Tuesday, March 28, 2006

ஸ்டாலின் ஏன் வரகூடாது?

ஸ்டாலின் ஏன் வரகூடாது?

ஸ்டாலினா அல்லது வைகோவா? தமிழ்சசியின் அரசியல் கட்டுரைகளை தொடர்ந்து படித்து வருகிறேன். நன்றாக எழுதுகிறார் மன பூர்வமான பாராட்டுகள்!!!

என்னுடைய கருத்தை பதியவைப்பது என் கடமை.

அதாவது நிச்சயம் ஸ்டாலினுக்கு ஓர் வாய்ப்பு உண்டு என்றே நான் கருதுகிறேன். அதுமட்டும் அல்லஅதில் தவறு இல்லை என்பதும் என் தாழ்மையான கருத்து.

வைகோ மிக சிறந்த பேச்சாற்றல் உள்ள ஓர் நபர், ஆனால் அவர் பெருன்மான்மையான மக்கள்விரும்பும் ஓர் மக்கள் தலைவன் இல்லை என்பதும் என் கருத்துதான். சொந்த தொகுதியில் அவரால்தனித்து நின்று சட்டமன்ற நபராக அல்லது நாடாளுமன்ற நபராக அவரால் வெற்றி பெற முடியாதுஎன்பது ஓர் நிதர்சனமான ஓர் உண்மை. ஒருக்கால் அவர் இந்த சட்டமன்ற தேர்தலில் ஜெயா பக்கம்போகமால் இருந்து இருந்தால் கலைஞருக்கு பிறகு அவரால் ஓர் சிறு சலசலப்பை மட்டுமே ஏற்படுத்தி இருக்க முடியும். அவரால் கட்டுகோப்பான திமுகவை உடைத்து இருக்க முடியுமாஎன்பது பெருத்த சந்தேகமே!!!

ஸ்டாலின் ஏன் வரகூடாது என்பதற்கு ஓர் வழுவான காரணம் யாரும் சொல்லவில்லை. சில பேர் கலைஞர் மீது உள்ள கோபத்தால் ஸ்டாலினையும் திட்டுவது, கலைஞரிடம் உள்ள அதேபேச்சாற்றல், எழுத்து ஆற்றல், கடுமையான உழைப்பு இவற்றை அவரிடம் அப்படியே ஏன் எதிர்பார்க்க வேண்டும் என்று புரியவில்லை? ஸ்டாலின் மேயராக இருந்த பொழுது நல்ல திறம்படநடத்தினார் என்று அனைத்து பத்திரிக்கைகளும் பாராட்டிதான் எழுதின. ஸ்டாலின் ஒரளவு பேச்சாற்றல்ஓரளவு நிர்வாக திறமை, கட்சியின் அனுபவம், திமுகவின் அனுபவம் வாய்ந்த தலைவவர்களின்துணையோடு அவரால் நன்றாக இயங்க முடியும் என்றே நான் கருதுகிறேன்.

நான் பெரிதும் மதிக்கின்ற அண்ணன் திருமாவோடு ஸ்டாலினை நான் ஒப்புமை செய்ய முடியவில்லை. திருமா ஓர் எழுச்சி தலைவன். ஒடுக்கப்பட்ட, உரிமைகள் மறுக்க படுகின்ற, தாழ்த்தப் பட்ட மக்களுக்குபோராடுகின்ற ஓர் தளம் அவருக்கு வாய்த்து இருக்கிறது, அவருக்கு தமிழ் உணர்வோடு, எழுச்சியாகபேச ஓர் வாய்ப்பு இருக்கின்ற காரணத்தால் அவரால் சிறுபான்மை மக்களின் ஓர் எழுச்சி தலைவனாகவர முடிந்தது.

அதே போல் இராமதாஸ் அவர்களிடம் பேச்சாற்றல் இல்லாமல் இருக்கலாம், ஆனால்வன்னிய இன மக்களுக்கும், பிற்படுத்தப் பட்ட மக்களுக்கும் அவர் நேரிடையாகவோ அல்லது மறைமுகமாக அவர் உதவிய காரணத்தால் அவரால் 25 சட்ட மன்ற உறுப்பினர்களை, 7 நாடாளுமன்றஉறுப்பினர்களை உருவாக்க முடிந்தது. வெற்றி பெற்ற பிறகு தமிழ், ஈழத்து ஆதரவு, தமிழ் பாதுகாப்புஇயக்கம் என்று இயங்குவது தமிழ் உணர்வாளர்களுக்கு மிக்க மகிழ்ச்சியை தருகிறது.

கேரளாவில் கருணாகரன் மகன் முரளீதரனை விட, கர்நாடக தேவுகவுடா மகன் குமாரசாமியைவிட, இராமதாஸ் மகன் அன்பு மணியை விட, மூப்பனார் மகன் வாசனைவிட, ஆயிரம் மடங்கு ஸ்டாலின் தகுதி உடையவர் என்று எனக்கு தோன்றுகிறது. நிச்சயம் ஸ்டாலினுக்கு ஓர் வாய்ப்பு கிடைத்து அதனை அவர் நன்றாக பயன்படுத்தி கொண்டால் அவருக்கும் அவர் சார்ந்து இருக்கிற திமுகவிற்கும்நல்லது, அல்லது காலம் ஓபி பன்னீர் செல்வம் போல் இல்லாமால் ஓர் நல்ல தலைவனை இனம்காட்டினால் மகிழ்ச்சியே!!!

நன்றி

மயிலாடுதுறை சிவா...

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

8 Comments:

Blogger VSK said...

vandhu koNdirukkiRaar Captain!

Tuesday, March 28, 2006 8:14:00 AM  
Blogger சிறில் அலெக்ஸ் said...

உங்கள் கருத்தை அமோதிக்கிறேன்.உண்மையில் ஸ்டாலினை ஏன் மக்கள் வெறுக்கிறார்கள் என்பதே தெரியவில்லை. அவரது இளமைக்காலம் பலருக்கும் நியாபகம் இருக்கிறதாலோஎன்னவோ..அதையே திரும்பத்திரும்ப சொல்வது நியாமாகப்படவில்லை.

அரசியலில் இளையவராக கருதப்படும் ஸ்டாலின் மேயராக கலக்கியிருக்கிறார்.. இதுவே போதும். ஓ பன்னீர் அழகான ஒப்பீடு. ஓ பன்னீரைவிட இவர் எவ்வளவோ மேல் என்பதை யாரும் மறுக்க முடியாது.

வைகோ ஒரு அரசியல்வாதியாக மிளிருகிறார் ஆனால் அவர் ஒரு அரசாளராக என்ன செய்தார் என்பது வெளிச்சமில்லை. வெறும் பேச்சுத் திறமையை வைத்துக்கொண்டு என்ன செய்வது?

Tuesday, March 28, 2006 8:17:00 AM  
Blogger தமிழ் சசி | Tamil SASI said...

சிவா,

ஸ்டாலின், வைகோ ஆகிய இருவரைப் பற்றிய அலசலில் முதல் பதிவையே எழுதியிருக்கிறேன். இங்கு பல காலமாக கூறப்படும் தலைவர்களின் பேச்சாற்றல் குறித்து கொஞ்சம் அலசினேன்.

அடுத்த பதிவில் இன்னும் விரிவாக எழுதமுடியும் என்று நினைக்கிறேன்

ராமதாஸ் எந்த வித பேச்சாற்றலும் இல்லாமலே தலைவராகிய நிலைக்கு காரணம் அவர் செயல்பாடு தான் என்பதையும் நான் சுட்டிக்காட்டியிருக்கிறேன்.

பேச்சாற்றலை மட்டுமே கொண்டு தலைவர்கள் உருவாவதில்லை என்பதை சுட்டிக் காட்டவே ராமதாசை உதாரணம் காட்டினேன். மற்றபடி வன்னிய இன மக்களுக்கு அவருடைய பங்களிப்பை நான் மறுக்க வில்லை.

Tuesday, March 28, 2006 8:58:00 PM  
Blogger வெங்காயம் said...

25 ஆண்டுகளுக்கும் மேலாக அரசியில் இருக்கும் ஸ்டாலின் அடுத்தக் கட்ட தலைவராக ஆக எந்தத் தகுதியும் இல்லையாம். ஆனால் அரசியலுக்கு வந்து 25 மாதங்கள் கூட ஆகாத விஜயகாந்த் தலைவர் (முதல்வர்) ஆகலாமாம். முதலில் பின்னூட்டமிட்டுச் சென்ற எஸ்.கே. என்ற பார்ப்பனர் கூட இதையே கூறுகிறார்.

திராவிட இயக்கங்கள் அழிய வேண்டும் என்ற பார்ப்பணர்களின் ஆசை மற்றும் திட்டமே இதற்குக் காரணமாக இருக்க முடியும். ஏற்கனவே அ.தி.மு.க. என்ற திராவிட இயக்கத்தை ஜெயலிலதா என்ற பார்ப்பணர் மூலம் கைப்பற்றிவிட்டனர். அடுத்து தி.மு.க.வில் அவாள்களால் நுழைந்து கைப்பற்ற முடியவில்லை. எனவே கலைஞருக்குப் பிறகு தி.மு.க. இருக்கக்கூடாது என்பதே இவர்களின் நோக்கம். எஸ்.கே. மட்டுமின்றி ஒட்டுமொத்த பார்ப்பணர்களின் திட்டமும் இதுவே. இதற்காக இவர்கள் ரஜினியை கொம்பு சீவ முயன்று தோற்றுவிட்டனர். ஆனால் வராது வந்த மாமணியாய் இப்பொழுது இவர்களுக்கு விஜய்காந்த் கிடைத்திருக்கிறார். விஜயகாந்தின் கட்சி நிதி நிலைமை கூட சரி இல்லாத நிலையில் தடுமாறிக் கொண்டிருக்கிறார். அவருடன் கூட்டு சேர அவாள்களின் பா.ஜ.க. முயன்றது. பா.ஜ.க. வுடன் கூட்டு சேர்ந்தால் நிதி நிலைமை மட்டுமல்ல கட்சியே திவாலாகிவிடும் என்று உணர்ந்த விஜி, அதற்கு மறுத்துவிட்டது நாம் அறிந்ததே. ஆனால் எங்களுடன் கூட்டணி இல்லையென்றாலும் பரவாயில்லை; தனித்து நில்லுங்கள்; நிதி பிரச்சனையை நாங்கள் கவனித்துக் கொள்கிறோம் என்று அவாள்களின் தரப்பில் கூறப்பட்டதாக வெளியான செய்திகள் உண்மையாக இருக்கும் என்றே நான் எண்ணுகிறேன்.

இவர்கள் என்ன செய்தாலும் பார்ப்பணீய அடக்குமுறையை மீண்டும் தமிழகம் ஏற்றுக் கொள்ளாது; ஏனெனில் இது பெரியார் பிறந்த மண்.

Wednesday, March 29, 2006 6:26:00 AM  
Blogger Gopalan Ramasubbu said...

Let Stalin become Chief Minister if his party thinks he's the capable person to hold that post.
60 odd people died during Kalaignar arrest,DMK could have given atleast 1 MLA or MP seat to represent their families.I don't know why they aren't willing to do it.

Thursday, March 30, 2006 5:14:00 PM  
Blogger VSK said...

சொலல் வல்லன் விஜயகாந்த்!!!!

'சொலல்வல்லன் சோர்விலன் அஞ்சான் அவனை
இகல்வெல்லல் யார்க்கும் அரிது.' --[குறள் 647]

வள்ளுவன் வாக்கினுக்கேற்ப
விஜயகாந்த் செய்துவிட்டார்!

ரசிகர்களின் ஆணைக்குத் தலை வணங்குவேன் என்றார்.
தனிக்கட்சி அமைப்பேன் என்றார்.
தனித்துப் போட்டி என்றார்.
யாருடனும் கூட்டு இல்லை என்றார்.
இரு கழகங்களும் எதிரிகள் தான் என்றார்.
31-ம் தேதி பட்டியல் என்றார்.
பெண்களுக்கு கணிசமாக வாய்ப்பு உண்டு என்றார்.

இன்று சொன்னபடி செய்து காட்டி விட்டர்!
இதோ, அதோ என்று போக்கு காட்டி வரும் சந்தர்ப்பவாத போலித் தலைவர்களுக்கு இடையே,
இதோ ஒரு வெள்ளிக்கீற்று!

கருப்பு சூரியன் புறப்பட்டு விட்டான்!
மறுப்பு சொல்லாமல் மகுடம் சூட்டுவோம்!

தமிழகத்துக்கு விடிவு வேண்டும்!
அது இரு கழகங்கள் மூலமாக அல்ல என்பது
தெள்ளத்தெளிவாகத் தெரிந்து விட்டது!

இனிமேலும் ஏமாறாமல், கேப்டனுக்கு ஒரு வாய்ப்பு கொடுப்போம்!
அரியணை ஏற்றுவோம் இவரை!

Friday, March 31, 2006 8:00:00 AM  
Blogger VSK said...

சும்மாவேனும், வந்தது, போனது எல்லாவற்றிற்கும், 'எடுத்தேன், கவிழ்த்தேன்' என்ற பாணியில்,
'பார்ப்பனன்' என்னும் முத்திரையைக் குத்தியே பொழுதினைப் போக்கும் உரித்தால் ஒன்றுமே இல்லாமல் போகும் 'வெங்காயங்கள்' வடிக்கும் 'கண்ணீர்த்துளி'களுக்கெல்லாம் பதில் உரைக்கும் அவசியம் இல்லை எனினும்,
30 வருட திராவிட ஆட்சியில் தமிழகம் என்ன வகையில் முன்னேறியிருக்கிறது என்று சற்றேனும் தங்கள் மனசாட்சியைத் தொட்டு சொல்லமுடியுமா?

வளர்ச்சியின் அடையாளம், தனித்து நிற்பது.
50 வருட வளர்ச்சிக்குப் பின்னும் கூட்டணி இல்லாமல் ஆட்சியைப் பிடிக்க முடிய வில்லை, ஒரு மாநில சட்டசபைத் தேர்தலில் என்ற பரிதாப உண்மையைப் புரியாதவர் நீங்கள் என்றால், உங்களுடன் பேசுவதில் அர்த்தமே இல்லை!

எல்லாவற்றிலும் ஒரு சூழ்ச்சி, சதி, பார்ப்பன ஆதிக்கம் என்ற வழக்கமான பல்லவிகளையே பாடிக்கொண்டிராமல், நிஜத்தை சுவாசிக்க வாருங்கள்!

திராவிட இயக்கம், தமிழ் இயக்கம் அல்ல!
இதனால், தமிழனுக்கு ஒரு நன்மையும் இல்லை என்று அடித்துக் கூறுவேன்!

பா.ம.க, வி.சி களைக்கூட ஏற்றுக்கொள்ளலாம்.
ஏனெனில், அவர்களுக்கு சுயநலம்தவிர, கொஞ்சம் தமிழ்ன் நலனும் இருக்கிறது.

ஆனால், இரு கழகங்களுக்கும் "தன் நலன்", தன் குடும்ப நலன் தவிர வேறு ஏதாவது உண்டா?

இவர்கள் மட்டுமே மாறி, மாறி ஆட்சி செய்ய வேண்டும் என்று நீங்களெல்லாம் துடிப்பது எதனால்?

நான் தமிழன் தான்!
எனக்குத் தமிழ் தவிர வேறு எந்த மொழியும் தெரியாது.
தமிழகத்தைத் தவிர்த்து வேறு சிந்தனையும் கிடையாது.

இதையெல்லாம் உங்களூக்கு சொல்லிக் கொண்டிருக்க வேண்டிய அவசியமும் கிடையாது;
சொன்னாலும், நீங்கள் புரிந்து கொள்ளப் போவதில்லை.

போய், வழக்கமான உங்கள் பாடலைப் பாடாமல், ஆக்க பூர்வமாக சிந்திக்க முயலுங்கள்!
"தமிழகத்துக்கு" உங்கள் சேவை மிகவும் தேவை!

Friday, March 31, 2006 8:40:00 AM  
Blogger Selvakumar said...

// சொந்த தொகுதியில் அவரால்தனித்து நின்று சட்டமன்ற நபராக அல்லது நாடாளுமன்ற நபராக அவரால் வெற்றி பெற முடியாதுஎன்பது ஓர் நிதர்சனமான ஓர் உண்மை. //

நண்பரே,
சொந்த தொகுதி என்று தாங்கள் குறிப்பிடுவது சிவகாசி என்று நினைக்கிறேன். சிவகாசி தொகுதியின் ஒரு வாக்காளன் என்ற முறையில் இக்கருத்தில் இருந்து வேறுபடுகிறேன். அவ்வறாயின், வைகோ அங்கு கை காட்டும் நபர்தான் வெற்றி பெறுகிறார். முன்பு இருந்ததைவிட இப்பொழுது சிவகாசி தொகுதியில் அவரை ஆதரிக்கும் மனப்பாங்கு அதிகரித்து உள்ளது. இதற்கு அடிப்படை காரணம், வைகோ அரசியலை தாண்டி செயது வரும் சமூக காரியங்களே! இதற்கு முன்பு இருந்தவர்கள் இத்தொகுதியை முன்னேற்ற உருப்படியான காரியம் எதையுமே செய்ய வில்லை.

வைகோ இத்தொகுதியில் தனது ஆதிக்கத்தை தொடர்கிறார். இதில் மற்ற இரு திராவிட கட்சிகளுமே தோற்று விட்டன. விளைவு சராசரி தொண்டனில் இருந்து, நடுநிலை அரசியல் பார்வையாளர்கள் கூட அவர் சிவகாசியில் போட்டியிடுவார் என்று நினைத்தனர்.

தேர்தல் வேட்பாளர்களின் பட்டியலை அவர் வாசித்தபோது, எல்லாவற்றையும் படித்து விட்டு சிவகாசியில் வந்து நிறுத்தினார். அப்போழுது எழுந்த ஆரவாரத்தை நீங்கள் தொலைக்காட்சியில் பார்த்திருக்க வேண்டிம். நான் ஒன்றும் வைகோ ஆதரவாளன் அல்ல. ஆயினும், எங்கள் தொகுதியை பொறுத்தவரை அவரது தாக்கம் அதிகரித்து உள்ளது.

ஸ்டாலின் வரலாம் என்னும் தங்களது கருத்தில் ஏன் வைகோவை இழுத்து மட்டம் தட்டுகிறீர்கள் என்று எனக்கு புரியவில்லை.

எனக்கு ஸ்டாலின்மேல் எந்தவித விருப்பு வெறுப்பும் இல்லை. தங்களது வைகோ பற்றிய கருத்தின் உண்மையை எடுத்துரைக்க விரும்பினேன். அவ்வளவே!

செல்வகுமார்

Saturday, April 01, 2006 1:45:00 AM  

Post a Comment

<< Home

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது