அன்புடன் : கெளதமி - பருத்தி வீரன் கார்த்திக்
நேற்று இரவு சூர்ய தொலைகாட்சியில் கெளதமி நடத்துகின்ற அன்புடன் பார்த்தேன். நேற்று சிறப்புவிருந்தினராக பருத்தி வீரன் கார்த்திக் கலந்துக் கொண்டார். கார்த்திக் மிக கலகலப்பாக நன்குபேசினார். தன்னுடைய பள்ளி பருவம், கல்லூரி பருவம், அமெரிக்காவில் மேல் படிப்பு படித்தது எல்லாவற்றையும் மிக எளிமையாக சிரித்த முகத்துடன் பகிர்ந்துக் கொண்டார். மிக யாதார்த்தமாகபேசுவதும், நல்ல கலகலவென்று சிரிப்பதும் பார்ப்பதற்கு மிக அழகு. கல்லூரியில் படிக்கும் பொழுது நண்பர்கள் எவ்வளவு ஜாலியாக கலகலப்பாக இருப்பது போல் இருந்தது அவரின் பேட்டி.
கார்த்திக் ஓரளவு உயரமாக காணப்பட்டார், சூர்யா போல குள்ளம் இல்லை, சூர்யா போல மொத்தமான உயரமான காலணி அணிந்து வரவில்லை. கார்த்திக் விஜய், அஜீத், விஷால் போல மதுர, திருபாச்சி, சிவகாசி, ஆஞ்சநேயா, வரலாறு, ஆழ்வார், போக்கிரி, தாமிரபரணி போன்ற படங்களை பார்த்து மிகப் பெரிய வீச்சு அருவாள், தூப்பாக்கி, ஊரை அழித்தல், சிட்டி முழுவதையும் தீக்கறை ஆக்குதல் போல பண்ணாமல் இருந்தால் கார்த்திக்கிறகு வளமையான எதிர்காலம் இருக்கிறது என்று நம்பலாம்.
நடிகர் சிவக்குமார் தன்னுடைய இரண்டு பையன்களை நன்றாக வளர்த்து உள்ளார். படித்து முடித்து விட்டு உன் வாழ்க்கையை தேர்ந்து எடு என்றாராம். உண்மையில் சிவக்குமாரை பாராட்ட வேண்டும். உடனே சினிமாவில் கதாநாயகன் ஆக்கி காசு பார்க்க நினைக்காமல் நின்று நிதானமாக பசங்களை ஆளாக்கி உள்ளார். அமெரிக்காவில் இருந்து வேலைக்கு சென்று இருந்தால் BMW வாங்கிடலாம் என நண்பர்கள் சொன்னதை பகிர்ந்துக் கொண்ட பொழுது, அமெரிக்கவாழ் தமிழ் இளைஞர்கள் காரின் மீது உள்ள மோகம் பட்டவர்த்தனமாக தெரிந்தது. ஆனால் கார்த்திக் சினிமா மீது கொண்ட மோகம் காரணமாக அமெரிக்காவில் இருந்து வந்து இயக்குனர் மணிரத்னத்திடம் வேலைப் பார்த்து, தற்பொழுது ஓர் நல்ல கதாநாயகனாக அடி எடுத்து வைத்து இருக்கிறார். நல்ல நல்ல வேடங்களை ஏற்று தமிழ் சினிமாவில் நல்ல தரமான திரைப் படங்களை தரட்டும்.
கெளதமியின் பேச்சு, சிரிப்பு எல்லாமே செயற்கையாக உள்ளது. ஓர் அந்நோன்யம் சுத்தமாக இல்லை. முதல் இரண்டு வாரங்கள் லேப் டாப் வைத்து படுத்திக் கொண்டு இருந்தார். நல்லவேலை இந்த வாரம் முதல் TVயில் காண்பித்துக் கொண்டு இருந்தார், பரவாயில்லை. சூர்யா தொலைக் காட்சியில் ஞாயிறு தோறும் இரவு ஒரு மணி நேரம் கிடைத்ததை கெளதமி நன்றாக பயன் படுத்தி கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் "காப்பி வித் அனு" சூப்பர், "அன்புடன்" தெண்டம் என்று சொல்லி விடுவார்கள்.
மயிலாடுதுறை சிவா...
9 Comments:
//கெளதமியின் பேச்சு, சிரிப்பு எல்லாமே செயற்கையாக உள்ளது. ஓர் அந்நோன்யம் சுத்தமாக இல்லை.//
எனக்கு அப்படி தோன்றவில்லை. மற்றவர்களைப் போல வள வளவென்று பேசாமல், மிக நன்றாகவே நடத்தினார்.
T. ராஜேந்தரைப் பற்றி நான் கூட எழுதலாம் என்றிருந்தேன். நீங்களே எழுதி விட்டீர்கள். அந்தக் கட்டுரையில் அரசியல் வாடை தூக்கல். கொஞ்சம் குறைத்து, ராஜேந்தரின் தன்னம்பிக்கைக்கும், யாரைப் பற்றியும் கவலைப்படாமல் பொளந்து கட்டும் ஆற்றலுக்கும், குறிப்பாக சன் டீவி நிகழ்ச்சியில் அவர் பலகுரல் ஆற்றலை காட்டியதற்கும் பாராட்டி இருந்தால் நன்றாக இருக்கும். ஏகப்பட்ட திறமைகளும், அளவுக்கு அதிகமாகவே தன்னம்பிக்கை உள்ள, டீ.ரேஜேந்தர் எந்த ஊர்க்காரர் என்றாலும் தாராளமாகவே பாராட்டலாம். :-) ;-)
ஆமாம் சுந்தர்
நீங்கள் சொல்வதில் உடன் படுகிறேன்.
அதே சமயத்தில் டிஆர் திமுக சார்பு என்பதால் மேலும் எனக்கு பாராட்ட ஆசை.
மயிலாடுதுறை சிவா...
கார்த்திக் நேர்காணல் மிக அருமையாகவே இருந்தது. அன்புடன் முதல் வாரத்தில் வந்த கமல் நேர்காணல் பற்றி யாரேனும் எழுதியிருக்கிறார்களா? சுட்டி இருந்தால் தாருங்கள். அந்நிகழ்ச்சியைத் தவறவிட்டதால் வாசிக்க ஆவல். நன்றி.
---சூர்யா தொலைக் காட்சியில் ---
சூர்யா என்பது மலையாளத் தொலைக்காட்சி அல்லவா?
சன் டிவியின் தமிழாக்கம்னு நினைக்கிறேன் பாபா :-) சூரியத் தொலைக்காட்சி :-)
//---சூர்யா தொலைக் காட்சியில் ---
சூர்யா என்பது மலையாளத் தொலைக்காட்சி அல்லவா?
//
வந்துட்டாருப்பா குறை சொல்லுறதுக்கு .கொஞ்சம் கண்ணை முழிச்சு பாரும் .'சூர்ய தொலைக் காட்சியில்'-ன்னு தானே சொல்லியிருக்கு
சேதுக்கரசி...
---சன் டிவியின் தமிழாக்கம்னு --
சூரியன் என்பது தமிழ்ச்சொல்லா? வடமொழி என்று படித்த ஞாபகம். கதிரவன், பகலவன், தினகரன் போன்ற பல பொருத்தமான ஆக்கங்களைக் கையாண்டிருக்கலாம்.
ஜோ...
---வந்துட்டாருப்பா குறை சொல்லுறதுக்கு ---
இந்தப் பதிவில் கேள்வி கேட்கக்கூடாது என்று ஏதாவது சட்டம் இருக்கிறதா :))
---கொஞ்சம் கண்ணை முழிச்சு பாரும் .'சூர்ய தொலைக் காட்சியில்'-ன்னு தானே சொல்லியிருக்கு---
கடைசி பத்தியில் penultimate வரியின் தொடக்கத்தைப் பார்த்தவுடன் குழம்பினேன். கேட்டேன். மலையாளக் கன்னலிலும் மொழி மாற்றமாகி ஒளிபரப்பாகலாம் அல்லவா?
Bostan Bala,
மன்னிக்கவும் .பொறுமையாக பதில் சொன்னதற்கு நன்றி.
//சூரியன் என்பது தமிழ்ச்சொல்லா? வடமொழி என்று படித்த ஞாபகம்.//
ஆம் பாபா, ஐயமேயில்லை, அது வடமொழிச் சொல் தான்.
(சந்தேகமேயில்லைன்னு சொல்ல வந்தேன்.. அதுவும் வடமொழியாச்சே.. அதான் ஐயமேயில்லைனு மாத்திட்டேன் :-))
Post a Comment
<< Home