அம்ம! நாம் அஞ்சும் ஆறே! (திருவாசகம்)
சிம்பொனி திருவாசகத்தைப் பற்றி நம் வலை பூங்காவில் பலரும் பலவிதமாக பதிய வைத்து விட்டார்கள். என் பங்குக்கு என் தளத்தில் என் பாணியில் சொல்ல ஆசை.
இரண்டு ஆண்டுக்கு முன்பு வட அமெரிக்க தமிழ்ச் சங்க பேரவை விழாவில் அருட்தந்தை காஸ்பர் ராஜ் திருவாசகத்தை சிம்பொனியில் இளையராசா மூலம் இசைக்க திட்டம் உள்ளதாக சொன்ன பொழுது மிக ஆவலோடு காத்து இருந்தேன். இரண்டு ஆண்டுக்கு பிறகு தற்பொழுது எங்கள் வட்டாரத்தில் நடந்த திருக்குறள் மாநாட்டில் மீண்டும் அதனைப் பற்றி கூறிய பொழுது மக்கள் கூட்டம் ஓடி பிடித்து வாங்கியது, நானும் ஓர் இசைத் தட்டு வாங்கினேன்.
நல்ல இரவு வேளை சாப்பாடு முடிந்தவுடன் ஆவலோடு விழாவில் அருட்தந்தை பாடி காண்பித்த "புற்றில் வாழ் அரவும் அஞ்சேன்" என்ற பாடலை முதன் முதலில் கேட்டேன். ஆகா என்ன வென்று எப்படி அதனை சொல்வேன்? நம் பண்ணை புரத்து இளையராசா அதனை உருகி, உருகி ஆனந்தமாயமாக சிவப் பெருமானை வேண்ட வேண்ட நம் மனகண் முன்னே மாணிக்க வாசகர் தெரிவது உறுதி.
அதுமட்டும் அல்ல ஒவ்வொரு பத்தி முடியும் பொழுது "அம்ம! நாம் அஞ்சும் ஆறே!" என்று வேண்டும் பொழுது அதனோடு மனதும் கரைவது ஓர் இனிய அனுபவம். அதன் பிண்ணனியில் மிக பிரமாண்டமாக நம் தமிழை, நம் இசையை, நம் திருவாசகத்தை, நம் மாணிக்க வாசகர் பாடியதை, நம் இளையராசா பாட பாட கூடவே மேல் நாட்டு இசை கலைஞர்கள் வயலின் மற்றும் அதனோடு சார்ந்த இசையில் இதனை மீட்டு எடுக்கும் பொழுது மனம் எல்லை எல்லா மகிழ்ச்சி அடைகிறது.
5 பத்திகள் முடிந்து அனைத்து இசைகளும் ஒருங்கே சங்கமித்து மெதுவாக தாழ்ந்து பின் ஓங்காரமாக உயிர்பொழும் பொழுது இளையராசா,
"கோணிலா வாளி அஞ்சேன்! கூற்றுவன் சீற்றம் அஞ்சேன்!" என்று உச்சத்தில் (High Pitch ல்) பாடும் பொழுது மனமும் கூடவே பலமாய் அடித்து கொள்ளு பொழுது,
அடுத்த வரியில் நிதானமாக "நீணிலா அணியினானை, நினைந்து நைந்து உருகி நெக்கு" என்று பாடி "வாணிலாங் கண்கள் சோர என்று ராகத்தில் ஆங் ஆங் என இழுப்பாரே இளையராசா, நம் கண்களில் நீர் கோர்பது நிசம் அய்யா!!! நிசம்.
என்னை பொறுத்தவரை இது மாபெரும் முயற்சி. நம் தமிழின் வளமைக்கு, செழுமைக்கு, ஆளுமைக்கு கிடைத்த மற்றும் ஓர் பெருமை. மாணிக்க வாசகரின் வரிகளை உலக மெங்கும் உள்ள தமிழன் உச்சரிப்பான், பட்டி தொட்டி எங்கும் இது ஓலிக்கப் படும். அதனை எங்கோ கடை கொடியில் உள்ள நம் பண்ணைபுரத்து இசை கலைஞன் இதனை சாதித்த பொழுது மனம் எல்லை எல்லா மகிழ்கிறது.
சில சில குறைகள் தெரியலாம், அவரே எல்லா பாடலையும் பாடமால் இருந்து இருக்கலாம், புற்றில் வாழ் பாடலில் பேசமால் இருந்து இருக்கலாம், ஆனால் எல்லாவற்றையும் மீறி நம் மனதை இந்த இசைத் தட்டு தொடுவதன் ரகசியந்தான் என்ன? மனதை வருடுவது எது? கண்களில் நீர் கோர்ப்பது எது? மனதை எங்கோ கொண்டு செல்வது எது?
இளையராசாவின் குரலில் உள்ள ஆன்மிகம் கலந்த ஓர் காந்த சக்தி சில பாடல்களுக்கு அப்படியே பொறுந்துகிறது. அவரே சொன்னதைப் போல் இந்தப் பிறவியில் இந்த முயற்சியை செய்ததால் அவர் பிறவி பலனை அடைந்து விட்டதாக சொன்னார். வரலாற்றில் அவரின் பெயர் முன்னரே இடம் பெற்று இருந்தாலும் இதனால் அது நிச்சயிக்கப் பட்டுவிட்டது.
விமர்சனத்திற்கு எல்லாம் உட்பட்டதே, ஆனால் எல்லாவற்றையும் ஒதுக்கி தள்ளி இளையராசாவின் திருவாசகம் சிம்பொனி கேட்டு பாருங்களேன்...
நன்றி.
மயிலாடுதுறை சிவா...
6 Comments:
நல்ல சொன்னீங்க, கேட்டுப்பார்க்கிறேன்...
அதென்னவோ... யார் என்ன செய்தாலும்/எழுதினாலும் அதன் மறுபக்கம் ஆராய்ச்சி செய்வதில்தான் வலைப்பதிவே கலைகட்டுகிறது:)
மிக்க நன்றி அன்பு மற்றும் மூர்த்தி...
சிவா..
நல்ல பதிவு சிவா நன்றி.
நன்றி கார்த்திக்
சிவா...
நான் இன்னும் கேட்க இல்லை. திருவாசகம் படிக்கும் போதே தேன் கலந்து பால் கலந்து ஊன்கலந்து உயிர்கலந்து இனிக்கும்.
ஆம், நிச்சயம் நீங்கள் அனுபவித்ததுபோல் ஒரு ஆனந்தமயத்தினை தர வல்லது அந்த இசையும், அதன் ஆணிவேரான சம்பந்தரின் வாசகமும்!
ஆனால், அதை அனுபவிக்க, நம்மவர் மனதை முழுதாக திறந்து வைக்க வேண்டும். அப்போதுதான் அன்பே சிவமாய் அவன் புகுவான்.
செய்வாரா நம்மவர்?
எங்கு யாரை எப்போது மட்டம் தட்டி தன்னை உயர்த்திக் காட்டுவதென்று அலைந்து திரியும் இவர்கள் மனம் என்றென்றும் இருண்ட வீடாய் ஆனாதில் விந்தையென்ன?
Post a Comment
<< Home