"முடிவில்லா பந்தங்கள் தொடர..." ஸ்டேட் பேங்க் விளம்பரம்
சன் தொலைக் காட்சியில் ஓர் விளம்பரம் பார்த்தேன். மனதிற்கு மிகப் பிடித்து போனது.
காட்சி 1
புகை வண்டியில் ஓர் வயதான அதே சமயத்தில் ஆரோக்கியமான ஓர் பாட்டி தலைவாரிக் கொண்டேஎதிரே அமர்ந்து இருக்கும் நபரிடம் "தம்பியை பார்க்க போகிறோம்" என்பார்.
அந்த பாட்டியின் அருகிலே இன்னோரு சற்று வயது அதிகம காணப்படுகிற பாட்டியின் தோளில்இந்த பாட்டி சாய்ந்து தூங்கி கொண்டு இருப்பார்.
பெரிய பாட்டி, தங்கச்சி, தங்கச்சி என கூவப்படும் பொழுது சின்ன பாட்டி என்ன அக்கா என்பாள்தூக்க கலக்கத்தோடு, பெரிய பாட்டி "நீ சொன்ன குஞ்சலாடு விசயம் நல்ல ஐடியா" என்பார்.
காட்சி 2
ஓர் அழகான கிராமத்தில் ஓர் குதிரை வண்டியில் இந்த இருபாட்டிகளும் சிரித்துக் கொண்டேஎதிரே உள்ளே வீட்டை நோக்கி பயணப் பட்டு கொண்டு இருப்பார்கள்.
காட்சி 3
வாசலில் அழைப்பு மணியை அமுக்கியவுடன், கதவை திறந்து ஓர் தாத்தா யார் வந்து இருக்கிறார்கள் என்ற சிந்தனையோடு கதவை திறப்பார். வாசலில் ஓர் அழகான பெட்டியில் வரிசையாக லட்டு அடுக்கப்பட்டு ஓர் தீபமும் இருக்கும். தாத்தா ஆச்சரியத்தோடு அதனை பார்த்துக் கொண்டு இருக்கையில்இந்த இரண்டு பாட்டிகளும் மறைவில் இருந்து வெளியே வந்து "Happy Birthday Seenu" என்பார்கள்அப்படியே இருவரும் சென்று அந்த தாத்தாவை அன்பாக தழுவி கொள்வார்கள்.
காட்சி 4
அந்த மூவரும் சற்று மங்கலாகி ஸ்டேட் பேங்க் விளம்பரம் வரும், "முடிவில்லா பந்தங்கள் தொடர..."
என்ன ஓரு அருமையான விளம்பரம். இந்த அத்தனை விசயங்களும் கிட்டதட்ட ஒரு நிமிடத்திற்கும் குறைவாக சொல்லப் பட்டு இருக்கும்.
மனித உறவுகள் மங்கி போகின்ற இந்த காலகட்டத்தில் மிக அருமையாக இரண்டு பாட்டிகள்புகைவண்டியில் வெளியூரில் உள்ள தன் தம்பியை பார்க்க செல்லுவதை பார்க்கும் பொழுதுஇன்னமும் நம்மவூரில் உறவுகள் அங்கு அங்கு ஆழமாக பிணைக்க பட்டுள்ளது என்றே நான்நினைக்கிறேன். அதுமட்டும் அல்ல மேலை நாடுகளில் காணப்படுகின்ற "Surprise Party or Visit" மிக அருமையாக இங்கு தொகுக்கப் பட்டு இருக்கிறது. இதுப் போல நல்ல விளம்பரங்கள் பல வர வேண்டும்.
அமெரிக்காவில் பல தாத்தா பாட்டிகளை பார்க்கும் பொழுது எனக்கு ஆச்சர்யமாக இருக்கும். சுதந்திரமாக எங்கு வேண்டுமானாலும் செல்வது, பொறுமையாக நீண்ட தூரம் காரில் பயணிப்பது, அழகு நிலையத்தில் முகப் பூச்சு, நகத்தில் பூச்சு செய்து கொள்வது, இப்படி தங்களுடையவாழ்க்கையை மிக சுதந்திரமாக அனுபவிப்பது கண்டு வியந்து போய் இருக்கிறேன். இதுப் போல்நம் தாத்தா பாட்டிகள் பலர் வாழ்க்கையை அனுபவிக்க வில்லையே என்ற வருத்தம் ஏக்கம் எல்லாம் எனக்குள் உண்டு. மேலும் நம்மவூர் தாத்தா பாட்டிகள் பலர் ஆரோக்கியம் இல்லாமல் இருப்பது கண்டும் வருத்தமாய் உள்ளது.
ஆனால் இந்த விளம்பரம் ஓர் அழகான கிராமம், பச்ச பசேலென்ற வயல் வெளிகள், மெல்லிய தென்றல் காற்று, குதிரை வண்டி இப்படி நம்மவூர் சமாசாரங்களை மிக எளிமையாக காட்சி படுத்தியது கண்களுக்கும் மனதிற்கும் சில்லென்று இருக்கிறது. இவை அனைத்தும் 1 நிமிடத்திற்கும் குறைவாக எடுத்து இருப்பது பாராட்ட தக்கது. நம்மவூர் தாத்தா பாட்டிகளை திரையில் பார்த்த பொழுது மனதிற்கு மிக மகிழ்ச்சியாய் இருந்தது.
மனித உறவுகளை மிக அழகாக படம் பிடித்து காட்டிய "ஸ்டேட் பாங்கிற்கு" நன்றிகள் பல...
நன்றி
மயிலாடுதுறை சிவா...
2 Comments:
Hai Mr. Shiva, I am Tholkappiam(Now in Dubai) from mayiladuthurai. Romba nalla pathivu. Nanum indha add parthan. Nalla touching.--------By Tholkappiam
நான் இன்னும் அந்த விளப்பரத்தை பார்க்கவில்லை. எனினும் அதை பார்க்கும் ஆவலை தூண்டிவிட்டுள்ளீர்கள்.
நன்றி
Post a Comment
<< Home