Sunday, April 17, 2005

மதுரை மீனாட்சி ஆலயம்...உலக அதிசியமா?...

மதுரை மீனாட்சி ஆலயம் உலக அதியங்களில் ஓன்றாகிவிட்டது என என் சகோதரர் தமிழகத்தில் இருந்து கூப்பிட்டு செல்பேசியில் செய்தி வந்ததாக சொன்னார்.

இணைய நண்பர்களே சற்று இதனை உறுதி படுத்துங்கள். அப்படி உண்மை என்றால் மனம் அடையும் மகிழ்ச்சிக்கு அளவேயில்லை.மதுரை கோபுரமும், அதன் உள்ளே உள்ள ஓவியங்களும்,பொற் தாமரை குளமும், சுற்றி படிக்கட்டுகளும், நான்கு புற மாசி வீதிகளும் என்ன அருமை!!!

அப்படி அது உண்மையான செய்தி என்றால் அது தமிழனுக்கு கிடைத்த பெருமை அல்லாவா?

நன்றி வணக்கம்.
மயிலாடுதுறை சிவா...

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

7 Comments:

Blogger jeevagv said...

சிவா,
2007 ஜனவரியில் தான் முடிவுகள் தெரியவரும்.
இந்த தளத்தில் பார்க்கவும்.

http://cms.n7w.com/index.php?id=2

இதற்கிடையில், வோட்டுப்போட்டவர்களை குலுக்கல் முறையில் தேர்ந்தெடுத்தில் மோஹித் ஒரு இந்தியருக்கு பரிசு கிடைத்திருக்கிறது!

Sunday, April 17, 2005 12:14:00 PM  
Blogger jeevagv said...

மேலும் இன்றைய நிலவரப்படி,
சீனச்சுவர்தான் முதலிடத்தில் இருக்கிறது.
மூன்றாம் இடத்தில் தாஜ் மஹால்,
பதினான்காம் இடத்தில் அங்கோர்வாட் கோவில், 25ஆம் இடத்தில் மதுரை மீனாக்ஷி அம்மன் கோவில். 27 ஆம் இடத்தில் அமிர்தசரஸ் பொற்கோயில். 29ஆம் இடத்தில் தஞ்சைப்பெரிய கோவில், 30ஆம் இடத்தில் திருவண்ணாமலை கோவில். 36ஆம் இடத்தில் மாஹாபலிபுரம் குடைவரைக்கோயில்கள்.

Sunday, April 17, 2005 12:24:00 PM  
Blogger kirukan said...

There is nothing to cheer about this.. As there is no body recognizing Wonders of the World..
For more info please read this...

http://kirukalkal.blogspot.com/2004/12/7.html#comments

Sunday, April 17, 2005 3:05:00 PM  
Blogger அதிரைக்காரன் said...

This comment has been removed by a blog administrator.

Sunday, April 17, 2005 10:36:00 PM  
Blogger அதிரைக்காரன் said...

உலக அதிசயத்தை முடிவு செய்யும் பொறுப்பை ஒரு இணைய நிறுவனத்திடம் கொடுத்து, அதற்கு ஓட்டுப் போடுவதன் மூலம் அத்தளத்திற்கு அதிக Bandwidth கொடுத்து, பின்னால் அவர்கள் வெளியிடும் அனைத்து முடிவுகளையும் கண்ணை மூடிக் கொண்டு ஏற்றக் கொள்ளும் நிலை ஏற்படும். மேலும் அந்நிறுவனம் குலுக்கல் முறையில் இந்தியருக்கு பரிசு அறிவித்து இருப்பது அத்தகைய வணிக யுக்திகளில் ஒன்று. ஆகவே, தமிழ் கூறும் நல்லுலக இணைய பயணாளர்கள் விழிப்பாக இருக்க வேண்டுகிறேன்.

Sunday, April 17, 2005 10:37:00 PM  
Blogger SHIVAS said...

மீனாட்சி கோவில் உலக அதிசயமானதாக வதந்தி!
ஏப்ரல் 18, 2005

மதுரை:

உலக அதியசங்களுள் ஒன்றாக மதுரை மீனாட்சி அம்மன் கோவில் தேர்வு செய்யப்பட்டு விட்டதாக செல்போன்கள் மூலம் மதுரையில் வதந்தி பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது.


புதிய 7 உலக அதிசயங்களை தேர்வு செய்வதற்கான கருத்துக் கணிப்பு இணைய தளம் மூலம் நடத்தப்பட்டு வருகிறது. இந்தப் பட்டியலில் இந்தியாவிலுள்ள தாஜ்மஹால், மதுரை மீனாட்சி அம்மன் கோவில் உள்ளிட்ட பல்வேறு கட்டடங்கள், கோவில்கள், வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த தலங்கள் இடம் பெற்றுள்ளன.

இந்த நிலையில் மதுரையில் செல்போன் வைத்திருந்தவர்களுக்கு நேற்று எஸ்.எம்.எஸ். மூலம் ஒரு செய்தி வந்தது. அதில், மீனாட்சி அம்மன் கோவில் உலக அதிசயமாக தேர்வு செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனால், மதுரையில் புதிய பரபரப்பு ஏற்பட்டது. ஆனால், இந்த எஸ்.எம்.எஸ். தகவல் வதந்தி எனப் பின்னர் தெரியவந்ததால் பரபரப்பு அடங்கியது.

http://thatstamil.indiainfo.com/news/2005/04/18/madurai.html

Monday, April 18, 2005 12:06:00 AM  
Blogger SHIVAS said...

This comment has been removed by a blog administrator.

Monday, April 18, 2005 12:07:00 AM  

Post a Comment

<< Home

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது