பாரதிராசா - வாழ்க பல்லாண்டு!
வாசிங்டன்.
தமிழ்த் திரை உலகின் மறக்கமுடியாத ஓர் உன்னத கலைஞன் இயக்குனர் பாரதிராசா. அவருக்கு கடந்த மாதம் சூலை 17 பிறந்ததினம். அவரை மனதார வாழ்த்தவே இந்த பதிவு. அவரை ஏற்கனவே வார இதழ் குமுதம் தனது "வெப் டிவி" மூலம் வாழ்த்தி மற்றும் மிக அருமையான பேட்டியை ஒலி/ஓளி பரப்பி உள்ளது. தமிழ் மக்கள் அவசியம் அந்த பேட்டியை பார்க்க வேண்டும். என்ன ஒரு அருமையான பேட்டி. அவற்றில் சிலவற்றை எனக்கு இங்கே சொல்ல ஆசைப் படுவதன் விளைவே இந்த பதிவு.
தமிழ் திரை உலகில் என் மனதை மிகவும் பாதித்த ஓர் இயக்குனர் என்றால் அது பாரதிராசா என்றால் மிகை அல்ல. அவரின் அருமையான அந்த கரகரப்பு குரல் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. அவருடைய பல பேட்டிகளை நான் விரும்பி படித்தும் கேட்டும் இருக்கிறேன். பாரதிராசா எனக்கு தெரிந்த வரையில் மனதில் பட்டதை தெளிவாக சொல்ல கூடியவர். பேசும் பொழுது அவரின் உணர்ச்சி கொப்பளிக்கும். அவருடைய பேச்சில் அவர் ஓர் தமிழ் ஆர்வலன், உணர்வாளன் என்பது நன்கு தெரியும். கிராமத்து கதைகளை,
கிராம மனிதர்களை, களங்களை, சாதி விருப்பு வெறுப்புகளை மிக அழகாக கையாண்டாவர் என்றவர் அது மிகை அல்ல.
தன்னுடைய தாயை மிகவும் நேசிப்பவர் பாரதிராசா. அம்மாவின் பேரில் ஓர் உன்னத காவியம் "கருத்தம்மா" எடுத்து அந்த படத்திற்கு தேசிய விருதும் வாங்கி கொடுத்தவர். பெண் சிசு கொலை தவறு என்பது வெண் திரையின் மூலம் மக்களுக்கு அவர் கொண்டு சென்ற விதம் மிக அருமை.
என்னை பொறுத்தவரை பாரதிராசாவின் படங்களுள் வைரம் என்றால் "முதல் மரியாதை" மட்டுமே. "16 வயதினிலே", "சிவப்பு ரோஜாக்கள்", "வேதம் புதிது", "கடலோர கவிதைகள்" "கிழக்கு சிமையிலே" "அந்தி மந்தாரை" என பல படங்கள் எடுத்து இருந்தாலும் "முதல் மரியாதை" கென்று ஓர் தனி இடம்
தமிழ் திரை உலகில் உண்டு. நடிப்பு திலகம் "சிவாஜியை" நடிக்க வைத்த பெருமை உண்டு பாரதிராசாவிற்கு. அவருடையப் பேட்டியில் எனக்கு தனி கர்வம் உண்டு, நடிக்க தெரியும் என்று என்றார், மேலும் நான் சிவாஜிக்கே
நடிப்பு கற்றுக் கொடுத்தவன் என்று அழகான செருக்கோடு சொன்னார். இப்படி சிவாஜியைப் பற்றியும் அவருக்கு நடிப்பு சொல்லி கொடுத்தைப் பற்றியும் பேசிக் கொண்டு இருக்கும் பொழுது, "நானேபட்கேரை" பற்றி புகழ்ந்தார். பட்கர் மிகப் பெரிய நடிகன் என்றார். அவருடைய அடுத்தப் படமான "பொம்மலாட்டத்தில்" பட்கரின் நடிப்பைப் பற்றி வியந்தார்.
ஒளிவு மறைவு இல்லாமல் "பாலுமகேந்திரா" படங்களை பார்க்கும் பொழுது இதுப் போல நம்மால் எடுக்க முடியவில்லையே என்று பயந்தேன் என்றார். 1967ல் அரசியலில் சேர வேண்டும் என ரொம்ப ஆசைப் பட்டதாக சொன்னார். ஆனால் பெருந்தலைவர் காமராசர், ஓர் மாணவன் சீனிவாசனால் தோற்க அடிக்கப் பட்டதை கேள்விப் பட்டப் பிறகு நமக்கு அரசியல் ஒத்து வராது என்று முடிவு எடுத்தாராம்.
மனதை கவர்ந்த கவிஞன் என்றுமே கண்ணாதாசன் என்றார். மருந்துக்கு கூட வைரமுத்து பெயரைச் சொல்ல வில்லை. இன்றைய இளைஞர்கள் பலர் நன்கு எழுதுகிறார்கள் என்றார். கண்ணதாசனின் எளிமையான சொற்கள் என்றும் அவர் மனதை கவர்ந்தாக சொன்னார். வாழ்நாள் லட்சியம் குற்ற பரம்பரை சீக்கிரம் எடுக்கப் படும் என்றார். ஈழம் என்ற சொல் மனதை பிழிவதாக சொன்னார். இலக்கியம் பற்றி எல்லாம் எனக்கெல்லாம் மிக ஆழ்ந்த அறிவு இல்லை என்று ஒளிவு மறைவு இல்லாமல் சொன்னார்.
15 ஆண்டுகளுக்கு முன்பு மதுரையில் என் தம்பி படித்த கல்லூரிக்கு (தியாகராஜர் பொரியியல்) பேசிய பொழுது மாணவர்களின் உணர்வுகள் மேம்படும்படி பேசினார். எதிர்காலத்தில் இளைஞர்களின் கனவு நிறைவேற
கடுமையாக போராட வேண்டும் என்றாராம். அதைப் போலவே இந்த குமுதம் பேட்டியிலும் இளைஞர்கள் பலர் சினிமாத் திரையில் வந்து விட்டார்கள், புதிய சிந்தனைகளோடு என்றார்.
மொத்ததில் பாரதிராசாவின் இந்த குமுதம் பேட்டி மிக அருமை. குமுதம் வெப் டிவியின் தரமோ மிக அருமை. ஓய்வு கிடைத்தால் பாருங்களேன்....
நன்றி
மயிலாடுதுறை சிவா....
0 Comments:
Post a Comment
<< Home