மும்தாஜ் பேட்டி சூர்ய தொலைகாட்சியில்...
வலைப் பூக்களில் மிக முக்கியமான விசயம் மற்றப் பத்திரிக்கைகளில் வராத பலவிதமான செய்திகளை பல புதிய கோணங்களில்நாம் படிக்க முடியும் அலச முடியும். நாம் திறந்த மனதுடன் சில அல்லது பல நல்ல விசயங்களை ஏற்றுக் கொள்ளும் பட்சத்தில்நிச்சயம் நமக்கு புதிய விசயங்கள் கிடைக்கும். அதற்கு பலவிதமான வலைப்பூக்களில் ஆதாரம் சொல்ல முடியும். தற்பொழுது உள்ள தலைப்புகாக ஏற்ற மாதிரி உருப்பாடாத நாரயணன் நீண்ட நாட்களுக்கு முன்பு சில்க சுமிதா பற்றியும், விலை மாதர்கள், பாலியில் தொழில் பற்றி அலசியதைப் பற்றி பலர் படித்த இருக்க கூடும்.
இரண்டு வாரங்களுக்கு முன்பு சன்(சூர்ய தொலை காட்சியில்) சித்திரை திருவிழாவிற்கு தமிழகத்தின் முண்ணனி கவர்ச்சி நடிகைமும்தாஜின் பேட்டி வந்தது. அதனைப் பற்றி கூட யாரோ ஒர் வலைபூ நண்பர் கிண்டல் அடித்து இருந்தார். இதற்கு முன் ஏதோ விழாவிற்கு "த்ரிஷா" பேட்டி இருந்தது.
தற்பொழுது மும்தாஜ் பேட்டி நிச்சயம் நல்ல பேட்டி என்றே நான் சொல்லுவேன். ஏனெனில் துளிக் கூட பந்தா இல்லாமல் நன்றாக பேசினார் என்பது குறுப்பிடத் தக்கது. 60% தமிழும், 40% ஆங்கிலமும் கலந்து கலந்து பேசினார். மும்பாய் பெண்மணி இந்த அளவிற்கு தமிழ் பேசியது நன்றாக இருந்தது. பேச்சின் ஊடே அடிக்கடி ஆங்கில பழமொழிகளை சொன்னார். எதிர்காலத்தில் அவருக்கு வரப் போகும் கணவன் தன்னை அன்பாக பார்த்துக் கொள்வதை காட்டிலும் அவருடைய பெற்றோரை நன்கு பார்த்துக் கொண்டால் நிச்சயம் தன்னையும் நன்கு பார்த்துக் கொள்வார் என்ற நம்பிக்கை இருக்கிறது என்றார். காதலைப் பற்றி குறிப்பிடும் பொழுது "Sweet Poison" என்றார்.
மனதில் பட்டதை தெளிவாக எந்த ஒளிவு மறைவும் இல்லாமல் நன்றாக பேசினார். நல்ல வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் மீண்டும் கதாநாயகியாக நடித்து தன் தனிதன்மையை நிருபிக்க முடியும் என்றார். ஓர் கதாநாயகிக்கு வேண்டிய அத்தனை அம்சங்கள் இருந்தும் ஏன் அவரால் காதநாயகியாக வெற்றி பெற முடியவில்லை என்று தெரியவில்லை. நன்கு பெரிய மீன் போன்ற கண்கள், தமிழ் நாட்டு மக்கள் விரும்பும் நல்ல அருமையான சிவப்புநிறம், நல்ல எடுப்பான தோற்றம், நன்கு நடனம் ஆடும் லாகவம், ஓரளவு தமிழ் நன்கு பேச தெரிந்து இருக்கிறது, ஆனால் அவரால் கவர்ச்சி நடிகையால் மட்டுமே ஜொலிக்க முடிகிறது.
மொத்ததில் சூரிய தொலைகாட்சி குஷ்பு, மீனா, ரம்பா, சினேகா, த்ரிஷா என்று முண்ணனி நடிகை பலரை பேட்டி எடுத்து இருந்தாலும் இரண்டு வாரம் முன்பு மும்தாஜ் பேட்டி எடுத்தது பாராட்ட தக்கது.
நன்றி...
மயிலாடுதுறை சிவா...
1 Comments:
கேள்விகள் இன்னும் பொருத்தமாக இருந்திருந்தால், சிறப்புற அமைந்திருக்கும்.
குஷ்பு பேட்டி பார்க்கவில்லை. மீனாவும் சினேகாவும் தமிழில் பேசியதாலும் இயல்பாக இருந்ததாலும் மிகவும் சிறப்பாக இருந்தது. ரம்பாவும் த்ரிஷாவும் ஒற்றை வரி பதில்களாலும், அரசியல்வாதி போன்ற பாதுகாப்பு அரண் கொண்டு முத்து முத்தாக உதிர்த்ததாலும் அலுப்பைத் தந்தது.
Post a Comment
<< Home