Sunday, March 11, 2007

கனி மொழி - அரசியலுக்கு தேவை...

இது பெண்கள் தினத்திறக்காக மற்றும் நீண்ட நாட்களாக நான் எழுத ஆசைப் பட்ட விசயம்.

மார்ச், 2007. தமிழ் நாட்டு அரசியலை உற்று பார்க்கின்ற பொழுது பெண் அரசியல்வாதிகள் எண்ணிக்கையில் மிக குறைவாகதான் உள்ளார்கள். நம் தமிழ் நாட்டிற்கு ஓர் பெண் முதல்வர் இருந்த பொழுதும்சராசரி பெண்களின் பங்கு மிக தெளிவாக, கொள்கை ரீதியாக, அரசியல் பாடங்கள் கற்றவர்களாக, ஓரளவு நம் சமுதாயத்துடன் ஒத்துப் போக கூடிய கருத்துக்களை உள்வாங்கிய பெண் தலைவர்கள் 33% அளவிற்கு உள்ளதா என்பது ஓர் பெருத்த கேள்வி குறியாக உள்ளது. இந்திய அரசியலில் பெண் தலைவர்களும் சுதந்திர போரட்டத்தில் கூட பங்கு பெற்ற தலைவர்கள் இருந்து இருக்கிறார்கள், ஆனால் அந்த காலத்தில்இருந்த பெண் தலைவர்கள் பலர் துளிக்கூட சுயநலம் இல்லாமல் நாட்டிற்காக சொந்த மண்ணிற்காக போராடி இருக்கிறார்கள் என்பதையும் வரலாற்றில் சில பக்கங்கள் சொல்லதான் செய்கிறது.

அப்படி நான் உற்று நோக்குகின்ற ஓர் நபர் நம் முதல்வர் கலைஞர் அவர்களின் புதல்வி கனிமொழி. முதல்வரின்மகள் என்ற காரணத்திற்காகவே அவரிடம் உள்ள பல நல்ல விசயங்களை நம் பத்திரிக்கைகள் இன்னும் மக்கள் இடத்தில் கொண்டு செல்ல வில்லையோ என்று நான் பல சமயம் நினைத்துப் பார்த்து இருக்கிறேன். கனிமொழி என்ற நபரிடம் நிச்சயம் பாராட்டபட வேண்டிய பல விசயங்கள் இருக்கதான் செய்கிறது. ஓர் சாராசரிபெண்ணாக அவர் கடந்து வந்த பாதையில் ரோஜாக்களை விட முட்களைதான் அதிகம் பார்த்து இருப்பார் என்று நினைக்கிறேன்.


Free Image Hosting at <a href=www.ImageShack.us" />

கனிமொழி என்கிற ஓர் பெண், முதல்வரின் பெண் என்பதால் மாட மாளிகையில், பட்டத்து இளவரசி போலஇல்லாமல் மிக சதாரணமாக எளிமையாக எல்லோரிடமும் பழகும் ஓர் பக்கத்து வீட்டு பெண் என்கிறஉணர்வை ஏற்படுத்துகின்ற தோற்றம் நிச்சயம் அவர்களுக்கு அது மிகப் பெரிய ப்ளஸ் பாயிண்ட் என்றுதான் தோன்றுகிறது.

நம் சமுதாயத்தில் மணவாழ்க்கை என்பது ஓரு தவிர்க்க முடியாத கட்டமைப்பு. சிலருக்கு அல்லது பலருக்குமனமொத்த வாழ்க்கை அமைவது இல்லை. இதற்கு கனிமொழி ஒன்றும் விதிவிலக்கல்ல. முதல் திருமண வாழ்க்கை பாதிக்கப்பட்ட பொழுதும் அதில் இருந்து மீண்டு வந்து மீண்டும் ஓர் நல்ல வாழ்க்கையை அதுவும் மனதிற்கு பிடித்த மற்றோரு வாழ்க்கையை நல்ல படியாக அமைத்துக் கொண்டு ஓர் குழந்தைக்கு தாயாக இருப்பதும் பாராட்ட பட வேண்டிய ஒன்று.

1988 ஆண்டிலே சென்னையில் உள்ள எத்திராஜ் கல்லூரியில் பொருளாதாரம் பயின்ற மாணவியாக இருந்த பொழுது கோவில்களுக்கு சென்று இறைவனை வணங்கி இருக்கிறார், காலப் போக்கில் ஆலயங்களில் இறைவனை தேடுவதை விடஇயல்பு வாழ்க்கையில் நமக்கும் மேலே ஓர் சக்தி உள்ளது என்பதைவிட, நமக்குள்தான் ஓர் சக்தி இருக்கிறது என்பதை உணருகிறேன் என்று கூட விகடனில் வெளிப்படையாக பேசி இருக்கிறார்.

தமிழ் சமுதாயத்தில் அரசியல் தலைவர்களில் மறுக்க முடியாத மறைக்க முடியாத ஓரு மாபெரும் அரசியல் தலைவர் பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார். அவருடைய பல புத்தகங்களை தந்தை கலைஞரிடம் இருந்து வாங்கி படித்துமூட நம்பிக்கை, சாதி மறுப்பு, பெண் விடுதலை இவை அனைத்தையும் உள்வாங்கி வைத்து இருப்பதில் இருந்து தன்னுடைய வளர்ச்சியில் அவருக்கு ஓர் சமுதாயம் சார்ந்த அக்கறை இருக்கிறது என்பது தெளிவாக தெரிகிறது.

கலைஞருக்கு தமிழ் இலக்கியத்தில் மிகுந்த ஈடுபாடும் மற்றும் காதலும் உள்ளதை போல அவரது வாரிசு கனிமொழிக்கு உள்ளது என்பது மகிழ்ச்சி குரிய விசயம். குறிப்பாக சங்கத் தமிழை படித்துவிட்டு கலைஞரிடம் விவாதம் செய்வாராம். தமிழ் இலக்கியத்தின்மேல் இப்படி ஓர் காதல் இருப்பதும் நிச்சயம் ரசிக்கப் பட வேண்டிய விசயம். அவர் கலந்து கொள்ளும் விழாகளில் தமிழ்இலக்கியம் பற்றி, பாரதிப் பற்றி, கம்பன் பற்றி, திருவள்ளூவர் பற்றி பேசுவதும் கவனிக்க பட வேண்டிய விசயம்.
தமிழ் நாட்டை பொறுத்தவரை அரசியலுக்கு அப்பாற்பட்டு எல்லோராலும் ஏற்று கொள்ளப்பட்ட ஓர் அறிவார்ந்த, சமுதாயஅக்கறை கொண்ட நபர்களும் ஆதரிக்கும் விசயம் "நம் ஈழ மக்கள் விடுதலை". நம் தாய் மொழி தமிழாக உள்ள பட்சத்தில் நம் மொழி பேசுகின்ற மக்கள் கைக்கு எட்டுகின்ற தூரத்தில் அவர்களின் சொந்த மண்ணிற்கு போராடும் அவல நிலைக்குகுரல் கொடுக்க ஓர் சாரசரி தமிழ் பெண்ணாக கனிமொழி இருப்பதும், பத்திரிக்கைகளில் பேசுவதும், போராட்டத்தில் பங்கு கொள்வதும் அரசியலுக்கு அப்பாற்பட்டு அவரை எப்படி பாராட்டமல் இருக்க முடியும்?

சமீபத்தில் “செஞ்சோலை சிறார்கள்" தீக்கு இறையான பொழுது ஒட்டு மொத்த தமிழர்களும் வேதனை கண்ணீர் வடித்த பொழுதுஅதற்கு அஞ்சலி செலுத்தும் விதமாக கனிமொழி உடனே தமிழ் உணர்வாளர்கள், பற்றாளர்கள் பலரை தொலைபேசியிலும் நேரிலும் கூப்பிட்டு உண்ணாவிரதம் இருந்ததும், அதனை ஆதரித்து கொஞ்சம் கூட பயம் இல்லாமலும், கூச்சம் இல்லாமலும்ஈழ மக்கள் விடுதலை மிக முக்கியம் என்றும், நம்மை போல அவர்களும் தமிழர்கள் தானே என்று சொன்னதும் பச்சை தமிழச்சியாக கனி மொழி மனதளவில் உயர்ந்து காணபடுகிறார். ஒர் பெண் அதுவும் நடப்பு முதல்வரின் வாரிசு தனி ஆளாகநடு ரோட்டில் ஈழ மக்களுக்கு குரல் கொடுத்த விசயம் போற்றுதலுக்கு உரியது.

எல்லாவற்றிற்க்கும் மேலாக இரண்டு வாரங்கள் முன்பு சென்னையில் “சங்கமம்” என்ற விழா எடுத்துதது எத்தனை பாராட்டினாலும் தகும். கடைக் கோடி தமிழனும் பாராட்டும் விதமாக, சராசரி தமிழனின் பல இசை வடிவங்களை நகரவாழ் மக்களுக்குஎளிமையான முறையில் காட்டிய விதம் மனதார பாராட்டபட வேண்டிய விசயம். சராசரி தமிழனின் அக்கறை இல்லாத மேல் தட்டு மக்களின் டிசம்பர் சீசனைப் பற்றி பாராட்டி எழுதும் பத்திரிக்கைகள் இந்த “சங்கமத்தை” எப்படி பாராட்டும்? அதனை தன்னம் தனி ஆளாக சளைக்கமால் கனிமொழி பத்திரிக்கைகளுக்கு பேட்டி கொடுத்த விதம் உண்மையில் மிக தைரியமான விசயம். இந்த துணிவு நிச்சயம் நம் நாட்டிற்கு தேவை. இதுவே ஓர் உயந்த சாதியில் பிறந்த பெண் செய்து இருந்தால் எத்தனை பத்திரிக்கைகள் பாராட்டி, தலையில் தூக்கி வைத்து பேட்டி எடுத்து பக்கம் பக்கமாக போட்டு இருக்கும்?
இப்படிப்பட்ட கனிமொழி ஏன் அரசியலுக்கு வர கூடாது. கலைஞரின் வாரிசு என்பதனாலேயே எப்படி அவரை ஒதுக்க முடியும்?

- ஓர் பெண்ணிய வாதியாக
- ஒர் கடவுள் மறுப்பாளராக
- ஓர் தீவர தமிழ் இலக்கிய ஆர்வலராக
- ஈழ மக்கள் விடுதலையை விரும்புபவராக
- ஓர் தமிழ் கவிஞராக- நாட்டுப் புற கலைகள் மீது ஈடுபாடு உள்ளவாராக
- ஓர் எழுத்தாளராக
- ஓர் பெரியார்வாதியாக

இவ்வளவு சமுதாயம் சார்ந்து இருக்கும் குணங்கள் கொண்ட ஓர் பெண் ஏன் அரசியலில் ஈடுபட கூடாது? திமுக என்ற பேரியக்கம் லட்சகணக்கான தொண்டர்களை கொண்டது. பெரியாருக்கு பிறகு, அண்ணாவிற்கு பிறகு, கலைஞர் தலைமையில் இந்த இயக்கம் சென்று கொண்டு இருக்கிறது. அந்த இயக்கத்திற்கு புத்தணர்ச்சியாக, பெண் முன்னேற்றத்தை முன் எடுத்த செல்லும் விதமாக, பெண் உரிமைகளை மீட்டு எடுக்க கனிமொழி வந்தால் தவறு இல்லை என்பது என் தாழ்மையான கருத்து.

நன்றி
மயிலாடுதுறை சிவா...

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

11 Comments:

Blogger அபி அப்பா said...

சிவா! நீண்ட நாட்களுக்கு பிறகு எழுதுகிறீர்கள். அடிக்கடி நிறைய எழுதவும். இந்த பதிவும் அருமை.

Sunday, March 11, 2007 3:43:00 AM  
Anonymous Anonymous said...

உங்களுடைய கருத்து வரவேர்க்கபட வேண்டியதுதான்

Sunday, March 11, 2007 4:44:00 AM  
Blogger சதுக்க பூதம் said...

She seems to be good in social aspects.
Does she has any strategy for economic development strategy or poverty alleviations plans(even though she did economics graduation) or Primary sector development plan?
Does she has organisational management capacity?

Sunday, March 11, 2007 1:53:00 PM  
Blogger bala said...

மடிலாடுதுறை சிவா அய்யா,

தி மு க பேரியக்கமா?கனிமொழியின் தலமை நாட்டுக்கு தேவையா?உங்களை மாதிரி ஜல்லி அடிக்கும் பிரியாணி பொட்டலம் தொண்டர்கள் இருக்கும் வரை, இந்த கும்பலின் கொள்ளை தொடர்ந்து கொண்டிருக்கும்.

பாலா

Sunday, March 11, 2007 8:54:00 PM  
Blogger அ. இரவிசங்கர் | A. Ravishankar said...

யார் என்றே அறியப்படாத ஒரு சமூகத் தகுதியும் இல்லாத வாரிசுகள் அமைச்சராகும் போது, வாரிசு அரசியல் குற்றச்சாட்டுக்குத் தயங்கி தகுதி உள்ளவர்கள் வெளியே நிற்கக்கூடாது. இவர் அரசியலுக்கு வர வேண்டும்

Monday, March 12, 2007 12:32:00 PM  
Blogger மயிலாடுதுறை சிவா said...

நன்றி அபி, நர்மதா, ரவி சங்கர்

மயிலாடுதுறை சிவா...

Monday, March 12, 2007 6:58:00 PM  
Blogger மயிலாடுதுறை சிவா said...

சதுக்க பூதம்

உங்கள் கருத்தில் வேறுபடுகிறேன். எல்லா தகுதிகளும் இருந்தால்தான் அரசியலுக்கு வர வேண்டும் என்ற கட்டாயம் அல்ல.

பெரிய பதவிகள் வரும் பொழுது, நல்ல அதிகாரிகளை வைத்து எந்த நல்ல காரியங்களும் செய்ய முடியும்.

மயிலாடுதுறை சிவா...

Monday, March 12, 2007 7:03:00 PM  
Blogger மயிலாடுதுறை சிவா said...

பாலா

திமுக பேரியக்கம் மட்டும் அல்ல, அதற்கும் மேலானது.

கனிமொழி தலைமை பதவிக்கு வரவேண்டும் என்று சொல்லவில்லை, அரசியலுக்கு வர வேண்டுதான் என்று சொன்னேன்.

திமுக என்ற மாபெரும் இயக்கத்திற்கு நான் பிரியாணி தொண்டனாக இருப்பது பெருமை தலைவா?!

தமிழ் இன விரோதி ஜெவிற்கு ஜால்ரா போடுவதை விட, கலைஞருக்கு அடிப்படை தொண்டனாக இருப்பது எனக்கு பெருமைய்யா...

மயிலாடுதுறை சிவா..

Monday, March 12, 2007 7:09:00 PM  
Blogger ஜோ/Joe said...

//தமிழ் இன விரோதி ஜெவிற்கு ஜால்ரா போடுவதை விட, கலைஞருக்கு அடிப்படை தொண்டனாக இருப்பது எனக்கு பெருமைய்யா...
//

சபாஷ் மயிலாடுதுறையாரே!

சிலபேர் கலைஞரை கண்மூடித்தனமாக தாக்கி விட்டு ,ஜெயலலிதாவை பெயரளவில் தாக்குவது மாதிரி பேருக்கு காட்டிவிட்டு ,நழுவுவதின் உள்நோக்கம் நமக்கு புரியாமல் போகுமா என்ன?

Monday, March 12, 2007 8:19:00 PM  
Blogger வெற்றி said...

சிவா,
நல்ல பதிவு.
கனிமொழியைப் பற்றி எனக்கு அவ்வளவாகத் தெரியாது.

நிர்வாகத் திறமை, தமிழுணர்வு, மொழிப்பற்றுள்ள பெண்கள் அரசியலுக்கு வருவது மிகவும் அவசியமானது. உங்களின் பதிவைப் படிக்கும் போது, கனிமொழி அவர்கள் இத் திறமைகள் எல்லாம் கொண்டவர் என்றே எண்ணத் தோன்றுகிறது.

தமிழ் மொழிப்பற்றோ அன்றி இன மான உணர்வோ இல்லாத ஜெயலலிதா போன்றவர்களே முதல்வர் நாற்காலியில் அமரும் போது, கனிமொழி எந்த விதத்திலும் குறைந்தவர் இல்லையென்பதே என் எண்ணம்.

Monday, March 19, 2007 5:14:00 PM  
Blogger சதுக்க பூதம் said...

If you think in that way,We will get leaders like Vijaykanth.Who will talk more for public with out any strategy

Monday, March 19, 2007 7:50:00 PM  

Post a Comment

<< Home

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது