நடிகர் கமலின் தைரியம்...
நேற்று சன் தொலைகாட்சியில் எஸ்ட்ஸ் விழிப்புணர்விற்காக Hyderabadல் நடந்த விழாவில் கமல் வழக்கம் போல் அருமையாக பேசினார். நான் எப்பொழுதும் கமல் நடிப்பைவிட அவருடைய பேச்சு மற்றும் பேட்டிகளை விரும்பி படிப்பது வழக்கம்.
Hollywood நடிகர் Richard Gere எஸ்ட்ஸ் விழிப்புணர்விற்காக உலகம் முழுவதும் சென்று பொதுமக்களிடையே சமுதாய மற்றும் இந்த நோயின் தன்மை பற்றியும் இதனை எப்படி தடுப்பது என்பது பற்றியும் சொல்லிவருகிறார்.
அதுப்போல் இந்தியாவந்த பொழுது நடிகர் கமல், சன் தொலைகாட்சி நிறுவனர் கலாநிதிமாறன், நடிகர் சீரஞ்சிவி எல்லோரையும் பார்த்து பேசினார். கமலை தொடர்பு கொண்ட பொழுது அதற்கு
ஒத்துழைப்பு நிச்சயம் கொடுப்பேன் என்றார்.
ஆனால் கமல் அதனை பற்றி சொல்லும் பொழுது, Richard Gere என்னை தொடர்பு கொண்ட பொழுது அதனை நினைத்து வருத்தப் பட்டேன், எப்படி ஓர் வெளிநாட்டு நபருக்கு உள்ள அக்கறை எனக்கு
இல்லாமல் போயிற்று? என்று ஆதங்கப் பட்டதாக சொன்னார்.
நான் எந்த மேடைக்கு சென்றாலும் கொஞ்சம் தயார்படுத்தி கொண்டு செல்லுவேன், ஆனால் இங்கு அப்படி வரவில்லை என்றார். காரணம் "கலையின் மீது உள்ள மரியாதை" மற்றும் "ரசிகர்களின் எதிர்
பார்ப்பு" என்றார்.
கமல் மேலும் இந்தியாவின் மக்கள்தொகை 100 கோடி ஆனதற்கு சாமி/கடவுள் மட்டும் காரணம் அல்ல, நிச்சயம் செக்ஸ்தான் காரணம் என்றார். அதுப் பற்றிய விழிப்புணர்வு மக்களிடம் ஏற்படுத்த வேண்டும்
என்றார்.
அடுத்து அவர் பேசியவிதத்தில்தான் கமல் கலக்குகிறார். "ராமரே" என்றாலும் எஸ்ட்ஸ் வர வாய்ப்பு நிச்சயம் என்றார். இப்படி பேசுவதற்கு பெரியவர்கள் கோவித்து கொள்ள கூடாது. நான் அவை அடக்கம் பார்க்கவில்லை என்றார்.
"ராமரை" தெய்வமாக போற்றுகின்ற மக்கள் இடத்து இந்த கருத்தை பயப்படாமல் சொல்லும் கமலின் தைரியத்தை பாராட்டதான் வேண்டும். நல்ல வேளை இதனை பிஜேபியும், இந்து கட்சிகளும் சரியாக கவனித்து கொள்ளவில்லை. இல்லாவிடில் குஷ்பு, சுகாசினி கதி கமலுக்கு ஏற்பட்டு இருக்குமோ?
நன்றி
மயிலாடுதுறை சிவா...
20 Comments:
நானும் பார்த்தேன் நிகழ்ச்சி நன்றாக இருந்தது! கமலுக்கு நிகர் கமல்தான்
// "ராமரை" தெய்வமாக போற்றுகின்ற மக்கள் இடத்து இந்த கருத்தை பயப்படாமல் சொல்லும் கமலின் தைரியத்தை //
நாராயண.. நாராயண...
// நல்ல வேளை இதனை பிஜேபியும், இந்து கட்சிகளும் சரியாக கவனித்து கொள்ளவில்லை //
நாராயண... நாராயண... நாராயண...
// குஷ்பு, சுகாசினி கதி கமலுக்கு //
நாராயணோவ்... நாராயணோவ்... நாராயணோவ்...
// "ராமரே" என்றாலும் எஸ்ட்ஸ் வர வாய்ப்பு நிச்சயம் என்றார்.//
அவர் மட்டும் "முருகனே" என்றாலும் எய்ட்ஸ் வர வாய்ப்பு நிச்சயம் என்று சொல்லியிருக்கட்டும். நடக்கறதே வேற. ;)
ராமர்னு சொல்லி தப்பிச்சிட்டார். ராமர்தான் தமிழ்க் கடவுள் இல்லையே. 'அய்யிரு' கடவுள் தானே. போனாப் போவுது.
ஹூம். எனக்கு நேரம் சரியில்லை. பக்கத்து க்யூபிக்கிளிலிருந்து சாத்தான் சிரிக்குது.
அது என்ன 'ஐயங்காரு வீட்டு அழகே"?. ஏன். வேற 'வீட்டுல' அழகு இல்லையா? அப்படிப் பாடாம "தேவ மாரு வீட்டு அழகே... இல்லை வன்னியரு வீட்டு அழகே"ன்னு பாடியிருந்தாங்கன்னா என்ன நடந்திருக்கும்?
அது சரி. "போற்றிப் பாடடி பெண்ணே.. தேவர் காலடி மண்ணே"ன்னு சொன்னதுக்கே ஒரு கோஷ்டி கைல கம்பு அருவாளோட கிளம்புனாங்க. இப்படிப் பாடியிருந்தா?
என்னமோ போங்க.
//"ராமரே" என்றாலும் எஸ்ட்ஸ் வர வாய்ப்பு நிச்சயம் //
அப்படி அவர் சொன்னது, "பிறமகளிர் நோக்காத கற்புக்கரசனாக இருந்தாலும்
வேறு வழிகளில் எய்ட்ஸ் வரலாம்" என்று அறிவுறுத்தியதாகவே நான் புரிந்து கொண்டேன். இதில் நீங்கள் என்ன புரிந்து கொண்டு, இப்படி எழுதியுள்ளீர்கள் என்று தெரியவில்லை. :-)இதற்கெல்லாம் பிஜேபி பரிவாரங்கள் கோபித்துக் கொள்ள என்ன முகாந்திரம் இருக்கிறது..??
//நான் எந்த மேடைக்கு சென்றாலும் கொஞ்சம் தயார்படுத்தி கொண்டு செல்லுவேன், ஆனால் இங்கு அப்படி வரவில்லை என்றார். காரணம் "கலையின் மீது உள்ள மரியாதை" மற்றும் "ரசிகர்களின் எதிர்
பார்ப்பு" என்றார்.//
சிவா,கமல் சொன்ன வரிசைய கொஞ்சம் மாத்தியிருக்கீங்க...இப்படி இருக்க வேண்டும்."நான் எந்த மேடைக்கு சென்றாலும் கொஞ்சம் தயார்படுத்தி கொண்டு செல்லுவேன்,காரணம் "கலையின் மீது உள்ள மரியாதை" மற்றும் "ரசிகர்களின் எதிர்
பார்ப்பு. ஆனால் இங்கு அப்படி வரவில்லை .இங்கு உலகின் ஒரு குடிமகனாக வந்திருக்கிறேன்"
//அடுத்து அவர் பேசியவிதத்தில்தான் கமல் கலக்குகிறார். "ராமரே" என்றாலும் எஸ்ட்ஸ் வர வாய்ப்பு நிச்சயம் என்றார். //
வாய்ப்பு எப்படி நிச்சயமாக முடியும்? வாய்ப்பு உண்டு என்ரு தான் சொன்னார் .அதாவது செக்ஸ்-னால் மட்டுமே எய்ட்ஸ் வருமென்று இல்லை .கவனக்குறைவினால் வேறு வழிகளிலும் வரலாம் என்ற அர்த்தம் தான் எனக்கு தெரிகிறது..இதில் ராமரை அவர் உயர்வாகத்தானே சொல்லுகிறார் .ராமர் மாதிரி அந்த விஷயத்தில் யோக்கியமாக இருந்தாலும் ,மற்ற வழிகளில் வர வாய்ப்பு இருக்கிறது என்பது தானே இந்த கருத்து?
ஜோ
நீங்கள் சொல்வது சரி. அவசரமாக எழுதிய காரணத்தால் மாற்றி எழதி இருக்கவேண்டும்.
நன்றி
மயிலாடுதுறை சிவா...
சுந்தர்
நான் தவறாக புரிந்து கொள்ளவில்லை. கமல் பயம் இல்லாமல் கடவுளை குறித்து பேசியது
எனக்கு பெரிய விசயமாக பட்டது. அவர் தமிழ் கடவுள் முருகனை பற்றி சொல்லி இருந்தாலும்
நான் ரசித்து இருப்பேன்.
நன்றி
மயிலாடுதுறை சிவா...
//கமல் பயம் இல்லாமல் கடவுளை குறித்து பேசியது
எனக்கு பெரிய விசயமாக பட்டது. //
I was just kidding
நீண்ட காலமாகவே தனக்குக் கடவுள் நம்பிக்கையில்லை என்பதை பிரகடனப் படுத்திக்கொண்டேதான் இருக்கிறார். இதில் ஆச்சரியமில்லை.
மற்ற நண்பர்கள் குறிப்பிட்டதைப் போல, ஒழுக்கமானவர்களுக்கும் எய்ட்ஸ் வர வாய்ப்பிருக்கிறது என்பதையே ராமர் என்ற குறியீடு மூலம் அவர் சொல்லியிருக்கிறார்.
இதை அரசியலாக்காமல் விட்டால் சரி.
ராமர் மாதிரி அந்த விஷயத்தில் யோக்கியமாக இருந்தாலும்
சீதையின் கற்பில் சந்தேகப்பட்டு அவளை காட்டுக்கு விரட்டி விட்டபின் "ஏக பத்தினி விரதன்??!!" ராமன் நாட்டில் குடியும் கூத்தியுமாக இருந்ததாக ராமாயணம் கூறுகிறது. ஓ! மன்னிக்கவும்! நீங்கள் கூறும் ராமர் உங்கள் பக்கத்து வீட்டுக் காரர் என்பது எனக்கு இப்பொழுது தான் புரிந்தது!:-)
யாருக்கு வேண்டுமானாலும் வரலாம், ஏன் எனக்கேக் கூட வரலாம், கவனக்குறைவாக இருந்தால் அல்லது பிறர் செய்யும் தவறுகளால் என்று சொல்லியிருக்க வேண்டும். சொல்லுகிற செய்தியை தெளிவாகக் சொல்லிவிடலாமே, எய்ட்ஸ் வர பாலுறவு தவிர பிற காரணிகளும் இருக்கின்றன என்று சொல்லிவிடலாமே. இப்படி தேவையில்லாமல் எதையாவது எப்படி வேண்டுமானாலும் அர்த்தப்படுக்கிக் கொள்ளும் வகையில் சொல்ல வேண்டியது, அப்புறம் சர்ச்சை ஏற்பட்டால்
அதில் குளிர் காய வேண்டியது.
ரவி,
// சொல்லுகிற செய்தியை தெளிவாகக் சொல்லிவிடலாமே, எய்ட்ஸ் வர பாலுறவு தவிர பிற காரணிகளும் இருக்கின்றன என்று சொல்லிவிடலாமே. //
பிரச்சனை என்னவென்றால் கருத்து சொல்கிறவர்கள் அவர்கள் அளவில் அதனைத் தெளிவாகவே கூறுகிறார்கள். அதனைக் காதில் வாங்குபவர்களைப் பொறுத்து புதிது புதிதாக அர்த்தம் காணப்படுகிறது.
கருத்துச் சொல்பவர்கள் அதனை வலியுறுத்தும் பொருட்டு இது போன்ற உதாரணகங்களைக் கூறுவார்கள், அது பேச்சு வழக்கில் வரும் செயல். இங்கு என்ன பிரச்சனை என்றால் கடவுள் பெயர் வந்ததுதான். இதுவே இராமர் என்பதால் பிரச்சனை இதோடு போயிற்று. கமல் வேறு ஏதேனும் மதக் கடவுள்களைச் சொல்லியிருந்தால் குஷ்பூ,சுஹாசினி வழியில் வாங்கிக் கண்டியிருப்பார்.
மதம்,சாதி, மொழி உணர்வுகள் பற்றிய எதிர்மறைக்கருத்துக்கள் (அல்லது கமல் சொன்னது போன்ற கடவுள் உதாரணங்கள்) தீயைவிட வேகமாகப் பரவும். அனைவரும் (வலைப்பதிவர் உட்பட) இதில் கவனமாக இருப்பது நல்லது.
நண்பரே சிவா! இன்றைய தின மலரில் உங்கள் வலைதலம் பற்றிய செய்தி பார்த்தீர்களா?
This comment has been removed by a blog administrator.
நான் சொல்ல வந்ததை செயகுமார் சொல்லிவிட்டார். வாழ்த்துகள் சிவா
வெடியை கொளுத்திப் போட்டு விட்டீர்கள், அது எந்த எந்த ஊர் கோர்ட்டில் எல்லாம் வெடிக்கப் போகிறதோ?
CC to : பா ம க
BCC to : வி சி
மிக்க நன்றி செய குமார், முத்து குமரன்.
பார்த்தேன், மகிழ்ந்தேன்.
மயிலாடுதுறை சிவா...
வாழ்த்துக்கள் சிவா.. உங்கள் வலைப்பூ பற்றி, தினமலரில் செய்தி இன்று..
கமல் பேச்சு பாமரருக்கும் புரிய வேண்டுமென்றால், அவர்.. இராமர் பற்றி கூறியவுடன், உடன் ஒரு வாக்கியத்தையும் சேர்த்து சொல்லியிருக்க வேண்டும்.. அது..
".. காரணம்,எய்ட்ஸ் இருப்பவரிடம் இருந்து இரத்ததானம் பெறுவது, ஒரே ஊசியை பலர் உபயோகிப்பது...என்று"..
இப்படி கூறியிருந்தால், அவர் சொல்ல வந்த கருத்து திரிக்கப்பட வேண்டிய நிலை வந்திருக்காது அல்லவா..
அவர் கொஞ்சம் அறிவுஜீவித்தனமா பேசுறாரு.. அவர் அடிமட்ட இரசிகர்களெல்லாம் அப்படி இல்லையே.. பாமரர்கள் தானே அதிகம்.. அவுங்களுக்கு புரியுற மாதிரி பேச வேணாம. இவர்..
-
செந்தில்/Senthil
பாலசந்தர் எடுத்த பெரும்பாலான படங்கள் - பிராமண குடும்பங்களை அடிப்படையாக வைத்து எடுத்தார். அதில் அவருக்கு அனுபவம் இருந்தது. அதனால், அவர் உயர்த்திப் பிடித்தாரோ - தாழ்த்திப் பிடித்தாரோ - அதில் ஒரு நேர்மை இருந்தது. அதனால் எல்லோரும் ரசித்தனர்.
அது போலவே - பாரதிராஜா பாலுத்தேவன் என்ற பாத்திரத்தைப் படைத்த பொழுது, (வேதம் புதிதில் ) அவரது அனுபவத்தையும் நேர்த்தியையும் மக்கள் ரசித்தனர்.
இன்று ஒரு சாதியினரைப் பற்றி அல்லது மதத்தினரைப் பற்றி ஒரு விவாதம் வரும் பொழுது - அதை அந்த சாதியினரே - தங்களுக்குள் விவாதமாக நடத்திக் கொண்டால் - அவர்கள் மனம் புண்படுவதில்லை.
ஆனால், வெளியிலிருந்து வருபவர்கள், அதைப் பற்றி விமர்சங்களை வைப்பதும், புத்திமதி சொல்லுகிறேன் என்று விதண்டாவாதங்களை ஆரம்பித்து வைப்பதும்- காரணமாகி விடுகிறது மனஸ்தாபங்களுக்கு.
தேவர் மகனைப் பற்றி ஒருவர் குறிப்பிட்டார். அது பிரச்சினையாகக் காரணம் - தலித்துகளே அல்லாத கலைஞர்கள் எல்லாம் கூடி, அவர்கள் சார்பாக பேசுவதாக படமெடுத்தது தான்.
ஒரு முறை ராஜா ராம் மோஹன்ராயை அவருடைய ஆங்கிலேய நண்பர் ஒருவர் கேட்டார் "ஏன் இந்த மூடநம்பிக்கை நிறைந்த இந்து மதத்தில் கிடந்து உழல்கிறீர்கள் - எங்கள் பக்கம் வந்து விடுங்கள்" என்றார்.
ராஜாராம்மோஹன்ராய் பதிலிறுத்தார் - "இங்கு நான் சொல்வதை யாரும் எதிர்ப்பதில்லை. ஏனென்றால், நானும் ஒரு ஹிந்து. உங்கள் மதத்திற்கு வந்து பின் அங்குள்ள ஊழலைச் சொன்னால் - அப்புறம் நீ யார் என்று என்னை நீங்களே கேட்பீர்கள். வேண்டாம் விட்டு விடுங்கள்."
விமர்சனங்கள் உள்ளிருந்து கிளம்பி விவாதமானால் தான் திருந்துவதற்கு வாய்ப்புகள். இல்லையென்றால், வீண் வருத்தமும் விரோதமும் தான் மிஞ்சும்.
ராமரைப் பற்றி கமல் பேசியது எப்படி வேண்டுமானாலும் அர்த்தப்படட்டும். ஆனால், தான் நம்பாத ஒன்றைப் பற்றி ஏன் அவர் பேச வேண்டும்.
அவருக்கு கடவுள் நம்பிக்கையும் கிடையாது.
ஏகபத்தினி விரதனும் கிடையாது.
இப்படி இருக்கையில் அவர் ராமரைப் பற்றி பேசியது வழக்கம்போல நாத்திக கிண்டல் தான்.
நண்பன்,
உங்கள் வாதம் ஏற்புடையதல்ல.
நான் கூட "பலர் ராமன் ஆண்டால் என்ன ,ராவணன் ஆண்டாலென்ன என்ற மனநிலையில் இருக்கிறார்கள்' என்று குறிப்பிட்டேன் .உடனே நான் ராமனை நம்பாதவன் .அதனால் நான் ராமனை கிண்டல் செய்கிறேன் என்று கூறுவீர்களா?
தங்கள் வருகைக்கு மிக்க நன்றி
யாத்ரிகன், நண்பன், ஜோ
மயிலாடுதுறை சிவா...
Post a Comment
<< Home