Original மதுரை முனியாண்டி விலாஸ்....
நண்பர் நாரயணன் "டீ கடையை" பற்றி அலசி மனதையும் அலசி விட்டார். ஏகப்பட்ட பின்னூட்டங்கள். அதன் பாதிப்பே, என் மயிலாடுதுறை நினைவுகள் உங்கள் பார்வைக்கு...
நான் பிறந்த வளர்ந்து, படித்து, வேலை பார்த்தது எல்லாமே மயிலாடுதுறையில் தான். எனது குடும்பம் சுத்த சைவ குடும்பம். ஆனால் நான் காலப் போக்கில் அசைவ பிரியராக மாறியதை உங்களோடு பகிர்ந்துக் கொள்ளவே ஆசை...
முதன் முதலில் 12 ஆவது படிக்கும் பொழுது முட்டை மற்றும் ஆம்லேட் சாப்பிட ஆரம்பித்தேன். பாழாய்ப் போன நாக்கிற்கு அதுப் பிடித்துவிட்டது. என் அம்மாவிற்கு தெரிந்தால் ரொம்ப வருத்தப் படுவார்கள் என்று நினைத்து அவர்களிடம் சொல்லவே இல்லை. பின் மெதுவாக கல்லூரிப் படிக்கும் காலத்தில் சிக்கன், மட்டன், மீன் வகைகளை நண்பர்களின் தயவில் சாப்பிட ஆரம்பித்தும், பின் நாள் அடைவில் அசைவத்திற்கு ஏங்க ஆரம்பித்த கதை தனிக் கதை...கிட்டதட்ட 9 ஆண்டுகள் அசைவம் வாழ்க்கையோடு ஒன்றற கலந்து விட்டது.
மயிலாடுதுறையில் நிறைய இஸ்லாமிய நண்பர்கள். அவர்கள் வீட்டில் நடக்கும் எந்த நல்ல நிகழ்ச்சிகளுக்கும், ரம்லான், பக்ரீத் போன்ற விழாக்களுக்கும் நாக்கை தொங்கப் போட்டு மட்டன் பிரியாணிக்கும், தாளிச்சாவிற்க்கும் அலைந்த சோகம் உள்ளதே அதை சொல்லி மாளாது. அது எப்படிதான் முஸ்லிம் வீட்டு சமையலுக்கு அப்படி ஓர் மணம் மற்றும் சுவையோ...
மயிலாடுதுறையின் பிரபல கடைகள்: அன்னை மெஸ்(தங்கப்பன் கடை), தட்டி மெஸ், மதுரை முனியாண்டி விலாஸ்...
அன்னை மெஸ்(தங்கப்பன் கடை) : மயிலாடுதுறை ரயிலடியில் உள்ளது. இங்கு கிடைக்கும் புரோட்டாவிற்கும், சிக்கன் சால்னாவிற்கும் ஈடு இணை எதுவும் இல்லை. இரவு நேரங்களில் நிறைய இளைஞர்களும், நகரின் முக்கியப் புள்ளிகளை பலரை காணலாம். ஏதாவது விசேசத் தினம் என்றால் "வான் கோழி பிரியாணி" போடுவார்களே, சூப்பரோ சூப்பர்!!!. கோழி பிரியாணியைவிட "வான்கோழிப் பிரியாணி" செம டேஸ்ட்!!!. அந்தக் கடையில் "அமராவதி சிக்கன்" என்று மற்றொரு வகை உணவு உள்ளது, அதவும் மிகச் சிறப்பாக இருக்கும். மயிலாடுதுறையில் வாழந்துக் கொண்டு, அதுவும் அசைவப் பிரியராக இருந்தால் நிச்சயம் இந்தக் கடையின் சுவையான உணவை ரசித்து இருப்பார்கள்.
தட்டி மெஸ்: மயிலாடுதுறையில் கூரைநாடு என்ற இடத்தில் இந்த கடை உள்ளது. இந்தக் கடை காலை 11.30 மணி முதல் மதியம் 4.30 மணி வரை மட்டுந்தான். மதியம் சுட சுட சாதமும், கோழி குழம்பும், மீன் குழம்பும், மட்டன் குழம்பும் வாழை இலையில் பருமாறுவார்கள். இந்த கடையில் மிகப் பிரதித்தம் சுட சுட மீன்கள் பொரித்து தரப் படும். நல்ல காரமாக, எண்ணெய் நிறைய ஊத்தி, மினு மினு வேண்று நல்ல ரோஸ்டாகவும் அதே சமயத்தில் நன்கு வெந்தும் அந்த மீன் ருசி உள்ளதே, எப்படி வார்த்தையால் சொல்வேன்? சைவக் குடும்பத்தில் பிறந்து இப்படி 25 ஆண்டுகள் வீணாக்கி போனதே என்றே பலமுறை வருந்தி இருக்கிறேன். ..
மதுரை முனியாண்டி விலாஸ்: இந்த கடை பேருந்து நிலையம் அருகில் உள்ளது. பரவாயில்லை ரகம்தான். மேலும் இங்கு இம்பலா, செட்டிநாடு, TPS, அனந்தராமன், இப்படி பலக் கடை இருந்தாலும் அன்னை மெஸ்ஸும், தட்டி மெஸ்ஸுமே சூப்பரோ சூப்பர்.
அண்ணாமலை பழகலைக் கழகத்தில் படித்தப் பொழுது, அங்கு இருந்து சீர்காழி வரும் வழியில் "புத்தூர் செயராமன்" கடை உள்ளதே, அதேப் பற்றி தனிப் பதிவே பதியலாம். பல்கலைக் கழகத்தில் மாணவர்கள் படித்துக் கொண்டும், மெஸ்ஸில் சாப்பிட்டுக் கொண்டும் 10கீமீ பயணம் செய்து இந்த கடையில் கிடைக்கும் இரால் மீன்களுக்கு வரும் கூட்டம் உள்ளதே, சொல்லி மாளாது!!! தினமும் மதியம் மட்டுமே கடை, ஆனால் 15 அல்லது 20 நிமிடம் காத்து இருந்துதான் சாப்பிட முடியும். கடைசியாக இந்த கடை முதலாளி பெரிய பாத்திரத்தில் கெட்டியான தயிரை அள்ளி அள்ளிப் போடுவார் பாருங்கள், Chanceஏ இல்லை!!!
நண்பர்களோடு எந்த ஊர்களுக்கு சென்றாலும் அந்த ஊரில் உள்ள நல்ல அசைவ கடைக்களுக்கு செல்லுவது வழக்கம். சீர்காழியில் ஆயர்பாடி மெஸ், சிதம்பரம்த்தில் AA, மூர்த்தி மெஸ், குடந்தையில் பாண்டியன் மெஸ், தஞ்சையில் முனியாண்டி விலாஸ், திருச்சியில் அமாரவதி, மதுரையில் செட்டிநாடு மெஸ், அம்மா மெஸ், சென்னையில் ராயப்பேட்டா பொன்னுச்சாமி, திநகர் விருதுநகர் மெஸ், கோவையில் கெளரி சங்கர் இப்படி வாய் வைக்காத இடங்களே இல்லை எனலாம்...
சமுதாயத்தில் பொருளாதார சூழ்நிலையில் கடினப் படும் பொழுது எதைப் பார்த்தாலும் எங்கும் மனசு, இப்பொழுது நாலு காசு கண்ணில் பார்க்கும் பொழுது, Bread, Donuts, Cereal, Frozen Foods, Sandwitch என்று வாழ்க்கை கழிகிறது.
நல்லப் படியாக மீண்டும் தாய் நாட்டுக்கு சென்று குடியேற வேண்டும் என்கிற வெறி நாளுக்கு நாள் அதிகரிக்க நமது உணவு வகைகளை மீண்டும் எப்போழுதும் போல் சாப்பிட வேண்டும் என்று நினைப்பது தவறா...
திரும்பி நமது தாய்நாட்டிற்கு செல்ல நினைப்பதில் நம் உணவு வகைகளும் ஒரு காரணமா அல்லது பெரும் பங்கு உள்ளதா இல்லையா? என்பதை உங்கள் சிந்தனைக்கே விட்டு விடுகிறேன்...
என்றும் அன்புடன்
மயிலாடுதுறை சிவா...
4 Comments:
வணக்கம்.
உங்களுக்கு கொலற்ரால் சோதனை அவப்போது எடுக்கும் பழக்கம் உண்டா..;)
காளியகுடி சைவ உணவகம்.
ஒருகாலத்தில் அங்கு காபி ரொம்ப பிரபலம்.
எனக்கு அங்கு மிகப் பிடித்தது கொதுமை அல்வா.
தங்கள் வருகைக்கு மிக்க நன்றி.
சிவா...
///திரும்பி நமது தாய்நாட்டிற்கு செல்ல நினைப்பதில் நம் உணவு வகைகளும் ஒரு காரணமா அல்லது பெரும் பங்கு உள்ளதா இல்லையா? என்பதை உங்கள் சிந்தனைக்கே விட்டு விடுகிறேன்...///
சிவா.
சந்தேகமே இல்லாமல் உணவுவகைகளுக்கு இதில் ஒரு பெரும் பங்கு உண்டு. மனுசன் நல்லாச் சாப்புடக்கூட முடியலைன்னா ..வாழ்க்கையில் என்னத்தைப் பெருசா அள்ளிக்கொண்ட ுபோகப் போறோம்.. :-)
சிவா,
நான் சைவமாக மாறிப் பல ஆண்டுகள் ஆகின்றன. அதற்கு முன்பும்கூட எனக்கு அசைவத்தின் மேல் அப்படி ஒரு ஈர்ப்போ, பற்றோ இல்லை. ஆனால் நீங்கள் இன்னும் ரெண்டு பதிவு இதுமாதிரியே எழுதுனீங்கன்னா நானும் அசைவத்தின் தீவிர ரசிகனாகிவிடுவேனோ என்று சந்தேகப்படுகிறேன். :-)
Post a Comment
<< Home