நடிகர் கமலின் தமிழ் ஆர்வம்...
வாசிங்டன்.
வெள்ளி காலை, 10.30 மணி இருக்கும். எனது செல்பேசியில் ஓர் கம்பீரமான குரல், வணக்கம், பேராசிரியர் ஞான சம்மந்தன் இருக்கிறா? என்று?
நான் உடனே, அய்யா இருக்கிறார் தாங்கள் யார் என்று தெரிந்து கொள்ளலாமா? என்றேன்
அந்த குரல், உடனே நான் பேராசிரியர் நண்பர் கமல்ஹாசன் என்றது,
ஒரு நிமிடம் ஒன்றுமே புரியவில்லை, எனது செல்பேசி எண் கமலுக்கு எப்படி கிடைத்து என்று..
நான் சுதாரித்துக் கொண்டு அண்ணன் வணக்கம். எனது பெயர் சிவா. வாசிங்டன் தமிழ்ச் சங்கதலைவராக உள்ளேன். உங்களுடனும் உரையாடுவது மிக்க மகிழ்ச்சி என்றேன். அவரிடன் மேற்கொண்டு என்ன பேசுவது யோசிப்பதற்கு முன் அண்ணன் நீங்கள் கலைத் துறையில் பல வெற்றிகளை குவிக்க வேண்டும் என்று சொல்லிவிட்டு, பேராசிரியிடம் தொலைப் பேசியை கொடுத்துவிட்டேன். அன்று முழுவதும் கிட்டதட்ட 3 முறை பேசிவிட்டார் அவர் ஏன் பேராசிரியரை கூப்பிட வேண்டும்?
வட அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவைக்கு தமிழ் நாட்டில் இருந்து கலைஞர்கள், அரசியல்வாதிகள், பேச்சாளர்கள் வருவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு தமிழ் பேராசிரியர் கலைமாமணி முனைவர் ஞானசம்மந்தன் வந்து இருந்தார்கள். நீயுயார்க் விழா முடிந்து அவரை வாசிங்டன் அழைத்து வந்தேன் நிற்க.
தமிழ் அறிஞர் தொ பரமசிவம் பற்றி நீங்கள் பலர் அறிந்து இருப்பீர்கள். அவர் தமிழ் பேராசிரியராக மனோன்மணியம் பல்கலைகழகத்தில் வேலைப் பார்த்து வருகிறார். சிறந்த தமிழ் அறிஞர், திராவிட கருத்துகள், மொழி மற்றும் வைணவமும் பற்றி ஆழ்ந்த அறிவு உடையவர். அவர் ஞானசம்மந்தனின் நண்பர் மற்றும் ஆலோசகர்.
போராசிரியர் ஞானசம்மந்தனும், போராசிரியர் தொ பரமசிவனும் கமலுக்கு நண்பர்கள். இலக்கிய சம்மந்தமாக ஏற்படும் சந்தேகமும், தமிழ் சம்மந்தமாக பல விசயங்களை விவாதிப்பதும் கமலுக்கு பழக்கமாம்.
போன வாரம் பேராசிரியர் தொ பரமசிவனுக்கு நெஞ்சு வலி வந்துள்ளது. இதனை ஞானசம்மந்தன் வீட்டார்கள் இங்கே தெரிவித்தார்கள். மேலும் அவர்கள் கமலிடமும் தெரிவித்து உள்ளார்கள். தொ ப மருத்துவ மனைக்கு செல்லவும் மருத்துவ ஆலோசனைகளை பெறவும் மறுக்குகிறாராம். கமல் அக்கறையோடு ஞான சம்மந்தனை அழைத்து இதனை எப்படி சமாளிப்பது என்றும், நான் வேண்டுமானால் திருநெல்வேலியோ, அல்லது மதுரை சென்று அவரை பார்த்து உதவ வேண்டுமா? என்று கமல் கேட்டதை நான் தெரிந்து கொண்டேன்.
தமிழ் திரை உலகின், கலைத் தாயின் இளைய மகன் கமல் ஓர் தமிழ் பேராசிரியர் படும் துன்பம் கண்டு அதனை எப்படி சமாளிப்பது என்று கேட்டதை நான் ஓர் பெரிய விசயமாக நினைக்கிறேன்.
தமிழ் மொழிப்பற்றி, தமிழ் ஆராய்ச்சிப் பற்றி, வைணவம் பற்றி, இன்னும் பல கருத்துகளை பேராசிரியர் தொ ப விடம் கலந்து உரையாடியாது கமலின் மற்றோரு முகம் தெரிகிறது. அதாவது யார் துன்ப பட்டாலும் உதவுவது மனித நேயம் என்றாலும் கமல் அந்த தமிழ் பேராசிரியாருக்கு ஏதுவும் ஆகி விட கூடாது என்ற அக்கறையோடு உதவ நினைத்தது நிச்சயம் பாராட்டுக்கு உரிய செயல். பேராசாரியர் ஞான சம்மந்தனிடம் விருமாண்டி ஆரம்பித்து மருத நாயகம் வரை பல செய்திகளை பகிர்ந்து கொண்டாராம். மொத்ததில் கமல் பழக மிக இனிமையான மனிதர் என்றார் பேராசிரியார்.எது எப்படியோ கமலின் தமிழ் ஆர்வம் எனக்கு மிகுந்த மன மகிழ்ச்சியை தருகிறது.
நன்றி
மயிலாடுதுறை சிவா...
35 Comments:
This comment has been removed by a blog administrator.
கமலின் மனித நேயத்திற்கு ஒரு பெரிய கும்பிடு!
மெய்யாலுமே பெரிய மனிதன் தான்!
பகிர்ந்ததற்கு நன்றி!
படிக்க மிகவும் மகிழ்ச்சியாகவும் ,கமல் ரசிகன் என்ற முறையில் பெருமையாகவும் இருந்தது.நன்றி!
கமலின் இந்த நற்பண்பும் அக்கறையும் பாராட்டி எழுதி உள்ளீர்கள். ஆனால் இந்த நற்பண்புகள் அனைத்து துறையினரிடமும் உள்ளதே. ஏன் இதற்கு மட்டும் ஒவர் ரியாக்ஷன்
சிவா,
சுவையான தகவல்.
//தமிழ் திரை உலகின், கலைத் தாயின் இளைய மகன் கமல் ஓர் தமிழ் பேராசிரியர் படும் துன்பம் கண்டு அதனை எப்படி சமாளிப்பது என்று கேட்டதை நான் ஓர் பெரிய விசயமாக நினைக்கிறேன்.//
அதிலும் பராட்டப்பட வேண்டிய விடயம் என்னவென்றால், சில நடிகர்கள் இப்படி உதவி செய்துவிட்டு ஊடகங்கள் மூலம் விளம்பரம் தேடிக்கொள்வார்கள். ஆனால் கமல் அவர்கள் எந்தவொரு ஆர்ப்பாட்டமும் இல்லாமல் காதோடு காது வைத்தது போல் செய்யும் இத்தகைய செயல்கள் மிகவும் மெச்சத்தக்கது.
சிறந்த, அவசியமான பதிவு.
நன்பர் மயிலாடுதுறை சிவா அவர்களுக்கு நன்றிகள்.
உங்கள் தமிழ்ப்பணி சிறந்தோங்க என் வாழ்த்துக்கள்.
-தமிழ்விழி
கமலின் தமிழ் பற்றும் ஆர்வமும் தான் உலக அறிந்த விசயம் ஆயிற்றே.
நன்றிகள் பல
எஸ் கே, ஜோ, வெற்றி, விழி, நாகை சிவா
மயிலாடுதுறை சிவா...
நல்ல விடயம்தான்.
//கமலின் இந்த நற்பண்பும் அக்கறையும் பாராட்டி எழுதி உள்ளீர்கள். ஆனால் இந்த நற்பண்புகள் அனைத்து துறையினரிடமும் உள்ளதே. ஏன் இதற்கு மட்டும் ஒவர் ரியாக்ஷன்//
கணேசன், திரைப்படத் துறையினர் என்றாலே வெறு உலக வாசிகள் என தோற்றம் தருபவர்கள் நடுவிலே இப்படி ஒரு சம்பவம் நடந்தலால் எழுதியுள்ளார். உங்களுக்கு இது போன்ற பலரின் தொடர்புகள் இருந்தால் அவர்கள் நல்லெண்ணம் பற்றியும் எழுதுங்கள்.
அவர்கள் ஒரு சில அரசியல் பிரச்சனைகளில் தலையிடாததால் அவர்கள் மனிதர்களே இல்லை என முடிவு கட்டாமலாவது இருக்கலாம்!
நன்றி பாலசந்தர் கணேசன்
உண்மையான தமிழ் ஆர்வம் உள்ளம் வேறு சில
நடிகர்கள் யாரவது சொல்லுங்கள்.
மேலும் அவர் அமெரிக்கா தொலைபேசியில் கூப்பிட்டு தொ ப எப்படி அவர்களுக்கு உதவ வேண்டும் என்று கேட்டது உங்களுக்கு பெரிய
விசயமாக தெரியவில்லையா?
நன்றி
மயிலாடுதுறை சிவா...
//கமலின் இந்த நற்பண்பும் அக்கறையும் பாராட்டி எழுதி உள்ளீர்கள். ஆனால் இந்த நற்பண்புகள் அனைத்து துறையினரிடமும் உள்ளதே. ஏன் இதற்கு மட்டும் ஒவர் ரியாக்ஷன்//
பாலசந்தர் கணேசன்,
நல்லவற்றை பாராட்டலாம் அல்லவா? அதற்கு நடிகன், கலைஞன் போன்ற பேதம் இல்லையே. மேலும், கமல் ஒரு celebrity என்பதால் கூடுதல் கவணம். அவ்வளவே.
அனைத்துத் துறையினரிடமும் இருக்கலாம், பா.கணேசன்.
ஆனால், நீங்கள் ஒன்றைக் கவனிக்க மறந்துவிட்டீர்கள் என நினைக்கிறேன்.
இது தன் வீட்டில், நிகழ்ந்த நிகழ்வு எனச் சொல்லியிருக்கிறார், ம. சிவா.
ஏதோ நாளேட்டில் படித்து பதிவு செய்யவில்லை.
என் கண்முன்னே மனித நேயம் மதிக்கப்படுவதைக் காணும் போது பதிக்கத் தெரிந்த எனக்கு எப்படி பதியாமல் இருக்கமுடியும்?
கொஞ்சம் சிந்தியுங்கள்!
நீங்கள் செய்ததுதான் ஓவர் ரீயாக்ஷனோ?!!
மன்னிக்கவும்.
இல்லை. நான் இதை பெரிய விஷயமாக கருதவில்லை. ஆனால் கமல் இதை காட்டிலும் நல்ல பிற காரியங்களை செய்திருக்கிறார். சமூகத்திற்கு பங்களிப்பு இருக்க வேண்டும் என்ற ரீதியில் ரசிகர் மன்றங்களை முறைபடுத்தியது மிகவும் பாரட்டதக்கது. மற்றபடி, நீங்கள் கமலின் ஆர்வத்தை நேரடியாக பார்த்து விட்டீர்கள். எல்லா துறையிலும் ஆர்வம் உள்ளவர்கள், இல்லாதவர்கள் இருக்கின்றார்கள். இந்த ஒரு விஷயம் சற்றே ஒவர் ரியாக்ஷனாகவே தெரிகின்றது. தவறாக கூறியிருந்தால் மன்னிக்கவும்.
பார்வை
கமலிடம் பேசியது ஓர் பில்டப்பா? அப்படியே வைத்து கொள்ளுங்கள், இதில் மகிழ்ச்சி அடைவதில் தவறு ஏதும் இல்லேயே!
கமல் என்னுடைய செல் பேசியில் கூப்பிட்டது மனதிற்கு நிச்சயம் மகிழ்சியை தருகிறது.
நன்றி
மயிலாடுதுறை சிவா....
நன்றி ஸ்கே
பாலசந்தர் கணேசன் மன்னிப்பு எல்லாம் எதற்கு
உங்கள் கருத்துகளை கூற உங்களுக்கு முழு உரிமை உண்டு.
கமல் நிறைய உதவிகள் செய்து வந்தாலும் இது
நான் நேரிடையாக பார்த்தது. அதனை பதிய வைத்தேன்.
நன்றி
மயிலாடுதுறை சிவா...
அன்பின் மயிலாடுதுறை சிவா...
ரொம்ப நாளாச்சு.. நம்ம ஊரப் பத்தி ஏதாவது செய்தி இருந்தாப் போடுங்களேன்.. ஊருக்குப் போயிட்டு வந்து போடறேன்னு சொன்னீங்க.. இன்னும் அந்த போஸ்ட் வரலையே...
//ஆனால் இந்த நற்பண்புகள் அனைத்து துறையினரிடமும் உள்ளதே. ஏன் இதற்கு மட்டும் ஒவர் ரியாக்ஷன்//
பாலச்சந்தர் கணேசன் சொன்னது கொஞ்சம் சரியாத்தான் இருக்கும் போலத்தெரியுதே...
ஆமாம்..ஒரு நெருங்கிய நண்பருக்கு உடல்நிலை சரியில்லை என்றால் இன்னொருவரிடம் கலந்தாலோசிப்பது சகஜம் தானே.. இதில் தமிழார்வம் எங்க வந்தது?
இதுவே நான் TNEB யில் வேலை பார்க்கிற ஒருத்தருக்கு உதவினால் அது மின்னார்வம் ஆகுமா? Bank-ல வேலை பார்க்கிறவருக்கு உதவினால் அது வங்கியார்வம் ஆகுமா? புரியலையே..
அப்புறம் தமிழ்ப் பேராசிரியரிடம் தமிழ் பேசாமல் ஹிந்தியா பேசுவாங்க? இதுலயும் எங்கயும் தமிழார்வம் ? தெரியலயே.. அவங்க தொழிலுக்குத் தேவைப்படுது.. பேசுறாங்க.. எதுக்கு இப்படி ஓவரா உணர்ச்சிவசப் படுறீங்க?
இது ஒண்ணும் பொறாமைன்னு எடுத்துக்காதீங்க.. இப்படித்தான் பிரபலங்கள் இன்னும் பிரபலமாகிறாங்க.. "எம்சியாரு ஒரு தபா இங்க வந்தபோது இங்க.. இங்க நின்னு தான் டீக் குடிச்சாரு" -ன்னு சொல்லிக்கிட்டுத் திரியுற கிராமவாசிக்கும்..
சிலுக்கு சுமிதா கடிச்சு வெச்ச ஆப்பிளை 500 ரூபாய்க்கு ஏலம் எடுத்தவனுக்கும்,
இந்த போஸ்ட்டுக்கும் பெரிய வித்தியாசம் தெரியலை சிவா..
உங்களிடமிருந்து இன்னும் தரமான பதிவுகளை எதிர் பார்க்கிறேன்.
என்றென்றும் அன்புடன்,
சீமாச்சு...
சீமாச்சு
உங்கள் ஆலோசனைகளுக்கு நன்றி. நிச்சயம் தரமான பதிவு தர முயற்சிக்கிறேன்.
அதாவது நடிகர்கள் தமிழ் ஆசிரியரிடமோ அல்லது பேராசிரியிடமோ நட்பு வைத்து இருக்கிறார்கள் என்று நான் முழுவதும் நம்பவில்லை.
உதராணமாக நடிகர் ரஜினிகாந்த் தமிழ் நாட்டில் தமிழ் பேராசிரியிடம் நட்பு வைத்து மொழியைப் பற்றி இன்னமும் தெரிந்து கொள்ள விரும்புவார் என்று நம்பவில்லை.
மற்றொரு எடுத்து காட்டாக நடிகர் அஜீத் ஓர் தமிழ் ஆசிரியர் உடம்பு பாதிப்பு என்றால் கன்னியாகுமாரி சென்று பார்த்து வருவார் என்று நம்புவது சிரமம்.
அதாவது கமல் ஓர் சதாரண நடிகன் மட்டுமல்ல, அதனை தாண்டி பன்முகங்கள் அவருக்கு உண்டு, அதில் ஒன்று தமிழ்ப் பற்று என்கிறேன் நான், இதில் தவறு இருப்பதாக நான் கருதவில்லை. கமலுக்கு இருக்கும் அக்கறை இருக்கிறது. மற்றோரு சக நடிகர் இப்படி இருந்தால் பாராட்டுக்கு உரியது.
இலவச கொத்தனாருக்கு நன்றி...
மயிலாடுதுறை சிவா...
ஒரு பெரிய நடிகர் தமிழ் அறிஞர்களிடம் நெருக்கமாக இருப்பதே பாராட்டப்பட வேண்டிய செய்தி. அதிலும் ஒருவர் உடல்நலம் குன்றி சரியாக மருத்துவம் பார்த்துக்கொள்ள மாட்டேன் என்று சொல்லும் போது அவர்களின் இன்னொரு நண்பரை தொடர்பு கொண்டு எப்படி இவரை மருத்துவம் பார்த்துக்கொள்ள வைப்பது என்று ஆலோசிக்கிறார். இது பெரிய செயலே. கவனிக்க இது சிவா அவர் செல்போனுக்கு தொடர்புகொண்டதால் தெரியவந்தது. அதை அவர் தன் வலைப்பூவில் பகிர்ந்து கொண்டார். சொல்லப்போனா இதை பகிர்ந்துகொள்ளாமல் விட்டிருந்தால் தான் தவறு.
எல்லோரும் நல்லது செய்யறாங்க அதுக்காக அவன் என்னத்தையா செஞ்சி கிழிச்சுப்புட்டான் அதை பெரிசா சொல்ல வந்துட்ட, இவன் அதை விட 10 மடங்கு பெரிசா செஞ்சிருக்கான் தெரியுமா உனக்கு என்று சொல்வது போல் உள்ளது இது "ஓவர் ரியாக்சன்" என்று சொல்பவர்களின் கூற்று.
இங்கு கமலின் உதவி சிறிதெனினும் அது தொ பரமசிவன் குடும்பத்தாருக்கு மிகப்பெரியது.
குறும்பனுக்கு மனப் பூர்வமான நன்றிகள் பல.
எனது உணர்வுகளை மிகச் சரியாக உணர்ந்து கொண்டதற்கு...
மயிலாடுதுறை சிவா...
உங்கள் கட்டுரை படித்தவுடன் என் இதயத்தில் ஒரு படி மேலே சென்று விட்டார் வாழும் கலைஞன் கமல்
அன்புடன்
தம்பி
இது நிச்சயமாக பகிர்ந்து கொள்ள கூடிய பதிவு தான். பாரட்டப்பட வேண்டிய நிகழ்வுதான்...
seemaachu-ன் கருத்தில் சிறுபிள்ளைத்தனமும் கமல் மேல் உள்ள வெறுப்பும் தான் தெரிகிறது.
பரமசிவம் கமலின் நண்பராம் .அதனால் உதவி செய்தாராம் .பரமசிவம் கமலுக்கு எப்படி நண்பரானார் ? கமலின் தமிழார்வமும் தமிழறிஞர்களை மதிக்கும் குணமும் தேடலும் அவர்களை நண்பர்களாக்கியதே தவிர வேறென்ன ? அப்படிப்பட்ட தேடலும் மொழியறிவும் இங்கு வேறு எநநத தமிழ் நடிகருக்கும் உண்டா? கமலிடம் இருப்பதில் ஒரு தூசி கூட கிடையாது.
பாலசந்தர் கணேசன் ,நீங்கள் நியாயவாதி என்று காண்பிப்பதற்கு எதையாவது சொல்லாதீர்கள் .வர்த்தகத்தின் மொத்த குத்தகை எடுத்திருக்கிற தமிழ் திரையுலகில் கமல் போன்ற மாபெரும் நடிகன் பரந்து பட்ட பார்வையும் தேடலும் கொண்டிருப்பதை பாராட்டாவிட்டாலும் ,என்னத்தை பெருசா கிழிச்சிட்டார்னு சொல்லி உங்க காழ்ப்புணர்ச்சியை காட்டாதீங்க!
நன்றி மயிலாடுதுறை சிவா
கமலின் மனித நேயமும் தமிழ் பற்றும் யாவரும் அறிந்ததே. இருந்தாலும் நம்மிடயே உள்ள ஒருவரின் அனுபவத்தை அறியும் போது சந்தோஷமாக உள்ளது. நண்பர் மனதின் ஓசை கூறியது போல் இது நிச்சயமாக பகிர்ந்து கொள்ள கூடிய பதிவு தான். பாராட்டப்பட வேண்டிய நிகழ்வுதான்...
//இது ஒண்ணும் பொறாமை ன்னு எடுத்துக்காதீங்க.. இப்படித்தான் பிரபலங்கள் இன்னும் பிரபலமாகிறாங்க .. " எம்சியாரு ஒரு தபா இங்க வந்தபோது இங்க.. இங்க நின்னு தான் டீக் குடிச்சாரு" -ன்னு சொல்லிக்கிட்டுத் திரியுற கிராமவாசிக்கும் ..
சிலுக்கு சுமிதா கடிச்சு வெச்ச ஆப்பிளை 500 ரூபாய்க்கு ஏலம் எடுத்தவனுக்கும் , இந்த போஸ்ட்டுக்கும் பெரிய வித்தியாசம் தெரியலை சிவா..//
Bold letter-ல் இருக்கும் இந்த 3 வார்த்தைக்கும் ஏதோ தொடர்பு இருக்கும் போல இருக்கே..!
மேலும் பிரபலங்களின் இது போன்ற நல்ல செய்கைகள் பிரபலமாவதில் என்ன தவறு இருக்கிறது?
// உங்களிடமிருந்து இன்னும் தரமான பதிவுகளை எதிர் பார்க்கிறேன் . //
தரமான பதிவுன்னா? இப்போது ஒரு சிலர் திருட்டுதனமாக எடுத்த சில திரைப்பட ஷூட்டிங் ஸ்டில் போட்டு பதிவு போடுவது போலவா? (வெளங்கும்..)
அல்லது கமலின் கவுதமி பற்று என்றோ ரஜினியின் தீராத ஐஸ்வர்யா ராய் டூயட் பற்று என்றோ பதிவு கேட்கிறீர்களோ என்னவோ?
// ஒரு நெருங்கிய நண்பருக்கு உடல்நிலை சரியில்லை என்றால் இன்னொருவரிடம் கலந்தாலோசிப்பது சகஜம் தானே .. இதில் தமிழார்வம் எங்க வந்தது ?
இதுவே நான் TNEB யில் வேலை பார்க்கிற ஒருத்தருக்கு உதவினால் அது மின்னார்வம் ஆகுமா ? Bank- ல வேலை பார்க்கிறவருக்கு உதவினால் அது வங்கியார்வம் ஆகுமா ? புரியலையே ..//
ஒரு தமிழறிஞர் உடல்நிலை பற்றி இவ்வளவு அக்கறை எடுத்து விசாரிப்பது தமிழார்வம் தான். எப்படி சச்சின் உடல்நிலை பற்றி இந்திய கிரிக்கட் ரசிகர்கள் அனைவரும் கவலைப்படுவார்களோ அது போன்று தான். மற்றபடி உங்கள் மின்னார்வம் வங்கியார்வம் எல்லாம் தும்பை விட்டு வாலை பிடிக்கும் வேலை.
// அப்புறம் தமிழ்ப் பேராசிரியரிடம் தமிழ் பேசாமல் ஹிந்தியா பேசுவாங்க ? இதுலயும் எங்கயும் தமிழார்வம் ? தெரியலயே//
நீங்க வேற! நாட்டில அவனவன் என்னமோ சீமப்பசு (சீமாச்சு இல்லங்க...) மாதிரி யாரைப் பார்த்தாலும் ஆங்கிலத்திலயே பேசிக்கிட்டு அதை பெருமையாக நினைத்துக்கொண்டு திரியும் போது அமெரிக்காவுக்கு போன் பண்ணி செந்தமிழில் பேசுவது நிச்சயம் பாராட்டப்பட வேண்டிய விஷயம் தான்.
கமல் நிச்சயம் திரைப்பட துறையினரையும் தாண்டி நிறைய பேருக்கு முன்னுதாரணம் தான். கமல் அவர் சார்ந்த துறையில் சம்பதப்பட்ட விஷயங்கள் நிறைய கற்ற நிறைய சாதித்த ஒரு மேதை. மற்ற நடிகர்கள் போன்று பஞ்ச் டயலாக் பேசி ரசிகர்களை உசுப்பேற்றி கனவில் மிதக்க விட்டு பின் நடுத்தெருவில் விடாமல் முதலில் இருந்தே ரசிகர் மன்ற விஷயத்தில் மிக கவனமாக செயல் பட்டவர்.
நன்றி மயிலாடுதுறை சிவா
கமலின் மனித நேயமும் தமிழ் பற்றும் யாவரும் அறிந்ததே. இருந்தாலும் நம்மிடயே உள்ள ஒருவரின் அனுபவத்தை அறியும் போது சந்தோஷமாக உள்ளது. நண்பர் மனதின் ஓசை கூறியது போல் இது நிச்சயமாக பகிர்ந்து கொள்ள கூடிய பதிவு தான். பாராட்டப்பட வேண்டிய நிகழ்வுதான்...
// இது ஒண்ணும் பொறாமை ன்னு எடுத்துக்காதீங்க.. இப்படித்தான் பிரபலங்கள் இன்னும் பிரபலமாகிறாங்க .. " எம்சியாரு ஒரு தபா இங்க வந்தபோது இங்க.. இங்க நின்னு தான் டீக் குடிச்சாரு" -ன்னு சொல்லிக்கிட்டுத் திரியுற கிராமவாசிக்கும் ..
சிலுக்கு சுமிதா கடிச்சு வெச்ச ஆப்பிளை 500 ரூபாய்க்கு ஏலம் எடுத்தவனுக்கும் , இந்த போஸ்ட்டுக்கும் பெரிய வித்தியாசம் தெரியலை சிவா..//
Bold letter-ல் இருக்கும் இந்த 3 வார்த்தைக்கும் ஏதோ தொடர்பு இருக்கும் போல இருக்கே..!
மேலும் பிரபலங்களின் இது போன்ற நல்ல செய்கைகள் பிரபலமாவதில் என்ன தவறு இருக்கிறது?
// உங்களிடமிருந்து இன்னும் தரமான பதிவுகளை எதிர் பார்க்கிறேன் . //
தரமான பதிவுன்னா? இப்போது ஒரு சிலர் திருட்டுதனமாக எடுத்த சில திரைப்பட ஷூட்டிங் ஸ்டில் போட்டு பதிவு போடுவது போலவா? (வெளங்கும்..)
அல்லது கமலின் கவுதமி பற்று என்றோ ரஜினியின் தீராத ஐஸ்வர்யா ராய் டூயட் பற்று என்றோ பதிவு கேட்கிறீர்களோ என்னவோ?
// ஒரு நெருங்கிய நண்பருக்கு உடல்நிலை சரியில்லை என்றால் இன்னொருவரிடம் கலந்தாலோசிப்பது சகஜம் தானே .. இதில் தமிழார்வம் எங்க வந்தது ?
இதுவே நான் TNEB யில் வேலை பார்க்கிற ஒருத்தருக்கு உதவினால் அது மின்னார்வம் ஆகுமா ? Bank- ல வேலை பார்க்கிறவருக்கு உதவினால் அது வங்கியார்வம் ஆகுமா ? புரியலையே ..//
ஒரு தமிழறிஞர் உடல்நிலை பற்றி இவ்வளவு அக்கறை எடுத்து விசாரிப்பது தமிழார்வம் தான். எப்படி சச்சின் உடல்நிலை பற்றி இந்திய கிரிக்கட் ரசிகர்கள் அனைவரும் கவலைப்படுவார்களோ அது போன்று தான். மற்றபடி உங்கள் மின்னார்வம் வங்கியார்வம் எல்லாம் தும்பை விட்டு வாலை பிடிக்கும் வேலை.
// அப்புறம் தமிழ்ப் பேராசிரியரிடம் தமிழ் பேசாமல் ஹிந்தியா பேசுவாங்க ? இதுலயும் எங்கயும் தமிழார்வம் ? தெரியலயே//
நீங்க வேற! நாட்டில அவனவன் என்னமோ சீமப்பசு (சீமாச்சு இல்லங்க...) மாதிரி யாரைப் பார்த்தாலும் ஆங்கிலத்திலயே பேசிக்கிட்டு அதை பெருமையாக நினைத்துக்கொண்டு திரியும் போது அமெரிக்காவுக்கு போன் பண்ணி செந்தமிழில் பேசுவது நிச்சயம் பாராட்டப்பட வேண்டிய விஷயம் தான்.
கமல் நிச்சயம் திரைப்பட துறையினரையும் தாண்டி நிறைய பேருக்கு முன்னுதாரணம் தான். கமல் அவர் சார்ந்த துறையில் சம்பந்தப்பட்ட விஷயங்கள் நிறைய கற்ற நிறைய சாதித்த ஒரு மேதை. மற்ற நடிகர்கள் போன்று பஞ்ச் டயலாக் பேசி ரசிகர்களை உசுப்பேற்றி கனவில் மிதக்க விட்டு பின் நடுத்தெருவில் விடாமல் முதலில் இருந்தே ரசிகர் மன்ற விஷயத்தில் மிக கவனமாக செயல் பட்டவர்.
நன்றி தம்பி, மனதின் ஓசை, ஜோ
மயிலாடுதுறை சிவா...
//தமிழ் திரை உலகின், கலைத் தாயின் இளைய மகன் கமல் ஓர் தமிழ் பேராசிரியர் படும் துன்பம் கண்டு அதனை எப்படி சமாளிப்பது என்று கேட்டதை நான் ஓர் பெரிய விசயமாக நினைக்கிறேன்//
நிச்சயமாக இது பெரிய விசயம் தான்,திரு.கமலஹாசனின் ரசிகன் என்ற முறையிலும்,அவர் பிறந்த பரமக்குடி-யின் மண்ணின் மைந்தன் என்ற முறையிலும் எனக்கும் பெருமை தான்.
திரு.கமலஹாசன் அவர்கள் நாத்தீகவாதியாக இருந்தாலும் பல நேரங்களில் கடவுள் பற்றி பேசி இருக்கிறார்.அதில் முக்கியமானது அவருடைய பேச்சு யாருடைய மனதையும் புண்படுத்தாது என்பதுதான்,அவருடைய கடவுள் பற்றிய கருதுக்களின் ஒரு சிறு பகுதியை நான் பதிவிட்டுள்ளேன்,பார்க்கவும்
அதற்கான சுட்டி இதோ...
http://unkalnanban.blogspot.com/2006/07/blog-post_07.html
நன்றி...
அன்புடன்...
சரவணன்
மிக்க நன்றி ஜீன், சரவணன்
மயிலாடுதுறை சிவா...
ஜோ மற்றும் சிவா அவர்களே,
கமல் இதை காட்டிலும் பெரிய விஷயங்கள் பண்ணி இருப்பதை என்னுடைய பின்னூட்டத்தில் குறிப்பிட்டுள்ளேன். நான் இதை குறை கூறும் நோக்கத்தோடோ அல்லது நக்கல் பண்ணும் நோக்கத்தோடோ எழுதவில்லை. ஆனால் ஒரு பிரப்லத்தோடு நேரில் விஷயம் ஒரு சகபதிவரை சற்றே தடுமாற வைத்து விட்டதோ என்று எண்ணத்தில் தான் "ஒவர் ரியாக்ஷன்" என்று நான் பயன்படுத்தினேன். எந்த காழ்ப்புணர்வும் இல்லை. மீண்டும் சொல்கிறேன். தவறாக பட்டால் தயவு செய்து மன்னித்து விடுங்கள்.
நல்ல பதிவு சிவா.
சில நடிகர்களுக்கு 'ஆன்மீகத்' தாகமெடுத்து மலையேறுவதும், சாமிகளுக்குக் கொட்டிக் கொடுப்பதும் மதிப்பிற்குரியதாகவும், வலைப்பதிவில் பகிர்ந்து கொள்ளக்கூடிய தகுதியோடும் இருக்கும்போது, கமலுக்கு தமிழ்த்தாகமெடுப்பதும் அதனை யாரால் போக்கிக் கொள்கிறாரோ அந்த அறிவாளி உடல்நலக்குறைவடையும்போது அக்கறைப்படுவதும் ஏன் மதிப்பிற்குரியதாகவோ, சிவாவினால் பகிர்ந்து கொள்ளக் கூடியதாகவோ இருக்கக் கூடாது?
பேரா.தொ.ப நலம் பெற வாழ்த்துக்கள்!
நன்றி சுந்தர வடிவேல்...
பாலசந்தர் கணேசன் எதற்கு மன்னிப்பு எல்லாம்...
உங்கள் கருத்தை சொல்ல உங்களுக்கு முழு உரிமை உண்டு...
மயிலாடுதுறை சிவா...
சம்பந்தமில்லாத செய்தி ஒன்று.
பிஞ்சுமனம் குறும்படம் பற்றிய எனது பதிவு இது. படித்துப் பாருங்களேன்.
http://karuppupaiyan.blogspot.com/2006/07/blog-post_13.html
இங்கே எழுதி இருக்கிறேன் சிவா அவர்களே... மிக்க நன்றி.
இன்னொரு நடிகர் சாமியாரின் காலில் விழுந்தோ, கூட அமர்ந்தோ புகைப்படத்தைப் போடுகையில் நமக்கு பொதுவாக ஆன்மீகம் தனிமனித விவகாரமாயிற்றே, இதை பத்திரிக்கையில் போடவேண்டியதன் பின்னுள்ள அரசியல் என்ன என்றெல்லாம் யோசிக்கத் தோன்றாது (அல்லது அந்த அரசியல் நமக்கு உடந்தையாகவும், உவப்பானதாகவும் இருக்கும்). இன்னொரு நடிகையோடு சுற்றினார் என்று செய்திவரும் போது அட அது 'அவர்கள்' விவகாரம் என்று தோன்றாது. ஆனால் இன்னொருவரது தமிழார்வம், பகுத்தறிவு பேச்சுகள் மட்டும் கிண்டலுக்கும், சந்தேகத்துக்கும் உள்ளாகும். இதுவும் ஒருவகை அரசியல்.
பிரபலங்களின் தனிப்பட்ட விவகாரங்கள் கடைவிரிக்கப்படுவதையும், அதைக்கண்டு உவகை அடைவதையும் ஏற்றுக்கொள்ளும் நமக்கு தனிமனித அக்கறை, மொழியின், பண்பாட்டின் மேலான ஈடுபாட்டின் மேலான நட்பு இவைகளை விமர்சிக்கத் தோணுவது விந்தைதான்.
சிவா, பதிவுக்கு நன்றி!
http://balamuruganvazha.blogspot.com/2006/07/blog-post_13.html
தங்க மணி
தங்கள் புரிதலுக்கு நன்றி.
இது நமது வலைப் பூ, நம் கருத்துகளை நாம்
சொல்வோம், பிறர் அவர்கள் கருத்தை சொல்லட்டும். எல்லாவற்றையும் ரசிக்க கற்றுக்
கொள்வோம்.
நன்றி
மயிலாடுதுறை சிவா...
Siva,
An earlier comment of mine is pending with you for approval for the last 4 days !!!!!
Post a Comment
<< Home