பாட்டிக்கு ஓர் கடிதம்...
அன்புள்ள பாட்டிக்கு
நலம், நலமா? அமெரிக்க மண்ணில் இருந்து உன் பேரன் எழுதும் அன்பு மடல்.
நடுங்கும் வயதில் தடுமாற்றோத்தோடு நீ எழுதிய கடிதம் கிடைத்தது. இந்த 76 வயதிலும் நீ எனக்கு கடிதம் எழுதியதை நான் பெருமையாக நினைக்கிறேன். எத்தனைப் பேருக்கு கிடைக்கும் எந்த வாய்ப்பு?
உனக்கு ஒரு பக்க கண் பார்வை சுத்தமாக தெரியவில்லை என்று நீ எழுதியதைப் பார்த்து என் மனம் பட்ட வேதனைக்கு அளவேயில்லை.
உன்னுடைய ஓய்வு ஊதியத்தில் மாதம் மாதம் நீ கொடுத்த அந்த 10 ரூபாய் அந்த 15 வயதில் எவ்வளவுப் பெரியப் பணம் தெரியுமா?
என்னுடைய சிறிய வயதில் என்னை கடைத் தெருக்கு அழைத்துச் சென்று எனக்கு ஐஸ்கீரிமும், என் காலுக்கு செருப்பும் வாங்கி கொடுத்ததை எப்படி நான் மறவேன்?
சில நாட்கள் என் அம்மா எனக்கு பிடிக்காத உணவு செய்தப் பொழுது, எனக்கு மிகவும் பிடித்த உணவுகளையும், வார விடுமுறையில் நீ செய்த ரவா கேசரியும், பஜ்ஜியும் என் நாவில் இன்னுமும் இனிக்கிறதே...
சென்ற முறை தமிழகம் வந்தப் பொழுது, உன்னிடம் நான் உனக்கு என்ன வேண்டும் பாட்டி என்று ஆவலாக நான் கேட்க, நீ வந்து என்னைப் பார்த்ததே போதும் என்று சொன்னது இன்னமும் என் காதில் ஒலித்துக் கொண்டே இருக்கிறதே...
5 வாரங்கள் ஓட்டமாய் ஒடிவிட என் விமானத்திற்கு முதல் நாள் நான் உன்னிடம் ஆசிப் பெற ஒடிவந்தப் பொழுது நீ தேம்பி அழததை நான் எப்படி வார்த்தையால் சொல்லுவேன்? அதுமட்டும் அல்ல, அடுத்தமுறை நான் வரும் வரை நான் உயிருடன் இருக்கமாட்டேன் என நீ சொல்ல, என் தாய் மாமன் (உன் பிள்ளை) உன்னை அதட்ட, என் நெஞ்சு வெடித்துவிடும் போல் ஆயிற்றே எப்படி சொல்லுவேன் அந்த ரணத்தை?
76 வயதில் நீ ஆரோக்கியமாக இருப்பது எனக்கு மகிழ்ச்சியே. என் மனதை கல்லாக்கி கொண்டு இதனை எழுதுகிறேன். உன்னுடைய இறுதி காலத்தில் குறைந்தது 15 தினங்கள் நான் உனக்கு பணிவிடைச்செய்ய வேண்டும். அப்பொழுது "நீ இறந்தால் உனக்கு நான் நால்வரில் ஒருவராக தோள் போட" எனக்கு ஒர் வாய்ப்பு கிடைக்காதா? என்று ஏங்குகிறேன் நான்...
உன் அன்பு பேரன்....
சிவா...
10 Comments:
நெகிழ்ச்சியான பதிவு. உங்கள் பாட்டி மரத்தடியில் பார்க்க Smart ஆக இருக்கிறார்கள். உங்கள் பாட்டியின் சாப்பாட்டை கட்டாயம் மீண்டும் அனுபவிப்பீர்கள். கவலைப்படாதீர்கள். அதுசரி, இந்த மடலை அவருக்கு அனுப்புனீர்களோ?
ஊர் போன போது என் கையைப் பிடித்துக் கொண்டு எனது அப்பாச்சி கண் கலங்கியது மீண்டும் ஞாபகத்தில் வந்து என் கண்கள் கலங்குகின்றன.
தற்போது சிலமாதங்களின் முன் இறந்து விட்டா.
நெகிழ்ச்சியாக இருந்தது சிவா. கண்களில் நீரை வரவழைத்துவிட்டது. எனக்கும் ஒரு ஆத்தா இருந்தார்கள். இருந்தார்கள் - சுமார் ஒன்றரை வருடம் முன்பு வரை.
உருக்கமான பதிவு.
நன்றி சங்கரபாண்டி.
எல்லாப்பாட்டிகளும் தமது மகள்களைவிட நன்றாய்ச் சமைப்பார்கள் போலுள்ளது. மனசை உருக்கும் பதிவு.
நானும் பாட்டிக்கு ஒரு கடிதம்எழுதினேன். படித்துப் பாருங்கள்.
சிவா, மனதை பெரிதாய் பாராமாக்கும் சின்ன பதிவு. எடுத்துக் கொண்ட கருப்பொருளை சொல்லவேண்டுமானால் சிம்ப்ளி சூப்பர். ஆனால் அதில் கொட்டியிருக்கும் உணர்வு.... அதற்கு ஈடு இணையில்லை.
மிக அருமையான பதிவு. என் கண்ணில் நீரை வரவைத்தது.
நன்றி.
முரளி, கேன்ஸஸ்.
Siva, Your Patti's photo has come in this week's vikatan in the anu akka aunty's section. Is this the same as your Patti. Her name is said as Krishnammal and she is the head of Sarvodya Sangh and has been recommended for nobel prize. Amazing !!!
Look at today's vikatan.
Later,
Seemachu
cio2003@yahoo.com
படத்தில் இருக்கும் பாட்டி கிருஷ்ணம்மாள்... international Right Livelihood Award also known as the “alternative Nobel Prizeக்காக பரிந்துரைக்கப்பட்டிருக்கிறார்கள்... மேல் விபரங்கள் http://shantinik.blogspot.com/2005_04_01_shantinik_archive.html
சிவா, இவர்கள் உங்கள் பாட்டி என்றால் நீங்கள் மிகவும் பெருமைப்பட வேண்டும்... எங்கள் வாழ்த்துக்களை தெரியப்படுத்துங்கள்... இல்லை என்றால் காலம் தாழ்த்தாது எங்களுக்கு (Aruna வுக்கு மட்டுமாவது) தெரியப்படுத்துங்கள்
நீங்கள் உபயோகப்படுத்திய புகைப்படத்தில் இருக்கும் பாட்டி - தலித்துகளுக்கும் உழைக்கும் ஏழை மக்களுக்கும் நிலம் பெற்றுத்தந்த அரிய சேவைகளுக்காக international Right Livelihood Award என்று அழைக்கப்படும் மாற்று நோபல் பரிசுக்காக தமிழ்நாட்டில் இருந்து பரிந்துரை செய்யப்பட்டிருக்கிறார் - உங்கள் பாட்டி என்ற நினைப்பில் அருணா , சீமாச்சு போன்றவர்கள் பேசியும் வாழ்த்தியும் இருக்க, அது தங்கள் பாட்டி அல்ல ஒரு மறுப்பு கொடுக்க மனசில்லயே உங்களுக்கு...
Post a Comment
<< Home