Monday, June 27, 2005

என்று அணையும் இந்த சா(தீ)யம் !!!

தாழ்த்த பட்ட மக்களுக்கு போராடும் எழுச்சி தலைவன் தொல். திருமா சிங்கப்பூர் பயணத்தை மிக சாதரணமாக நான் என் வலைப் பூவில் பதிய வைத்தேன். காரணம் சிங்கப்பூரில் உள்ள இளைஞர்கள் அவரிடம் ஓர் கலந்து உரையாடட்டுமே என்ற நல்ல எண்ணத்தில்.

அதில் ஓர் நண்பர் கூப்பிட்டு நீங்கள் திருமாவின் உதவியாளாரா? மற்றோருவர் நீங்கள் திருமாவின் விடுதலை சிறுத்தையை சார்ந்தவாரா? இன்னோரு நண்பர் உங்களுக்கு ஏன் இந்த வேலை என்றார். எனக்கு ஒன்றுமே புரியவில்லை. எனக்கு தெரிந்த செய்தியை வலைப் பூக்கள் மக்களிடம் பகிர்ந்துக் கொண்டது தவறா? பரவாயில்லை.

எல்லாவற்றிக்கும் முத்தாய்பாக நண்பர் ரஜினி ராம்கி சில கேள்விகளை முன் வைத்தார். அவற்றிக்கு நேரிடையான என் பதிலையும் என் சில கருத்துகளையும் பகிர்ந்துக் கொள்வது என் கடமை.

ராம்கியின் கேள்விகள்
வைகோ, இராமதாசு, திருமா உலகம் பூரா சுற்றி வந்து என்னதான் செய்கிறார்கள்?இவர்களை வரவேற்பது யார்? சொந்த காசில் வருகிறார்களா? சம்பந்தப் பட்ட நாடுகளில் தாழ்த்தப் பட்டவர் எப்படி இருக்கிறார்கள் என்று பார்க்காவா? வெளி நாடுகளில் தமிழர்கள் பெரும்பாலனோர் மேல் ஆதிக்க சாதியனர்தான், திருமாவளவன் போன்றோருக்கு வரவேற்பு எப்படி இருக்கிறது?

என்னுடைய விளக்கம்
வைகோ, இராமதாசு இவர்கள் சில சமயம் சொந்த காசிலும், சில சமயம் தமிழ் அமைப்புகள் மூலமும் வருகிறார்கள். வைகோவின் மகள் சிகாகோவில் இருக்கிறார், அவரை பார்ப்பதற்கு அவர் தான் சொந்த காசில்தான் வருகிறார். ஒருமுறை வைகோவை அமெரிக்காவில் உள்ள தமிழ் அமைப்பு அழைத்துக் கொண்டது.

இராமதாசு அமெரிக்கா வந்தாரா என்று தெரியவில்லை. ஒரு முறை தமிழ் அமைப்பு அவரை அழைக்க முயற்சி செய்தது. அவர் அப்போழுதுதான் ஐரோப்பிய நாடுகளுக்கு சென்று வந்ததால் அவரால் வர முடியவில்லை.

எனக்கு தெரிந்து திருமா சொந்த காசில் வந்தது இல்லை. அமெரிக்கா, கனடா, லண்டன் மற்றும் மலேசியா வாழ் தமிழர்கள் சார்பாகதான் அவர் அழைக்கப் பட்டார்.

என் மனதை பாதித்த கேள்வி, "வெளி நாடுகளில் தமிழர்கள் பெரும்பாலனோர் மேலாதிக்க சாதியனர்தான், திருமாவளவன் போன்றோருக்கு வரவேற்பு எப்படி இருக்கிறது?"

அது எப்படி ராம்கி நீங்கள் அப்படி நினைக்கலாம்? இது தவறான சிந்தனை அல்லாவா? எனக்கு தெரிந்த பல தாழ்த்தபட்ட, பிற்படுத்தபட்ட, மிகவும் பிற்படுத்த பட்ட ஏராளமான நபர்கள் வெளிநாடுகளில் இருக்கிறார்கள். கடந்த 15 ஆண்டுகளில் எண்ணற்ற பிற்படுத்தப் பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட மக்கள் வெளிநாடுகள் சென்று சமுதாயத்தில் அவர்களும் முன்னேறி நன்கு வந்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். அதுமட்டும் அல்ல அவர்கள் தன்னுடைய நண்பர்களுக்கும் உதவி செய்கிறார்கள் வெளிநாடு வருவதற்கும் மேற்கொண்டு படிப்பதற்கும். எனக்கு தெரிந்த மேல் சாதியனர் பலர் சுயநலமாக தான் தன் குடும்பம், தன் இனம் முக்கியம் என்று நடந்துக் கொள்வதை பார்த்து இருக்கிறேன்.

திருமாவளவன் போன்றோருக்கு வரவேற்பு எப்படி இருக்கிறது?
இந்த கேள்வியின் உண்மையான அர்த்தம் என்ன ராம்கி? திருமா என்றால் இளக்காராமா? திருமா தலித் என்பதால் மக்கள் அவர்களை மதிக்கிறார்களா? என்று தானே நீங்கள் கேட்கிறீர்கள்?


கிராமத்தில் ஜாதி வெறி பிடித்து அலைவோர், வீச்சரிவாளும் வேல் கம்பும் வைத்து நையப்புடைப்போர், மலம் தின்ன வைப்போர் மற்றும் அவர் சந்ததியினர் கூட படித்து, பட்டம் பெற்று, பலதரப்பட்ட மக்களோடு பழகிய பின் தங்களுடைய ஜாதி வெறியை , அதன் அசிங்கத்தை விட வாய்ப்பு இருக்கிறது.

ஆனால் நம் மக்களில் ஒரு சிலர் என்னதான் படித்தாலும், எத்தனை இலக்கியப் பயின்றாலும், எத்தனை நாடுதான் போனாலும், தலித் மக்களை கீழானவர்களாக, கேவலப்பட்டவர்களாக பார்க்கும் இம் மாதிரி மனநிலை என்றுதான் மாறுமோ என காத்திருக்கிறேன்.

உண்மையை சொல்லப் போனால் திருமா போன்ற தலைவர்களுக்கு நல்ல மரியாதை வெளிநாட்டு வாழ் மத்தியில் இருக்கிறது. அதுவும் குறிப்பாக சாதி, மதம் பார்க்காத, படித்தவர்கள் மத்தியில், தமிழ் ஆர்வம் மிக்க, தமிழ் உணர்வாளர்களிடையே பெருத்த மரியாதையையும், பாசமும், அன்பும், நேசமும் திருமா மீது உள்ளது. நம்புங்கள்!

நீங்கள் சொல்லும் மேல் சாதியனர் பலர் இன்னமும், வெளிநாடுகள் வந்துவிட்ட பொழுதும் தன் சாதியை பலமாக தூக்கிப் பிடித்துக் கொண்டு உள்ளார்கள். (எடுத்து காட்டு - பிராமணர்கள், செட்டியார்கள், கவுண்டர்கள், நாடார்கள்). அதைவிட வெட்க கேடு இந்த சாதியை சார்ந்தவர்கள் சாதி அமைப்பு ரீதியாகவும் கூடுகிறார்கள் என்பது.

அதே போல் உயர் சாதியனர் பலரும் எஸ்வி சேகர், கிரேசி மோகன், மாதவன், பம்பாய் ஜெயஸ்ரீ, பம்பாய் சகோதிரிகள், ஹரிஹரன், உன்னி கிருஸ்ணன் இப்படிப் பட்ட மக்களுக்குதான் அதிக ஆர்வத்தை காட்டுகிறார்கள்.

நடப்பு என்னவெனில், அரசியல் ஆர்வமும், தமிழ் ஆர்வமும், இன உணர்வும் மிக்க பலரும் வைகோ, இராமதாசு, திருமா மீது நம்பிக்கை வைத்து உள்ளார்கள். அரசியல் மற்றும் கொள்கை ரீதியாக சில கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். அனால் எல்லாவற்றிக்கும் மேலாக ஈழ மக்கள் படும் வேதனைகளை, துயரங்களை, அவலங்களை மக்கள் இடையே பேசும், தமிழ் மொழிக்காக போராடும், மக்கள் பிரச்சினைக்காக போராடும் தலைவர்களை சாதி பார்க்காமல், மதம் பார்க்காமல் வெளிநாட்டு வாழ் தமிழர்கள் மனதார பாராட்டதான் செய்கிறார்கள். இப்படி பட்ட கருத்துகளோடு ஒத்து போகும் தலைவர்களை உணர்வு பூர்வமான தமிழ் அமைப்புகள் இந்த தலைவர்களை கூப்பிட்டு அவர்களை ஊக்கப் படுத்துகிறது, இனியும் இந்த ஊக்கம் தொடரும்.

நீங்கள் இப்படி கேட்டது போல அத்வானி, நரேந்திர மோடி, முரளி மனோகர் ஜோசி, இல.கணேசன், சேசன், சு.சுவாமி போன்றவர்கள் ஏன் வெளிநாடு செல்லுகிறார்கள் என்று கேட்டது உண்டா? யாரும் கேட்பதும் இல்லை. டாக்காவுக்கு போனாரே; சீனாவுக்கு போக வேண்டுமென்று மனுப்போட்டாரே, இருள்நீக்கி சுப்பிரமணியன், அவர்கள் எல்லாம் எதற்காகப் போகிறார்கள்?

பின் பின் ஏன் இவர்களுக்கு மட்டும் இந்த கேள்வி..?? கேட்பதானால் எல்லாரிடத்தும் கேளுங்கள். தலித் தோழர்களை விட்டு விடுவோம். அவர்களை அணைத்துக் கொள்வோம் வாருங்கள். அல்லது தவறான கண்ணோட்டத்தில் பார்க்காமல் இருப்போம். அவர்கள் சாதீயச்சுனாமியால் காயப்பட்டவர்கள். கை கொடுப்போம் வாருங்கள்.

நன்றி
மயிலாடுதுறை சிவா...

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

56 Comments:

Blogger மாமன்னன் said...

அருமையான பதிவு. உங்கள் அழைப்பும் சிறப்பானதாக இருக்கிறது. மலேசியா வருகிறாரா?

http://ennamopo.blogspot.com

Monday, June 27, 2005 5:18:00 PM  
Blogger Balaji-Paari said...

சிவா,
மிக தெளிவான பதிவு. இதில் நீங்கள் சுட்டி இருக்கும் உண்மைகள் மிக மிக முக்கியமானவை. உங்களது இந்த பதிவு ஒர் தேவையான அழைப்பை முன்வைக்கின்றது.

//நடப்பு என்னவெனில், அரசியல் ஆர்வமும், தமிழ் ஆர்வமும், இன உணர்வும் மிக்க பலரும் வைகோ, இராமதாசு, திருமா மீது நம்பிக்கை வைத்து உள்ளார்கள். அரசியல் மற்றும் கொள்கை ரீதியாக சில கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். அனால் எல்லாவற்றிக்கும் மேலாக ஈழ மக்கள் படும் வேதனைகளை, துயரங்களை, அவலங்களை மக்கள் இடையே பேசும், தமிழ் மொழிக்காக போராடும், மக்கள் பிரச்சினைக்காக போராடும் தலைவர்களை சாதி பார்க்காமல், மதம் பார்க்காமல் வெளிநாட்டு வாழ் தமிழர்கள் மனதார பாராட்டதான் செய்கிறார்கள். இப்படி பட்ட கருத்துகளோடு ஒத்து போகும் தலைவர்களை உணர்வு பூர்வமான தமிழ் அமைப்புகள் இந்த தலைவர்களை கூப்பிட்டு அவர்களை ஊக்கப் படுத்துகிறது, இனியும் இந்த ஊக்கம் தொடரும். //
துணுக்கு தோரணங்களையும், எள்ளி நகையாடுதலையும் தலைப் பணியாக கொண்டவர்களுக்கு மேலே இருக்கும் செய்திகள் தேவைப்படாமல் இருக்கலாம். ஆனால் சக மனிதர்களுக்காக அவர்களின் விடுதலைக்காக சிந்திப்போர்களுக்கும் இத்தகைய முயற்சிகளின்பாற் பெரிய ஆர்வம் இருப்பது நெகிழச் செய்கின்றது. உங்களின் பதிவிற்கு நன்றிகள் சிவா.

Monday, June 27, 2005 5:52:00 PM  
Blogger Thangamani said...

சிவா,

புலம் பெயர்ந்த தமிழர்களின் கூட்டமெல்லாம் கோயில் கட்டி, தேர் இழுத்து, சுகி சிவத்தை கூட்டி கதை கேட்டால், விஜயையும், சிம்ரனையும் அழைத்து ஆடச்சொல்லி விசில் அடித்தால், சந்திரமுகி திரையில் வரும்போது சூடம் காண்பித்து தேங்காய் உடைத்தால், எஸ்.வி.சேகரையும், விசுவையும் கூப்பிட்டு கிச்சு கிச்சு மூட்டிக்கொண்டால், இருள் நீக்கி சுப்பிரமணியம், சச்சிதானந்தா, தயானந்த சரஸ்வதி, ரிலாக்ஸ் பிலிஸ் சுகபோதானந்தா மாதிரி டெம்ப்ரவரி பெயின் கில்லர்களை கூப்பிட்டு பாத பூஜை செய்தால் புரிந்துகொள்ள முடியும். ஏனென்றால் அதெல்லாம் மேல் சாதி/ வர்க்க விழுமியங்களாக கட்டியெழுப்பப்படுபவ்வை. இதெல்லாம் தமிழ்சங்கம், தமிழர் அமைப்பு அப்படீங்கற பேருல நடக்குற திருகுதாளங்கள்.

இந்த திருமா, வைகோ, இராமதாஸ் இவங்களுக்கு இங்க இருக்குற நாலு பொறம் போக்குங்கதான் பிரியாணி பொட்டலங்கள் வாங்கிக்கொண்டு ஜே போடுதுன்னா இப்படி நாலு எழுத்துப்படிச்ச இந்த மேல்சாதி விழுமியங்களுக்கு பழகிப்போன வெளிநாட்டு வாழ் தமிழர்களும் கூப்பிட, பேச என்ன இருக்குன்னு யோசனைவர்றது இயல்புதானே!

Monday, June 27, 2005 6:10:00 PM  
Blogger முகமூடி said...

மணிக்கூண்டு சிவா...

நான் கூட ராம்கியின் கேள்வியை படித்தபோது மிகவும் எதேச்சையாக கேட்டிருக்கிறார் என்று நினைத்து விட்டேன். // வை.கோ, ராமதாஸ், திருமாவளவன் போன்றவர்கள் உலகம் பூராவும் சுற்றி வந்து என்னதான் செய்கிறார்கள்? // என்று அவர் ஏன் உங்களிடம் கேட்க வேண்டும் என்று எனக்கு தோன்றவே இல்லை... நீங்கள் வாஷிங்டன் தமிழ் சங்கத்தில் செயலாற்றுவதாகவும் பிரபலங்களை அழைத்திருப்பதாகவும் பலமுறை பிரகடப்படுத்தியதால என்ன அடிப்படையில் பிரபலங்களை அழைக்கிறீர்கள் என்று சாதாரணமாக கேட்கிறார் என்று நினைத்தேன்.. நடிகை சினேகாவை நீங்கள் அழைத்ததற்கு அவர் சமுதாயத்திற்கு செய்த சேவைகள் காரணமா அல்லது அவர் தாழ்த்தப்பட்ட சமுதாயத்திற்கு ஆற்றிய தொண்டா என்று அறிய ஆவலாயிருக்கிறார் என்று நினைத்துவிட்டேன்...

// வெளிநாட்டு தமிழர்களில் பெரும்பாலேனோர் மேல் ஆதிக்க ஜாதியினர்தான். அவர்களிடம் திருமாவளவன் போன்றவர்களுக்கு வரவேற்பு எப்படி இருக்கிறது?// அதானே, எப்படி அவர் அப்படி கேட்கலாம்... உங்களிடம் உண்மையிலேயே பதில் பெற வேண்டும் என்பதுதான் நோக்கமென்றால், மற்ற சாதியினரை விட அதிக எண்ணிக்கையில் ஆதிக்க சாதியினர் இருக்கும்போது, நம் சமுதாயத்துக்காக போராடும் தலைவர் திரு.திருமாவளவன் போன்றவருக்கு ஆதரவு நன்றாக இருக்கிறதா? " என்றெல்லவா கேட்டிருக்க வேண்டும் அவர்...

// திருமா தலித் என்பதால் மக்கள் அவர்களை மதிக்கிறார்களா? என்று தானே நீங்கள் கேட்கிறீர்கள்? // திருமாவளவனுக்கு என்ன வரவேற்பு இருந்தால் இவருக்கு என்னவாம்... என்னதான் திருமா தமிழ் இயக்கமெல்லாம் வைத்து தான் சாதி தலைவர் (மட்டும்) அல்ல, சமுதாய தலைவர் என்ற அளவில் ஒரு தோற்றத்துக்காக பாடுபட்டாலும், எப்பொழுதும் அவரை தலித் என்பதாகவே பார்க்கும் எல்லார் கண்ணோட்டமும் புரியாமல் இருக்கிறாரே இந்த ராம்கி...

// அதைவிட வெட்க கேடு இந்த சாதியை சார்ந்தவர்கள் சாதி அமைப்பு ரீதியாகவும் கூடுகிறார்கள் என்பது // நானும் அமெரிக்காவில்தான் இருக்கிறேன்... இதுபற்றி இதுவரை கேள்விப்பட்டதில்லையே... சின்ன பையன், விபரம் பத்தாது...

//உயர் சாதியனர் பலரும் எஸ்வி சேகர், கிரேசி மோகன், மாதவன், பம்பாய் ஜெயஸ்ரீ, பம்பாய் சகோதிரிகள், ஹரிஹரன், உன்னி கிருஸ்ணன் இப்படிப் பட்ட மக்களுக்குதான் // இவர்களெல்லாம் ஒரு குழுவாக இசை நிகழ்ச்சி நடத்த வருபவர்கள்... ஒலி அளவை கருவி வைத்து அளந்த போதுதான் தெரிந்தது, இந்த கலைஞர்களுக்கு கைதட்டும் அளவுக்கு இவர்களோடே நிகழ்ச்சி நடத்திய மனோ, புஷ்பவனம் குப்புசாமி, மாலதி லக்ஷ்மணன், இளையராஜா, s.p.b, சுபா போன்ற கலைஞர்களுக்கு உயர்சாதியினர் கைதட்டுவதில்லை என்பது... (ஆருப்பா அது கலைக்கு மொழியில்லை, கலைஞர்களுக்கு கட்டுப்பாடு இல்லைன்னு சவுண்டு உடுறது)...

சமீபத்தில் எங்கள் பகுதிக்கு வருகை தந்த மாண்புமிகு மத்திய அமைச்சர் அன்புமணியின் (ஒலி வடிவ பேட்டிஇங்கே) உரையை கேட்க வந்ததில் உயர் சாதியினர் எவ்வளவு, மத்த சாதியினர் எவ்வளவு என்பதை கணக்கெடுக்க விட்டுப்போய்விட்டது, மன்னிக்கவும்....

ஒரு நிமிடம் உங்களை தலித் நண்பராக சித்தரித்துக்கொள்ள ராம்கியை பயன்படுத்தி மிகவும் தந்திரமான முறையில் எழுதப்பட்ட பதிவு இது... பிறகு நாம்தான் ஆதிக்க சாதி அல்லவே, நம் மனசு இப்படியெல்லாம் நினக்கக்கூடாதே என்று சுயநினைவு வந்தவுடன் மீண்டும் படித்த போதுதான் உங்கள் பதிவின் உண்மையான அக்கறை தெரிந்தது... வாழ்க வளர்க.

Monday, June 27, 2005 6:41:00 PM  
Blogger முகமூடி said...

ஆமாம், உங்களது பாட்டிக்கு ஓர் கடிதம் பதிவில் நீங்கள் உபயோகப்படுத்திய புகைப்படத்தில் இருக்கும் பாட்டி - தலித்துகளுக்கும் உழைக்கும் ஏழை மக்களுக்கும் நிலம் பெற்றுத்தந்த அரிய சேவைகளுக்காக international Right Livelihood Award என்று அழைக்கப்படும் மாற்று நோபல் பரிசுக்காக தமிழ்நாட்டில் இருந்து பரிந்துரை செய்யப்பட்டிருக்கிறார் - உங்கள் பாட்டி என்ற நினைப்பில் அருணா , சீமாச்சு போன்றவர்கள் பேசியும் வாழ்த்தியும் இருக்க, அது தங்கள் பாட்டி அல்ல ஒரு மறுப்பு கொடுக்க மனசில்லயே உங்களுக்கு...

Monday, June 27, 2005 6:54:00 PM  
Blogger -/பெயரிலி. said...

This comment has been removed by a blog administrator.

Monday, June 27, 2005 7:37:00 PM  
Blogger -/பெயரிலி. said...

சிவா,
மிகத்தெளிவாக, மிகச்சிறப்பாக எழுதியிருக்கின்றீர்கள்.

Monday, June 27, 2005 7:42:00 PM  
Blogger ROSAVASANTH said...

சிவா, சொல்லவந்த விஷயங்களை மற்ற நண்பர்கள் சொல்லியிருக்கிறார்கள். பெயரிலி சொன்னதுதான். மிக தெளிவான முறையில் உங்கள் கருத்தை நேர்மையாய் எளிமையாய் முன் வைத்திருக்கிறீர்கள். பாராட்டுக்கள்!

நீங்கள் பதிலளிப்பதால் பயனிருக்கும் என்று நீங்கள் நினைக்கும் கேள்விகளை தவிர, கேனத்தனமாக கேட்கப்படும் கேள்விகளை புறக்கணியுங்கள். இன்று இணையத்தில் இருக்கும் நெரிசலில் இந்த அணுகுமுறை மிகவும் தேவையானது.

Monday, June 27, 2005 7:59:00 PM  
Blogger கசி said...

மேல்வர்க்கம் என்று பேதைமை பேசித் திரிபவர்களுக்கு சரியான சவுக்கடி. இன்னும் வரிசையாக பலரும் வருவார்கள். அவர்களில் முக்கியமான சிலரின் கருத்துகளுக்காக காத்திருக்கிறேன்.

Monday, June 27, 2005 8:18:00 PM  
Blogger மதி கந்தசாமி (Mathy Kandasamy) said...

தெளிவாக நச்சென்று சொல்லியிருக்கிறீர்கள் சிவா.

-மதி

Monday, June 27, 2005 8:23:00 PM  
Blogger -/சுடலை மாடன்/- said...

சிவா, சரியாக பதில் சொல்லியிருக்கிறீர்கள்.

நன்றி - சொ. சங்கரபாண்டி

Monday, June 27, 2005 8:31:00 PM  
Blogger சீமாச்சு.. said...

சிவா,
ரஜினி ராம்கி கேட்டது என்னவோ சாதாரண கேள்வி தான். அதற்கு எதற்கு நம்ம ஊர் டி. ஆர் ஸ்டைலில் உணர்ச்சிவசப்பட்டு கன்னம் துடிக்க ஒரு முழ நீள பதில் எழுதியிருக்கிறீர்கள்?
சாதாரணமாக கலையுலக மக்கள் அயல்நாடு வந்தால் அதில் ஒரு entertainment value இருக்கும்..அதில் பணம் திரட்ட்லாம்.. நாலு நல்ல
காரியங்களுக்காகும்.
இப்பொழுது இருக்கும் அரசியல்வாதிகளின் கொள்கைகள் ஒன்றும் பெரிய கொள்கைகள் கிடையாது. அதிகபட்சம் இங்கு வந்தால் பேசுவார்கள். அந்த பேச்சைத்தான் எல்லா இடத்திலும் படிக்கிறோமே. இவர்கள் சாதனைதான் எல்லாருக்கும் தெரிகிறதே. இவர்களிடம் பணம் இல்லாமலும் இல்லை. இங்கிருக்கும் தமிழ்ச்சங்கங்கள் அவ்ர்களுடைய குழுவுக்கு பணம் தந்து அழைத்து வருவதற்கு ஏதாவது நல்ல காரியம் செய்யலாம். அவர்கள் சொந்த காசிலேயே வரலாம். அதில் ஒன்றும் தவறாகத் தெரியவில்லை..
சரி வந்து தான் என்ன செய்யப்போகிறார்கள்.. இந்தியா திரும்பியவுடன், ஏதாவது ஒரு மீட்டிங்கில் நீட்டி முழக்கி "அ..மெ..ரிக்கா...விலே...சிகாகோ..
மாந..கர..த்திலே... அன்பின் இளவ்ல், மயிலாடுதுறை தந்த வீர இளைஞன், மணிக்கூண்டு சிவா அவர்கள்... வீர முழக்க மிட்டார்கள்.. " என்று சொல்லக்கூடும்..
அடுத்த முறை எனக்கு ஏதாவது அரசாங்க வேலை ஆக வேண்டுமென்றால்.. சிவா பெயரைச்சொல்லி வைகோவைப் பிடித்து காரியம் செய்து கொள்ளலாம். இதைத்தவிர, இந்த அரசியல் வாதிகளிடம் என்ன பெரியதாக வியக்கத்தக்க குணம் இருக்கிற்து? சினேகாவிடம் என்ன இருக்கிறது என்று திருப்பிக் கேட்காதீர்கள்.. என் பதில் ரொம்ப நீளமாகவே இருக்கும்....
சாதியைத் தாண்டி சிந்தியுங்கப்பா... ஏன் ஒரு வளையத்துக்குள்ளே சுத்திச் சுத்திச் வருகிறீர்கள்?
இதற்கு ச்சும்மாவே 14 பேரு வேற பக்க வாத்தியம்.. "அருமையான பதிவென்று"..
சிவா மறுபடியும் சொல்கிறேன்.. கூடுமானவரை உங்கள் செய்திகள் positive கருத்துக்களை பரப்புமாறு எழுத முற்படுங்கள்.. பாராட்டுக்கள் உங்களின் அடுத்த சிறந்த பதிவுக்காக.. முன்னதாகவே..
என்றென்றும் அன்புடன்,
சீமாச்சு...

Monday, June 27, 2005 9:12:00 PM  
Blogger Thangamani said...

சிவா,

http://www.dinamalar.com/2005june23/imp33.asp

இந்த மாதிரி பாசிட்டிவா எழுதக் கத்துக்கங்க. இப்படி இருந்தாத்தான் பாசிட்டிவ். ஆனா யாருக்கு பாசிடிவ் அப்படீன்னு கேக்காதீங்க.

Monday, June 27, 2005 9:27:00 PM  
Blogger -L-L-D-a-s-u said...

வை.கோ, ராமதாஸ், திருமாவளவன் போன்றவர்கள் உலகம் பூராவும் சுற்றி வந்து என்னதான் செய்கிறார்கள்?

இந்த கேள்விக்கு என்ன பதிலை எதிர்பார்க்கலாம் ? இவர்கள் தங்கள் கொள்கைகளை விளக்குகிறார்கள் / தெளிவுபடுத்துகிறார்கள்...என்ற ரீதியில்தானே... ..சிம்ரன் விஜய் போன்றோரின் தொழில் ஆடுவது.. அமெரிக்கா வருவது நாலு காசு பார்க்க. அது எல்லோருக்கும் தெரியும்.. ஆனால் ஒடுக்கப்பட்டோரை விடுதலையாக்கும் எழுச்சி தலைவர்கள் ஏன் அமெரிக்கா வருகிறார்கள் என்பதே கேள்வி . அதற்கான நேரடியான் பதிலைத்தான் ராம்கி எதிபார்த்திருப்பார் ..மாட்டிவிட்டான் ஒரு கேனைப்பயன் , நம்மோட 'பரிவை' பரைசாற்ற வாய்ப்பு என துள்ளிவிளியாடியிருக்கிறீரகள் ..

Monday, June 27, 2005 9:41:00 PM  
Blogger முகமூடி said...

என் பின்னூட்டம் கடைசி பத்தியில் வார்த்தைகள் விட்டுப்போய்விட்டன. சரியாக: :

ஒரு நிமிடம், உங்களை தலித் நண்பராக சித்தரித்துக்கொள்ள ராம்கியை பயன்படுத்தி மிகவும் தந்திரமான முறையில் எழுதப்பட்ட பதிவு இது என்று நினைத்துவிட்டது என் மனது... பிறகு நாம்தான் ஆதிக்க சாதி அல்லவே, நம் மனசு இப்படியெல்லாம் நினைக்கக்கூடாதே என்று சுயநினைவு வந்தவுடன் மீண்டும் படித்த போதுதான் உங்கள் பதிவின் உண்மையான அக்கறை தெரிந்தது... வாழ்க வளர்க.

Monday, June 27, 2005 9:52:00 PM  
Blogger ROSAVASANTH said...

//சாதியைத் தாண்டி சிந்தியுங்கப்பா... //

அருமையாய் சொல்லியிருக்கிறார், ஆனால் தனக்கு பொருத்தி பார்க்கவோ பின்பற்றவோ மனம் வரவில்லை.

Monday, June 27, 2005 9:54:00 PM  
Blogger ஈழநாதன்(Eelanathan) said...

கலைஞர்கள் என்ற பெயரில் வெளிநாடு சுற்றி வசூல் ராஜாக்களாகத் திரும்பிப்போகிறவர்களை விட திருமாவளவன் எவ்வளவோ மேல்.அவர் சாதியைத் தூக்கிப் பிடிக்கிறார்தான் யார் இல்லையென்றது காலங்காலமாக அடக்குமுறைக்குட்பட்டு இருந்த தனது மக்களை விடுவிக்க அந்த மக்களைத் தூக்கிப் பிடிக்க வேண்டியிருக்கிறது இது மேல்ஜாதி என்று கூறிக்கொள்பவர்கள் செய்யாத ஒன்றா என்ன.தனது ஜாதியை வளர்க்க மற்றவன் ஜாதியை மிதிப்பதுதான் கேவலம்.

திருமாவளவன் வெளிநாடுகளுக்கு மேற்கொள்ளும் சுற்றுப்பயணம் வெறுமனே வெளிநாடு வாழும் தலித் மக்களை பார்த்து வருவதற்காகவன்றி அதன் மூலம் ஊரிலுள்ள தலித்களுக்கு நிதியுதவிகளைப் பெற்றுக்கொடுப்பதற்காகத் தான் என்று நண்பர் ஒருவர் குறிப்பிட்டார்.அதுவே உண்மையாகவும் இருக்குமென்று நம்புகிறேன்.போதாதற்கு ஈழப்போராட்டத்திற்கு அவர் காட்டும் ஆதரவு நிலைப்பாடு காரணமாக மலேசியா சிங்கப்பூர் மட்டுமல்ல கனடா ஐரோப்பா போனால் கூட அவருக்கு பெருமளவு வரவேற்பு இருக்கும்

Monday, June 27, 2005 9:54:00 PM  
Blogger -L-L-D-a-s-u said...

ஈழநாதன் கூறிய தொனியே சரியானது ..இவர்கள் வெளிநாடு செல்வதிலோ,நிதியுதவிகளைப் பெறுவதிலோ, கொள்கை குறித்து பேசுவதிலோ தவறேதும் இல்லை ..இங்கே கேள்வி திரிக்கப்பட்டு அவரவரின் தலித் பற்றை(இணையத்தில் மட்டுமோ என்னவோ) பறைசாற்ற பயன்படுத்தியதுதான் தவறு ..

Monday, June 27, 2005 10:04:00 PM  
Blogger dondu(#11168674346665545885) said...

ராம்கி முதலில் அந்தக் கேள்வியைக் கேட்டபோது நீங்கள் கூட அதை அப்போது தவறாக எண்ணியதாகத் தோன்றவில்லையே?

நீங்கள் அப்போது எழுதியது: "ராம்கி, நிச்சயம் எழுதுகிறேன். நல்ல கேள்வி. உங்களுக்கு பதில் சொல்லுவதன் மூலம் மற்ற நண்பர்களுக்கும் இது தெரிய வாய்ப்பு. தனி பதிவாகவே போட்டு விடுகிறேன். நன்றி மயிலாடுதுறை சிவா"

ராம்கி யதார்த்தமாகக் கேட்க நீங்களும் அப்போது சாதாரணமாகத்தான் எடுத்து கொண்டீர்கள் என நினைத்தேன்.

வழக்கம்போல இப்பின்னூட்டத்தின் நகல் என் தனிப்பதிவிலும் இடப்படும். பார்க்க:
http://dondu.blogspot.com/2005/05/blog-post_25.html#comments

அன்புடன்,
டோண்டு ராகவன்

Monday, June 27, 2005 10:08:00 PM  
Blogger Mookku Sundar said...

சிவா,

விளக்கமாக எழுதி, பலர் கேட்க நினைத்திருந்த கேள்விகளை கேட்டு இருக்கிறீர்கள். நன்றி. யதேச்சையாக ராம்கி கேட்டார் என்று நினைத்தால் கூட, இதற்கான விளக்கங்களை, சந்தேகங்களை தனி மடலில் அவரிடம் கேட்பதை விட, இப்படி பொதுவில் கேட்டு விடுவது/ சொல்லி விடுவது ந்ல்லது. பாருங்கள்..நம்ம ராசாக்களின் ஞானம் பொங்கி வழிந்து கொண்டிருக்கிறது பாருங்கள்.இவ்வளவு விஸ்தாரமாக தெரிந்து இருக்குமா ..தனி மடலில் கேட்டு இருந்தால்..??

இந்த சலசலப்புக்கெல்லாம் நீங்கள் பதில் கூட சொல்ல வேண்டியதில்லை.
ராம்கி கேட்ட கேள்விக்கு எனக்கு கோபம் வந்தது. நீங்களும் உங்கள் விளக்கத்தை பதிலாக எழுதியுள்ளீர்கள்.
இனி ராம்கி வந்து கேட்டால், நீங்களோ அல்லது நானோ பதில் கொடுக்கலாம். மற்றவர்களுக்கு இது செய்தி.செய்தி மட்டுமே.

எதற்கும் அசராமல் தொடர்ந்து மனதில் தோன்றுவதை எழுதி வாருங்கள். என்ன ...உங்களுக்கும் "பட்டம்" கிடைக்கும் . அவ்வளவுதான்.

Monday, June 27, 2005 10:10:00 PM  
Blogger இம்சை அரசன் said...

*** ...உங்களுக்கும் "பட்டம்" கிடைக்கும் *** அதுக்குத்தானே இவ்வளவு கஸ்டமும்

Monday, June 27, 2005 10:34:00 PM  
Blogger மு. சுந்தரமூர்த்தி said...

சிவா,
சீமாச்சை ஏன் இப்படி கன்னம் துடிக்க வைத்திருக்கிறீர்கள்? பாவம் அவர் உணர்ச்சி வசப்பட்டு ஒரு முழுநீள பதில் போடவேண்டியதாகிப் போய்விட்டதே. அவருக்கு துடிப்பு அடங்குகிற மாதிரி அடுத்த தடவை கலையுலக மக்கள் அயல்நாடு வந்து கேளிக்கையூட்டி நல்ல காரியங்களுக்கு பணம் திரட்டுகிற ஒரு பாசிட்டிவான பதிவு ஒன்னு போடுங்க. அதுக்கு நேரமில்லையென்றால் சினேகாவிடம் என்ன இருக்கிறது என்றாவது கேளுங்க. மக்களுக்கு பிரயோஜனமுள்ள ஒரு நீள பதிலாவது கிடைக்கும். அதை விட்டுட்டு ஏன் ஒரு வளையத்துக்குள்ளே சுத்திச் சுத்திச் வருகிறீர்கள்? சாதியை தாண்டி சிந்தியுங்கப்பா...

Monday, June 27, 2005 10:38:00 PM  
Blogger ROSAVASANTH said...

//ராம்கி சாதாரணமாக கேட்ட கேள்வியை கொண்டு அவருக்கு வலிக்குமளவு அடித்திருக்கிறீர்கள்.. //

சிவா மிக நிதானமாக எழுதிய பதிவை, 'வலிக்குமளவிற்கு அடிப்பதாக' திரித்தால் ராம்கி எழுதியதை எப்படி வேண்டுமானாலும் திரிக்க முடியும். மேலும் ராம்கியின் திருமா/ராமதாஸ் குறித்த பழைய கருத்துக்களை வைத்து 'சாதாரணமாக' கேட்டதாக எடுத்துகொள்ள முடியாது. குசும்புடன் கேட்டதாகவே எடுத்துகொள்ள முடியும். அதைவிட எல்லாம் முக்கியமான விஷயம், நம் சமூகத்தில் இந்த சாதாரண மனநிலைதான் மிக மிக மோசமானது, அழுகியது. உதாரணமாய் சீமாச்சு எழுதியதை கொள்ளலாம்(அது சாதாரண மனநிலை என்று எடுத்துகொண்டால்).

Monday, June 27, 2005 11:33:00 PM  
Blogger enRenRum-anbudan.BALA said...

// இன்னும் வரிசையாக பலரும் வருவார்கள். அவர்களில் முக்கியமான சிலரின் கருத்துகளுக்காக காத்திருக்கிறேன்.
//
Enjoyed very much. Nice writing :)

BTW, Who are those important people, you are waiting for ?

Tuesday, June 28, 2005 12:18:00 AM  
Blogger ஜெ. ராம்கி said...

திட்டிய நண்பர்களுக்கும் மனமுவந்து விளக்கம் கொடுத்த நண்பர்களுக்கும் நன்றி. நான் கேட்ட கேள்வியில் குசும்பு எதுவுமில்லை. அப்படியொரு சாயம் வந்துவிடக்கூடாதே என்பதற்காகத்தான் எச்சரிக்கையாகவே கேள்வியை ஆரம்பித்தேன். ஆனால், கேள்வி கேட்டதற்கும் ஒரு காரணம் இருக்கிறது. மேலாதிக்க ஜாதியினர் என்பது பிராமணர்களை மட்டும் உள்ளடக்கியதல்ல என்பதை எல்லோருமே ஒப்புக்கொள்வார்கள். ஜெயலலிதா மட்டுமல்ல வை.கோ, ராமதாஸ், கருணாநிதி எல்லோருமே மேலாதிக்க ஜாதியினர்தான் என்பதையும் எல்லோரும் ஒப்புக்கொள்வார்கள் என்று நினைக்கிறேன்.

17.6.2005. மயிலாடுதுறை நகராட்சி வாசலில் ஒரு உண்ணாவிரத ஆர்ப்பாட்ட கூட்டம். ஒரு தலித்தை காவல்துறையினர் தவறாக பேசியதை கண்டித்து ஒருநாள் ஆர்ப்பாட்டம். விடுதலை சிறுத்தை அமைப்புகளிலிருந்து நிறையபேர் திரண்டிருந்தார்கள். கொஞ்சமாய் போக்குவரத்து நெரிசல். 'இவனுங்களுக்கு வேற வேலையே இல்லை'ன்னு கமெண்ட் அடித்தவர்களில் பாதிப்பேர் பாமகவினர்தான். இதுதான் எங்க ஊர் நிலைமை. மயிலாடுதுறை தொகுதியில் ஜாதி ரீதியாக மெஜாரிட்டியானவர்கள் வன்னியர்கள்தான். அதற்கு அடுத்தது தாழ்த்தப்பட்ட வகுப்பினர்தான். விடுதலை சிறுத்தைகளும் பாமகவும் பலமாக கைகோர்த்தால் எந்தக்கட்சியாலும் எதிர்த்து நிற்க முடியாது என்பதுதான் இங்கே நிதர்சனம். ஆனால், உண்மை நிலவரம் வேறு. என்னதான் தமிழ்நாடு முழுவதும் பாமகவும் விடுதலைசிறுத்தைகளும் ஒற்றுமையாக இருந்தாலும் உள்ளூர் அரசியல் என்று வரும்போது எலியும் பூனையும்தான். திமுக, அதிமுகவினரிடையே இருக்கும் பரஸ்பர புரிதல் கூட இவர்களிடம் கிடையவே கிடையாது.

திரும்பவும் கேள்விக்கே வருகிறேன். கலைஞர் ஆட்சியின் போது சில எம்.எல்.ஏக்களை வெளிநாடுகளுக்கு அனுப்பும் திட்டம் பற்றி சட்டமன்றத்தில் விவாதிக்கப்பட்டது. சட்டமன்றத்திற்கு வெளியே கருத்து தெரிவித்த திருமாவளவன் வெளிநாடுகளுக்கு சென்று திரும்பும் அமைச்சர்களோ, எம்எல்ஏக்களோ தாழ்த்தப்பட்டவர்களின் பிரச்னைகளை கண்டு வரவா போவார்கள் என்று கேள்வி எழுப்பியிருந்தார். அப்படி கருத்து சொன்ன ஒருவர் வெளிநாடு சுற்றுப்பயணத்தின் போது என்னதான் செய்கிறார், வை.கோ, ராமதாஸ் போன்றவர்களுக்கு கூடும் கூட்டம் திருமாவளவனுக்கும் கூடுகிறதா என்பதை தெரிந்து கொள்ளும் சில்லுண்டித்தனமான கேள்விதான். வை.கோ, ராமதாஸ் வகையறாக்களுக்கு திருமாவளவன் ஜூனியர் என்கிற அர்த்தத்தில்தான் இது எடுத்துக்கொள்ளப்படவேண்டும். இதில் ஜாதி உணர்வு என்கிற உள்குத்து இல்லை. இளக்காரம் என்றெல்லாம் சொல்வதின் அர்த்தம் புரியவில்லை. மற்றபடி வை.கே, ராமதாஸ், திருமாவளவன் போன்ற தனிநபர்கள் மீது எனக்கு எவ்வித காழ்ப்புணர்ச்சியோ, கவர்ச்சியோ இல்லை. அதற்கு அவசியமும் இல்லை. ஜாதி, மத, மொழி, இன வித்தியாசம் காட்டாத தலைவன் எனக்கு சினிமா தியேட்டர் வெளிச்சத்திலேயே தாராளமாக கிடைக்கிறான்.

Tuesday, June 28, 2005 12:38:00 AM  
Blogger enRenRum-anbudan.BALA said...

சுந்தர்,
//
ராம்கி கேட்ட கேள்விக்கு எனக்கு கோபம் வந்தது. நீங்களும் உங்கள் விளக்கத்தை பதிலாக எழுதியுள்ளீர்கள்.
இனி ராம்கி வந்து கேட்டால், நீங்களோ அல்லது நானோ பதில் கொடுக்கலாம். மற்றவர்களுக்கு இது செய்தி.செய்தி மட்டுமே.
//

பொதுவில், பலரும் படிக்கக்கூடிய வகையில், ஒரு பதிவிடும்போது, யார் கேள்வி (ரீஜண்டான முறையில்!) எழுப்பினாலும், அதைப் பதித்தவர், அதற்கு பதில் அல்லது விளக்கம் தருவதில் தவறொன்றும் இல்லையே (கடமை இல்லாவிட்டாலும் கூட) ! தாங்கள் கூறும் "மற்றவர்களுக்கு இது செய்தி.செய்தி மட்டுமே." என்பதில் எனக்கு உடன்பாடில்லை.

என்றென்றும் அன்புடன்
பாலா

Tuesday, June 28, 2005 12:42:00 AM  
Blogger முகமூடி said...

ராம்கி எழுதிய பின்னூட்டம் மிக நிதானமாக, மிகத்தெளிவானதாக, மிகச்சிறப்பானதாக எனக்கு தோன்றுகிறது. எனக்கு சாதாரண மனநிலையா, அசாதாரண மனநிலையா ??

{அறிவு விருத்திக்காக கேட்கப்பட்ட கேள்வி இது. தெ...தெ...தெரியலையேப்பா போன்ற புளித்து போன பதில்களை தவிர்க்க வேண்டுகிறேன்}

Tuesday, June 28, 2005 12:54:00 AM  
Blogger முகமூடி said...

// நீங்களோ அல்லது நானோ பதில் கொடுக்கலாம். மற்றவர்களுக்கு இது செய்தி.செய்தி மட்டுமே. // இதை எழுதிய "இவர்" மற்றவர் இல்லையா... "மற்றவருக்கு" செய்தி என்று அறைகூவல் விட இவர் யார்... என்னதான் ஒத்த அலைவரிசையில் சிந்தித்தாலும் பதிவரின் கருத்தை தன் கருத்தாக பாவிக்கும் அளவு இவருக்கு எப்படி உரிமை வந்தது... >> இந்த கேள்வியெல்லாம் எனக்கும் வந்தது... ஆனால் எதற்கு வீண் வம்பு... நான் கேட்கவே போவதில்லை என்று முடிவு செய்துவிட்டேன்...

Tuesday, June 28, 2005 1:01:00 AM  
Blogger ROSAVASANTH said...

ராம்கியின் பின்னூட்டம் நிதானமானதாகவே எனக்கு தெரிகிறது. (சிவாவின் இந்த பதிவும் நிதானமானதாகவே எனக்கு தெரிகிறது.) ஆனால் அவருடய முந்தய கருத்துக்கள் மற்றும் சினிமா வெளிச்சத்தில் தனக்கு கிடைத்த தலைவனிடம் கேட்காத தார்மீக கேள்விகளை எல்லாம் வந்து திருமாவளவன் வெளிநாடு போவதில் வந்து கேட்பதில் குசும்பு இருப்பதாக யாருக்கும் தோன்றலாம். எனக்கு தோன்றியது.

Tuesday, June 28, 2005 1:32:00 AM  
Blogger Balamurugan said...

ROSAVASANTH - பிரச்சினையை திசை திருப்ப வேண்டாம். ராம்கி சொல்லும் தலைவன் சொந்தக்காசில்தான் ஊர் சுற்றுகிறான். மத, சாதி, மொழி அடையாளங்களில் தன்னை ஆட்படுத்திக்கொள்வதில்லை. யாரையும் யாரோடும் ஒப்பிடவேண்டாம். திருமாவளவன் போன்றவர்களை வைகோ ராமதாஸ் போன்றவர்களுடன் மட்டும் ஒப்பிடவேண்டும்

Tuesday, June 28, 2005 2:04:00 AM  
Blogger ஈழநாதன்(Eelanathan) said...

என்றென்றும் அன்புடன் பாலா காசி பெயரிலுள்ள பின்னூட்டம் காசி இட்டதில்லை.அது யார் இட்டது என்று எல்.எல்.தாசு தன்னுடைய பதிவில் எடுத்துப் போட்டிருக்கிறார் போய்ப்பாருங்கள்.

மத,இன,சாதி பார்க்காத தலைவர் நல்ல நகைச்சுவை.இமய மலைக்கு சொந்தக் காசில் போகிறாராக்கும் படம் வித்த காசுதானே.படம் அவரது உழைப்பு என்கிறீர்களா அட திருமாவளவன் கட்சிக்காக உழைக்கிறார் எந்த மக்களுக்காக உழைக்கிறாரோ அந்த மக்கள் கூப்பிடுகிறார்கள்.இதையே கேள்வியாகக் கேட்கலாமென்றால் அதையும் கேட்கலாம் ஒன்று = ஒன்று(கொஞ்சநாளா யாரிடமும் திட்டு வாங்கவில்லை அதுதான் இந்தப் பதில்)

Tuesday, June 28, 2005 2:53:00 AM  
Blogger enRenRum-anbudan.BALA said...

ஈழநாதன்,

//என்றென்றும் அன்புடன் பாலா காசி பெயரிலுள்ள பின்னூட்டம் காசி இட்டதில்லை.அது யார் இட்டது என்று எல்.எல்.தாசு தன்னுடைய பதிவில் எடுத்துப் போட்டிருக்கிறார் போய்ப்பாருங்கள்.//

சுட்டிக் காட்டியதற்கு நன்றி ! அந்த எல்.எல்.தாசு பதிவின் லிங்கை தாருங்கள். கவனிக்காதது என் தவறு தான்.

நானும் நகைச்சுவையாகத் தான் அவ்வாறு குறிப்பிட்டேன், ஸ்மைலியின் துணையுடன் !!!! இந்த ஆள் மாறாட்டத் தொல்லை தாங்க
முடியவில்லை, போங்கள் :)))

Tuesday, June 28, 2005 4:53:00 AM  
Blogger -/பெயரிலி. said...

/அதற்கு அவசியமும் இல்லை. ஜாதி, மத, மொழி, இன வித்தியாசம் காட்டாத தலைவன் எனக்கு சினிமா தியேட்டர் வெளிச்சத்திலேயே தாராளமாக கிடைக்கிறான்./
"அதற்கு அவசியமும் இல்லை. ஜாதி, மத, மொழி, இன வித்தியாசம் காட்டாமலிருக்கத் தேவையுள்ள தலைவன் எனக்கு சினிமா தியேட்டர் வெளிச்சத்திலேயே தாராளமாக கிடைக்கிறான்." என்றிருந்திருக்கவேண்டுமோ?

;-)))
:-))
;-))))))

ஆயிரம் ஸ்மைலிகள் போட்டிருக்கிறேன்.

Tuesday, June 28, 2005 5:37:00 AM  
Blogger மு. சுந்தரமூர்த்தி said...

பெயரிலி,
//;-))))))

ஆயிரம் ஸ்மைலிகள் போட்டிருக்கிறேன்.
//

இதுக்கு பேர்தான் சிரிப்பலை என்பதோ?
மக்களே ஜாதி, மத, மொழி, இன பேதமற்ற சமூகப் புரட்சிக்கு சினிமாத் தியேட்டர் வாசலில் திரளுங்கள்.
இந்தாங்க இரண்டு ஸ்மைலிகள் :-) ;-)

---------
ராம்கி முதலில் கேட்ட கேள்விகளும் நிதானமானவை--பெயர்களை தேர்ந்தெடுத்து கேட்டாலும். சிவா வாக்களித்தபடி நீண்ட விளக்கமும் நிதானமானது குறிப்பாக ராம்கியின் கேள்விகளுக்கான நேரடி பதில்கள் அளித்திருக்கிறார். கூடவே அவற்றை தன் பார்வையில் சொல்ல இன்னும் சில நிகழ்ச்சிகள், பெயர்களோடு சேர்த்து விளக்கியுள்ளார். ராம்கியின் பின்னூட்டமும் நிதானமானது. அதிலும் தான் முதலில் கேட்ட கேள்விகளுக்கோ, சிவா எழுதிய பதில் பதிவிற்கோ சம்பந்தமில்லாதது உண்டு--மயிலாடுதுறை ஆர்ப்பாட்டம் பற்றியது. விவாதம் என்றால் இப்படித்தான் செல்லும். பிறகேன் சிலர் தாம் தூம் என்று குதிக்கிறார்கள்?

ராம்கிக்கு சினிமாத் தியேட்டரில் தன் விருப்பங்களுக்கு உகந்த தலைவரைக் கண்டுபிடிக்க முடியுமென்றால் பிறகெதற்கு 'திருமாவளவன், ராமதாஸ், வை.கோ. வெளிநாடு வந்து என்ன செய்கிறார்கள்', 'யாருடைய செலவில் வருகிறார்கள்' போன்ற அக்கறைகள்? இதுபற்றி அரசியல் மேடைகளில் தலைவர்களைத் தேடுபவர்கள் தாமே கவலைப்பட வேண்டும்?

Tuesday, June 28, 2005 6:12:00 AM  
Blogger enRenRum-anbudan.BALA said...

சிவா,
சில வெளிப்படையான எண்ணங்கள், உங்கள் பார்வைக்கு !

//வெளிநாடு வருவதற்கும் மேற்கொண்டு படிப்பதற்கும். எனக்கு தெரிந்த மேல் சாதியனர் பலர் சுயநலமாக தான் தன் குடும்பம், தன் இனம் முக்கியம்
என்று நடந்துக் கொள்வதை பார்த்து இருக்கிறேன்.

//
இந்த மாதிரி பொதுவாக முத்திரை குத்துவது சரியல்ல. எல்லா சாதியினரும், உதவி செய்வதில் தங்கள் ஆட்களுக்குத் தான் முன்னுரிமை தருவார்கள், அவர்கள் மகாத்மா அல்லது பாரதியாக இல்லாத பட்சத்தில் !!!!
நலிந்தவர்களுக்கு உதவுவது என்பதை சாதிக்கு அப்பாற்பட்ட ஒரு நல்ல குணமாகவே நான் கருதுகிறேன். ஒருவர் வளர்ந்த சூழலும் இதில் முக்கிய இடம் வகுக்கிறது.

//அதைவிட வெட்க கேடு இந்த சாதியை சார்ந்தவர்கள் சாதி அமைப்பு ரீதியாகவும் கூடுகிறார்கள் என்பது.
//

இன்னொரு சாதியினரை கேவலப்படுத்துவதும், கீழாகப் பார்ப்பதும் தான் தவறே ஒழிய, ஒரு சாதியினர் ஒன்றாகக் கூடுவதில் வெட்கக் கேடெல்லாம் இருப்பதாகத் தோன்றவில்லை !!!!!! உடனே, இப்படிக் கூடுவது தான் பிரச்சினைக்கு காரணம் என்று கொள்ள முடியாது. அவரவர் சாதியினர் கூட்டம்
போடும்போது, சம்மந்தப்பட்டவர் (நமது வலைப்பதிவர்களில் பலர் உட்பட!) கட்டாயம் கலந்து கொள்வார்கள்.

//அதே போல் உயர் சாதியனர் பலரும் எஸ்வி சேகர், கிரேசி மோகன், மாதவன், பம்பாய் ஜெயஸ்ரீ, பம்பாய் சகோதிரிகள், ஹரிஹரன், உன்னி
கிருஸ்ணன் இப்படிப் பட்ட மக்களுக்குதான் அதிக ஆர்வத்தை காட்டுகிறார்கள்.
//
நீங்கள் இப்படி கேட்டது போல அத்வானி, நரேந்திர மோடி, முரளி மனோகர் ஜோசி, இல.கணேசன், சேசன், சு.சுவாமி போன்றவர்கள் ஏன் வெளிநாடு
செல்லுகிறார்கள் என்று கேட்டது உண்டா?
//

உயர்சாதியினர் என்று கூறி ழரு பட்டியலிட்டு விட்டு, ஒரு சாதியைச் சேர்ந்தவர்களை மட்டும் போட்டுத் தாக்குவது நியாயமா ? மற்ற மேல் குடியினரில் குறிப்பிடுவதற்கு ஆட்களே உங்களுக்கு கிடைக்கவில்லையா என்ன ???

//மேல் சாதியனர் பலர் சுயநலமாக தான் தன் குடும்பம், தன் இனம்//
//நடப்பு என்னவெனில், அரசியல் ஆர்வமும், தமிழ் ஆர்வமும், இன உணர்வும் மிக்க பலரும் வைகோ, இராமதாசு, திருமா மீது நம்பிக்கை
//

இரு இடங்களில் 'இனம்' என்பதைப் பற்றி ஒன்றுக்கொன்று முரணாகப் பொருள்படும்படி எழுதியுள்ளீர்கள் !!!! இன உணர்வு இருக்கலாமா, கூடாதா ?
இப்படி குழப்பறீகளே ;-)

ராம்கி கேள்விகள் எழுப்பியதால் தான் உங்களது இந்த விளக்கப்பதிவு இடப்பெற்றது. அதற்கும், அவரது தெளிவான, நிதானமான பின்னூட்ட
விளக்கத்திற்கும் என் நன்றி !!!

என்றென்றும் அன்புடன்
பாலா

Tuesday, June 28, 2005 6:38:00 AM  
Blogger Indianstockpickr said...

சிவா, உணர்ச்சிபூர்வமான பதிவு.

சமீபமாக, சென்னை கத்திரியைவிட, அனல் தெறிக்கிறது நம் தமிழ்மணம். இதை தணிக்க உங்க இந்த பதிவோட உதவியோட ஒரு லேசான பதிவை ஏற்றியிருக்கிறேன். நான் உங்கள் ஆதங்கத்தை எந்தவிதத்திலும் குறைத்து மதிப்பிடவில்லை.
நன்றி, இரவிக்குமார்.

Tuesday, June 28, 2005 7:14:00 AM  
Blogger Mookku Sundar said...

//பொதுவில், பலரும் படிக்கக்கூடிய வகையில், ஒரு பதிவிடும்போது, யார் கேள்வி (ரீஜண்டான முறையில்!) எழுப்பினாலும், அதைப் பதித்தவர், அதற்கு பதில் அல்லது விளக்கம் தருவதில் தவறொன்றும் இல்லையே (கடமை இல்லாவிட்டாலும் கூட) ! தாங்கள் கூறும் "மற்றவர்களுக்கு இது செய்தி.செய்தி மட்டுமே." என்பதில் எனக்கு உடன்பாடில்லை. //

பாலா,

நான் அதை எழுதுமுன் சிவாவின் பதிவுக்கு வந்த பின்னூட்டங்களின் தொனியைப் பார்த்தீர்களா..?? அவைகள் எல்லாம் "ரீஜண்டாகவா" இருந்தன..?? சிவாவின் பதிவுக்கு தந்திரமான உள்நோக்கம் இருக்கிறது என்று கற்பிதம் செய்தும், அவர் முந்தைய பதிவில் பயன்படுத்திய புகைப்பட விவகாரம் பற்றியும், அவர் ஸ்நேஹாவை சந்தித்தது பற்றியும் எழுப்பப்பட்ட கேள்விகள் நியாயமென்றா கருதுகிறீர்கள்..?? அப்படியென்றால் நான் ஒன்றும் சொல்வதற்கில்லை..?? மேற்கூறப்பட்ட தொனியில் அமைந்த பின்னூட்டங்கள் எல்லாம் எழுதும் விஷயமல்லாமல், எழுதுபவரை ஆஃப் பண்ணிவிட செய்யப்பட்ட பிரயத்னங்களே எறு நினைத்துதான், "மற்றவர்களுக்கு" இது செய்தி என்று எழுதினேன். ராம்கியின் கேள்விக்கு, இதற்கு முந்தைய பதிவின் பின்ன்னூட்டத்தில் முதலில் ஆட்சேபம் எழுப்பியவன் என்ற அடிப்படையில், அவருடைய விளக்கத்துக்கு கிடைக்கும் "மொத்துகளுக்கும்" தோள் கொடுக்க வேண்டும் என்ற தார்மீக அடிப்படையில் அந்த "உரிமையை" எடுத்துக் கொண்டேன். பலன்களில் பங்கு கேட்பதுதான் வியாபாரம். மொத்துக்களில் பங்கு கேட்பது வியாபாரம் அல்ல.

திருமாவளவனின் அரசியல் நிலைப்பாட்டை, அவரை வெறுப்பவர்களின் எண்ணங்களை என்னால் உணர முடிகிறது. எனக்குக்கூட அவர் ராமதாசுடன் சேர்ந்து அரசியல் செய்வது ஏற்புடையதல்ல - என்றாலும், திராவிட இயக்கங்களால் புறக்கணிக்கப்பட்ட தலித் இயக்கங்கள் கால காலமாக அவர்கள் கடைக்கண் பார்வைக்கு ஏங்கித் தவித்துக் கொண்டிருக்க முடியாது.மாற்றாக இருக்கும் கட்சிகளை அவர்கள நாடினால்தான், தலித் இயக்கங்களுக்கு ஒரு அங்கீகாரம் கிடைக்கும் என்ற வகையில் என் எண்ணத்தை மெல்ல மாற்றிக் கொண்டு வருகிறேன். லோக்கல் அரசியலில் பா.ம.கவுக்கும், வி.சிறுத்தைகளுக்கும் இருக்கும் புகைச்சல் கூட காலகாலமாக வன்னியர்கள் உள்ளிட்ட இடைநிலை சாதியினர் மனதில் வேரூன்றியிருக்கும் சாதிய உணர்வுகள்தான். அரசியல் செல்வாக்கு தலித் இயக்கங்களுக்கு பெருக, பெருக இந்த வித்தியாசங்களும் மறையும் என்று நம்புகிறேன். அதனால்தான் மற்ற அரசியல்வாதிகளின் சறுக்கல்களை வெகு சுலபமாக மறந்தும், மன்னித்தும் மறுபடியும் வாய்ப்புத் தரும் நாம், திருமாவளவன் போன்ற தலைவர்களுக்கு ஒரு முறையாவது வாய்ப்புத் தந்து பார்க்க வேண்டும் என்று எண்ணுகிறேன். ராம்கி மற்றும் போலி டோண்டுவின் ( முந்தைய பதிவின்) பின்னூட்டங்கள் மிகவும் நியாயமற்ற முறையில் இருந்ததாக அதனாலேயே நினைத்தேன். என் எதிர்ப்பைத் தெரிவித்தேன். ராம்கியின் விளக்கத்துக்கு நன்றி. அவர் வந்து பதில் சொல்லுமுன், பார்த்த மற்றவர்களின் ஆவேசங்கள் நான் எதிர்பாராதது. எனக்குத் தெரிந்த அவர்களின் குணாதிசயங்களுக்கு முற்றிலும் முரணாணது என்ற வேதனை எனக்கு உண்டு.

சிவாவின் பதிவில் உள்ள கடைசி பத்தியின் எழுத்துக்கு எழுத்து எனக்கு ஒப்புதல் உண்டு.

Tuesday, June 28, 2005 10:06:00 AM  
Blogger Mookku Sundar said...

டோண்டுவின் பெயரில் பின்னூட்டம் இடும் அந்த முகமில்லா நண்பருக்கு,

இது மாதிரியான விவகாரங்களின் மூலம் என்ன சாதிக்க முயல்கிறீகள் என்பது புரியவில்லை. அவர் பெயரை உபயோகப்படுத்தி, நீங்கள் இடும் பின்னூட்டங்கள் முற்றிலும் நாகரீகமில்லாத அணுகுமுறை. அவருடன் பிணக்கு என்றால், கருத்து வேறுபாடு என்றால், அதை அவருடன் விவாதித்து கொள்ள, உங்களுக்கு என்ன வேறு முகமூடிப்பெயர்களா கிட்டவில்லை..?? சற்றும் நேர்மை இல்லாத, கிழ்த்தரமான அணுகுமுறை. அதன் பலன்கள் அவருக்கும், கேடுகள் உங்களுக்கும் கிடைத்துக் கொண்டிருப்பது கண்கூடு. பலருக்கு இதனால் தர்மசங்கடம். நீங்கள் இம் மாதிரியெல்லாம் அவர் பெயரில் பின்னூட்டம் விடாவிட்டால், அவரே அதை எழுதுவார் என்பதாவது உங்களுக்குத் தெரியுமா,,?? அந்த "வாய்ப்பை" அவருக்கே தராமல், நீங்கள் தட்டிப் பறிப்பது என்ன நியாயம்..??

வேலையை நேர்மையாக செய்யுங்கள் நண்பரே..! இதற்கும் எனக்கு கீழ்த்தரமான முறையில் பதில் தந்தால், நான் பதில் சொல்ல மாட்டேன். உங்கள தலையில் நீங்களே மண் அள்ளிப் போடுகிறீகள் என்று பேசாதிருந்து விடுவேன்.

நன்றி.

Tuesday, June 28, 2005 10:13:00 AM  
Blogger முகமூடி said...

// நீங்கள் பதிலளிப்பதால் பயனிருக்கும் என்று நீங்கள் நினைக்கும் கேள்விகளை தவிர, கேனத்தனமாக கேட்கப்படும் கேள்விகளை புறக்கணியுங்கள். இன்று இணையத்தில் இருக்கும் நெரிசலில் இந்த அணுகுமுறை மிகவும் தேவையானது. // அன்பின் ரோசா, அனைவரும் பின்பற்ற வேண்டிய வழிமுறைதான்... முன்பிருந்தே இதை அனைவரும் பின்பற்றியிருப்பாரேயாயின், பாதி விவாதங்களுக்கு இடமே இல்லாமல் போயிருக்கும்... நிறைய பேரின் காலமும் மிச்சப்பட்டிருக்கும்

Tuesday, June 28, 2005 11:44:00 AM  
Blogger முகமூடி said...

// சிவாவின் பதிவுக்கு தந்திரமான உள்நோக்கம் இருக்கிறது என்று கற்பிதம் செய்தும், அவர் முந்தைய பதிவில் பயன்படுத்திய புகைப்பட விவகாரம் பற்றியும், அவர் ஸ்நேஹாவை சந்தித்தது பற்றியும் எழுப்பப்பட்ட கேள்விகள் நியாயமென்றா கருதுகிறீர்கள்..?? //

மூக்கு சுந்தர், நீங்கள் சிவாவுக்கு வக்காலத்து வாங்குவதை பற்றி எனக்கு ஆட்சோபணை இல்லை... ஆனால் என்னுடைய கேள்விகளில் என்ன அநியாயத்தை கண்டீர்கள்.

போன பதிவில் ராம்கி கேட்ட கேள்விக்கு நியாயமான கேள்வி, பதில் சொல்கிறேன் என்று சிவா சொன்ன பொழுது நான் நினைத்தது : ஈவிகேஎஸ் இளங்கோவன் போன்றவர்களை அழைத்து மகிழ்ந்த சங்கங்களில் அங்கம் வகிக்கும் சிவா, பத்திரிக்கைகள் முக்கியத்துவம் கொடுக்காதவர்கள் என்ற குற்றச்சாட்டு உள்ள திருமாவளவன் மற்றும் இதர அரசியல் தலைவர்களின் வெளிநாட்டு பயணத்தை பற்றி - என்ன விதமான விஷயங்களை பேசுகிறார்கள், இயக்கங்களா சங்கங்களா யார் அழைக்கிறார்கள், தாமாகவே வந்தால் அவர்கள் பயணத்திட்டம் என்ன அவர்கள் எப்படி மக்களை திரட்டி சந்திக்கிறார்கள், கேட்பவரின் வரவேற்பு எப்படி உள்ளது - போன்றெல்லாம் விளக்கமாக சொல்லப்போகிறார், நாமும் தெரிந்துகொள்ளலாம் என்பதாகத்தான்... ஆனால் இவரின் பதிலில் ராம்கியை உபயோகப்படுத்தி தன் கொள்கைகளை நிலைப்பாட்டை சொன்னரேயன்றி, கேள்விக்கான நேரடி பதிலை தரவில்லை. மற்ற அனைத்து விசயங்களையும் சொல்லி இருக்கிறார்.

மேட்டுக்குடிக்காரர்கள் என்று இவர் கூறும் மக்கள் அழைத்து மகிழும் கலைஞர்ளுக்கு இருக்கும் தகுதியையும் சாதி அடையாளத்தையும் கேள்வி கேட்க இவருக்கு உரிமை இருந்தால், இவர் முக்கிய பங்கு வகிக்கும் தமிழ் சங்கம் சினேகா,விவேக் போன்றவர்களை அழைத்தற்க்கு என்ன காரணம் என்று கேட்க எனக்கு உரிமை இல்லையா...

போன பதிவில் வந்த படம், சம்பந்தமில்லாம அ·ப் செய்யும் யுத்தி அல்ல.... தந்திரமான யுக்தியை பதிவர் கையாளுகிறார் என்ற என் வாதத்தின் அடிப்படையே அதுதான்... பொதுவாக ஒரு புகைப்படத்தையோ, செய்தியையோ "உபயோகப்படுத்தும்"போது நன்றி என்று நேரடியாக சொல்ல அவசியம் இல்லாவிட்டாலும் அது சம்பந்தமாக ஒரு குறிப்பாவது கொடுப்பது வழக்கம்... அப்படி இல்லை எனினும், அது பற்றிய கேள்வி வரும்போது அதற்கு விளக்கம் கொடுக்கலாம். ஆனால் நோபல் பரிசுக்கு பரிந்துரை செய்யப்படும் ஒருவரின் - அவர் தலித்துகளுக்காக உண்மையிலேயே உழைப்பவர் - புகைப்படத்தை தன் பாட்டி போல் சித்தரித்து பதிவு எழுதி, இவர் பாட்டி நோபல் பரிசு பெறுகிறார் என்ற நினைப்பில் அதற்கு இவருக்கு அனைவரும் வாழ்த்தும் சொல்லி பின்னூட்டம் இட, தான் மட்டும் அமைதியாக இருப்பது, தந்திர உபாயம் என்று நினைப்பதற்கு இடம் தராதா? அவர் அந்த பின்னூட்டங்களை படிக்கவே இல்லை என்று நீங்கள் சொல்வீர்களாயின், பிறகு நான் பதில் சொல்கிறேன்.

// எழுதுபவரை ஆஃப் பண்ணிவிட செய்யப்பட்ட பிரயத்னங்களே // இதுதானே இப்போது பரவலாக நடந்து கொண்டு இருக்கிறது. தான் நியாயம் என்று நினைப்பதை தவிர மற்ற சிந்தனையை யார் எழுதினாலும் ஆ·ப் பண்ணுவது.... சில தலைவர்கள் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவர்கள். நல்ல விதமாக தவிர மற்ற விதமாக அவர்கள் விமர்சிக்கப்படக்கூடாது... அப்படி செய்தால் ஒரு குழுவாக அவரை மிரட்டுவது, எழுதுபவரின் சாதியை, கொள்கையை, எண்ணங்களை பற்றிய சந்தேகம் எழுப்புவது... இதெல்லாம் நல்ல விதமான பிரயத்தனங்கள்தான்.

// அவர் வந்து பதில் சொல்லுமுன், பார்த்த மற்றவர்களின் ஆவேசங்கள் நான் எதிர்பாராதது. எனக்குத் தெரிந்த அவர்களின் குணாதிசயங்களுக்கு முற்றிலும் முரணாணது // உடன்பாடு கருத்துகளை மட்டுமே எதிர்பார்த்தீர்களா... // இனி ராம்கி வந்து கேட்டால், நீங்களோ அல்லது நானோ பதில் கொடுக்கலாம். மற்றவர்களுக்கு இது செய்தி.செய்தி மட்டுமே. // ராம்கிக்கு சிவா எழுதிய பதிவில் ராம்கி வந்து கேட்டால் அவரை கேட்கப்போகிறார். அதற்கு சிவாவுக்கு பதில் சொல்ல தெரியாதா... அதற்கு பதில் சொல்ல நீங்கள் ஏன் இத்துனை உணர்ச்சி வசப்படவேண்டும்... தலைவராக இருக்க முயற்சியுங்கள்... "தலைவர் வர்றாரு வழி விடு" கூட்டத்தில் இருப்பவரை போல் பேசாதீர்கள்... (தணிக்கை துறையினர் இது நாகரீகமான கருத்தாக கருதவில்லையெனில் வருந்துகிறேன்) இன்னமும் சொல்கிறேன் "மற்றவருக்கு செய்தி. செய்தி மட்டுமே" என்று நீங்கள் சொன்னதன் அர்த்தம் எனக்கு புரியவில்லை... சொல்லப்படுவதை கேள்வி கேட்காமல் கேட்டுக்கொண்டு போ, ஏனெனில் இது உனக்கு செய்தி மட்டும் என்கிறீர்களா? சிவா என்ற பெயரில் எழுதுபவருக்கும் முகமூடி என்ற பெயரில் எழுதுபவருக்கும் என்ன தனிப்பட்ட விரோதமா? அவரின் கருத்தோடு முரண்படுகிறேன் எனும்போது இது செய்தி மட்டுமே, இதில் முரணுக்கோ, விமர்சனத்துக்கு இடமில்லை எனில் அதை அவர் தெரிவிக்கட்டும்... நீங்கள் "செய்தி மட்டும்" கொடுப்பதானால் தயவு செய்து உங்கள் பதிவில் மட்டும் கொடுங்கள்.

Tuesday, June 28, 2005 11:44:00 AM  
Blogger மயிலாடுதுறை சிவா said...

பின்னூட்டம் இட்ட அனைத்து நண்பர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
என் சிந்தனையை தூண்ட வைத்த அனைத்து வலைப்பூ நண்பர்களுக்கும் நான்
என்றும் கடமைப் பட்டவன்.
நன்றி
மயிலாடுதுறை சிவா...

Tuesday, June 28, 2005 12:02:00 PM  
Blogger மயிலாடுதுறை சிவா said...

முகமூடிக்கு
பாட்டிக்கு ஓர் கடிதம் எழுதியதில் உள்ள என் பாட்டி அல்ல, என என்னை கேட்ட வலைப் பூ நண்பர்களுக்கும் நான் மின் அஞ்சலில்
பதில் சொல்லிவிட்டேன். இந்த பாட்டியைப் பற்றி முன்னரே பேட்டி வந்துள்ளது அந்த புகைப் படத்தை நான் எடுத்து வைத்து இருந்தேன்,
உங்களை குழப்பியதிற்கு வருந்துகிறேன். உங்களுக்கு பதில் அனுப்புவதற்கு முன் இந்த விவாதம் ஆரம்பித்துவிட்டது. இனிமேல் இதுப் போல்
தவறு நடக்காமல் பார்த்துக் கொள்கிறேன்.

நடிகை சிநேகா மற்றும் நடிகர் விவேக் நான் சார்ந்து இருக்கும் வாசிங்டன் தமிழ் சங்கம் அழைத்து வரவில்லை என்பதை தங்களுக்கு கூறிக் கொள்கிறேன்.

நன்றி
மயிலாடுதுறை சிவா...

Tuesday, June 28, 2005 12:11:00 PM  
Blogger SHIVAS said...

//"என்று அணையும் இந்த சா(தீ)யம் !!!" ?//

இது இந்திய சட்டத்திற்கு எதிரான கேள்வி. இன்று இந்தியாவில் "சாதீ" சட்டப்பூர்வமாக அமுலில் உள்ளது.நீங்களும் உங்களுக்கு ஆதரவாக பின்னூட்டு இட்ட நண்பர்களில் எத்துனை பேரும் சாதி சான்றிதழ் கொடுக்காமல் படித்தீர்கள்? எவ்வளவு பேர் சாதி பார்க்காமல் திருமணம் செய்தீர்கள்?
இப்போது மட்டும் ஏன் திடீர் என்று சாதி வேண்டாம், அது எப்போது அணையும் என்று கோரிகிரீர்கள்?
நம்ம தான் வெளிநாட்டுக்கெல்லாம் வந்துவிட்டோமே இனி சாதியை பற்றி நமக்கென்ன கவலை,அதை அணைத்து விடலாம் என்று நினைக்கின்றீர்களா? அப்படி என்றால் மற்றவனல்லாம் எப்படி படிப்பது? இரெண்டாயிரம் வருடம் பின் தங்கியுள்ளதை எப்படி சமன் படுத்துவது ? நீங்கள் நாலு பேர் அமெரிக்கா போய்ட்டால் போதுமா?
ஜெயகாந்தன் சொல்வது போல் வர்ண பேதம் வேண்டும்.சட்டம் போட்டு அதை இப்போது வைத்திருப்பது போலவே இன்னும் ஆயிரம் ஆண்டுகளாவது வைத்திருக்க வேண்டும். சமூக ஏற்றத்தாழ்வு நீங்கி வர்ணம் தானாக வெளுக்கும் வரையில் "சாதீ" என்னும் வர்ண பேதம் வேண்டும்.
அது வரையிலும் அசோகமித்ர பினாத்தல்களையும் ராம்கிகளின் கிண்டல்களையும் "சாதீ"க்கு உரமாக்குவோம்.

-காஞ்சி பிலிம்ஸ்-

//Thangamani said...

புலம் பெயர்ந்த தமிழர்களின் கூட்டமெல்லாம் கோயில் கட்டி, தேர் இழுத்து, சுகி சிவத்தை கூட்டி கதை கேட்டால், விஜயையும், சிம்ரனையும் அழைத்து ஆடச்சொல்லி விசில் அடித்தால், சந்திரமுகி திரையில் வரும்போது சூடம் காண்பித்து தேங்காய் உடைத்தால், எஸ்.வி.சேகரையும், விசுவையும் கூப்பிட்டு கிச்சு கிச்சு மூட்டிக்கொண்டால், இருள் நீக்கி சுப்பிரமணியம், சச்சிதானந்தா, தயானந்த சரஸ்வதி, ரிலாக்ஸ் பிலிஸ் சுகபோதானந்தா மாதிரி டெம்ப்ரவரி பெயின் கில்லர்களை கூப்பிட்டு பாத பூஜை செய்தால் புரிந்துகொள்ள முடியும். ஏனென்றால் அதெல்லாம் மேல் சாதி/ வர்க்க விழுமியங்களாக கட்டியெழுப்பப்படுபவ்வை. இதெல்லாம் தமிழ்சங்கம், தமிழர் அமைப்பு அப்படீங்கற பேருல நடக்குற திருகுதாளங்கள்//

ஒரு ஃபுல் ப்ளேட் மதுரை முனியாண்டி விலாஸ் மட்டன் பிரியாணி சாப்பிட்ட திருப்தி வந்தது தங்கமணி அவர்களே, மிக்க நன்றி.

-காஞ்சி பிலிம்ஸ்-.

Tuesday, June 28, 2005 2:41:00 PM  
Blogger Mookku Sundar said...

என்னுடைய இடையீடு எதற்காக வந்தது என்று முன்னமேயே குறிப்பிட்டு இருக்கிறேன். ஆத்திர/அவசரக்காரர்களின் பார்வைக்காக மறுபடியும்....

//மேற்கூறப்பட்ட தொனியில் அமைந்த பின்னூட்டங்கள் எல்லாம் எழுதும் விஷயமல்லாமல், எழுதுபவரை ஆஃப் பண்ணிவிட செய்யப்பட்ட பிரயத்னங்களே எறு நினைத்துதான், "மற்றவர்களுக்கு" இது செய்தி என்று எழுதினேன். ராம்கியின் கேள்விக்கு, இதற்கு முந்தைய பதிவின் பின்ன்னூட்டத்தில் முதலில் ஆட்சேபம் எழுப்பியவன் என்ற அடிப்படையில், அவருடைய விளக்கத்துக்கு கிடைக்கும் "மொத்துகளுக்கும்" தோள் கொடுக்க வேண்டும் என்ற தார்மீக அடிப்படையில் அந்த "உரிமையை" எடுத்துக் கொண்டேன். பலன்களில் பங்கு கேட்பதுதான் வியாபாரம். மொத்துக்களில் பங்கு கேட்பது வியாபாரம் அல்ல. //

தடித்த வார்த்தைகள் போட்டு எழுதுவதற்காகத்தான் முகம் மறைத்ததாக இதுவரை நான் நினைக்கவில்லை. இப்போது படிக்கையில், என் எண்ணம் மெல்ல மாறுகிறது. என் பொறுமையை சோதிக்க வேண்டாம் என்று வேண்டுகிறேன்.

Tuesday, June 28, 2005 3:22:00 PM  
Blogger இளங்கோ-டிசே said...

சிவா, இப்போதுதான் இந்தப்பதிவை வாசித்தேன். நல்ல நிதானமான பதிவு. திருமாவளவன் கனடா வருவதாய்க் கூறியிருந்தீர்கள். மகிழ்ச்சியான விடயம். ஏற்கனவே கிருஸ்ணசாமியின் உரையை இங்கே மாணவர்கள் நடத்திய ஒரு விழாவில் கேட்டிருக்கின்றேன். திருமாவளவன், ஈழத்துக்கும் 'மானுடத்தின் கூடல்' இலக்கிய விழாவுக்கு போய் சிறப்பித்திருந்தார்.

Tuesday, June 28, 2005 3:50:00 PM  
Blogger -L-L-D-a-s-u said...

//பாட்டிக்கு ஓர் கடிதம் எழுதியதில் உள்ள என் பாட்டி அல்ல, என என்னை கேட்ட வலைப் பூ நண்பர்களுக்கும் நான் மின் அஞ்சலில் பதில் சொல்லிவிட்டேன்//

உங்கள் நேர்மையை பாராட்டுகிறேன் ..

Tuesday, June 28, 2005 4:35:00 PM  
Blogger குழலி / Kuzhali said...

//பின்னூட்டங்கள் எல்லாம் எழுதும் விஷயமல்லாமல், எழுதுபவரை ஆஃப் பண்ணிவிட செய்யப்பட்ட பிரயத்னங்களே எறு நினைத்துதான், //

உண்மை உண்மை, பல இடங்களில் பல பதிவுகளில் நடக்கின்றது.... இது ஒரு தந்திர உபாயமாகவே இருக்கின்றது.

Tuesday, June 28, 2005 6:25:00 PM  
Blogger மரத் தடி said...

தமிழ் இணைய உலகில் பார்ப்பனர் மற்றும் மேலாதிக்க வர்க்கம், பார்ப்பனீயம், சூத்திரர்கள், சூத்திரச்சிகள் என பலரும் எழுதி வருகிறார்கள்.

அவர்களில் குறிப்பிடத்தக்க வெறியர்கள் என்றால் டோண்டு, திருமலை, S.K, அருண், மாயவரத்தான், முகமூடி, நெய்வேலி விச்சு, சீமாச்சு, பாலா போன்றவர்கள்.

ரோசா வசந்த் அவர்கள் தாழ்த்தப்பட்ட மக்கள் சார்பாக எழுதுவார். ஆனால் எழுத்தில் இன்னும் நேர்த்தி தேவை.வார்த்தைகளை யோசிக்காமல் விட்டுவிடுகிறார்.

குழலி அருமையாக சிந்திக்கிறார். ஆனால் வன்னிய இனம் மட்டுமே பேசுகிறார். அதனைத்தாண்டியும் அவர் இன்னும் அதிகமாக எழுதலாம்.


சுந்தரமூர்த்தி, தங்கமணி, இராமகி அருமையாக நடுநிலைமையோடு எழுதுவார்கள். பெயரிலி, கறுப்பி, மயூரன் போன்றவர்கள் கருத்தில் எனக்கு ஏற்பு உண்டு (இந்த சாதி மத விடயத்தில்)

சுந்தர வடிவேல் கொஞ்சம் லேசா லேசா தொட்டுச் செல்வார்.

மூக்கன் அவர்களிடம் எப்போதாவது வார்த்தைகள் வெளிப்படும். ஆனால் அவரை வேறு ஏதாவது சொல்லி அடக்கி விடுவார்கள்.

கார்த்திக் ராமாஸ் அவர்களிடம் பேச விவாதிக்க நல்ல கருத்துகள் நிறைய உள்ளன. ஆனால் பார்ப்பனீய ஆதிக்க சக்திகளுக்கு பயப்படுகிறார்.

நல்லடியார், அபுமுஹை, சலாஹுதீன் போன்றவர்கள் இஸ்லாத்தை படுபயங்கரமாக ஆதரிக்கிறார்கள்.

நேசகுமாருக்கு இந்து ஒன்று மட்டுமே மதம். இஸ்லாம் உலகில் இருந்தே ஒழிக்கப் பட வேண்டும்.

ஜான் கிறிஸ்டோபருக்கு கிறிஸ்துவம் மட்டுமே மதம். மற்றெல்லாம் மதமே அல்ல. குமுதத்தினை contrl c and contrl v செய்யவே நேரம் போதவில்லை.(ஜான்பாஸ்கோ மென்மையானவர்)

திருந்துங்களேண்டா அம்பிகளா!

Wednesday, June 29, 2005 6:16:00 PM  
Blogger ஜோ/Joe said...

சிவா!உங்கள் பெரும்பான்மையான கருத்துக்களை மனப்பூர்வமாக ஆதரிக்கிறேன்.பின்னர் மேற்கொண்டு எழுதுகிறேன்.

Wednesday, June 29, 2005 7:34:00 PM  
Blogger dondu(#11168674346665545885) said...

It seems that you have just now disabled the anonymous comments after the last comment by Poli Dondu. Was it the last straw?

போலி டோண்டுவால் ஒரு நல்ல காரியம் நடக்கிறது. அதாவது ஒவ்வொரு வலைப்பதிவராக தத்தம் வலைப்பூவில் அனானிப் பின்னூட்ட வசதியை செயலிழக்கச் செய்து வருகிறார்கள். இப்பதிவரும் அவ்வாறே செய்வார் என நினைக்கிறேன். நல்லதுதானே, நடக்கட்டும். இப்பதிவில் போட்டொ எனேபிள் செய்யப்பட்டிருந்தால் என் போட்டோவுடனே பின்னூட்டம் வரும். ஒரு போதும் டோண்டு ராகவன் "வேறு" வழியாக உள்ளே வர மாட்டான் என்பது தெரிந்ததே (தினத் தந்தி?).

வழக்கம் போல இப்பின்னூட்டமும் என் தனிப்பதிவில் நகலிடப்படும். பார்க்க http://dondu.blogspot.com/2005/05/blog-post_25.html

அன்புடன்,
டோண்fடு ராகவன்

Wednesday, June 29, 2005 8:03:00 PM  
Blogger Mookku Sundar said...

//உண்மைதான் மூக்குசுந்தர் அவர்களே. எனது எண்ணம், எழுத்து, சிந்தனை என எல்லாமே பிராமனீயம் ஒன்று மட்டுமே. அதில் நான் ஊறிப் போய்விட்டேன். அதனைத்தாண்டி என்னால் வர இயலாது. நான் வர நினைத்தாலும் எனது மற்ற நண்பர்களும் எங்கள் பார்ப்பன சங்கமும் அனுமதி வழங்காது.

என்னைப்பற்றி நன்றாகத் தெரிந்து வைத்து இருக்கிறீர்களே. நன்றி //

டோண்டு சார், இதற்கெல்லாம் எதற்கு நன்றி சொல்கிறீர்கள். ஏற்கனவே வெளிப்படையாக அறிவித்து இருக்கிறீர்களே.. அது ஒன்று போதாதா..?? :-)

Wednesday, June 29, 2005 11:22:00 PM  
Blogger enRenRum-anbudan.BALA said...

அன்பில் மரத் தடி,

//அவர்களில் குறிப்பிடத்தக்க வெறியர்கள் என்றால் டோ ண்டு, திருமலை, S.K, அருண், மாயவரத்தான், முகமூடி, நெய்வேலி விச்சு, சீமாச்சு, பாலா போன்றவர்கள்.
//

ஒரு "குறிப்பிடத்தக்க" பட்டியலிட்டு, அதில் என்னையும் சேர்த்துள்ளீர்கள். என் சாதியை தூக்கிப் பிடித்தோ, பிற சாதியினரை இழிவு செய்யும் வகையிலோ, சாதி வெறி வெளிப்படும் தொனியிலோ, நான் இதுவரை எழுதியதில்லை. என் எழுத்துக்களில்
அத்தகைய தொனி இருப்பதாக நீங்கள் எண்ணினால், அதை சுட்டிக் காட்டவும். திருத்திக் கொள்கிறேன். இன்னும் கவனமாக எழுதுகிறேன்.

அதை விடுத்து, இப்படி போகிற போக்கில், அனாமதேயமாக வந்து, தரமற்று கமெண்ட் அடிப்பது சரியா என்று சிந்தித்துப் பார்க்கவும். ஒரு பேச்சுக்கு கேட்கிறேன், ஒருவர் பார்ப்பனரை ஆதரித்துப் பேசினால், உங்கள் அளவில் அவர் "பார்ப்பன
வெறியர்". சாதி (பிற!) சார்ந்து இன்னொருவர் எழுதினால், அவர் அச்சாதி குறித்த "சிந்தனையாளர்" அல்லது "பேச்சாளர்" !!!!
உங்கள் (அ)நியாயம் மிக நன்றாக உள்ளது !!!!!

உங்கள் பதிலை எதிர்பார்த்து

என்றென்றும் அன்புடன்
பாலா

Wednesday, June 29, 2005 11:46:00 PM  
Blogger குழலி / Kuzhali said...

//குழலி அருமையாக சிந்திக்கிறார். ஆனால் வன்னிய இனம் மட்டுமே பேசுகிறார். அதனைத்தாண்டியும் அவர் இன்னும் அதிகமாக எழுதலாம்.//

மரத்தடி அவர்களே, உங்கள் பாராட்டுக்கு நன்றி (அதற்கு உரித்தானவனா என்பது தெரியவில்லை)... அதே சமயம் பா.ம.க.வைப்பற்றியும் மருத்துவர் இராமதாசுவின் மீதான சொல்லடிகள் பற்றியும் நான்கு பதிவுகள் எழுதினேன், மற்றைய அத்தனை பதிவுகளும் சாதி சார்ந்து எழுதப்பட்டதல்ல, ஏன் இராமதாசுவின் மீதான சொல்லடிகள் பதிவுகள் கூட சாதி சார்ந்து எழுதப்பட்டதில்லை, எந்த இடத்திலும் வன்னிய சாதியை தூக்கிப்பிடித்ததில்லை, இங்கே இத்தனை பேசும் நான், வழமையாக பெரும்பாலானோர் குடும்ப திருமண அழைப்பிதழ்களில் சாதிப்பெயர் இடம்பெறும் ஆனால் எங்கள் குடும்ப திருமண பத்திரிக்கைகளில் கூட சாதிப்பெயர் போடுவதில்லை... உங்களுடைய கருத்துகளுக்கு நன்றி, நன்றாக எழுத முயற்சிக்கின்றேன்.

//வன்னிய இனம் மட்டுமே பேசுகிறார்//
சில சமயம் வேறு விடயம் பேச முயற்சிக்கும்போது ஏற்கனவே என் சாதி தெரிந்துவிட்டதால் குத்து விழும் என்பதால் சில சமயங்களில் அடக்கி வாசிக்கின்றேன், வேறொன்றும் காரணமில்லை.

Thursday, June 30, 2005 12:14:00 AM  
Blogger ஜோ/Joe said...

This comment has been removed by a blog administrator.

Thursday, June 30, 2005 12:15:00 AM  
Blogger dondu(#11168674346665545885) said...

"டோண்டு சார், இதற்கெல்லாம் எதற்கு நன்றி சொல்கிறீர்கள். ஏற்கனவே வெளிப்படையாக அறிவித்து இருக்கிறீர்களே.. அது ஒன்று போதாதா..?? :-)"

மறுபடியும் தவறு செய்து விட்டீர்களே மூக்கு சுந்தர் அவர்களே. எலிக்குட்டியை வைத்து பார்த்து விட்டு எழுதியது நான்தானா என்று ஏன் பார்க்க மாட்டேன் என்கிறீர்கள். என்னைப் பற்றி இவ்வளவு தவறான அபிப்பிராயம் ஏன் மூக்கு சுந்தர் அவர்களே? டோண்டு அவ்வாறு பேசக் கூடியவர் என்று வேறு சப்பை கட்டு கட்டுவீர்கள். நான் கூறுவேன் நீங்கள் அவசரக்காரர் என்று. அருணிடம் கோபித்து கொண்டு பிரயோசனம் இல்லை. முதலில் உங்கள் அளவில் சரியாக பார்த்து எழுதவும் என்று நான் கேட்டு கொள்கிறேன்.

வழக்கம் போல இப்பின்னூட்டமும் என் தனிப்பதிவில் வரும். http://dondu.blogspot.com/2005/05/blog-post_25.html

அன்புடன்,
டோண்டு ராகவன்

Thursday, June 30, 2005 12:27:00 AM  
Blogger enRenRum-anbudan.BALA said...

Dear Sundar,

//மறுபடியும் தவறு செய்து விட்டீர்களே மூக்கு சுந்தர் அவர்களே. எலிக்குட்டியை வைத்து பார்த்து விட்டு எழுதியது நான்தானா என்று ஏன் பார்க்க மாட்டேன் என்கிறீர்கள்.
//
This is TOO MUCH !!! Sorry, THREE MUCH ;-)

FYI, I too failed to observe that the comment was from Duplicate Dondu :-)

I will take more care to check the Blogger ID, from now on !

Thursday, June 30, 2005 1:03:00 AM  

Post a Comment

<< Home

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது