடக்கும். உங்கள் வருகைக்கு நன்றி.
சிவா...
சிவா! முதல்ல நடிகனுங்களை நம்ம வீட்டு ஆள நினைச்சிப் பார்க்கிறது தப்பு கண்ணா. புகழ் ஏற ஏற மதியிழந்து போவது யாவருக்கும் பொருந்தும். அதுக்கு விவேக் மட்டும் விதிவிலக்கல்ல. படங்களில் மின்னுவதெல்லாம் பொன்னல்ல.
அன்புள்ள சிவா,
சினிமா ஆளுங்களோட மறுபக்கம்( அதாவது ஒரிஜனல் பக்கம்) ரொம்பவெ பயங்கரமானது. நன்றின்னு
ஒரு வார்த்தை இருக்கறதே அவுங்களுக்குத் தெரியாது! எல்லாம் மானத்துலே இருந்து குதிச்ச கொம்பனுங்க!
திரையில் வர்ற நடிப்புக்கும், மேடையில் முழங்கும் வாக்குறுதிகளுக்கும் மக்கள் எப்ப மயங்காமல்
இருக்குறாங்களோ, அப்பதான் நாடு/ஜனங்க உருப்படுவாங்க!
என்றும் அன்புடன்,
துளசி.
தவறு உங்களுடையதுதான். நீங்களாகக் கற்பனைச் செய்துக் கொள்வீர்கள், அதற்கேற்ப மற்றவர்களும் நடக்க வேண்டும் என்று எதிர்ப்பார்ப்பீர்கள் என்றால் என்ன சொல்வது?
விவேக் அடிப்படையில் ஒரு நடிகர். டைரக்டர் சொல்வது போல் நடித்து, வசனகர்த்தா எழுதியதை பேசிவிட்டுச் செல்பவர். அவருடைய டயலாக் டெலிவரி, நடிப்பு ஆகியவற்றின் அடிப்படையில்தான் அவர் பிரபலம் ஆனார். அதை விடுத்து வேறு எதுவும் எதிர்ப்பார்ப்பது உங்கள் தவறு. அவர் உதவியாளர் அவருக்கு ஃபோகச் லைட் வைக்க வேண்டும் என்றுக் கூறி அதை நிறைவேற்றிக்கொண்டது எந்தத் தவறாகவும் எனக்குப் படவில்லை. அவர் கடமையைத்தான் அவர் செய்தார். அதைச் செய்யாவிட்டால் அப்பதவிக்கு அவர் லாயக்கல்ல.
நிற்க. நிகழ்ச்சிக்கு டிக்கட் போட்டிருப்பீர்கள்தனே? அதை இலவசமாக செய்திருக்க வேண்டும் என்று உங்களுக்கு யாராவது கூறியிருந்தால் ஒத்துக்கொண்டிருப்பீர்களா?
அன்புடன்,
டோண்டு ராகவன்
பின்னூட்டங்களைப் பார்த்தேன். உங்கள உதைக்கணும்யா. நீங்க தமிழ்ச்சங்கன்ற பேர்ல இவங்களை கூப்பிடறதுனாலாத்தான், இவங்களுக்கு கர்வம் தலைக்கு ஏறிடுது. நீங்கள் சொன்ன விசயத்தை ஒட்டிய இரு விசயங்கள்.
1. என் தங்கையின் கணவர், மாருதியில் (கார் தான்ப்பா)விற்பனை மேலாளராக இருக்கிறார். நீங்கள் சொன்ன அந்த நகைச்ச(சு)வை நடிகர், மாருதியில் புதிதாக வந்திறங்கிய ஒரு விலையுயர்ந்த மாடலை வாங்கச் சென்றார். RTO அலுவலகத்தில் 25,000 கட்டி, நியூமராலஜி படி தனக்கு ஏற்ற ஒரு காரின் எண்ணை தேர்வு செய்து, ஒரு நல்ல நாளாய் பார்த்து, காரை தன் வீட்டிற்கு ஓட்டிச் சென்றார்.
2. சென்னை சாலிகிராமத்தில் பிரசாத் ஸ்டுடியோ தாண்டி உள்ள இடத்தில் சில கோடிகள் செலவழித்து ஒரு ஆடம்பர பங்களாவை, வாஸ்து சாத்திரங்களின் முறைப்படி கட்டி வருகிறார். அந்த இடம், திரு.சேகர் (அதாம்பா, இந்த குடும்ப படங்கள் எல்லாம் எடுப்பாரே, வள்ளுவர் கலைக்கூடம்னு பேனரு வருமே, அவருதான்)அவர்களிடமிருந்து, ஒரு திரைப்பட சம்பள பாக்கிக்காக பிடுங்கப்பட்டது.
உண்மையைப் புரிந்து கொள்ளுங்கள்.
சின்னக் கலைவாணர் பற்றி தெள்ளத் தெளிவாகப் புரிந்து கொண்டேன். ஊருக்குத்தான் உபதேசம் என்பது சரியாகப் போயிற்று.
இப்படித்தான் இங்கு சிங்கப்பூஉரில் ஒரு வீட்டில் அறை ஒன்றை வாடகைக்கு எடுத்துத் தங்கி இருந்தேன். வீட்டின் சொந்தக் காரர்கள் ஏதோ நடிகரின் கலை நிகழ்ச்சிக்காக டிக்கெட் வாங்கி இருந்தார். குறிப்பிட்ட நாளில் அந்த நடிகர் வராமல் மற்ற சின்ன நடிகர்கள் வந்திருக்கிறார்கள் போல. வீட்டிற்கு வந்து "ஊரு காரன்லாம் ரொம்ப மட்டம்லா..காச வாங்கிட்டு வராம இருந்துட்டான்" என்று ஏக வசனத்தில் பேச ஆரம்பித்தார். (இந்தியர்களை இங்கு ஊர்காரன் என்பது வழக்கம்!). நான் அவருக்கு பயங்கர கோபத்தோடே விளக்கினேன். இவர் வாங்கிய டிக்கெட்டின் பணம் யார் யாருக்குப் போகிறதென்று! பின்னர் ஒரே ஒரு நடிகர் வராமல் போனதற்கா ஒட்டு மொத்த இந்தியர்களையும் தரக்குறைவாகப் பேசுகிறீர்கள் என அவரிடம் பெரிய சண்டை!!!(அதானே நாம எங்க சும்மா வந்தோம்??)
பதிவை விட பின்னூட்டங்களில் உண்மை வெளிப்பட்டது.(சிவா நிறைய பிழைகள். களைந்துவிடுங்கள்)
வேலில போற ஓனானை....!?
தமாசு நடிகரை தமாசு செய்ய கூப்புடாம.. தமிலு வளக்க கூப்ட்டா இப்பிடிதான்...
Post a Comment
<< Home