திருமாவின் நிலைப்பாடு...???
"தமிழ்பாதுகாப்பு இயக்கத்தின்" சார்பாக குறைந்தது கிட்டதட்ட 10 கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டுள்ளது. அதில் ஒரு கோரிக்கை "ஊடகங்களில்" தமிழ். அவர்களது முழு போரட்டம் தமிழ் திரைப்படத்தை எதிர்த்து அல்ல.
ஆனால் கடந்த வாரம் இராமதாசு திடீரென்று நாங்கள் திரைப்படத்தை எதிர்த்து போரடமாட்டோம் என்றும், எங்கள் சக்திகளை தேவையில்லமால் இங்கு வீண் செய்யமாட்டோம் என்றார். இதில் அவர் திருமாவை கலந்து ஆலோசிக்கவில்லை என சில பத்திரிக்கைகள் கூறுகின்றன.
தலித் இயக்கத்தின் எழச்சிநாயகனாக கருதப்படும் திருமா, இராமதாசு உடன் சேர்ந்ததை நான் மனபூர்மாக ஆதரிக்கிறேன். ஆனால் நண்பர்கள் சிலர் மற்றும் சில பத்திரிக்கைகள் இதனால் திருமாவிற்கு எந்த பலனும் இல்லை எனவும் இதனால் தலித் மக்களுக்கு பலன் இல்லை எனவும் சொல்லப்படுகிறது.
போதக்குறைக்கு கலைஞர் வேறு அவருடைய திமுக மாநாடுகளில் எல்லா கூட்டணி தலைவர்களை பேச சொல்லுகிறார், அதில் தலித் சார்பாக புரட்சி பாரதம் என்ற தலித் பிரிதிநிதிகளை பேச வைத்து உள்ளார். இது இப்படியே போனால் இராமதாசு வருகிற சட்டமன்ற தேர்தலில் 2006ல் திருமாவை தன்னுடம் வைத்து இருப்பாரா? அல்லது கலைஞர் திருமாவிற்கு சில தொகுதிகள் கொடுப்பாரா?
கடைசியாக திருமா வேறு வழி இல்லாமல் அதிமுக செயலலிதாவோடு கூட்டணி வைத்து விடுவாரா?அப்படியே வைத்தாலும் அது தவறா அல்லது அரசியலில் இது சகஜமா? அல்லது நமக்கு தலித் பிரதிநிதிகள்தான் முக்கியமாக படுவதால் எந்த கூட்டணியாக இருந்தாலும் பரவாயில்லையா?
ஓய்வாக இருக்கும் பொழுது தங்கள் கருத்துகளை சொல்லுங்கள்...
நன்றி
மயிலாடுதுறை சிவா...
1 Comments:
ஏதோ மயிலாடுதுறைக்காரரா இருக்காரே, எனக்கு ரொம்ப பிடித்த "மணிக்கூண்டு"-ன்னு பேர் வெச்சு ப்ளாக் எல்லாம் எழுதறாரே-ன்னு
இவரை எப்பவாவது அமெரிக்காவிலோ அல்லது மயிலாடுதுறையிலோ சந்திக்கவேண்டும்-னு நெனச்சுக்கிட்டிருந்தேன்.
நல்ல வேளை இன்னும் சந்திக்கவில்லை. இல்லன்னா.. அப்புறம் என்னைப் பார்த்துவிட்டு, "இந்த சீமாச்சுவுக்கே தமிழ் உணர்வு
இல்லை.. செந்தமிழ்-ல செப்ப மாட்டேங்கறாரு.." அப்படி இப்படின்னு ப்ளாகி என் பேரைக் கெடுத்தாலும் கெடுத்து விட்டுவிடுவாரு.
சிவா உங்கள் "தமிழ் உணர்வுகளுக்கு" என் மனமார்ந்த் பாராட்டுக்கள். தயவு செய்து அடுத்தவர்களின் உணர்வுகளை அளக்க
முயற்சிக்காதீர்கள். நீங்கள், விவேக், இளங்கோவன், சாலமன் பாப்பையா ஆகியோரை விமர்சித்தவிதம் கண்டனத்துக்குரியது.
முடிந்தால் அந்த குறிப்புக்களை நீங்கள் நீக்கி விடுதல் உத்தமம். அவரவருக்கான உங்கள் மதிப்பீட்டை இந்த மாதிரி போஸ்டர்
அடித்து ஒட்டுவது தமிழையும் தமிழ் உணர்வுகளையும் மதிப்பவர்களுக்கான் தகுதிகளுக்கிணையானதல்ல.
என்றென்றும் அன்புடன்,
சீமாச்சு...
Post a Comment
<< Home