நன்றி!!! நன்றி!!!
தமிழில் நிறைய எழுத வேண்டும், சிந்திக்க வேண்டும் என ஊக்கப் படுத்தும் "தமிழ் மணத்திற்கு" நன்றிகளை வார்த்தையால் சொல்லுவது கடினம். நன்றிகள் பல: மதி கந்தசாமி மற்றும் காசிக்கு.
கடந்த ஒரு வாரமாக என்னால் முடிந்தவரை சில பதிவுகளை உங்களோடுப் பகிர்ந்துக் கொள்ள முடிந்தது. பின்னூட்டம் இட்ட, வாழ்த்திய, தவறுகளை சுட்டி காண்பித்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்...
முதன் முதலில் என்னை வலைப்பூ ஆரம்பிக்க என்னை பெரிதும் ஊக்கப் படுத்திய என் மயிலாடுதுறை நண்பர் மூக்கன் (சுந்தருக்கு) என நன்றிகள் பல. அவரின் நகைச் சுவை உணர்வை நான் பலமுறை ரசித்து இருக்கிறேன்.
அமெரிக்க வாழ்க்கையில் எவ்வளவு அனுபவம். அவற்றுள் "தமிழ் மணமும்" இரண்டற கலந்து விட்டது. நம் வலைப் பூக்கள் பூங்காவில் நான் நிறைய படித்து, சிந்தித்து பலமுறை என்னுள் கேள்வி கேட்டு இருக்கிறேன்.
வெகுஜன பத்திரிக்கைகளில் வாரத பல பதிவுகள் என்னுள் ஏற்படுத்திய மாற்றங்கள் ஏராளம். நான் மிகவும் ரசித்த, என்னுள் பாதிப்பை ஏற்படுத்திய சிலவற்றை மீண்டும் உங்களுக்கு மீட்டுக் கொடுக்க ஆசைப் படுகிறேன். இதுப் போல இன்னும் பலப் பேர் நிறைய எழுதி இருக்கிறார்கள். அவற்றுள் சில...
(கறுப்பி...)
"இதை மொழி பெயர்க்கமுடியாது, உங்களுக்குப் புரியாது. இதில் இரண்டாயிர வருட பண்பாடு, ஒழுக்கம், குடும்பப் பாரம்பரியம் இதையெல்லாம் தனது இரண்டு தொடைகளுக்கு நடுவில் வைத்துக்காப்பாற்றும் தமிழ் பண்பாடு இருக்கிறது இது மிக நுட்பமானது"
(தங்கமணி)
...ஒவ்வொருவரும் சமூகத்துக்கு தெரிவிக்க என ஒரு பண்பாட்டு முகமூடியை வைத்திருக்கின்றனர். பண்பாட்டை போதிப்பதற்க்கான (சமூகத்துக்கு) முழு உரிமையுடன் வந்திருப்பதாக என்ணிக்கொள்கின்றனர். இது ஒரு மன வளர்ச்சியற்ற தன்மை. அதுக்கப்புறம் இதில் தேசபக்தி இந்தியக் கலாச்சாரம் என்ற மசாலாக்கள் வேறு இருந்துவிட்டால் நமக்கு வெறியே வந்துவிடும்.
(ரோசா வசந்த்)
...சண்டையில் அறிவியல் விதிகள் மதிக்கப் படவில்லை என்று வலைப்பதிவில் கவலைப் பட்டிருந்தார்கள். நாம் வாழும் யதார்த்த உலகம் முழுக்க முழுக்க அறிவியல் விதிப்படி நடக்கும் அவலத்தை நாம் என்னேரமும் எதிர் கொண்டிருக்க, ரஜினி படத்தின் சண்டைகூட அறிவியல் விதிப்படி நடக்க வேண்டும் என்ற குரூர எண்ணம் ஏன் ஏற்படுகிறது என்று புரியவில்லை.
(நரேன்)
...சிலுக்கு சுமிதாவின் அரசியல் வித்தியாசமானது. தனக்கு வந்த வாய்ப்புகளை உபயோகித்துக் கொண்டு, தன் உடலினால் தமிழ்நாட்டினை கட்டிப்போட்ட பெண் அவள். நாக்கினை தொங்கப்போட்டு கொண்டு, மிட் நைட் மசாலா பார்க்கும் யார் பார்வையிலும் சிலுக்கு சுமிதா ஒரு சதை குன்று. ஒரு சாதாரண ரோட்டில் போகும் பெண்ணிற்கு இருக்கும் குறைந்த பட்ச கருணைக்கு கூட லாயகற்ற ஜென்மம். எல்லாரின் பார்வையிலும், சுமிதா ஒரு பெண் என்பதை தாண்டி, கிறங்கடிக்கும் பார்வையும், முலைகளும், யோனியும் மட்டுமே உடைய ஒரு காமவெளி. மொத்த தமிழ்நாட்டினையும் மோகவெறி பிடித்து தன் இருப்பினை மிக அசாதாரணமாய் காட்டி விட்டு சென்ற பெண் அவள். சிலுக்கு சுமிதாவின் தனிப்பட்ட வாழ்க்கையின் சோகங்கள் பற்றிய கவலைகள் யாருக்குமில்லை. தூக்குமாட்டி தற்கொலை செய்து கொண்டபோது சுமிதாவின் வயது 30க்கும் குறைவு. சிலுக்கு சுமிதாவின் மார்பினை தாண்டி உள்ளே இருக்கும் விஜயலட்சுமியை யாருமே கண்டுகொள்ளாததின் விளைவு ஒரு உயிரின் மரணம்.
(அல்வா சிட்டி விஜய்)
...இதில் அமெரிக்க மாப்பிள்ளைகளை மட்டும் குறைகூறவும் முடியாது. தன் படிப்பு, தன் லட்சியம் இவற்றிற்கு அமெரிக்க வாழ்க்கையில் எதிர்காலம் இருக்கிறதா இல்லையா என்ற கேள்விகள் எல்லாம் கேட்காமல், வெறும் டாலர் கனவுகளோடு அமெரிக்க மாப்பிள்ளைகளுக்கு ஆசைப்பட்டுக் கொண்டிருக்கிற நம் பெண்களும், அவற்றிற்குத் தூபம் போடுகிற அவர்களின் பெற்றோர்களும் இருக்கவே செய்கிறார்கள்.
(சங்கர பாண்டி)
...சாதிய அடையாளம் என்னை விட்டுப் போகவில்லை. தலித்து இயக்க நூல்களையும், இலக்கியங்களையும் படித்த பொழுது தான் அந்த அடையாளத்தை துறக்க ஆரம்பித்தேன் எனலாம். ஆனாலும் பல தலைமுறைகளின் வழி வந்த எத்தனையோ சாதியக் குணங்கள் இன்னும் என்னுள் ஒளிந்து கொண்டிருக்கின்றன என்று தான் நினைக்கிறேன். அவை ஒவ்வொன்றும் தலித்திய எழுத்துக்களைப் படிக்கும் பொழுதுதான் கரைந்து கொண்டிருக்கின்றன. இரண்டு வருடங்களுக்கு முன் தோழர் திருமாவளவன் அமெரிக்கா வந்த பொழுது பல மணி நேரங்கள் கருத்துப் பரிமாற்றம் செய்யும் வாய்ப்பு கிட்டியது. அப்பொழுது அவர் ஒரு கேள்வி கேட்டார், தலித்து குடும்பங்களில் இந்தியாவின் அனைத்து தலைவர்கள் பெயரையும் குழந்தைகளுக்கு வைக்கின்றனர். னால் தலித்தல்லாதவர்கள் ஒருவராவது தலித்து தலைவர் பெயரை வைதது உண்டா என்று கேட்டார். சவாலாகக் கேட்கிறேன் என்றார். எனது சாதியக் குணத்துக்கு ஏன் அது வரை இது உரைக்கவில்லை என்றுதான் பட்டது? அவர் என்னிடம் தட்டியெழுப்பிய சிந்தனைகள் பல. அது போல்தான் எழுத்தாளர்கள் சிவகாமியிடமும், இரவிக்குமாரிடமும் பேசும் பொழுது என்னுடைய சாதியக் குணங்கள் கரைந்து போயிருக்கின்றன. இன்னமும் எத்தனை என்னுள் ஒழிந்திருக்கின்றன என்று எனக்கே தெரியாது...
இதுப் போல பத்ரி, சந்திரவதனா, பத்மா அரவிந்த், ஈழநாதன், துளசி கோபால், சுந்தர மூர்த்தி, பிச்சைப் பாத்திரம் சுரேஷ் கண்ணன் இன்னும் பல எனக்குப் பிடித்தவை...
கடைசியாக என் வேண்டுகோள்...
தமிழ் மணத்திற்கு வாருங்கள். ..
உங்கள் எண்ணங்களை பதிய வையுங்கள். ..
அமெரிக்காவில் (கனடா) உள்ள அனைத்து வலைப் பதிவாளர்களையும் என்றாவது ஓரு நாள் அனைவரும் சந்திக்க முடியுமா? (2006ல்)
தமிழ் நாட்டிலும் அதேப் போல் முன்னேற அறிவித்து விட்டு நாம் கலந்து கொள்ள முடியுமா? (2006 அல்லது 2007ல்)
மீண்டும் சந்திப்போம்...
நன்றி...
மயிலாடுதுறை சிவா...
6 Comments:
சிவா
நன்றி. நட்சத்திரப் பதிவுகளை விரும்பிப் படித்தேன். எந்தவித பாசாங்குமின்றி உங்களுக்குப் பிடித்தவைகளை எழுதியிருந்தீர்கள்--திருமாவளவனில் இருந்து சினேகா வரை. சிலபதிவுகளில் பின்னூட்டமிட விரும்பியிருந்தாலும், வேறுபதிவுகளில் கவனம் இருந்ததால் செய்ய முடியவில்லை. தொடர்ந்து எழுதுங்கள்.
திருக்குறள் மாநாட்டிற்கு வர இருக்கிறேன். அப்போது சந்திப்போம்.
சிவா
நன்றாக எளிமையாக எழுதி இருந்தீர்கள். இயல்பாக இருந்தது.பாராட்டுக்கள்.
நன்றாக இந்த வாரத்தை எடுத்துச் சென்றீர்கள். சில பதிவுகளுக்கு என்னால் எழுதமுடியவில்லை. ஆனால் உண்மையில் பேசப்படாத விசயங்கள் குறித்து நீங்கள் பேசத் தயங்கவில்லை. அதற்கு என் நன்றிகள்.
சிவா,
உங்கள் எழுத்து நன்றாக இருந்தது.
///"இதை மொழி பெயர்க்கமுடியாது, உங்களுக்குப் புரியாது. இதில் இரண்டாயிர வருட பண்பாடு, ஒழுக்கம், குடும்பப் பாரம்பரியம் இதையெல்லாம் தனது இரண்டு தொடைகளுக்கு நடுவில் வைத்துக்காப்பாற்றும் தமிழ் பண்பாடு இருக்கிறது இது மிக நுட்பமானது"//
இதைச் சொன்னவர் தங்கமணிதான். நாரயணனின் பதிவில் ஒரு பின்னூட்டத்தில் இப்படிச் சொல்லியிருந்தார்.
பாசாங்கில்லாத வாரமாக இருந்தது பிடித்திருந்தது சிவா.
தொடர்ந்து எழுதுங்கள்.
திருமாவளவனின் படைப்புகள் கிடைத்தால், பகிர்ந்துகொள்ளுங்கள். நன்றி!
-மதி
சிவா
இந்த வாரம் அளவாகவே ஆனாலும் அழகாக எழுதியிருந்தீர்கள்.
எல்லாவற்றையும் ரசித்துப் படித்தேன்.
Post a Comment
<< Home