For Good - இந்தியா (தமிழகம்) செல்லுதல்...
வாசிங்டன். மே 2007
அமெரிக்கா வந்து கிட்டதட்ட 8 ஆண்டுகள் ஓடிவிட்டன. கடந்த வந்த பாதையில் எத்தனை எத்தனைபுதிய அனுபவங்கள்? எதனை எப்படி சொல்வது...
சராசரி இளைஞனாக தமிழகத்தில் இளம் கலை, முதுகலை, முதுகலை டிப்ளோமா படித்து தமிழகத்தில்சிறிதுகாலம் வேலைப் பார்த்துவிட்டு, எல்லோரையும் போல எனக்கும் வெளிநாடு செல்ல வேண்டும் என்று ஓர்உத்வேகம், ஆசை, கனவு, லட்சியம் இருந்தது உண்மை. ஆனால் என் கனவு முழுக்க என் சக நண்பர்கள்போல Saudi, Dubai, Oman, Muscat, Singapore, Malasia, Bankok, Baharin, Qatar இப்படிதான் ஆசைப்பட்டேன். கனவிலும் நினைத்துப் பார்க்கவில்லை அமெரிக்கா வருவேன் என்று.
இப்படிப் பட்ட நான் அமெரிக்கா வந்து, ஆங்கில மொழி சரளமாக பேசமுடியாமல், வெள்ளைகாரர்களின்ஆங்கிலத்தை துல்லியமாக புரிந்துக் கொள்ள முடியாமல் கடினப் பட்ட காலங்கள் போய், கொஞ்சம் கொஞ்சமாய் என்னை தக்க வைத்தக் கொள்ள நீண்ட நாட்கள் பிடித்தது. இப்படி காலங்கள் போய்க் கொண்டு இருக்க, மெதுவாக நல்ல தமிழ் நண்பர்கள் கிடைக்க ஆரம்பித்தார்கள்.
தமிழ்நாட்டில் இருந்து பெற்றோர்கள், உறவினர்கள் மற்றும் நண்பர்களை விட்டு விட்டு இங்கே வந்த காலங்களில் தமிழ் நண்பர்களோடு பழகுவதும், பேசுவதும் ஓர் எல்லையில்லா ஆனந்தம் என்றால் மிகை அல்ல.இப்படி பட்ட காலக் கட்டங்களில் தமிழ்ச் சங்கம் செல்லும் பழக்கம் ஏற்பட்டது. என் அமெரிக்கா வாழ்வில் என்னைமுழுக்க முழுக்க புரட்டி போட்ட விசயங்களில் தமிழ்ச் சங்கமும் ஒன்று! எத்தனை எத்தனை விதவிதமான அனுபவங்கள். மிக அன்பான, அருமையான, சமுதாய சிந்தனை உள்ள, உண்மையான தமிழ் ஆர்வம் மிக்க, மொழி உணர்வு உள்ள குடும்ப நண்பர்கள் பலர் கிடைத்தார்கள். அனைத்து நல்லது கெட்டதுகளிலும் கலந்துகொள்ளவும், நமது சொந்த வாழ்க்கையில் உள்ள சிக்கல்களை, மகிழ்ச்சிகளை பகிர்ந்துக் கொள்ளவும் இந்த குடும்ப நண்பர்கள் ஒன்றன கலந்தார்கள். புதுமனை புகுவிழா, பிறந்தநாள் விழா, திருமணம், வளை காப்பு, குழந்தைப் பிறத்தல், இன்ப சுற்றுலா செல்லுதல், சேர்ந்து அடிக்கடி திரைப்படம் பார்த்தல் மற்றும் அனைத்து விதமான விழாக்களில் எனது நண்பர்கள் அனைவரையும் பார்ப்பதும், அரட்டை அடிப்பதும் இப்படி பல வார விடுமுறைகளும் கழிந்தன என்று நினைத்துப் பார்க்கும் பொழுது மனம் எல்லை இல்லா பூரிப்பு அடைகிறது.
எல்லோருக்கும் வாழ்க்கை தரம், குடும்ப சூழ்நிலை எல்லாம் ஓரே மாதரியாக இருப்பது இல்லை. ஓவ்வொருக்குவித விதமான குடும்ப சூழ்நிலை. எனக்கு கிடைத்த நண்பர்களில் சில குடும்ப நண்பர்கள் அமெரிக்க வாழ்க்கைமுடிந்து மீண்டும் நம் தாய்நாட்டிற்கு செல்ல காலம் கனிந்து வந்தது. என் அமெரிக்கா வாழ்க்கையில்என்னோடு பல வருடங்கள் பழகிய சில குடும்ப நண்பர்கள் மீண்டும் தமிழகத்திற்கேசென்று விட்டனர். எல்லோரும் ஆர்வமாக வெளிநாடு சென்று படிக்க வேண்டும் என சிலரும், சம்பாரிக்க வேண்டும்என்று பலரும் வந்த காலங்கள் போக மீண்டும் நம் தாய் நாட்டிற்கு செல்ல வேண்டும் என்று முடிவு எடுக்கஅவர்கள் என்னென்ன மனப் போரட்டங்களை அடைய வேண்டி இருந்தது என்பதை கண்கூட பார்த்து இருக்குகிறேன்.
மீண்டும் நம் தாய் நாடு சென்று அங்கு மீண்டும் ஓர் தரமான வாழ்க்கை ஆரம்பிக்க என்ன செய்ய வேண்டும் என்று நினைக்கையில் மிகுந்த மனத் துணிவும், மனம் இனம் கொள்ளா பயமும் அடைவதை தவிர்க்க முடியவில்லை.
என் நண்பர் ஓருவர் அவருக்கு கிடைக்க வேண்டிய புதிய இல்லம் கிடைப்பதற்கு சற்று காலம் தமாதம் ஆன காலத்தால்வாடகை வீடு சென்னையில் பார்க்க ஆரம்பித்தார். அவர் சொன்ன மிக அதிர்ச்சியான செய்தி பெரும்பாலும் எல்லாவீட்டு சொந்தகாரர்களும் கேட்ட மிக முக்கியமான கேள்வி "நீங்கள் என்ன சாதி" என்பது. மற்றோரு அதிர்ச்சியான செய்தி இரண்டு படுக்கை அறை கொண்ட சிறிய வீடு ரூபாய் 20,000 முதல் 25,000 வரை வாடகைமற்றும் 2 லட்சம் வரை முன்பண வைப்பு தொகை!!!
அமெரிக்காவில் பிறந்து கிட்டதட்ட 10 அல்லது 12 ஆண்டுகள் வளர்ந்த மகள் மற்றும் மகனை அங்குள்ள எந்த பள்ளியில் சேர்ப்பதுஅல்லது எப்படி மிகப் பிரபலமான (டிஏவி, பத்மா சேஷாத்திரி, வித்யா மந்திர், இப்படி பல...) பள்ளியில் சேர்ப்பது என்பதில்தொடங்குகிறது இவர்கள் மனப் போராட்டம். சென்னையிலோ, கோவையிலோ, அல்லது பெங்களூரிலோ நல்ல தரமான பள்ளியில் சேர்ப்பது என்பது மிகப் பெரிய விசயம் என்று நண்பர்கள் சொல்லுகிறார்கள். பள்ளி சேர்க்கை கிடைக்காவிடில் என்ன பண்ணுவது?
அமெரிக்காவில் பிறந்து வளர்ந்த பிள்ளைகளில் 90 சதவீதம் கள்ளம் கபடம் இல்லாமல் வளர்ந்து இருக்கிறார்கள். ஓர் சுத்தமான, அசுத்தம் இல்லாத ஓர் சூழ்நிலையில் வாழ்ந்து பழக்க பட்டவர்கள் நமது ஊருக்கு சென்றால் எப்படி எல்லாம்கடினப் படுவார்கள் என்று நினைத்து வருத்த படுகிறார்கள்...
அமெரிக்காவில் 10 அல்லது 15 ஆண்டுகள் வாழ்ந்துவிட்டு மீண்டும் நம் தாய்நாட்டிற்கு சென்று ஓர் புதுவாழ்க்கையை தொடங்கினாலும் நமக்கு முன்பு பழக்கமான உறவினர்கள், நண்பர்களின் எண்ண அலைகளோடு ஒத்துப் போக முடியவில்லையே ஏன்?
ஓரளவு நிரந்தரமான வேலையில் இருக்கின்ற பொழுது இங்குள்ள வேலையைவிட்டு விட்டு, மீண்டும் அங்கு சென்று வேலைக்கு செல்வதா அல்லது தொழில் தொடங்குவதா என்ற மிகப் பெரிய கேள்வி நம்முன்னே உள்ளது. என்னதான் ஓரளவு சேமித்துஇருந்தாலும் இந்த பணம் போதுமானதா என்று ஓர் தெளிவான முடிவிற்கு வரமுடியவில்லை. திரும்பி ஊருக்கு செல்ல காலத்தை முன் வைப்பதா? அல்லது பணத்தை முன் வைப்பதா?
மீண்டும் நம் தாய் நாட்டிற்கு செல்லவேண்டும்மென்று கிட்டதட்ட 75 சதவீதம் ஆண்கள் ஆசைப் படும் பொழுது, ஏன் பெண்கள் மனமார தயாராக இல்லை?! மாமியார், நாத்தனார், உறவினர்கள் தொல்லை இல்லை என்று பெண்கள் நினைப்பதில் உண்மையா அல்லது சுயநலமா?
மீண்டும் தாய் நாட்டிற்கு செல்லப் பிரியப் படும் பொழுது ஏன் பிறந்த கிராமத்திற்கே மீண்டும் சென்று ஓர் புதிய வாழ்க்கைதொடங்க நம்மில் பலர் தயாராக இல்லை?! அதற்கு ஓரே காரணம் நம் பிள்ளைகளின் படிப்பிற்காக மீண்டும் சென்னை அல்லது ஓர் பெரிய நகரத்திலியே குடிபோகும் படி வந்துவிடுகிறதே?! நாம் அந்த சிறிய டவுனிலோ அல்லது கிராமத்தில்தானே பள்ளி இறுதி படிப்புவரை படிக்க நேரிட்டது?! ஆனால் நம் குழந்தைகளை நம்மால் அங்கு சேர்க்க ஏன் மனம் வரவில்லையே!! ஆரோக்கியமாக பார்த்து பார்த்து வளர்ந்த நம் கண்களுக்கு நம் பெற்றோரின் வயோதிக தடுமாற்றத்தில் மீட்க மீண்டும் அவர்களுக்கு எப்படி பணிவிடை செய்வது? காலத்தின் பிடியில் இருந்து எப்படி நம்மை மன பதட்டம்இல்லாமல் விடுவித்து கொள்வது?
என்னதான் காலங்கள் மாற மாற சிந்தனைகளும் மாறினாலும், வெளிநாடு சென்று 10 ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்ந்துவிட்ட பிறகு ஏன் இப்படி மனித மனம் மாறிவிட்டது? எந்தவித எதிர்ப்பார்பும் இல்லாமல் பயம் இல்லாமல் எப்படி நாம் பிறந்த வளர்ந்த படித்த பூமிக்கு மீண்டும் செல்வது? வெளிநாடு சென்று நம்மை பொருளாதார வளப்படுத்துக் கொள்ள ஆசைப்பட்ட நாம் மீண்டும் தாய் நாட்டிற்கு செல்வதற்கு மிகுந்த மனப் போராட்டம் ஏற்படுவது ஏன்? தடுப்பது எது?
இரண்டரை ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் நட்சத்திர பதிவாளர் ஆக்கிய தமிழ் மணத்திற்கு நன்றிகள் பல...இன்னும் 7 நாட்களுக்குள் நிறைய பேசுவோம்.....
நன்றி
மயிலாடுதுறை சிவா....
23 Comments:
மயிலாடுதுறை சிவா
இது அமெரிக்காவில் இருந்து மட்டும் அல்ல.. நீங்கள் விரும்பி வர இருந்த சிங்கப்பூரில் இருந்து திரும்பும் குடும்பத்துக்கும் பொருந்தும்.
என்ன,இங்கிருந்து வரும் ஆட்கள் கொஞ்சம் சீக்கிரமாகவே நம்மூர் நிலமைக்கு வந்துவிடுகிறார்கள்,அவ்வளவு தான் வித்தியாசம்.
நதி ஓர வீடு,ரேடியாவில் செய்தி மட்டும் கேட்டு மீத காலத்தை கழிக்க மனம் மட்டும் போதும்.
Siva,
Your dilemma is shared by NRIs all over the world, not only those in the US. The whole problem is that human nature wants the best of everything in life - i.e., the comforts of living abroad and at the same time being close to our own culture and people.
The only way to overcome this predicament is to make up your mind not to have any regrets in life. That is, once you move over to India, you and your family must be prepared for just everything and anything. The kids will ultimately get used to it, the initial hiccups are there everywhere. But at no point of time must you regret why you came back for good. Otherwise, there will be no peace of mind.
இரண்டாம் முறையாக நட்சத்திரமாகும் சிவாவுக்கு வாழ்த்துகள்.
நட்சத்திர வாழ்த்துக்கள் சிவா!
நன்றி - சொ. சங்கரபாண்டி
வாழ்த்துக்கள் சிவா ;)))
வடுவூர் குமார்
நீங்கள் சொல்வது மிகச் சரி...
கடல் ஓரத்தில் அமைதியான, சின்ன அழகான வீடு, நல்ல புத்தகங்கள், வனொலி கேட்டுக் கொண்டே மீதி வாழ்க்கையை கழிக்க வேண்டும்....
ராஜு, ஜெஸிலா, சங்கரபாண்டி, கோபிநாத் - தங்கள் வாழ்த்துக்கும், வருகைக்கும் நன்றிகள் பல....
மயிலாடுதுறை சிவா...
ம.சிவா,
இரண்டாம் முறை நட்சத்திரமானதுக்கு மொதல்ல வாழ்த்து.
நீங்கள் சொல்லும் உணர்வு எல்லா NRIகளுக்கும் இருக்கிறது தான்.
இங்கே 25 வருடம் செளதியில் கழித்துவிட்டு சொத்து பத்து ஊரில் நிறைய சேர்த்திருந்தும் for good போனவர் ஆறே மாதத்தில் திரும்ப வந்துவிட்டார்.
என்ன காரணம் சொன்னார் தெரியுமா?
'ஊர்ல இருந்து பொழைக்கணும்னா கொஞ்சமாச்சும் தில்லுமுல்லு தெரிஞ்சிருக்கணும் தம்பி' - இங்க மாதிரி வராது.'
பழக்கம் தான் காரணம்
பலரின் மனதை இங்கு பிரதி எடுத்து, அதில் ஒரு சில பக்கங்களை அச்சில் ஏற்றியிருக்கிறீர்கள்.
NRI என்றாலே Never Returning Indians என்றொரு சொல்வடையும் சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறேன்.
for good மட்டுமல்ல, விடுமுறைக்கே தாயகத்துக்கு செல்ல வேண்டுமா என்ற கேள்வியில் இருக்கிறோம் இன்று.
நாம் வாழ்ந்த இடத்தை,வாழ்க்கை முறை,இடம்,நண்பர்கள், உற்றார் உறவினர் என்று பல கதை சொல்லி, குழந்தைகளை அழைத்துச் சென்றால்,
சில பல நேரங்களில் மன உளைச்சலும்,சில நேரங்களில் அவமானப்பட்டும் திரும்பியிருக்கிறோம்.
நமது மனத்திருப்திக்காகவும் ஏங்குதலை பூர்த்தி செய்யவுமே இந்தியா செல்ல விழைகிறோமே தவிர நம்து சந்ததியினரின் எதிர்காலத்தையும்,
ஆசையையும் மனதில் கொண்டு அல்ல.
நட்சத்திர வாழ்த்துக்கள்.
Siva,
Natchathira Vaazhuththukkal!
This is Ravichandran and we met at last year FETNA in New York. Good anyalysis and write-up.
In fact, I am personally going through this now. Lived in Singapore for 5 yrs (1994-1998) and Boston for 8 yrs (1999-2006). Took a company transfer and moved back to Singapore last December. I need to take care few things in Singapore and planning to go to Chennai early next year for good.
It's not a easy decision with two kids (9yrs & 5 yrs) and we took the decision and decided to move on..
BTW, I too dream about living in a house on the bank of Cauvery river in my native Thanjavur with good books and doing something good for the society...
Anbudan,
-Ravichandran
P.S: Sorry.. for the English.
இது தான் மட்ரபடி ஏதும் இல்லை :
//அமெரிக்காவில் பிறந்து வளர்ந்த பிள்ளைகளில் 90 சதவீதம் கள்ளம் கபடம் இல்லாமல் வளர்ந்து இருக்கிறார்கள். ஓர் சுத்தமான, அசுத்தம் இல்லாத ஓர் சூழ்நிலையில் வாழ்ந்து பழக்க பட்டவர்கள் //
வாசகன்
நீங்கள் சொல்வது அதிர்ச்சியாக உள்ளது.
பெருசு, ரவி, ரவீந்தரன் தங்கள் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றிகள் பல...
மயிலாடுதுறை சிவா...
வணக்கம். வாழ்த்துகள்.
ஃபெட்னா விழா வருடா வருடம் எனக்கு பொருந்தாத ஜுலை 4 வாக்கில் வருவதால் உங்களை சந்திக்க இயன்றதில்லை.
தவிர்க்க முடியாமல் இந்தியா போக நேர்ந்தால், ம.துறையில்தான் தங்க வேண்டியிருக்கும் ;)) உங்களைப் பற்றி விசாரிப்பேன்!!
[இரு புறமும் மருதமரம் இருக்கும் நுழைவாயில் பக்கம் தொடங்கி, கழனிவாசல் வரை தடுக்கி விழுந்தால் நிறைய உறவினர்கள் எமக்கு :) ]
அவரவருக்கு அதது என்ற கோணத்தில் உங்களுடைய திரும்பி போதலை புரிந்து கொள்ள முடிகிறது.
கடலோரம் அழகான வீடு என்பதை கேட்கவே அகம் மகிழ்ந்து போகிறது.
சென்னையில் வசிக்காமல் ஊர் பக்கம் வசிக்க எண்ணியுள்ளீர்கள் என்றால், தரங்கை அல்லது தரங்கைக்கும் பூம்புகாருக்கும் இடையில் (அல்லது) திருமுல்லைவாசல் பக்கமாக கடலோர தங்குவிடுதி ஆரம்பிப்பதைப் பற்றி யோசியுங்கள் !! நீங்கள் அங்கு வசித்துக் கொண்டே தொழிலும் நடத்தலாம்...
வாழ்க வளமுடன்...
சிவா,
இவையெல்லாம் ஒரு பதிவில் அடக்கக்கூடிய விடயங்களல்ல... பெரிய தொடராகவே எழுதப்படவேண்டும். இதில் ஏதேனும் ஒரு பிரச்சனையினையேனும் (குழந்தை வளர்ப்பு, தனிமை, வேலைவாய்ப்பு போன்றவை...) விளக்கமாக ஒரு பதிவிடுங்கள் என கோரிக்கை வைக்கிறேன்!
நட்சத்திர வாழ்த்துக்கள்...
வாசன்
மிக்க நன்றி தங்கள் வருகைக்கு,மயிலாடுதுறையிலேயே நிச்சயம் சந்திப்போம்...
இளவஞ்சி
நிச்சயம் முயற்சிக்கிறேன். நீங்கள் சொல்லும் அளவிற்கு நான் ஓர் பெரிய எழுத்தாளன் அல்ல..
மயிலாடுதுறை சிவா...
சிவா! வாழ்த்துக்கள்!
வாழ்த்துக்கள் சிவா.மணிக்கூண்டு பார்த்ததும் ஏ.ஆர்.சி ஜுவல்லரி ஞாபகம் வருது.
உங்களை [பதிவு]அதிகம் பரிச்சயமில்லை.
ஒன்றை அடையனும்னா இன்னொன்றை தியாகம் செய்ய நேரிடலாம்.தாய்நாட்டு வாசம் வேணும்னா குழந்தைகளின் படிப்பு,கலாச்சாரத்தில் பின்னடைவோ மாற்றமோ ஏற்படலாம்.முயன்றால் அதை சரி செய்து கொள்ளலாம்.
எங்க ஊர் சிவாவுக்கு வாழ்த்துக்கள்
//வாசகன்
நீங்கள் சொல்வது அதிர்ச்சியாக உள்ளது. //
உண்மைங்க. என் காதால் கேட்டது.
அவர் இங்கும் குடும்பத்துடன் தான் இருக்கிறார், எனவே ஹோம்சிக் இல்லை. பசங்களையும் நல்ல வேலையில் இங்கேயே சேர்த்துவிட்டார்.
நல்ல வேலை, வேலை விட்டால் வீடு, பொழுதுபோக்கு என்று இருக்கும் சூழலில் பழகிவிட்டதால் ஊருக்குப் போனால் அங்குள்ள சமூக வெப்பநிலைக்கு ஈடு கொடுக்க அவரால் முடியவில்லை.
நான் சொன்னது போல, பழகப் பழகச் சரியாகும் - எதுவும்.
நீங்கள் சொல்வது உண்மைதான். கடந்த சில வருடங்களாகவே திரும்ப போகும் மனநிலையில் இருக்கும் எனக்கு நீங்கள் சொல்லும் அனைத்து பிரச்சினைகளும் இருக்கின்றன.
வெளிநாடுகளில் அனைத்து வசதிகளும் இருந்தாலும் சொந்த மண்ணிற்கு ஒவ்வொரு முறை போகும் போது அதை விட்டு வருவதற்கு நம்மால் முடிவதில்லை என்பது உண்மையே.
மேலும் இப்பொழுதெல்லாம் ஒரு சில பிரச்சினைகள் இருந்தாலும் வெளிநாடுகளை போல இந்தியாவிலும் பல வசதிகளும் இருக்கின்றன. ஆரம்பக்காலத்தில் ஏற்படும் சில பிரச்சினைகளை சமாளித்துவிட்டால் பிறகு சரியாகிவிடும் என்பதே என் எண்ணம்.
பகிர்தலுகு நன்றி.
இந்த வாரம் மீண்டும் நட்சத்திரமானதற்கு வாழ்த்துக்கள்.
நல்ல கட்டுரையாக இருப்பதால் இதை முத்தமிழ் கூகிள் குழுமத்திலும் போடுகிறேன். மிகவும் நன்றி.
http://groups.google.com/group/muththamiz
சிவா,நீங்க சொல்லியிருக்கின்ற மனப்போராட்டங்கள் எல்லா NRIகளுக்கும் இருப்பதுதான்.
நம்ம ஊருக்குப் போனா நமக்கு ஏற்கனவே பழக்கமான சூழல் என்பதால் கொஞ்ச நாளிலே எல்லாம் (லஞ்சம், மற்றும் இன்ன பிற சமுதாயப்பிரச்சனைகள்) பழக்கமாயிடும்; ஆனால்,நம்ம வாழ்க்கைத்தரத்திலும், குழந்தைகளின் படிப்பு வசதியிலும் பின்னடைவு ஏற்படலாம்.
கடைசியில்,நம் நாட்டு வாசம் வேண்டும்போது, இவற்றை கொஞ்சம் இழக்கத்தான் வேண்டியிருக்கும் என்பது என் எண்ணம்
இரண்டாவது முறை நட்சத்திரமானதற்கு
வாழ்த்துக்கள்.
படித்தவர் வெளியேற்றத்தை தென் கெரியா ஒரு காலத்தில் ஆதரித்தது காரணம் ஒரு நாள் மீண்டும் அவர்கள் தாய் நாடு திரும்புவார்கள் என்பதே. இன்று அது கொரியாவில் நடைபெறுகின்றது.
இதே போன்ற நாள் பாரதத்திற்கும் வர நீண்ட நாட்கள் எடுக்கப்போவதில்ல.. அன்று நீங்கள் உங்கள் தாய் நாட்டிற்கு சேவைசெய்ய தமிழ் மண்ணிலே நின்றுகொண்டிருப்பீர்கள்.. நம்புங்ககள் நிச்சயம் நடக்கும்!
sir vanakkam, nan sahridhayan (punai peru)
tamil la post pottu pazhakkam illeenga
nan ippa rendam muraiya singapore (namma ooru thane ninaichu vanthenga)
nadu vula 10 varusham gap irukkunga
motha murai vanthappothu iruntha DRIVE ippo illeenga
innonnu nan chennai leya antha life othukkama than inga vanthenga
ippa enga poranthu ooru "Nagapattinam" kku padai edukka mudivi pannikkittu irukkom (going on)
vaduvoor kumar sonna mathiri manasu mattum pothunga ellathukkum.
vazhakkai vasathi pathi keteenga nna. Namba oorulayum ellam kidaikkuthunga Household items like tv, fridge,fan,a/c,mp3,mp4,mp5 ......ellamum,
melum neenga ninaikkira paduppu tharam (education) unmaiyile tharam illeenga. Nan chennai la padikkaravangalayum pakkirenga. pathukittum irukkenga.
Padippukkkum - Thiramaikkum - Enga padichongarathu sambatham illeenga.
Nan corporation school la than padicheenga.
Melum DOLAR than kurikkolna.. unga kuzhainthagala neenga neraya selavu panni padikkavaikkanga. Illa thiramai matrum Sahippu thanmai venumna Namba ooru than best. athum wife,thatha,patti, mama, machan, neraya peru suthi irunthakka. Avanakku kidaikkara exposure jasthinga. Vazhkai pathi.
neenga unga children DOLAR machine a matha theenga. Nalla healthy ethayaum anuhura thairiyothada children valanga.
Ungalakku ithukku PANAM than venuma?????????? (panamum venum nan athu alavoda iruntha pothum)
Neenga atha oorula sambathikkalanga.
Illaya?
Thazhmayudan
Sahridhayan
(perula ennanga irukku, enakku nanbargal jasthinga)
so konjam perukku mattum ennoda intha peru theriyunga.
so thappa eduthukatheenga
சாகா, ராசா, கதிரவன், கென், கண்மணி மற்றும் மயுரேசன்
அனைவருக்கும் நன்றி. உங்கள் உணர்வுகளை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.
மயிலாடுதுறை சிவா...
Post a Comment
<< Home