ஊர் பாசம்...
ஊர் பாசம்
அமெரிக்கா.வாசிங்டன். இங்கு நான் வேலைப் பார்க்கும் அலுவலகத்தில் என்னுடைய குழுவில் ஓர் புதிய நண்பர் ஒருவர் சேர்ந்து இருந்து இருக்கிறார். கறுப்பர் இனத்தை சார்ந்தவர். வயது சுமார் 45 இருக்கலாம். அவர் இந்த வேலையில் சேர்ந்து கிட்டதட்ட 5 வாரங்கள் ஆயிற்று. எல்லாவிதமான உதவிகளையும் கணணித் துறையில் நன்கு உதவுகிறார். அவருடைய நல்ல குண நலன்களைப் பற்றி நான் எங்களுடைய மேலாளருக்கு மின் அஞ்சலில் தெரியப் படுத்தினேன். போன வாரம் வெள்ளி மாலை சுமார் 4 மணிக்கு அவரோடுப் பேசிக் கொண்டு இருந்தேன். அப்பொழுது அவர் தன்னுடைய கையில் ஒரு புத்தகம் வைத்து இருந்தார், நான் அவரிடம் பைபிள் படிக்கும் பழக்கம் உண்டா, மகிழ்ச்சி என்றுத் தெரியப் படுத்தினேன். அவர் என்னிடம் இல்லை இது என் வரலாறு புத்தகம் என்றார். அவர் தன்னுடைய ஓய்வு நேரத்தில் பட்ட மேற்படிப்பு படிப்பதாகவும், வரலாற்றை சிறப்புப் பாடமாக் எடுத்துப் படிப்பதாகவும் சொன்னார். நான் அவரிடம் ஏன் நீங்கள் வரலாற்று பாடத்தை படிப்பதாக கேட்டேன். அதற்கு அவர் சொன்ன பதில் என் மனதை தொட்ட விசயம். அதாவது நான் கணனித் துறையில் வேலைப் பார்ப்பது காலத்தின் கட்டாயம், என் வயது 45, என்னுடைய 50 ஆவது வயதில் நான் என் சொந்த நாடான கானா சென்று மீண்டும் அங்கு குடிபுகத் திட்டம், அதுமட்டும் அல்ல, நான் மீண்டும் என் தாய் நாடு சென்று எனக்கு மிகவும் பிடித்த கற்பிக்கும் தொழில் ஆன ஆசிரியர் ஆக விருப்பம் என்றார். ஆகையால் தான் தான் தற்பொழுது எனக்குப் பிடித்த வரலாற்றுத் துறையில் முதுகலைப் படிப்பதாகவும், இன்னும் 3 ஆண்டுகளில் முடித்துவிட்டு கானா செல்லும் நாளை ஆவலுடன் எதிர்ப் பார்க்கிறேன் என்றார். இதை கேட்ட என் மனம் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. அவருடைய வாழும் வாழ்க்கையில் ஓர் அர்த்தம் இருப்பதாகவே என் மனம் நினைக்கிறது. என சக நண்பர்கள் நிறையப் படித்த நண்பர்கள் பலர், பொருளாதாரத்திலும் சிறந்து விளங்கும் பலர், மீண்டும் நம் தாய் நாட்டிற்கு சென்று விடுவதைப் பற்றி பேச ஆரம்பித்தால், சென்னையில் ஒரு கோடி வைத்து ஒன்னும் பண்ணமுடியாது! என்றும் மீண்டும் நம் ஊருக்கு போய் உருப்படியாய் எதுவும் பண்ண முடியாது!!! என்று கேட்கும் போழுது மனம் அடையும் வருத்ததற்கு அளவேயில்லை!!!
அதே வெள்ளி மாலை நல்ல கடுமையான குளிர் மற்றும் பனி, அலுவலகத்தில் இருந்து மாலை வீடு திருப்பும் வழியில் வாழ்க்கை துணைவி, ஏதாவது போகும் வழியில் சாப்பிட வாங்கி போய் விடலாம் என்றார். நான் வேண்டாம் வீட்டில் போய் தோசை சாப்பிட்டுக் கொள்ளலாம் என்று சொன்னால், முகத்தை தூக்கி "உம்" என்று வைத்துக் கொண்டு, அடுத்த இரண்டு நாள் சனி மற்றும் ஞாயிறு சாப்பாடு ஏனே என்று கடமைக்கு கிடைக்கும் அதற்கு பயந்து வருத்தப் பட்டு, சரி என்ன வாங்கி போகலாம் என்ற போழுது போகும் வழியில் ஓர் நல்ல சிக்கன் காபாப் கடை உள்ளது அங்கே வாங்கி கொள்லாம் என்று முடிவு எடுக்கபட்டது. நான் அங்கு சென்று சிக்கன் காபாப் இரண்டு தட்டு சொல்லிவிட்டு அந்த கடை நபரிடம் பேச்சுக் கொடுத்தேன். அவர் பெயர் மூனீர். வயது கிட்டதட்ட 30 இருக்க்கலாம். ஆபகானிஸ்தானில் இருந்து வந்து கிட்டதட்ட 11 ஆண்டுக்கள் ஆகிவிட்டதாம். என்ன இந்த ஊர் பிடிக்கிறதா என்றேன். ஓகே என்றார். உங்கள் ஊருக்கு திரும்பிப் போகும் எண்ணம் உள்ளதா என்றேன். (இதுப்போல கேள்வி கடந்த 6 ஆண்டுகளில் குறைந்தது 150 பேரிடம் கேட்டு இருப்பேன்). அவர் நிச்சயமாய் இல்லை என்றார். ஏன் உங்களது பெற்றோர், உறவினர்கள், நண்பர்கள் எல்லோரையும் நீங்கள் மிஸ் பண்ண வில்லையா என்றே கேட்டேன், அதற்கு அவர் இரண்டு வருடத்திற்கு ஒரு முறை ஊர் சென்று எல்லொரையும் பார்ப்பது வழக்கம், ஆனால் "they won't pay my bills" என்றார். அதற்குள் நான் கேட்டு இருந்த் சிக்கன் வந்துவிட பணத்தை கொடுத்து விட்டு நடையை கட்டினேன்.
அலுவலகத்தில் சக நண்பர் கானா செல்லும் நாளை கனவு காண்கிறேன் என்கிறார். ஆப்கானிஸ்தான் சிக்கன் காபாப் நபர் திருப்பி செல்ல வாய்ப்பே இல்லை என்கிறார். இன்னும் 5 ஆண்டுக்களுள் எத்தனைப் பேரிடம் இதுப் போல் பேச போகிறோனோ...
அன்புடன்
மயிலாடுதுறை சிவா...
3 Comments:
கலக்கல் பதிவு....
NA வந்து கொஞ்ச நாள் தான் ஆகுது. ஆனா ஊர் போறத பத்தி யோசிச்சு யோசிச்சு மாளலை.
கானா-காரருக்கு ஒரு ஓ போட்டதா சொல்லுங்க....
இரு வேறு பார்வை. அருமை. குடும்ப சூழலென்று ஒன்றிருந்தாலும் வாழ்க்கை வசதி, பணம், உல்லாசம் போன்ற ஆசைகள் யாரை விடும் சொல்லுங்கள்?
ஊர் பாசம் யாருக்கும் இருக்கலாம், அதே போல் ஊருக்காக ஏதாவது செய்ய வேண்டும் என்று
பெரும்பாலானோருக்கு தொன்றுவதில் வியப்பில்லை. அதுவும் புலம் பெயர்ந்தவர்கட்கு
அடிக்கடி இது தோன்றுவதும் இயல்பே. எனக்கும் அப்படித்தான் மலேசியவில் இருந்த போது
ஊரின் மீதும் ஊருக்காக ஏதாவது செய்ய வேண்டும் என தொன்றியது, என்னதான் சண்டையிட்டாலும்
உறவினர் போல் வருமா என தொன்றியது. ஆனால் திரும்பிய பிறகு எண்ணிய படி ஒன்று கூட
செய்ய முடியவில்லை. அதற்கு மிகுந்த மணதிடம் வேண்டும் என்பது எனது எண்ணத்திற்கு செயல்
வடிவம் கொடுக்க முயன்று தோற்ற பொது தான் உண்ர்ந்தேன். என்னதான் நாம் சமூக
சேவகர்களை சுலபமாக விமர்சிக்க முடிந்தாலும் அவர்களை போல் ஆவதென்பது கொஞ்சமல்ல
மிகக்கடினம், அதர்க்கு தனி TEMPERAMENT தேவைப்படுவதென்னவோ உண்மை.
Post a Comment
<< Home