Thursday, May 24, 2007

நான் ரசித்த மகா கவிஞன் - கண்ண தாசன்

வாழ்க்கையில் எத்தனையோ திரைப் பட பாடல்களை கேட்கிறோம் அவற்றுள் சில அப்படியேமனதில் தங்கி விடும், பல மறந்து விடும். அப்படி என் மனதில் என்றென்றும் நீக்கமற நிறைந்தஇருப்பவர் காலம் சென்ற கவிஞர் கண்ணதாசன். இவரின் எத்தனை எத்தனை பாடலகள் என்மனதை பாதித்து, ரசித்து, அசைப் போட்டு அப்படியே மனதில் ரீங்காரம் ஈட்டு கொண்டுகிறதுதெரியுமா? காதல் பாடல் ஆகட்டும் அல்லது தத்துவ பாடல் ஆகட்டும் கண்ணதாசனுக்கு ஈடு இணை இல்லை என்பது தாழ்மையான கருத்து. அடுக்கு அடுக்காக என்னால் எத்தனையோ பாடல்களை கோடிட்டு காண்பிக்க முடியும். என் நெஞ்சில் நீங்கா இடம் பெற்று இருக்கும் ஓருசிலப் பாடல்களை பார்க்கலாமா?

அவள் ஓரு தொடர்கதை படத்தில் காலம் சென்ற நடிகர் ஜெய் கணேஷ் வாசைத்து பாடிய பாடல்"தெய்வம் தந்த வீடு வீதி இருக்கு" இந்த கண்ணதாசன் வரிகளை ஜேசுதாஸ் பாட கேட்க எத்தனை முறை கேட்டாலும் அலுக்காத பாடல். தமிழகத்தில் இருக்கும் பொழுது ஜேசுதாஸ் பாடி இதனை நேரில் கேட்க வேண்டுமே என்று ஏங்கியது உண்டு. அந்த பொன்னான வாய்ப்பும் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு மேரிலாந்தில் உள்ள ஓர் பல்கலை கழகத்தில் 1500 அமர்ந்து இருக்க கூடிய சபையில் ஜேசுதாஸ் "தெய்வம் தந்த வீடு" பாடலை தமிழில் ஆரம்பித்து அப்படியே தெலுங்கில் தாவி மீண்டும் தமிழில் முடித்தாரே, ஆஹா என்ன வென்று சொல்வேன், எப்படி சொல்வேன்? அதை கேட்டு பார்த்து ரசிக்க வேண்டு கொடுத்து வைத்து இருக்க வேண்டும்.

Free Image Hosting at <a href=www.ImageShack.us" />

இதோ அந்த பாடல் :

தெய்வம் தந்த வீடு, வீதி இருக்கு!
இந்த ஊரு என்ன, சொந்த வீடு என்ன ஞான பெண்ணே!
இந்த ஊரு என்ன, சொந்த வீடு என்ன ஞான பெண்ணே!
வாழ்வின் பொருள் என்ன, நீ வந்த கதை என்ன! வாழ்வின் பொருள் என்ன, நீ வந்த கதை என்ன! (தெய்வம் தந்த....)


நான் கேட்டு தாய் தந்தை படைத்தாரா?..........
இல்லை என் பிள்ளை என்னை கேட்டு பிறந்தானா?
தெய்வம் செய்த பாவம் இது போடி தங்கச்சி.........
கொன்றால் பாவம் தின்றால் போச்சு இதுதான் என் கட்சி!
ஆதி வீடு அந்தம் காடு இதில் நான் என்ன? அடியே நீ என்ன? ஞான பெண்ணே
வாழ்வின் பொருள் என்ன நீ வந்த கதை என்ன? (தெய்வம் தந்த....)

வெறும் கோவில் இதில் என்ன அபிஷேகம்
உன் மனம் எங்கும் தெரு கூத்து பகல் வேஷம்
கள்ளிகென்ன முள்ளில் வேலி, போடி தங்கச்சி
காட்டுக்கேது தோட்டகாரன் இதுதான் என் கட்சி!
கொண்டது என்ன.....கொடுப்பது என்ன?
இதில்தாய் என்ன? மணந்த தாரம் என்ன? ஞான பெண்ணே!வாழ்வின் பொருள் என்ன? நீ வந்த கதை என்ன?


தெளிவாக தெரிந்தாலே சிந்தாந்தம்,
அது தெரியாமல் போனாலே வேதாந்தம்
மண்ணை தோண்டி கண்ணீர் தேடும் அன்பு தங்கச்சி
என்னை தோண்டி ஞானம் கண்டேன், இதுதான் என் கட்சி!உண்மை என்ன? பொய்மை என்ன? இதில்
தேன் என்ன? கடிக்கும் தேள் என்ன? ஞானப் பெண்ணே
வாழ்வின் பொருள் என்ன? நீ வந்த கதை என்ன? (தெய்வம் தந்த....)

இந்த பாடலில் என் மனதை மிகவும் கவர்ந்த வரிகள் நிறைய உள்ளன.
"காட்டுக்கேது தோட்டகாரன் இதுதான் என் கட்சி!" சுதந்திரமாக வாழ வேண்டும் என்பதற்கு இதைவிட எளிதான வரியை எப்படி சொல்ல முடியும்...

"என்னை தோண்டி ஞானம் கண்டேன், இதுதான் என் கட்சி!"உன்னையே நீ உணர வேண்டும் என்பதை எவ்வளவு எளிமையாக சொல்லி இருக்கிறான் இந்த தத்துவ கவிஞன்...

தத்துவத்திலே இந்த கவிஞன் அடைந்த உயரம் எவ்வளவோ?!
இன்னொரு பாட்டிலே,

ஆட்டிவித்தால் யார் ஒருவன்.....
"கடல் அளவே இருந்தாலும் மயங்க மாட்டேன், அது கை அளவே ஆனாலும் கலங்க மாட்டேன்" என்று சொன்னாரே, தன் வாழ்க்கையை அப்படியே இந்த வரிகளில் வாழ்ந்து இருக்கிறார் கண்ணதாசன்...

"போனால் போகட்டும் போடா" என்ற பாடலை சொல்வதா? "சட்டிச் சுட்டதடா" என்ற பாடலை சொல்வதா?
"ஓர் கோப்பையிலே என் குடியிருப்பை" சொல்வதா?
"பொன்னை விரும்பும் பூமியிலே" சொல்வதா?

"பாஞ்சாலி உன்னிடத்தில் கீதை கேட்டாள், நான் இருக்கும் நிலையில் உன்னிடன் என்ன கேட்பேன்?

"இன்னும் நன்மை செய்து துன்பம் வாங்கும் உள்ளம் கேட்பேன்....." இதை விட இன்னோரு வரி கண்ணதாசனால் எழுத முடியுமா? என்று நான் வியந்தது உண்டு.

"நான் படைப்பதினால் நான் இறைவன் என்றார் கண்ணதாசன்"

காலத்தை வென்ற கண்ணதாசனின் வரிகள் என்னெற்றும் நிலைத்து இருக்கும்....

அதிக மன அழுத்தம் இருக்கும் பொழுது கண்ணதாசன் பாடல்கள் எவ்வளவு ஆறுதல் தெரியுமா?

மீண்டும் ஓரு காலக்கட்டத்தில் இன்னும் பலப் பாடல்களை மீட்டு எடுப்போம்...

நன்றி
மயிலாடுதுறை சிவா...



Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

8 Comments:

Blogger யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

சிவா!
செட்டாகச் சிறப்பைச் சொல்லியுள்ளீர்கள் . அவர் தான் கவியரசர். உண்மை அவர் பாடல் தட்டிக் கொடுப்பைவையே!

Friday, May 25, 2007 1:31:00 AM  
Blogger பாரதிய நவீன இளவரசன் said...

கண்ணதாசனை நினைவு கூர்வது நல்ல செயல். நல்ல எண்ணம்; நல்ல பதிவு :)

Friday, May 25, 2007 2:28:00 AM  
Blogger மயிலாடுதுறை சிவா said...

யோகன், பாரதியா

மிக்க நன்றி உங்கள் ஊக்கத்திற்கு...
வருகைக்கு நன்றி

மயிலாடுதுறை சிவா

Friday, May 25, 2007 6:43:00 AM  
Blogger கண்மணி/kanmani said...

சிவா கண்ணதாசன் பாடல்கள் காலத்தால் அழியாதவை.திருக்குறள் எப்படி உலகப் பொதுமறையாக,எக்காலத்திற்கும் பொருந்தக் கூடியதாக இருக்கிறதோ அத்தகைய சிறப்புடையது கவியரசரின் பாடல்களும்.இன்று வரும் கவிஞர்கள் வார்த்தை ஜாலத்தாலும் கவி நயத்தாலும்
பாராட்டப் படலாம்.ஆனால் கவியரசரின் வாழ்க்கை அனுபவமும்,தத்துவமும் காலத்தால் அழியாதது.அவருக்கும் அவர் பாடல்களுக்கும் இன்னமும் உரிய மரியாதை தரப்பட வேண்டும்.

Friday, May 25, 2007 7:14:00 AM  
Blogger நாகு (Nagu) said...

கவியரசர் கவியரசர்தான். இப்போதைய வார்த்தை ஜாலங்கள் இல்லாமல் எளிய வார்த்தைகளில் ஆழ்ந்த பொருள்.

உங்கள் பட்டியல் பார்த்தேன். ரொம்ப சின்ன பட்டியல். ஆரம்பித்தால் நிறுத்த முடியாது!

Friday, May 25, 2007 7:48:00 AM  
Blogger மயிலாடுதுறை சிவா said...

கண்மணி

உங்கள் கருத்தோடு ஒத்து போகிறேன்.

நாகு

பட்டியலை போட ஆரம்பித்தால் நிற்க முடியுமா?

வருகைக்கு நன்றி

மயிலாடுதுறை சிவா...

Friday, May 25, 2007 8:50:00 PM  
Blogger G.Ragavan said...

ஆகா! கவியரசர்னா அது அவர்தாம். அவர் மட்டுந்தாம். பல பழைய சங்கக் கவிதையெல்லாம் வியந்திருக்கேன். ஆனா நாம பொறந்த அதே நூற்றாண்டுல வாழ்ந்த ஒரு கவிஞர்...அதுவும் திரையிசையிலையும் இலக்கியம் செய்த சொற்சிற்பி அவர்.

எத்தனை பாட்டுகள். நீங்களே நெறைய சொல்ல நினைச்சுக் கொஞ்சமாத்தான் சொல்ல முடிஞ்சதுன்னு நெனைக்கிறேன்.

எறும்புத்தோலை உரித்துப் பார்க்க யானை வந்ததடா....சட்டி சுட்டதடா

காற்றுக்கென்ன வேலி? கடலுக்கென்ன மூடி? இந்த ஒரு வரியிலேயே பாட்டு முடிஞ்சு போச்சு. பாட்டு முழுக்க சொல்ல வேண்டிய அத்தனையையும் சொல்லி முடிச்சாச்சு.

கல்லைக் கண்டால் கனியைக் கண்டாள்
கல்லும் இன்று மெல்ல மெல்ல கனியக் கண்டாள்..
கண்ணா என்றாள் முருகன் வந்தான்
முருகா என்றாள் கண்ணன் வந்தான்
அங்கும் இங்கும் பாதை உண்டு
இன்று நீ எந்தப் பக்கம்

ஒரு படத்துக்கே இப்படிச் சொல்ல முடியுதே. ஒவ்வொரு படத்துக்கும் எவ்வளவு சொல்லலாம்.

கவியரசருடைய நெருங்கிய நண்பர் மெல்லிசை மன்னர். இவரின் எழுத்தும் அவரின் இசையும் இணைந்து இத்தனை மாயங்களைச் செய்திருக்கின்றன.

Saturday, May 26, 2007 6:02:00 AM  
Blogger மயிலாடுதுறை சிவா said...

ஜி ராகவன்

நீங்கள் சொல்வது போல் கவிஅரசரின் பாடல்களை பட்டியல் போடுவது அவ்வளவு அல்ல. ஓவ்வொன்றும் ஒவ்வொர் விதம். தங்கள் வருகைக்கு நன்றி.

மயிலாடுதுறை சிவா...

Tuesday, May 29, 2007 7:19:00 AM  

Post a Comment

<< Home

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது