மத்திய அமைச்சர் ஈவிகேஸ் இளங்கோவன் - ஓர் சந்திப்பு.
வாசிங்டன். சென்ற வாரம் அரசு விருந்தினராக மத்திய அமைச்சர் இளங்கோவன் வந்து இருந்தார். தமிழகத்தில் இருந்து பிரபலங்கள் அமெரிக்காவிற்கு குறிப்பாக வாசிங்டன் வந்தால் அவர்களை தமிழ்ச் சங்கம் சார்பாக வரவேற்று அவர்களோடு பேசி, கலந்து உரையாடுவது வழக்கம். கூடுமானவரை ஒத்த கருத்து உடைய நபர்கள் வந்தால் இன்னும் மகிழ்வோடு சென்று உரிமையாக பேசுவது வழக்கம். காங்கிரஸ் தலைவர்களில் இவர் தனிப்பட்ட சிறப்பான தலைவர் என்பதால் ஆர்வம் மேலும் இருந்தது.
இந்த சந்திப்பிற்கு வாசிங்டன் பிரபல தமிழ் சிபிஏ திரு பாலகன் ஆறுமுகசாமி ஏற்பாடு செய்து இருந்தார். தமிழ்ச் சங்கம் சார்பாக வரவேற்பும் மற்றும் சாப்பாடு ஏற்பாடு செய்து இருந்தோம். கிட்டதட்ட 50 பேர் வந்து இருந்தார்கள். வழக்கம் போல் அவரை நான் வரவேற்று ஆங்கிலம் கலக்காமல் தமிழில் வரவேற்றேன். இங்கு கவனிக்கபட வேண்டிய விசயம் உள்ளது. கடைசியாக வருகிறேன் அதற்கு.
மத்திய அமைச்சர் தனது மனைவியோடு வந்து இருந்தார். துளிகூட பந்தா இல்லை.மிக அன்பாகவும், பண்பாகவும் பழகினார். பொருளாதார ரீதியாக இந்திய நன்கு முன்னேறிக் கொண்டு வருவதாக சொன்னார்.தமிழக மத்திய அமைச்சர்கள் பலரும் நன்கு உழைப்பதாக சொன்னார். வரும் ஆண்டில் தமிழகத்தில் நல்ல மாற்றம் ஏற்படும் என்றுசொன்னார். நாங்கு நெரி திட்டத்திற்கு தமிழக அரசு நன்கு உதவவில்லை என்று ஆதங்கப் பட்டு கொண்டார். மொத்ததில் அவருடன் மாலை பொழுது நன்கு சென்றது.
ஆனால் அவரிடம் சுத்தமாக தமிழ் ஆர்வம் இல்லை என்பது என் தனிபட்ட கருத்து, தமிழ் ஆர்வலர்களும் அப்படியே நினைத்தனர். அதற்கு காரணம், நான் வரவேற்று பேசிய பொழுது ஆங்கிலம் கலக்காமல் தமிழில் பேசியதை அவர் அன்பாக சுட்டி காட்டினார். அதாவதுதமிழ் ஆர்வம் தேவை, தமிழ் வெறி கூடாது என்றார். மறைமுகமாக அய்யா இரமதாஸ் மற்றும் அண்ணன் திருமாவின் தமிழ் பாதுகாப்பு இயக்கத்தை கிண்டல் அடித்தார். அமைச்சர் யார் பெயரையும் சொல்லவில்லை. அதுமட்டும் அல்ல அவருடைய பேச்சில் திரும்ப திரும்ப இந்தியா முன்னேறவேண்டும் அதற்கு ஆங்கிலம் முக்கியம் என்றார். எனக்கு தனிப்பட்ட முறையில் ஆச்சிரியமாக இருந்தது. காரணம் பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரின் பேரன், திராவிட ஐம்பெரும் தலைவர்களில் ஒருவரான ஈவிகேஸ் அவர்களின் புதல்வன் மருந்துக்கு கூடதமிழ் தமிழ் என்று பேசவில்லை. இந்தியா முன்னேறவேண்டும் அதில் தமிழன் பங்கு உயரவேண்டும் என்று எங்களை உணர்சிவச படுத்தவில்லை, ஏன் என்று சுத்தமாக விளங்கவில்லை. காங்கிரஸ் தலைவர்கள் எல்லோரும் இப்படிதான் இருப்பார்களா? காங்கிரஸ் தலைவர்களில் இவருடைய தைரியத்தை பார்த்து பிரமித்துப் போய் இருக்கிறேன். திராவிட தலைவர்கள் போல அரசியல் பண்ணுவதை பார்த்து அவரிடம் தனிப்பட்ட சிறப்பு உள்ளதாக எண்ணி எண்ணி ஆச்சரிய பட்டு இருக்கிறேன். ஆனால் இப்படி தமிழ் ஆர்வம் இல்லமால் இருப்பதை பார்த்தவுடன் மனம் மிக வருத்தப் பட்டது. அதே சமயம் எங்கள் தமிழ்ச் சங்க தலைவர் முனைவர் பிரபாகரன் அவரிடம் எங்களுக்கு தமிழ் மிக முக்கியம் என்றார், அதனை புன்சிரிப்போடு அமைச்சர் ஏற்றுக் கொண்டார்.
தமிழ் ஆர்வம் இல்லாத மிக அன்பாக, பண்பாக, பழகும் ஓர் இனிய மனிதர் மத்திய அமைச்சர் ஈவிகேஸ் இளங்கோவன் அவர்கள் என்பது என் தாழ்மையான கருத்து.
நன்றி...
மயிலாடுதுறை சிவா...
6 Comments:
அன்பு ஹரி
என் பதிவிற்கு வந்தமைக்கு நன்றி. தமிழ் வெறி என்று சொல்லவில்லை.
தூய்மையான் தமிழ் உணர்வு முக்கியம் என்று நான் நினைக்கிறேன்.
தமிழ் பாதுகாப்பின் போராட்டம் மிக மிக முக்கியம் என்றே நான் கருதுகிறேன்.
நன்றி
மயிலாடுதுறை சிவா...
சிவா,
தமிழ்நாட்டிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்ற வகையில் தமிழ்நாட்டின் நலனில் அக்கறை இருக்கவேண்டும் என்பது நியாயமான எதிர்பார்ப்பு. 'தமிழர் நலனில் அக்கறை இருக்கவேண்டும், தமிழ் மொழிப் பற்று இருக்கவேண்டும்' என்பதெல்லாம் கட்டாயமில்லை. அவர் அவராக இருக்கட்டுமே. அதில் என்ன தவறு இருக்கிறது?
மன்னிக்கவும். சாலமன் பாபையா அவர்களைப் பற்றியப் பதிவில் இட வேண்டியப் பின்னூட்டமிது. அங்கு இட இயலவில்லை. ஆகவே இங்கு இடுகிறேன்.
"அரை மணி நேரம் நீங்கள் அவருடன் நிகழ்த்திய விவாதத்தில் அவர் தன் கருத்துக்கு ஆதரவாக என்ன கூறினார் என்று கூற முடியுமா?
மற்றப்படி அவர் ஒரு யதார்த்தவாதி. நீங்களே ஒரு பிம்பம் வைத்துக் கொண்டதற்கு அவர் எவ்வாறு பொறுப்பாவார்? பட்டி மன்றத்தில் நடுவராயிருக்கும்போது அவர் சில கட்டுப்பாட்டிற்கு உட்பட்டவர். அங்கு பேசுவதும் வெளியில் சுதந்திரமாகப் பேசுவதும் வெவேறுதான்.
தமிழையும் பாருங்கள், வந்த இடத்தில் உங்கள் வேலையையும் பாருங்கள். ஏதாவது ஒன்றுக்குத்தான் நேரமிருப்பின், தமிழைப் பிறகு பாருங்கள். சுவரிருந்தால்தான் சித்திரம் எழுத முடியும், என்று பொருள்பட அவர் கூறியது மிகவும் சரி.
ஒப்பனையுடன் கூடிய நடிகையை காதலுடன் பார்ப்பவர்கள் அவளை ஒப்பனையின்றிப் பார்க்க நேர்ந்தால் அவ்வளவுதான். துண்டைக் காணோம், துணியைக் காணோம் என்றுதான் ஓட வேண்டும்."
அன்புடன்,
டோண்டு ராகவன்
பதிவிற்கு நீண்ட தலைப்பு வைக்காதீர்கள். அதனால் காணாமல் போகிறது.
//தூரத்தில் இருந்து பார்க்கும் நாம் ரசிக்கும் பலவித மனிதர்களை அருகில் பேசி பழுகும் போழுது அவர்களுடைய மற்றோரு முகம் தெரியும் பொழுது மனம் உடன் ஏற்றுக் கொள்ள மறுக்கிறது? என் பார்வையில் தவறா? அல்லது அவர்கள் (ப(சி)லர்) அப்படித்தானா?//
அதை வெளிப்படையாய் நேர்மையாய் பகிர்வதற்கு பாராட்டுக்கள்.
//இளங்கோவனுக்கு ராமதாஸ் கடும் கண்டனம்
கும்பகோணம் ஜூன் 16:& தமிழ் பகைவர்களுக்கு ஆதரவாக இளங்கோவன் பேசியிருப்பதை பொறுத்துக் கொள்ள முடியாது என்று பா.ம.க. நிறுவனத் தலைவர் ராமதாஸ் காங்கிரஸ் தலைவர் இளங்கோவனுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
இங்கு நிருபர்களிடம் பேசிய ராமதாஸ் ÔÔகாங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மத்திய இணை அமைச்சர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் சென்னையில் நடந்த ஒரு ஏற்றுமதி கருத்தரங்கில் ஆங்கிலத்தின் அவசியம் குறித்து பேசியிருக்கிறார். ஆங்கிலத்தின் அவசியம் குறித்து இளங்கோவன் போன்றோரின் போதனையை ஏற்றுக் கொள்ளும் நிலையில் நாங்கள் இல்லை. அதன் அவசியத்தை நாங்கள் உணராதவர்கள் அல்ல.
2005 ஆம் ஆண்டில் நாங்கள் தமிழ் வாழ்க என்று சொல்வதோ அல்லது எங்கும் தமிழ் என்று முழங்குவதோ ஆங்கிலம் ஒழிக என்று சொல்வதற்காக அல்ல. ஆங்கிலத்தை ஒரு மொழி என்ற அளவில் நன்றாகப் பயின்று புலமை பெற வேண்டும். என்பதில் எங்களுக்கு மாற்றுக் கருத்து இல்லை. இளங்கோவன் சில நேரங்களில் பரபரப்புக்காகவும், பத்திரிக்கைகளில் பெயர் வருவதற்காகவும் பக்குவம் இல்லாமல் பேசுவார்.
டெல்லியில் இருக்கின்ற உத்யோக் பவன், க்ருஷிபவன், சஞ்சார்பவன், நிர்மான்பவன் ஆகியவை எல்லாம் ஆங்கிலத்தில் இருக்கவேண்டும் என்று இவர் குரல் எழுப்பினால் அடுத்த விமானத்திலேயே தமிழகத்துக்கு இவரை நிரந்தரமாக அனுப்பி விடுவார்கள்.
காங்கிரசில் அக்ராசனார் என்று இருந்தது காமராஜர் காலத்தில்தான் கமிட்டித் தலைவர் என்று மாற்றப்பட்டது. பஸ் என்பதை பேருந்து என்று மாற்றியதால் பேருந்துகள் தண்ணீரில் போகுமா அல்லது டயர் இல்லாமல் போகுமா என்று அப்போது யாரும் கேட்கவில்லை.
தமிழ்நாட்டில்தான் தமிழ் ஒழிக என்று சொல்லி அரசியலும், பத்திரிக்கையும் நடத்தமுடியும். தமிழ்ப் பகைவர்களுக்கு ஆதரவாக அவர்களின் மனம் குளிரும்படி இளங்கோவன் பேசியிருப்பதை பொறுத்துக் கொள்ள முடியாதுÔÔ என்று காட்டமாகக் கூறினார். //
:-) :-)
முந்தைய பின்னூட்டத்தை மட்டும் நான் போட்டிருந்தேனென்றால் கும்பலாக வந்து குதித்திருப்பர் இந்நேரத்திற்கு
Post a Comment
<< Home