தொல் திருமா - திமுக கூட்டணிக்கு ஆதரவு...
செப்டம்பர் 27 2006
வாசிங்டன் காலை 10.30 மணி, தமிழகம் நேரம் இரவு 8.00 மணி
சன் தொலைகாட்சியில் அண்ணன் தொல் திருமா திமுக கூட்டணிக்கு
ஆதரவு தெரிவித்தாக நண்பர்கள் தொலைப் பேசியில் சொன்னார்கள்.
திருமா ஆதரவு திமுக கூட்டணிக்கு மேலும் பலத்தை தேடித் தரட்டும்.
தேர்தலுக்கு முன்பே வந்து இருந்தால் அண்ணன் மேலும் 3 அல்லது 4 சட்டமன்ற உறுப்பினர்கள் வந்து இருக்கலாம். பரவாயில்லை...
திருமாவின் கனல் வீச்சு, உரை வீச்சு தலித் மக்கள் விடுதலைக்கும், தமிழ் மொழிக்கும், ஈழ மக்களின் ஆதரவிற்கும், தமிழ் பாதுகாப்பு இயக்கத்திற்கும் மேலும் மேலும் வலு சேர்க்கட்டும்.
தொல் திருமா திமுக கூட்டணிக்கு வருகை ஓர் புத்துணர்ச்சியை தரட்டும்.
நன்றி
மயிலாடுதுறை சிவா....
6 Comments:
சிவா,
தகவலுக்கு நன்றிகள்.
மாநில அரசில் இணைந்து தமிழகத்தில் அடக்கி, ஒடுக்கப்படும் தமிழர்களின் வாழ்வு முன்னேற திருமா அவர்கள் இவ் வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதே என் அவா.
என்னங்க ஒன்னுமே புரியவில்லை!!
என்ன நடக்கிறது???
அண்ணன் மேலும் 3 அல்லது 4 சட்டமன்ற உறுப்பினர்கள் வந்து இருக்கலாம். பரவாயில்லை
We all know how MK behaved at that time.Perhaps you have forgotten all that.MK will not give the Dalit
parties the importance they deserve.
சிவா,
மகிழ்ச்சி வெள்ளத்தில் இருக்கிறீர்கள் போலிருக்கு :-))
ரவி ஏன் வருத்தப்படுகிறார்?
அதிமுக விடம் கிடைத்த மரியாதையைவிட அதிகமாகவே கிடைக்கலாம் என்று நான் நினைக்கிறேன்.
சிவா, ரவி சொல்வதும் ( ரொம்ப obviousஆக இருந்தாலும் அவ்வப்போது இப்படி ஏதாவது...) சரிதான். கருணாநிதி மிக மோசமாக அவமானப்படுத்தியதாலேயே, வேறு வழியில்லாமல் திருமா அதிமுக பக்கம் போக வேண்டியிருந்தது. இப்போது வேறு காரணங்கள் இருக்கலாம். இதெல்லாம் அரசியல்ல சகஜம் என்று எடுத்துகொண்டு கூட்டி கழித்து பார்த்தால், திருமா திமுக பக்கம் வந்தது ஒரு (என் பார்வையில்) நல்ல விஷயம்தான்!
Post a Comment
<< Home