இஸ்லாமியர் அல்லாதவர்கள் மெக்காவிற்கு போகமுடியுமா?
இஸ்லாமியர் அல்லாதவர்கள் மெக்காவிற்கு போகமுடியுமா?
ஓர் புகைப் படம் ஆயிரம் வார்த்தைகளுக்கு சமம் என்பார்கள்.
இந்த மெக்கா புகைப் படத்தைப் பார்க்கும் பொழுதெல்லாம் இனம் புரியாத ஓர் மகிழ்ச்சி. மதத்திற்கு அப்பாற்ப் பட்டு இந்தப் புகைப் படத்தை பல முறை ரசித்து இருக்கிறேன்.
இஸ்லாமியர் அல்லாதவர்கள் அங்கு போக முடியாது என்று கேள்விப் பட்டு இருக்கிறேன். வலைப் பூ இஸ்லாமிய நண்பர்கள் விளக்கவும்.
கிட்டதட்ட எத்தனைப் பேர் இங்கு தொழுகலாம்? சாப்பாடு வசதிகள் எப்படி இருக்கும்?சுற்றுப் புற சுகாதரம் எப்படி இருக்கும்? கழிப்பறை வசதிகள் எப்படி இருக்கும்? இப்படி கேள்வி கேட்டதற்கு மன்னிக்கவும்.
ஏனெனில் ஐய்யப்பன் கோவில் சென்று பார்த்து இருக்கிறேன். ஆகையால் வருத்ததோடு இதனை கேள்வி கேட்கிறேன்.
நன்றி...
மயிலாடுதுறை சிவா...
61 Comments:
சிவா, நட்சித்தரமானதற்கு வாழ்த்துக்கள்!
மக்காவில் அமைந்துள்ள காஃபா என்னும் இறையலத்தைச் சுற்றிக் குறிப்பிட்ட எல்கைக்குள் முஸ்லிம்கள் மட்டுமே சென்று வரலாம், மற்றவர்களுக்கு அனுமதி இல்லை. சிலர் கூறுவது போல் இஸ்லாம் இங்கே தீண்டாமையை மேற்கொள்கிறது என்பது நிச்சயமாக இல்லை,
காஃபாவைப் புனித ஆலயமாக இஸ்லாம் அறிவித்திருப்பதால் அங்கே கண்டிப்பாகக் கடைபிடிக்க வேண்டிய சிலக் கட்டுபாடுகள் உண்டு, இஸ்லாத்தைச் சார்ந்தவர்களாலேயே அதைப்பேண முடியும் மற்றவர்களுக்குத் தெரியாது என்பதால் இயலாது. இது பற்றி விரிவாக என்பதிவில் எழுதவுள்ளேன்.
இறுதியாக, இப்போதைய ஆட்சியாளர்களால், மிகப் பிரம்மாண்டமான அளவில் விரிவு படுத்தப் பட்டுள்ளது. அதி நவீன வசதிகளுடன், அழகான முறையில், வடிவமைக்கப்பட்டுள்ள இப்பள்ளியில், ஏக காலத்தில் இருபது இலட்சம் பேர், எந்தச் சிரமமுமின்றித் தொழ முடியும். கட்டிடக் கலையின் சகல விதமானத் தொழில் நுட்பங்களும் இங்கே கையாளப் பட்டுள்ளன.
பல்லாயிரக் கணக்கான ஊழியர்கள் சீருடை அணிந்து சுழற்சி முறையில் பகலும் இரவும் பணிபுரிகின்றனர். தூய்மைப் பணியாளர்கள் - எந்த நேரமும் ஒவ்வொரு பகுதியிலும் நவீனக் கருவிகள் கொண்டு தூய்மைப் படுத்திக் கொண்டே இருப்பார்கள். இங்கே சுகாதரத்திற்கு எவ்வித பங்கமும் எற்பட்டு விடாமல் பாதுகாக்கப்படுகிறது.
மக்காவை மிக்க பாக்கியமுள்ள நகரமாக இறைவன் அறிவித்திருக்கிறான். எத்தனை லட்சம் மக்கள் கூடினாலும், நல்ல தரமான உணவுக்கு தட்டுப்பாடு என்பது இல்லை. தேவையான உணவுக் கிடைத்துக் கொண்டிருக்கும். சவூதி அரசாங்கத்தினால் தக்க முன்னேற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன.
பள்ளிவாசலைச் சுற்றியும் தரையின் மேல் பகுதியிலும், சுரங்கமாக தரையின் கீழ்பகுதியிலும் ஆண்கள், பெண்கள் தனிப் பகுதியாக - தாராளமான தண்ணீர் வசதியுடன் லட்சக்கணக்கான அதி நவீன கழிவறைகள் அமைக்கப்பட்டிருக்கின்றன சுத்தப் பணியாளர்களால் கழிவறைகள் தொடர்ந்து சுத்தப்படுத்தப்படும்.
இறைவழிப்பாட்டுக்காக உலகத்தின், அனைத்து பகுதிகளிலிருந்தும் முஸ்லிம்கள் மக்கா வருவதால் காஃபா ஆலயமும், அதன் சுற்றுப்புறச் சூழலும் தூய்மையாக - சுத்தமாக வைக்கப்பட்டிருக்கும்.
இரண்டாவது படம்:- மக்காவின் அருகிலுள்ள அரஃபா என்னும் இடத்திலுள்ள பள்ளிவாசல். ஹஜ்ஜை நிறைவேற்ற வந்த அனைவரும் - ஹஜ் மாதம் ஒன்தாம் நாள் இங்கு கூடுவார்கள். ஹஜ்ஜுக்காக வந்த அத்தனை லட்சம் முஸ்லிம்களும் இந்தப் பள்ளிவாசலின் உள்ளேயும், வெளியேயும் கூட்டுத் தொழுகையை ஒரே நேரத்தில் நிறைவேற்றுவார்கள். மற்ற நாட்களில் இந்தப் பள்ளிவாசலைத் தவிர மற்ற இடங்கள் வெறும் மைதானமாகவே இருக்கும்.
(மறுமொழி என்பதால், நான் சொல்லியது மிகக் குறைவாகவே சொல்லியுள்ளேன்)
உங்கள் கட்டுறை சிறப்பான ஒரு கட்டுறையாக இருந்திருக்கும் - கழிப்பறை வசதிகள் எப்படி இருக்கும்? என்பதோடு முடிந்திருந்தால்... எதற்கு எப்பொழுது பார்த்தாலும் ஒரு ஒப்பீடு... சவுதி சுல்தானின் வீடு (அரண்மனை) பற்றி கட்டுரை எழுதினால் இப்படி முடிப்பீர்களா? 'சவுதி சுல்தானின் அரண்மனையில் பளிங்கில் இழைத்திருப்பார்களாமே? பாத்ரூமில் தண்ணீர் குழாய் கூட தங்கத்தில் இருக்குமாமே? சுத்தமும் அமைதியும் எப்பொழுதும் இருக்குமாமே? ஏனெனில் மயிலாடுதுறை சிவா வீட்டிற்கு சென்று பார்த்து இருக்கிறேன். ஆகையால் வருத்ததோடு இதனை கேள்வி கேட்கிறேன்." என்று முடிப்பீர்களா ?
விதண்டாவாதங்களை தன் முதலீடாக வைத்து எழுதி வரும் திரு.நேசகுமாரிடம் நிச்சயமாக இதற்கு எதிர் மறையான கருத்தை எதிர்பார்க்கலாம். என்ன ஈரோட்டாரே, நீங்களுமா?
அல்வாசிட்டி சம்மி அவர்களே, கஃபாவின் வரலாற்றில் இதுவரை ஆட்களே இல்லாமல் இருந்ததில்லை. எனினும் http://www.adirai.com/modules.php?set_albumName=album01&op=modload&name=gallery&file=index&include=view_album.php என்ற தளத்தில் சில கருப்பு வெள்ளை புகைப்படங்களை பட்டியலிட்டுள்ளார்கள்.
நேசத்திற்குறிய குமார் அவர்களே, இஸ்லாமிக் இன்ஃபோ என்ற பெயரிலுள்ள தங்கள் வலைத்தளத்தில் இஸ்லாமிக் ராங் இன்ஃபோ கொடுத்து வருவதாலேயே //விதண்டாவாதத்தை முதலீடாக கொண்ட//என எழுதினேன்.
இந்து ஆலய கருவரைக்குள் சாதாரண இந்து கூட நுழைய உள்ள ::தீட்டு:: போன்ற கட்டுப்பாடுகள் கஃபாவிற்க்குள் நுழைய நிசயமாக இல்லை. இஸ்லாமிய (ஷரீஅத்) சட்டப்படியும் சவூதி சட்டப்படியும்தான் சில கட்டுப்பாடுகள் உள்ளன.
உங்கள் நியாயமான சந்தேகங்களுக்கு நிச்சயம் (இன்ஷாஅல்லாஹ்) பதிலளிக்கப் படும். ஏனெனில் இஸ்லாம் குழப்பங்களுக்கு அப்பாற்பட்ட மதம் மட்டுமல்ல தேர்ந்தெடுத்த வாழ்க்கை நெறி.
//மக்காவை மிக்க பாக்கியமுள்ள நகரமாக இறைவன் அறிவித்திருக்கிறான்//
No Comments.
One can entirely updown the meaning of a phrase on his own wish and that can be well experienced with nesakumar. So I request all readers here to read and visit islamic info centers through their own eyes and not of nesakumars. nesa kumar's intention only come out in his writings.
FOR ANY ISSUE, ALL OF US SHOULD HAVE OUR OWN VISION INSTEAD OF THAT HATRED CRITICS AND FAVORED FOLLOWERS.
Secondly, in makka's Masjid, all the people (even if he is a King or a begger, white or black, so called high caste or low caste, this language or that language) wears same white dress and are equal in front of God.
Mr.Malcom X, the american reformer against racism finally found out equality only in Islam when he visited makkah.
Except the authorized,others cannot enter some of the prohibited areas of a even in a human govt. So, nothing wonder only muslims can enter in Makkah.
Still want to visit Makkah, it is very simple, just to pronounce the word:
"THERE IS NO GOD, BUT ONE-and MOHAMMAD IS THE APOSTLE OF GOD'' ,
THIS IS THE PASSPORT, VISA FOR THE ENTRY IN MAKKAH's MASJID.
please bear with me for my writings in english.
அவரவர் மனசாட்சிக்குத் தெரியும், நேசக்குமார்
கேள்விகளில் உள்ள உண்மை....
தன் மனசாட்சியைத் தானே மறைத்து வாழும் மனிதர்கள் இவ்வுலகின் முதல் விரோதிகள்...
அய்யா நேசகுமார்,
ஏன் இப்படி அப்பட்டமாக பொய் பேசுகிறீர்கள். நீங்கள் ஏற்கனவே இப்படி முன்னுக்கு பின் முரணாக இஸ்லாம் என்ற பெயரால் சொன்ன விஷயங்களை எனது பதிவிலே கேள்விகளாக கேட்டு மூன்று மாதங்களாகிறது. இன்னும் ஆதரமில்லை, இதில் நான் எழுதுவது எல்லாம் குர் ஆனிலும், நபி மொழிகளிலும்தான் உள்ளது என்று என்ன சுயத்தம்பட்டம். உங்கள் மறைத்தல் திரித்தல் வேலைகளை எல்லாம் எனது பதிவிலே கேள்விகளாக கேட்டு, நீங்களும் பதில் சொல்கிறேன் என்று சொல்லி எத்தனையோ நாட்களாகிவிட்டது, என்ன காரணம் அய்யா?
யாரோ ஒரு பெண்ணைப் பார்த்து பரவசப்படுவதும், உணர்ச்சி வசப்படுவதும் மனித இயல்பு. இதில் என்ன அதிசயம். எல்லா ஆண்களுக்கும் உள்ள இயற்கையான உந்துதல்தானே. அதில் நபிகளாரும் இருக்கலாம். ஆனால் அதற்காக அவர் தன் வீட்டிற்கு வந்து தன் ம்னைவி ஜைனப்பிடம்தானே உடலுறவு வைத்துக் கொண்டார். புனிதர்கள், சாமியார்கள், மடாதிபதிகள் என்று முற்றும் துறந்தவர்களாக தங்களை ஊருக்கு அடையாளப்படுத்திக் கொண்டு, உணர்ச்சிவசப்பட்டு ஒழுக்கமில்லாமல் நடந்துக் கொள்ளவில்லையே.
க·பாவில் ஏன் அனுமதிப்பதில்லை என்பதற்கு ஒன்றும் மிகப்பெரிய கண்டுபிடிப்போ ஆராய்ச்சியோ தேவையில்லை. உதாரணத்திற்கு: உலகில் பிறந்த மனிதர்கள் எல்லோருக்கும் இந்த உலகம் சொந்தமானது. ஜார்ஜ் புஷ்ஷிற்கு மட்டுமல்ல. ஆனால், ஒரு நாட்டிற்கு செல்ல வேண்டுமென்றால் எதற்காக பாஸ்போட், விசா என்ற இத்யாதிகள் எல்லாம். எல்லோரையும் எல்லா நாட்டிற்கும் எங்கு வேண்டுமானலும் சென்று கொள்ளுங்கள் என்று அனுமதிக்க வேண்டியதுதானெ? மனிதர்களாக பிரித்துக் கொண்ட, வெறும் சராசரி 60 ஆண்டுகள் மட்டும் வாழ்ந்து அனுபவிக்கக் கூடிய இந்த படைப்புகள், இப்படியெல்லாம் சட்டத் திட்டங்களை தீட்டி, வரைமுறைகள் செய்யும்போது, இறைவனால், இப்ராஹீம் நபி காலத்திற்கு முன்னாளிலிருந்து கட்டப்பட்டு, இப்ராஹீம் நபி அவர்களால் மீண்டும் நிர்மானிக்கப்பட்டு, பிறகு நபிகள் நாயகம் காலத்தில் அதிலிருந்த சிலைகளை எல்லாம் நீக்கப்பட்ட இறை ஆலயத்தினுள் நுழைய இறைவன் நிர்ணயித்த வரையறைகள்தான் இந்த முஸ்லீம்கள் மட்டும் அனுமதிக்கப்படும் முறை.
நேசகுமார் இந்தியக் குடிமகன் என்பதால் இந்திய ராணுவப் பகுதிகள், இன்னும் முக்கியமான ரகசியப் பகுதிகளுக்கெல்லாம் விருப்பம்போல் சென்றுவர முடியுமா? அல்லது ரிசர்வ் பேங்கினுள் சென்று, நானும் இந்தியக் குடிமகனே எனக்கு இப்போது ஒரு பத்தாயிரம் பணம் வேண்டும் என்று ரிசர்வ் பேங் கருவூலத்திற்கு சென்று வேண்டும் போது அள்ளிக் கொண்டு போகமுடியுமா?
க·பாவின் கஸ்டோடியன் என்றால் என்ன நேரடியாக சொர்க்கம்தான் என்று இறைவன் குர் ஆனிலே வாக்கு கொடுத்துவிட்டானா? அல்லது வருடத்திற்கு ஒருமுறை பரிவட்டம் கட்டி முதல் மரியாதை செய்யப்படுகிறதா? கஸ்டோடியன் என்றால் அதைப் பாதுகாப்பதும் அங்கு வருபவர்களுக்கு போதுமான வசதிகள் செய்து கொடுக்கக்த்தானே ஒழிய, க·பாவின் கஸ்டோடியன் என்றாலும், ஆப்பிரிக்க கருப்பினத்தின் சாமனிய மனிதன் என்றாலும் இறைவன் முன்னால், தோளோடு தோள் நின்றுதான் தொழவேண்டும்.
அஹமதியாக்களுக்காக கண்ணீர் வீடும் நேசகுமாரே? அஹமதியாக்கள் குர் ஆன் சொல்வது போல் முஹம்மது நபியவர்களை மட்டும் இறுதித் தூதராக ஏற்றுக் கொள்ளமல் எப்படி க·பாவிற்குள் நுழைய முடியும்? என் வீட்டிற்கு வருபவன் எனது மகனையோ, மகளையோ, மனைவியையோ அல்லது என் வீட்டில் வசிக்கும் எனது நெருங்கிய உறவினர்களை அவமதித்துவிட்டு அல்லது ஏற்றுக் கொள்ளமட்டேன் என்று சொல்லிவிட்டு எப்படி என் வீட்டிற்குள் நுழைய முடியும்?
//
ஒரு நாட்டிற்கு செல்ல வேண்டுமென்றால் எதற்காக பாஸ்போட், விசா என்ற இத்யாதிகள் எல்லாம். எல்லோரையும் எல்லா நாட்டிற்கும் எங்கு வேண்டுமானலும் சென்று கொள்ளுங்கள் என்று அனுமதிக்க வேண்டியதுதானெ?
நேசகுமார் இந்தியக் குடிமகன் என்பதால் இந்திய ராணுவப் பகுதிகள், இன்னும் முக்கியமான ரகசியப் பகுதிகளுக்கெல்லாம் விருப்பம்போல் சென்றுவர முடியுமா? அல்லது ரிசர்வ் பேங்கினுள் சென்று, நானும் இந்தியக் குடிமகனே எனக்கு இப்போது ஒரு பத்தாயிரம் பணம் வேண்டும் என்று ரிசர்வ் பேங் கருவூலத்திற்கு சென்று வேண்டும் போது அள்ளிக் கொண்டு போகமுடியுமா?
//
அது எதிரிகள்/சமூக விரோதிகளால் பாதிக்கப்படாமல் இருக்க...அதுசரி...நீங்கள் ஏனைய்யா க.பாவில் எல்லாரையும் விடமாட்டேன்ங்கிறீங்க?? உங்களைப் பொறுத்தவரை "காபிர்கள்" எதிரிகள் தானே?..
//
க·பாவின் கஸ்டோடியன் என்றால் என்ன நேரடியாக சொர்க்கம்தான் என்று இறைவன் குர் ஆனிலே வாக்கு கொடுத்துவிட்டானா? அல்லது வருடத்திற்கு ஒருமுறை பரிவட்டம் கட்டி முதல் மரியாதை செய்யப்படுகிறதா? கஸ்டோடியன் என்றால் அதைப் பாதுகாப்பதும் அங்கு வருபவர்களுக்கு போதுமான வசதிகள் செய்து கொடுக்கக்த்தானே ஒழிய, க·பாவின் கஸ்டோடியன் என்றாலும், ஆப்பிரிக்க கருப்பினத்தின் சாமனிய மனிதன் என்றாலும் இறைவன் முன்னால், தோளோடு தோள் நின்றுதான் தொழவேண்டும்.
//
இந்த ஈர வெங்காயமெல்லாம் எங்களுக்கும் தெரியும்.ஆனால் கேள்வி என்னவென்றால்,
//
காபாவின் கஸ்டோடியனாக ஒரு இந்திய முஸ்லிமை நியமிக்க வழியிருக்கின்றதா? நீங்களும் உங்கள் மனைவியும், உங்கள் மசூதியில் சென்று வழிபாடு செய்ய முடியுமா? காபாவின் கஸ்டோடியனாக ஒரு இந்திய முஸ்லிமை நியமிக்க வேண்டும், ஒரு கறுப்பின முஸ்லிமை நியமிக்க வேண்டும் என்று முஸ்லிம்களில் யாராவது எந்த நாட்டிலாவது போராட்டம் நிகழ்த்தியிருக்கின்றார்களா
//
Á¢ġÎÐ¨È º¢Å¡Å¢ý þó¾ À¾¢× ÝôÀ÷.
§¿ºìÌÁ¡÷, žž¦ÅýÚ ±Ø¾¡¾£÷¸û. ÒûÇ¢ Ìò¾¢ ´ù¦Å¡ýÈ¡¸ §¸Ùí¸û. ¸ò¨¾ ¸ò¨¾Â¡ö Å¡÷ò¨¾¸ÙìÌû §¸ð¼ §¸ûÅ¢¨Â ¾¢¨º ¾¢ÕôÀ¢ «øÄÐ ¸ñÎ측Áø Å¢ðÎÅ¢ðÎ "«Ð ÁðÎõ ´Øí¸¡" ±ýÚ ¬ÃõÀ¢òÐÅ¢ÎÅ¡÷¸û
¿¡ý ¦Á¡Æ¢¦ÀÂ÷ò¾ ´Õ "þŠÄ¡Á¢Â «È¢»ÃÐ" ¸ðΨÃ째 þýÉÓõ ±ÉìÌ ´Õ À¾¢ø ÅÃÅ¢ø¨Ä. ¬É¡ø, ¯¼§É ±ý¨É þóÐòÅ¡ ¦ÅÈ¢Âý :-)) ±ýÚ À¾¢×¸û ±Ø¾ôÀðÎÅ¢ð¼É. þó¾ Óò¾¢¨ÃìÌô ÀÂóо¡ý, §Ã¡…¡Å…óÐ, Íó¾ÃÅʧÅø ¾í¸Á½¢ §À¡ýÈ º¢ó¾¨É¡Ç÷¸Ùõ þŠÄ¡¨Á Å¢Á÷º¢ì¸ «ï͸¢È¡÷¸û.
¦À¡Úò¾Ð §À¡Ðõ ÁÅ§É ¦À¡í¸¢¦ÂØ :-)
http://ennamopo.blogspot.com
மயிலாடுதுறை சிவாவின் இந்த பதிவு சூப்பர்.
நேசக்குமார், வதவதவென்று எழுதாதீர்கள். புள்ளி குத்தி ஒவ்வொன்றாக கேளுங்கள். கத்தை கத்தையாய் வார்த்தைகளுக்குள் கேட்ட கேள்வியை திசை திருப்பி அல்லது கண்டுக்காமல் விட்டுவிட்டு "அது மட்டும் ஒழுங்கா" என்று ஆரம்பித்துவிடுவார்கள்
நான் மொழிபெயர்த்த ஒரு "இஸ்லாமிய அறிஞரது" கட்டுரைக்கே இன்னமும் எனக்கு ஒரு பதில் வரவில்லை. ஆனால், உடனே என்னை இந்துத்வா வெறியன் :-)) என்று பதிவுகள் எழுதப்பட்டுவிட்டன. இந்த முத்திரைக்குப் பயந்துதான், ரோஸாவஸந்து, சுந்தரவடிவேல் தங்கமணி போன்ற சிந்தனையாளர்களும் இஸ்லாமை விமர்சிக்க அஞ்சுகிறார்கள்.
பொறுத்தது போதும் மவனே பொங்கியெழு :-)
http://ennamopo.blogspot.com
நேசகுமாருக்கு கருப்பண்ணசாமியின் வரவால் திடீரென்று ஆவேசம் வந்து வதவதவென்று எழுதிவிட்டார். இப்போதாவது எனக்கு பதில் எழுத தைரியம் வந்ததே. நேசகுமாரின் வதவத கேள்விகளுக்கும் குழப்பங்களுங்கும் எனது பதிவிலே பதில் தருகிறேன். படித்துக் கொள்ளுங்கள். முடிந்தால் வாருங்கள் விவாதிக்கலாம்.
ஈர வெங்காயம் தெரிஞ்ச பூனைப்பாண்டி அப்பு,
// அது எதிரிகள்/சமூக விரோதிகளால் பாதிக்கப்படாமல் இருக்க...//
இதே குதர்க்க வதத்தின் படி, நேச குமாரை எதிரி/ தேச விரோதி என்று அடையாளம் காட்டியமைக்கு நன்றி!
அய்யா சாமிகளா,
நபிகள் எதையோ எழுதி வைத்துவிட்டு போய் சேர்ந்துவிட்டார்.நீங்களும் காலங்காலமாக அதையே பின்பற்றி ஏதோ வாழ்ந்துவிட்டு இப்போது நீங்களும் வாழாமல் மற்றவரையும் வாழவிடாமல் பூமியை நரகமாக்குகிறீர்கள்.புலி வாலைப் பிடித்தாயிற்று, இனி விடமுடியாது என நினைக்கிறீர்கள்...மனமிருந்தால் மார்க்கமுண்டு...
பேசாமல் நேசக்குமாரை உங்கள் புதிய இறைத்தூதராக ஏற்றுக்கொண்டு விடுங்கள்...
அறுதியிட்டுக் கூறுகிறேன்...முஸ்லீம் இனம்
ஒரு சிறந்த இனமாக வரலாற்றில் இனம் காணப்படும்...
ஏங்க நேசக்குமார்...நீங்க ஒரு 500 வருஷத்துக்கு முன்னாடி பிறந்து இப்ப சொல்றதை எல்லாம் ஒரு புனித நூல் மாதிரி எழுதி வைத்து விட்டு போய் சேர்ந்து இருந்தால் இந்துக்கள் நாங்களாவது பிழைத்து இருப்போமே ....
இப்ப சொன்னா ஒருத்தனும் ஒத்துக்கொள்ள மாட்டான்...செத்தாதான் இங்க மரியாதை...
சத்குரு ஜக்கி வாசுதேவ் சொல்வாரு...
"கிருஷ்ணன் அந்தக் காலத்தில் வாழ்ந்துவிட்டுப் போய்விட்டார்...அதனால் அவரைக் கடவுள் என்று இப்போது பூஜிக்கிறீர்கள்...ஆனா அவரு இப்போ உங்க பக்கத்துவீட்டில் வாழ்ந்து கொண்டு அப்ப நடத்திய லீலைகளை நடத்துனா அடிச்சே கொன்னு போடுவீங்க" என்று...
இப்போ நபிகள் வாழ்ந்து குரான்ல உள்ளதயெல்லாம் உபதேசிச்சிருந்தா அவருக்கு சவூதியிலேயே ஒரு நல்ல சமாதி கிட்டியிருக்கும்...
அண்ணே,
நான் சொன்னத கொஞ்சம் யோசிங்க...நம்ம மக்கள் ஒரு மிகப்பெரிய செம்மறி ஆட்டு கூட்டம்..ஒருத்தன் சாமி , பெரியாளு என்று பிரபலமாக்கி வுட்டா (மருவத்தூர் சாமி, கல்கி சாமி, சாய்பாபா சாமி, நபி சாமி) அவன் பரம்பரை அழியும்வரை அவன கும்புட்டு அவன் சொன்னதயெல்லாம் கேட்பாங்க...நம்ம நேரம்...வந்ததும் சரியில்ல..வாய்ச்சதும் சரியில்ல...
மனிதர்கள் பத்தியும் வாழ்க்கை பத்தியும் இவ்ளொ தெளிவா தீர்க்கமா பேசுற நம்ம நேசக்குமார ஒரு சாமி ஆக்கி வுட்டா அத ஆடு மாதிரியாவது பின்பற்றி மக்கள்
நல்லா இருக்க மாட்டாங்களான்னு ஒரு நப்பாச தான்...
இன்னொரு விஷயம் நம்ம நேசக்குமார் ஒரு வெகுஜன எழுத்தாளர் மாதிரி ஜனரஞ்ஜகமா எழுதுறார்...நம்ம மக்கள் கிட்ட ரீச் ஆக அது ரொம்ப முக்கியம்...ஒரு சத்குரு ஜக்கி, ஓஷோ பாணியில் சொன்னா எத்தன பேர் கேட்பான்???
என் சார்பாய் பதில் சொன்ன நேசக்குமாருக்கு நன்றி!
இஸ்லாமியர் அல்லாதவர் மெக்கவிற்கு போக முடியுமா? என்பதற்கு இப்படி கூட குரோத பதில்கள் சொல்லமுடியுமா?
மீண்டும் சொல்கிறேன் இஸ்லாமியர் பற்றிய கேள்விகளுக்கு ::நேசகுமார்:: போன்ற கடவுளை நம்பாத பகுத்தறிவுவாதிகளிடம் எப்படி நேர்மையான பதில் கிடைக்கும்?
//பெண்கள் எல்லாம் உழுவதற்கான விளைநிலம், எப்போது வேண்டுமானாலும் அவர்களுடன் உறவு வைத்துக்கொள்ளுங்கள் என்று அல்லாஹ் திருக்குரானில் போதிக்கிறார்// ::பெண்கள்:: என்பதாக அல்ல ::மணைவி:: என்றே சொல்லப்படுகிறது. நேசகுமார், இப்போதாவது நீங்கள் விதண்டாவதி என ஒத்துக் கொள்வீர்களா?
கொஞ்சமாவது இஸ்லாமிய வி(கு)ரோத கண்ணோட்டத்தை குறைத்துக் கொண்டு எழுத முயற்சி செய்யுங்கள்.
கணினியில் ப்ரச்னை காரணமாக கால தாமதம்.
நேச குமார்,
//ஆனால், மனித குலத்திற்கு முழுமையான வழிகாட்டியாக விளங்கும் உங்களின் மார்க்கம், ஏனைய மனிதர்களை காபாவிற்குள் அனுமதிப்பதில்லையே? காபாவின் கஸ்டோடியனாக ஒரு இந்திய முஸ்லிமை நியமிக்க வழியிருக்கின்றதா? நீங்களும் உங்கள் மனைவியும், உங்கள் மசூதியில் சென்று வழிபாடு செய்ய முடியுமா? காபாவின் கஸ்டோடியனாக ஒரு இந்திய முஸ்லிமை நியமிக்க வேண்டும், ஒரு கறுப்பின முஸ்லிமை நியமிக்க வேண்டும் என்று முஸ்லிம்களில் யாராவது எந்த நாட்டிலாவது போராட்டம் நிகழ்த்தியிருக்கின்றார்களா?//
உங்களின் முதல் கேள்விக்கு என் முந்தைய பின்னூட்டத்தில் பதில் இருக்கிறது.
இரண்டாவது கேள்வி உலக அரசியல் நிர்வாகம் சம்பந்தப்பட்டது. புனித நகரங்கள் பூகோள ரீதியாக எந்த நாட்டில் இருக்கிறதோ அவர்கள் தானே கஸ்டோடியனாக வர முடியும். இந்தியாவில் அவை அமைந்திருந்தால் இந்திய அரசு. ஈரானில் அமைந்திருந்தால் ஈரான் அரசு.
மூன்றாம் கேள்விக்கு பதில், 'ஆம் - ஓ, செய்து வருகிறோமே.' என்பது தான்.
(இஸ்லாத்தில் தரப்பட்டுள்ள உரிமைகளையே ஆ? விகுதி போட்டு கேள்வியாக மாற்ற உங்களைப் போன்றவர்களால் தான் முடியும்.
இந்தியாவில் அப்படி முடியாமல் இருப்பதற்கு ஆயிரம் சமூக, அரசியல் காரணங்கள் உண்டு.
(ஆனால் அதையெல்லாம் எடுத்துச் சொன்னாலும் இஸ்லாத்தை தாக்குவதில் தான் உங்கள் குறி என்பதும் எனக்கு தெரியும் (இஸ்லாம் அனுமதித்துள்ள நிலையிலும்). (பெண்கள் பள்ளிக்குச் சென்று தொழ தடையில்லை என்பதை விளக்கி 'சுடர்' என்பவர் உங்களுக்கு எதிர்வினையாக எழுதிய தனிப் பதிவையும் நீங்கள் படிக்கவில்லை என்பதை வெளிச்சம் போட்டு காட்டுவதற்கு உங்களின் இக்கேள்வி உதவுகிறது. நன்றி).
நான்காம் கேள்வி தேவையே படாத ஒன்று.
ஒரே ஒரு செய்தி: என் அலுவலகத்திற்கு அருகில் உள்ள ஒரு பெரிய மசூதியின் தலைமை இமாம் இந்தியாவின் ஹைதராபாத்தைச் சேர்ந்தவர். இன்று சவூதி குடிமகனாக - சவூதியர் உட்பட நிறைய முஸ்லிம்களுக்கு மார்க்க விளக்கம் அளிப்பவராகவும் - தன்னுடைய தேனினுமினிய குரலோசையால்- சவூதி மற்றும் வளைகுடா நாடுகளின் வானொலிகளில் - குர் ஆன் ஓதலையும் வழங்கி வருகிறார்.
எனவே............ உங்களின் இக்கேள்விகள் மல்லாந்து படுத்து துப்பும் எச்சில் போன்றதே என்பதை வீம்புக்காக எத்தனை நாளைக்குத் தான் உணராது இருப்பீர்கள்?
(பி. கு: இந்த சாதாரண பதில் கூடத் தெரியாதவறாக உங்களை நான் நினைக்கவில்லை- எனவே.... என் இப்பின்னூட்டமானது உங்களின் குழப்ப வலையில் அறியாமல் வீழ்ந்து விடுகிறவர்களுக்குத் தான்.)
கடைசியாக என் முந்தையக்கருத்தை உறுதிப்படுத்தி:
நம் பாட்டன் சொன்னதிலிருந்து அனைவருக்குமாக:
"எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் - அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பதறிவு"
குறிப்பாக மதங்கள் என்றாலே பாய்ந்து வருகிற 'அறிவு ஜீவி' தோற்றத்தார் விஷயத்தில்.
நச்சுக்கருது நாரதர்கள் சிந்திப்பார்களாக
நந்தலாலாவின் 'தலாக்' பதிவிலே 'இந்து மதத்தின் குறைகளையும் நான் சாடியிருக்கிறேன்' என்ற உங்கள் பொய்யை எடுத்துக்காட்டி ஒரே ஒரு உதாரணம் கேட்டவருக்கு காட்ட 'சட்டியிலும் இல்லை - அகப்பையிலும் இல்லை' தானா?
//மனைவின்னா 'பெண்' கிடையாதா?//
எனில், உங்கள் பார்வையில் அனைத்து பெண்களும் மணைவியா?
//ஐயையோ! இல்லாட்டி மனைவின்னா மட்டும் அப்படி சொல்றது தப்பில்லையா? அவ்வளவு சுதந்திரமா பெண்களுக்கு!! //
இது இல்லறம் பற்றிய உங்கள் அறியாமையை காட்டுகிறது.
ஈரோட்டாரே, புரட்சிகரமாக எழுதத் தொடங்கி விட்டு ஏன் இந்த தடுமாற்றம்? கவனம்!!!
"//பெண்கள் எல்லாம் உழுவதற்கான விளைநிலம், எப்போது வேண்டுமானாலும் அவர்களுடன் உறவு வைத்துக்கொள்ளுங்கள் என்று அல்லாஹ் திருக்குரானில் போதிக்கிறார்// ::பெண்கள்:: என்பதாக அல்ல ::மணைவி:: என்றே சொல்லப்படுகிறது."
மனைவியானாலும் அவள் சம்மதத்துடந்தான் உறவு கொள்ள வேண்டும், இல்லையெனில் அது கற்பழிப்புக்கு சமம் என்று உங்களுக்கு தெரியாதா? பெண்களை இவ்வாறு உயிரில்லாப் பொருள் போல பேசுவது பாச்சை ஆணியவாதம்தானே?
அதே போல திருமணத்தை ஒப்பந்தமாக நிர்ணயிக்கிறது இஸ்லாம். எந்த ஒப்பந்தமும் இரு தரப்பாருக்கும் சம உரிமை வேண்டாமா? அவன் தலாக் சொல்லும் உரிமை பெற்றால் அவளுக்கும் அது வேண்டாமா? அவளுக்கு மட்டும் ஏன் இவ்வளவு கட்டுப்பாடு?
நான்கு பெண்கள் அளிக்கும் சாட்சி ஒரு ஆணின் சாட்சிக்கு சமமாக வைக்கப்படுகிறது. ஒரு பெண் இன்னொருவனால் கெடுக்கப்பட்டு கருவுற்றார். அதை ஹராம் என்று தீர்ப்பு சொன்ன ஜமாத் அவளைக் கெடுத்தவனை விட்டு விட்டது. ஏனெனில் அவன் அவளுடன் உறவு கொள்ளவில்லை என்று குரான் மேல் சத்தியம் செய்தானாம். அந்த 1:4 விதி இங்கு சதி செய்தது.பெண்ணுக்கு கல்லடியால் மரணம் என்று தீர்ப்பு. இது மிக சமீபத்தில் நடந்தது. தீர்ப்பு சொன்ன நீதிபதிகளுக்கு டி.என்.ஏ. டெஸ்ட் என்றிருப்பது தெரியாதாமா?
அன்புடன்,
டோண்டு ராகவன்
பெரும்பாலான முற்போக்கு சிந்தனையாளர்கள் இஸ்லாமிய பயங்கரவாதத்துக்கு சப்பைக் கட்டு கட்டுபவர்களாக இருக்கிறார்கள் என்ற பொது எண்ணத்தின் காரணமாக எழுதிவிட்டேன். ரோஸா மன்னிக்கவும்.
இஸ்லாமிய பயங்கரவாதத்தை எல்லோரும், எந்த கொள்கை சார்புள்ளவராக இருந்தாலும் எதிர்க்கவேண்டும். ஏனெனில் சுதந்திர எதிர்காலம், இஸ்லாமிய தீவிரவாதத்தை அழிப்பதில்தான் இருக்கிறது. இன்று எவ்வாறு எல்லா முஸ்லீம்களும் வேறு வழியின்றி இஸ்லாத்தை ஆதரிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்களோ அது போல நம் எதிர்காலமும் ஆகும்.
http://ennamopo.blogspot.com
அய்யா டோண்டு,
பெண்கள் விளைநிலம் போன்றவர்கள் என்பதற்கு அர்த்தம், எப்படி விளைநிலம், இல்லை என்ற நிலை இல்லாமல் உணவு தானியங்களை வழங்கி மனிதர்கள் வாழ்வதற்கான ஆதாரங்களை கொடுத்துக் கொண்டிருக்கிறதோ அந்த அர்த்தத்தில் தான்.
அடுத்து, ஓரளவாவது, இஸ்லாத்தைப்பற்றி புரிந்து கொண்டு விமர்சனம் செய்யுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.
அ) நபிகள் நாயகம் வேலை செய்து கொண்டிருந்த தனது மனைவியுடன் உடலுறவு கொண்டார் என்றுதான் அறிவிக்கப் பட்டுள்ளதே தவிர்த்து, தன் மனைவியின் அனுமதி இல்லாமல் உடலுறவு கொண்டார் என்றெல்லாம் கிடையாது.
ஆ) இரண்டு பெண்ணுடைய சாட்சிகள் ஒரு ஆணுடைய சாட்சிக்கு சமம், நான்கு பெண்கள் அல்ல.
நீங்கள் சொன்னதுபோல் அந்த நீதிபதிகள் டி.என்.ஏ டெஸ்டுகளை பயன்படுத்தி இருக்கலாம், அதற்கான வாய்ப்புகள் இருக்கும் போது.
"தன் மனைவியின் அனுமதி இல்லாமல் உடலுறவு கொண்டார் என்றெல்லாம் கிடையாது."
அனுமதி கேட்டு பெற்றதாக எங்காவது ஒப்புக்காகவாவது கூறப்பட்டிருக்கிறதா அப்துல்லா அவர்களே? அந்தப் பேச்சையேதான் எங்கும் பார்க்க முடியவில்லையே? அவ்வாறு எங்காவது எழுதப்பட்டிருந்தால் கூறுங்கள். தெளிவு பெற்று கொள்கிறேன்.
"இரண்டு பெண்ணுடைய சாட்சிகள் ஒரு ஆணுடைய சாட்சிக்கு சமம், நான்கு பெண்கள் அல்ல."
மெய் சிலிக்குது ஐயா, உங்கள் கருணையைப் பார்த்து. ஆக ஆணைத்தான் தலையில் தூக்கி வைத்து கொள்கிறீர்கள் என்று நீங்களே ஒத்துக் கொண்டீர்கள். 1:2 அல்லது 1:4 என்பது ஒரு சிறு டீடைல்தான். 1:1 என்று ஏன் இருக்கக் கூடாது? அதற்கும் காரணம் கூறியிருப்பார்களே அல்லது இதை வெறுமனே அறிவித்து விட்டுவிட்டார்களா?
"நீங்கள் சொன்னதுபோல் அந்த நீதிபதிகள் டி.என்.ஏ டெஸ்டுகளை பயன்படுத்தி இருக்கலாம், அதற்கான வாய்ப்புகள் இருக்கும் போது."
பயன் படுத்தவில்லையே ஸ்வாமி, அது எவ்வளவு பெர்ய நீதியற்றச் செயல். ஒரு பெண்ணின் உயிர் உங்களுக்கு விளையாட்டா? அந்த நீதிபதிகளுக்கும் அதே தண்டனைதான் தர வேண்டும் என்று நான் கூறுகிறேன். நீங்கள்?
தலாக் விஷ்யத்தை சௌகரியமாக விட்டுவிட்டீர்களே. இதற்கு நீங்கள் பதில் எழுதுவதை விட ஒரு இஸ்லாமியப் பெண் பதில் எழுதுவதே அதிகச் சிறப்பு.
அன்புடன்,
டோண்டு ராகவன்
//இஸ்லாமியப் பெண் பதில் எழுதுவதே அதிகச் சிறப்பு. //
இஸ்லாமியப் பெண் பதில் எழுதுவதா..? என்ன டோண்டு ஐயா விளையாடுகிறீர்களா.. ஏற்கெனவே எழுதிய தஸ்லிமா உயிரைக் காப்பாற்றிக் கொள்ள நாடு நாடாக ஒடிக் கொண்டிருக்கிறாரே..
மற்றவர்களின் புனித நகரங்கள், புனித கோவில்கள், சர்ச்சுகள், சினகாக் எல்லாவற்றையும் முஸ்லீம்கள் ஆக்கிரமித்து அவற்றை மசூதிகள் என்று அழைப்பார்கள். அவற்றையும் அவர்களே நிர்வகிப்பார்கள். அதையும் சொல்லுங்கள் பாபு. ஒருமுறை அதனை இவர்கள் மசூதி என்று அழைத்து அங்கே அல்லாவை உட்கார வைத்துவிட்டால் அவ்வளவுதான். அல்லாவை அங்கிருந்து நகர்த்த முடியாது. நகர்த்தினாயோ அவ்வளவுதான். கலவரம்தான். அப்புறம் கலவரத்துக்கு யூதர்களையும் கிரிஸ்துவர்களையும் இந்துக்களையும் மட்டும் குற்றம் சொல்ல ஒரு கும்பலை கிளப்பிவிட்டால் போயிற்று... போட்டு தாக்குங்கள் பாபு...
http://ennamopo.blogspot.com
நாகூர் ரூமியின் பதிவு ஒன்றிலிருந்து:
"இந்த கல்லாலடிப்பு தண்டனைகளில் பெரும்பாலானவற்றைப் பார்க்கும்போது அவை பெண்களுக்கு எதிரான ஒரு சதியாகவே இருப்பதைப் பார்க்க முடிகிறது. ஒரு சில உதாரணங்கள் :
1. ஆ·ப்கனிஸ்தானில் நெருங்கிய குடும்ப உறுப்பினரைத் தவிர வேறு ஆண்களோடு ஒரு பெண் பார்க்கப்படுவாளானால், அது அவளுக்கு மரணதண்டனைக் குரிய குற்றமாகக் கருதப்பட்டது. 1996 மார்ச் 28ல் ஜமீலா என்ற பெண் அப்படித்தான் கல்லால் அடித்துக் கொல்லப்பட்டாள்.
2. நூர் பீபி என்ற 40 வயதுப் பெண்ணும் 38 வயது துர்லய் என்பவரும் இப்படிக் கொல்லப்பட்டது 1996 நவம்பரில். அவர்களைக் கொல்ல பனம்பழ அளவுள்ள கற்கள் பயன்படுத்தப்பட்டன! "இஸ்லாமிய சட்டம் அமுலாக்கப்படுவதைக் கண்டு நான் மிகவும் சந்தோஷம் அடைகிறேன்" என்று இந்த கொலைபற்றிச்சொன்னார் வலீ என்ற அதிகாரி!
3. ஐக்கிய அரபு அமீரகத்தில் வீட்டு வேலை பார்த்த கர்தினி என்ற இந்தோனேஷியப் பெண்ணை ஒரு இந்தியன் கர்ப்பவதியாக்கிவிட்டு நாட்டைவிட்டு ஓடிவிட்டான். குற்றம் சாட்டப்பட்ட அவளுக்கு ஒரு வழக்கறிஞரோ, மொழிபெயர்ப்பாளரோ இன்றி அவள் வழக்கு அவளுக்கு புரியாத மொழியில் நடத்தப்பட்டது. இறையருளால், ஓராண்டு சிறைத்தண்டனை கொடுக்கப்பட்டு நாடுகடத்தப்பட்டாள்.
4. 2001 அக்டோபர். ச·பியா ஹ¤ஸைனி என்ற நைஜீரியப் பெண், கற்பழிக்கப்பட்டு கர்ப்பமானதற்காக, கல்லாலடித்துச் சாகவேண்டும் என்று நைஜீரிய இஸ்லாமிய நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இறையருளால், கடைசியில் அவள் தப்பித்தாள். அவள் நீதிமன்றத்தில் அமர்ந்து தன் குழந்தைக்கு பால்கொடுத்துக்கொண்டே சொன்ன வார்த்தைகள் யாருடைய மனசாட்சியையும் உலுக்குபவை :
"நான் மட்டும்தான் தண்டிக்கப்படுவேன். ஏனென்றால், சட்டத்தின் அநீதி என்னவெனில், பெண்களை கர்ப்பிணிகளாக்குவதற்காக ஆண்களை சட்டம் தண்டிப்பதில்லை. என் குற்றம் அடல்ட்ரி அல்ல. என் குற்றம் கர்ப்பமானதுதான். ஏனெனில், பெண்கள் மட்டும்தானே கர்ப்பவதியாக முடியும்? எனவே, என் உண்மையான குற்றம் நான் பெண்ணாக இருப்பதுதான். ஆண் எப்போதுமே கர்ப்பமாக்கிவிட்டுத் தப்பித்துவிடுவான். துரோகியின் விந்தைச் சுமப்பதுதான் நாங்கள் செய்த பாவம்"
5. 2001 டிசம்பர். சூடான். தன் 18 வயது கர்ப்பிணி மனைவி அகோக் ஒழுக்கம் கெட்டவள் என்று அவள் கணவன் சொன்னான். தான் கற்பழிக்கப்பட்டதாக அவள் சொன்னாள். அவள்தான் விசாரிக்கப்பட்டான். அவளைக் கற்பழித்தவன் விசாரிக்கப்படவில்லை. (நிறைய வழக்குகள் இந்த மாதிரி ஒருதலைப் பட்சமாகவே இருக்கின்றன). அவளுக்கு 75 கசையடிகள் கொடுக்கப்பட்டன.
6. 2003 செப்டம்பர் 25. கடைசியாக தப்பித்தவள் நைஜீரியாவைச் சேர்ந்த ஆமினா லவால் குராமி என்ற பெண்தான் (நிழல்படம்). விவாகரத்து செய்யப்பட்ட இவள் கருவுற்றிருந்தாள் என்று நைஜீரிய ஷரியத் நீதி மன்றத்தினால் கல்லால் அடித்துக் கொல்லப்பட வேண்டும் என்று தீர்ப்பளிக்கப்பட்டாள். ஆனால் குழந்தை பிறந்து பால் குடிப்பருவம் மறக்கடிக்கப்படும் வர அவகாசம் வழங்கப்பட்டது. கிட்டத்தட்ட 1.2 மில்லியன் ஈ மெயில்கள் அரசுக்கும் அதிகாரிகளுக்கும் அனுப்பப் பட்டது. நைஜீரிய அரசின்மீதான சர்வதேச அழுத்தம் அதிகமாகிக்கொண்டே போனது.
நைஜீரிய அரசு, இனிமேல் கல்லாலடித்துக் கொல்லும் தண்டனையை வலியுறுத்தமாட்டோம் என்று வெளிப்படையான பொது அறிவிப்பு ஒன்றை அக்டோபர் 29, 2002 அன்று வெளியிட்டது."
இப்பதிவுக்கு ஹுசேன் என்பவர் பதறிப்போய் இட்டப் பின்னூட்டம்:
"
ஹுசேன் 11/16/2004 , 9:33:20 காலை.
"அய்யா ரூமி தயவுசெய்து உங்களுடைய இஸ்லாம்/குரான் சம்பந்தமான கட்டுரைய இனிமேலாவது நிறுத்துங்க. "அப்பன் குதிருக்குள் இல்லை" என்பது போல் நீங்களே எல்லாத்தையும் போட்டுக் கொடுத்து விடுவீர்கள் போல் தெரிகிறது. எல்லாச் சமய/மத நூல்களும் பல வருடங்களுக்குமுன் எழுதப்பட்டவை. அவைகள் அந்தக் கால சூழ்நிலைகளுக்கு பொருந்தி இருக்கலாம். இப்போது நிச்சயம் பொருந்தாது. தயவு செய்து இம்சை செய்யாதீர்கள். மதவாதியாக வாழாமல் "மனிதனாக" வாழ முயற்சி செய்யவும்.
உங்களுக்கு பதில் சொல்லும் சாக்கில் திண்ணையில் "நேசக் குமார்" என்ற ஒரு நபர் எழுதியிருப்பதை தயவு செய்து படிக்கவும்."
அவர் கவலை அவருக்கு. பெண்ணைப் பற்றிக் கவலைப்பட அவர்கள் அவ்வளவு முக்கியம் அல்லவே.
ஒரு கற்பழிப்பு வழக்கு வருகிறது. பெண் தான் கற்பழிக்கப் பட்டதை பற்றி கூறுகிறார். ஆண் அதை மறுத்து சாட்சி அளிக்கிறான். வேறு சாட்சியம் இல்லை. இப்போது உங்கள் 1:2 விதி வருகிறது. பெண் தண்டிக்கப்படுகிறாள். மரபணு சோதனை? மூச். பாதிக்கப்பட்டப் பெண்ணுக்கு அனுதாபம் இல்லை, ஆனால் தண்டனை உண்டு.
இந்திய முஸ்லிம் பெண்கள் விழித்து கொள்ள வேண்டும். முடிந்த வரை இந்திய சிறப்பு திருமண சட்டத்தைப் பாவியுங்கள். நீங்கள் இழக்க ஒன்றுமில்லை - உங்கள் அடிமைச் சங்கிலிகளைத் தவிர
இக்கேள்விக்கு விட்டேத்தியான பதில். யா அல்லாஹ்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
டோண்டு சார்,
//பெண்களை இவ்வாறு உயிரில்லாப் பொருள் போல பேசுவது பச்சை ஆணியவாதம்தானே? //
தன் மணைவியை நன்றாக பயண்படுத்திக் கொள்ளுங்கள், நீங்கள் ஒருவருக்கு ஒருவர் ::ஆடையாக:: படைக்கப் பட்டிருக்கிறீர்கள், என்று பெண்களை உயிருடன் புதைத்துக் கொண்டிருந்த மக்களிடம், பெண்ணின் மேன்மையை பகிரங்கமாக சொன்னது இஸ்லாம். இதில் ::ஆணியவாதம்:: எங்குள்ளது?
//இந்திய முஸ்லிம் பெண்கள் விழித்து கொள்ள வேண்டும். முடிந்த வரை இந்திய சிறப்பு திருமண சட்டத்தைப் பாவியுங்கள். நீங்கள் இழக்க ஒன்றுமில்லை - உங்கள் அடிமைச் சங்கிலிகளைத் தவிர//
என்ன சொல்ல வருகிறீர், எதை அடிமைச்சங்கிலி என்கிறீர்? விளக்குவீர்களா?
சகோதரர் சுதர்ஸன்,
//ஏற்கெனவே எழுதிய தஸ்லிமா உயிரைக் காப்பாற்றிக் கொள்ள நாடு நாடாக ஒடிக் கொண்டிருக்கிறாரே...//
ஒரு பெண் எத்தனை ஆணுடன் உறவு கொண்டாலும், அதில் யாருடைய கருவை சுமப்பது என்ற ::கருப்பை சுதந்திரம்:: கேட்டதும் இந்த தஸ்லிமாதான். இதுவா பெண்ணுரிமை? ஒரு விபச்சாரியின் கோரிக்கைக்கும் இதற்கும் வித்தியாசம் உண்டா?
ஆரோக்கியம்,
//ஏனெனில் சுதந்திர எதிர்காலம், இஸ்லாமிய தீவிரவாதத்தை அழிப்பதில்தான் இருக்கிறது//
தீவிரவாதத்தை அழிப்பது அவசியம். ஆனால் ::இஸ்லாமிய:: என்று தனியாக சொல்வதுதான் இடிக்கிறது. சுதந்திர எதிர்காலம் யாருக்கு என போட்டு உடைங்களேன்.
ஐயா ஆரோக்கியம்,
//ஒருமுறை அதனை இவர்கள் மசூதி என்று அழைத்து அங்கே அல்லாவை உட்கார வைத்துவிட்டால் அவ்வளவுதான். அல்லாவை அங்கிருந்து நகர்த்த முடியாது. நகர்த்தினாயோ அவ்வளவுதான். கலவரம்தான்//
என்ன ஒரு பச்சை ப்புளுகு .. கூசாமல் எப்படி பொய் சொல்ல முடிகிரறது? அயோத்தியில் என்ன நடந்தது.. இன்னும் காசி, மதுரா பள்ளிவாசல்களில் இருந்த்து கோவிலை மீட்போம் என அறைகூவல் விடுப்பது யார்?? அல்லாவை யாரும் "உட்கார" வைக்க வேண்டியது இல்லை... ராமர் சிலைகளைத்தான் இரவோடிரவாக உட்கார வைக்கப்பட்டது..
உமது பெயரில் மட்டும் தான் ஆரோக்யம் உள்ளது போலும்..
//இந்திய முஸ்லிம் பெண்கள் விழித்து கொள்ள வேண்டும். முடிந்த வரை இந்திய சிறப்பு திருமண சட்டத்தைப் பாவியுங்கள். நீங்கள் இழக்க ஒன்றுமில்லை - உங்கள் அடிமைச் சங்கிலிகளைத் தவிர//
என்ன சொல்ல வருகிறீர், எதை அடிமைச்சங்கிலி என்கிறீர்? விளக்குவீர்களா?"
விளக்கம்தானே, இதோ. தலாக் செய்ய உரிமை இல்லாதது, மனைவிக்கு உடல் நிலை ஒத்துழைக்கிறதோ இல்லையோ, கணவனின் வன்புனர்ச்சிக்கு (ஆம் இது வன்புணர்ச்சியே என்று பொதுச் சட்டம் கூறுகிறது)உடன்பட வேண்டியிருக்கிறதே இதையெல்லாம்தான் கூறினேன்.
நீங்கள் இந்து திருமணங்களில் நடப்பதாகக் கூறும் அட்டூழியங்கள் சட்ட விரோதமானவை. ஆனல் இஸ்லாத்தில் நடக்கும் அக்கிரமங்கள் முஹம்மதுவால் ஆமோதிக்கப்பட்டவையே என்பதை உங்களவர்களே நுணலும் தன் வாயால் கெடும் என்றுபோல கூறி நிலைநிறுத்தி விட்டார்கள். முதலில் ஆணின் சாட்சியம் பேண்ணின் சாட்சியம் ஆகியவற்றைப் பற்றிய 1:2 விகிதத்தை விளக்குங்கள்.
த்ஸ்லீமாவை விபசாரி என்று கூறிவிட்டிர்கள். எந்த மதத்தவனாயினும் வரதட்சணை வற்புறுத்திக் கேட்டு தொந்திரவு செய்யும் ஆண் விபசாரனே.
நாகூர் ரூமி எடுத்துரைத்த பாயின்டுகளுக்கு வாருங்கள் சகோதரரே.
அன்புடன்,
டோண்டு ராகவன்
//இதுவா பெண்ணுரிமை? ஒரு விபச்சாரியின் கோரிக்கைக்கும் இதற்கும் வித்தியாசம் உண்டா? //
அதாவது ஒரு இஸ்லாமிய ஆண் எத்தனை பேரை வேண்டுமானாலும் மணக்கலாம், ஆனால் அதையே ஒரு பெண் கேட்டால் அவள் விபச்சாரி, அவளை கொல்ல வேண்டும். அடிப்படையிலேயே ப்ரச்னை இருக்கிறதே? பேச்சுக்கு எழுத்துக்கு எல்லாம் தண்டனை கொலைதானா..?
பெண் என்பவளை தெய்வமாக எல்லாம் தயவு செய்து நடத்த வேண்டாம், சக மனித உயிரினமாக ஆணுக்கு சமமாகவாவது நடத்தலாமே என்று கேட்டால் ஆண், பெண் உடற்கூறுகள் வெவ்வேறாகத்தானே இருக்கிறது என்று சமாளிப்பு பதில்தான் வரும்.
தவறாகப் புரிந்து கொண்டீர் டோண்டு, தஸ்லிமாவை விபச்சாரி என சொல்லவில்லை. பலருடன் உறவு கொண்டாலும் கருப்பையில் யாரின் கருவை சுமப்பது என்ற உரிமை பெண்ணுக்குத்தான் உண்டு. கல்யாணம் என்ற சடங்குகளால் அவளின் ::உரிமை:: யில் தலையிட குர்ஆனுக்கு உரிமையில்லை என்ற தஸ்லிமா நஸ்ரீனின் கருத்துக்களில் நியாயம் இருப்பதாக சொல்கிறீர்களா?
தயவு செய்து என் பதிவை மீண்டும் படியுங்கள்.
வரதட்சினை பற்றி நீங்கள் சொல்வதில் எனக்கும் உடன்பாடே.
கணவனோ மணைவியோ இதில் ஒருவருக்கொருவர் விரும்பினால் தான் அதற்கு பேர் உடலுறவு. நோயுற்றிருந்தாலும் மணைவியுடன் புணர்வு செய்ய இஸ்லாம் சொல்லியிருக்கும் என்று நம்புகிறீர்களா?
இஸ்லாம் பெண்ணை எந்த இடத்திலும் ஆணை விட தாழ்ந்தவள் என்று சொல்லவில்லை. நிதி சம்பந்தமான கணக்கு வழக்குகளை எழுதி வைத்துக் கொள்ளுங்கள். இரண்டு ஆண்களின் சாட்சியத்தை பெறுங்கள். இரண்டு ஆண்கள் இல்லாத பட்சத்தில் ஒரு ஆணும் இரண்டு பெண்களும் சாட்சியமாக பெறுங்கள் என்றே சொல்கிறது.
மேலும் சாட்சி சம்பந்தப்பட்ட குர்ஆன் வசனங்களில் சில சமயம் ஒரு ஆணின் சாட்சி ஒரு பெண்ணின் சாட்சிக்கு சமம் என்றும் (உதாரணமாக ஒரு மணைவி, கணவனின் இல்லறத் தேவையை பூர்த்தி செய்யாதவளாக இருக்கிறாள் என கணவனால் பழி சொல்லப் பட்டால், அப்பெண்ணின் சாட்சியம் மட்டும் போதும்) சொல்லப்பட்டுள்ளது.
பொருளாதார விவகாரங்களில் மட்டுமே ஒரு ஆணின் சாட்சிக்கு இரண்டு பெண்களின் சாட்சியை வலியுருத்துகிறது. இரண்டு பெண்கள் இல்லாத பட்சத்தில் ஒரு பெண்ணின் சாட்சியை மறுக்க முடியாது.
விபச்சாரத்தில் ஈடுபட்டது ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் இஸ்லாம் ஒரே தண்டனையைதான் பரிந்துறைக்கிறது. மறுக்க முடியுமா?
//ஆனால் இஸ்லாத்தில் நடக்கும் அக்கிரமங்கள் முஹம்மதுவால் ஆமோதிக்கப்பட்டவையே என்பதை உங்களவர்களே நுணலும் தன் வாயால் கெடும் என்றுபோல கூறி நிலைநிறுத்தி விட்டார்கள்//
அக்கிரமங்கள் என்பது உங்கள் பார்வையில் எது? மற்ற மதங்களில் நடக்கும் சடங்குகள்,சம்பிரதாயங்களைப் பற்றி நான் விவாதிக்க விரும்பவில்லை. எனது மார்க்கத்தின் மீதான தவறான அல்லது அவதூறு குற்றசாட்டுகளுக்கு பதில் சொல்லி தெளிவு படுத்தவே முயல்கிறேன்.
தமிழ் மனத்தில் இஸ்லாமிய பிரச்சாரம் செய்வது என் விருப்பமல்ல. ஆனால் இஸ்லாமிய துவேஷ கருத்துக்களுக்கு பதில் சொல்லும் பொறுப்பு எனக்கு உண்டு என்பதை கவனத்தில் கொள்ளவும்.
மற்றபடி முஹம்மது நபியைப்பற்றிய தங்களின் மதிப்பீடு நீங்கள் தவறாக வழிநடத்தப் பட்டுள்ளீர்கள் என் ஐயுருகிறேன்.
இஸ்லாமியர் அல்லாதவர்கள் மெக்கவிற்கு போக முடியுமா? என்ற சாதாரண சந்தேகத்திற்கு எத்தனை குதர்க்கமான, துவேசமான பதில்கள் என்பதை கவனித்தீர்களா?
"பலருடன் உறவு கொண்டாலும் கருப்பையில் யாரின் கருவை சுமப்பது என்ற உரிமை பெண்ணுக்குத்தான் உண்டு. கல்யாணம் என்ற சடங்குகளால் அவளின் ::உரிமை:: யில் தலையிட குர்ஆனுக்கு உரிமையில்லை என்ற தஸ்லிமா நஸ்ரீனின் கருத்துக்களில் நியாயம் இருப்பதாக சொல்கிறீர்களா?"
கண்டிப்பாக தஸ்லீமாவின் கருத்தில் நியாயம் உண்டு. உடல் அவளுடையது, கருப்பை அவளுடையது. உயிரைக் கொடுத்து குழந்தை பெறப் போகிறவள் அவள். அவளுக்குத்தான் இதில் உரிமை உண்டு, உண்டு, உண்டு. குர்-ஆனை இன்டெர்ப்ரெட் செய்யும் ஆண் மௌல்விக்கோ காஜிக்கோ கிடையாது.
"கணவனோ மணைவியோ இதில் ஒருவருக்கொருவர் விரும்பினால் தான் அதற்கு பேர் உடலுறவு. நோயுற்றிருந்தாலும் மணைவியுடன் புணர்வு செய்ய இஸ்லாம் சொல்லியிருக்கும் என்று நம்புகிறீர்களா?"
நான் நம்புவது இருக்கட்டும். நீங்கள் கோட் செய்தது அதைத் தெளிவாகக் கூறவில்லையே. மனைவியின் சம்மதம் பெற வேண்டும் என்று கருப்பு வெள்ளையில் எங்காவது கூறப்பட்டிருந்தால் பேசுங்கள். நான் அறிந்த ஒரு தனிப்பட்ட வழக்கை வைத்தே பேசுகிறேன். சம்மதம் கேட்க வேண்டும் என்று குரான் கூறவில்லை என்பது ஆண் தரப்பு வதம். அம்மாதிரி எழுத்தில் இருந்தால் கூறுங்கள். உங்களுக்கு புண்ணியமாகப் போகட்டும்.
"நிதி சம்பந்தமான கணக்கு வழக்குகளை எழுதி வைத்துக் கொள்ளுங்கள். இரண்டு ஆண்களின் சாட்சியத்தை பெறுங்கள்"
அதுதான் ஏன். இங்கும் எங்கும் ஆண் பெண் சமமாக இருக்கவேண்டும் அல்லவா?
"விபச்சாரத்தில் ஈடுபட்டது ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் இஸ்லாம் ஒரே தண்டனையைதான் பரிந்துறைக்கிறது."
எவ்வளவு ஆண்களுக்கு அது நிறைவேற்றப்பட்டது என்று கூற முடியுமா? நன்றி. சாதா டி.என்.ஏ. டெஸ்டையே எடுக்கவில்லையாம்.
"மற்றபடி முஹம்மது நபியைப்பற்றிய தங்களின் மதிப்பீடு நீங்கள் தவறாக வழிநடத்தப் பட்டுள்ளீர்கள் என் ஐயுருகிறேன்."
ஐயா சென்னை புதுக்கல்லூரியில் புகுமுக வகுப்பில் படித்தபோது (சமீபத்தில் 1962 - 63 கல்வியாண்டில்) எங்கள் அன்புக்குரிய தமிழ் ஆசிரியர் அமீர் அலி அவர்கள் எடுத்த சீறாப்புராணப் பாடத்தை உருக்கத்துடன் கேட்டவன் நான். நபிகள் நாயகத்தின் மேல் எனக்கு மிகுந்த மதிப்பு உண்டு. அவர் காலகட்டத்தில் சில சட்டங்கள் நியாயமாகவே இருந்திருக்கலாம். ஆனால் அதை இப்போதும் வைத்துக்கொண்டு ஜனத்தொகையில் பாதியாக இருக்கும் பெண்களுக்கெதிராக அவை பிரயோகம் செய்யப்படுவது சகிக்க முடியவில்லை. ஒன்று நிச்சயம் ஐயா. நீதிவழிப்படி நடப்ப்து அவசியம், அவ்வாறு நடப்பது எல்லோருக்கும் வெளிப்படையாகத் தெரியவும் வேண்டும்.
என் தலாக் பற்றிய சந்தேகங்களை தயவு செய்து நிவர்த்திக்க முடியுமா?
அன்புடன்,
டோண்டு ராகவன்
சகோதரர் டோண்டு ராகவனுக்கு,
நீங்கள் சந்தித்த தனிப்பட்ட வழக்கின் விபரம் தெரியவில்லை. எனினும் எச்சூழலிலும் நோயுற்ற அல்லது விரும்பாத மணைவியுடன் உடலுறுவு கொள்ளும்படி வற்புறுத்த இஸ்லாத்தில் அனுமதி இல்லை என்பதை வேண்டுமென்றால் இஸ்லாமிய சட்ட அறிஞர்களின் ஆலோசனையைக் கேட்டு உறுதிப்படுத்திக் கொள்ளவும்.
(அத்தகைய கணவனிடமிருந்து இஸ்லாமிய (ஷரீஅத்) சட்டபடி பாதுகாப்பு பெறலாம் என்பதையும் அறியவும்)
கஷ்டப்பட்டு கருவை சுமந்து பெற்றெடுக்கும் பெண்ணுக்குதான் அக்கருவை சுமப்பதா வேண்டாமா என்று முடிவு செய்யும் உரிமையுள்ளது என்பதில் எனக்கும் உடன்பாடே.
ஆனால், மருத்துவர் தஸ்லீமா நஸ்ரீனின் கருத்தில் உங்களுக்குள்ள கருத்து தவறு என்பது என் அபிப்ராயம். யாரின் கருவை சுமப்பது என்பதல்ல வாதம். ஒரு பெண் எந்தனை ஆணுடன் வேண்டுமானாலும் உறவு வைத்துக் கொள்ளலாம். அதில் யாருடைய கருவை சுமப்பது என்பது பெண்ணின் உரிமை என்கிறார்.
பெண்ணுரிமை என்ற போர்வையில் நான்கு முறை கணவர்களை மாற்றியும், ஆணுக்கு சட்டையின்றி அலையும் உரிமை இருப்பின் ஏன் பெண்ணுக்கு கூடாது எனவும் எழுதுகிறார். இதனை ஏற்றுக் கொள்கிறீர்களா?
::தலாக்:: என்பது ஒரு அனுமதியே தவிர, மூன்று முறை தலாக் சொல்லி பெண்ணுரிமயை மீறுவதாக மீடியாவால் பரப்பப்பட்டுள்ளது. மற்ற மதங்களில் நடக்கும் விவாகரத்தை விட மத ரீதியாக அணுமதிக்கப்பட்ட முஸ்லிம்களிடம் குறைவு என்பது தெரியுமா?
ஆணுக்கு எப்படி மூன்று வெவ்வேறு சந்தர்ப்பங்களில் தலாக் சொல்லி விவாக விலக்கு பெற முடியுமோ அதே போல்தான் தனக்கு பிடிக்காத கணவனை ::குழா:: எனும் ஒரே தவணையில் விவாகரத்து செய்ய பெண்ணுக்கு உரிமையுள்ளது.
1400 வருடங்களுக்கு முன் வந்த கொள்கைகள் தற்காலத்திற்கு ஒவ்வாது என வாதிடுவதை ஏற்க முடியவில்லை. காலத்திற்கு ஏற்ப மாற்றப்படும் கொள்கைகள் எப்படி வாழ்க்கை நெறியாக முடியும்?
சாட்சி விஷயத்தில் 1:2 ஏன் என்ற கேள்விக்கு, மேற்கொண்டு விளக்கும் அளவுக்கு என் மார்க்க ஞானம் குறைவு என்பதை ஒப்புக் கொள்கிறேன். இரண்டு ஆண் ஒரு பெண் என்ற அளவீடு இருந்தாலும் கூட ஏன் 2:1 என்ற பாகுபாடு என கேள்வி வர வாய்ப்புள்ளது. மாறாக ஆண்களுக்கு உரிமை பறிக்கப் பட்டுள்ளது என யாரும் எழுதப் போவதில்லை என்பதையும் அறியவும்.
மேலும் உங்களுக்கு சந்தேகம் இருப்பின்
www.irf.net என்ற தளத்தில் தொடர்பு கொண்டு Dr.Zakir Nayak அவர்களிடம் விளக்கம் பெறலாம். நன்றி!
contivity சொன்னார் நான் பச்சை பொய் புழுகுகிறேன் என்று.
இதோ இணைப்புகள்
சர்சுகள் மசூதிகளாக மாற்றப்பட்ட குறிப்புகள்
http://www.travellady.com/articles/article-turkey.html
http://newmanservices.com/turkey/thumbs.asp?hagiasophia
ஜோராஸ்ட்ரிய கோவில்கள் மசூதிகளாக மாற்றப்பட்டது
http://www.pyracantha.com/Z/atarsh.html
யூதர்களின் சினகாக் மசூதியாக மாற்றப்பட்டது
http://en.wikipedia.org/wiki/Temple_Mount
இதே போல இந்தோனேஷியாவில் இந்துக்கோவில்கள் மசூதிகளாக மாற்றப்பட்டன
மலேசியாவிலும் பழங்காலத்திய இந்துக்கோவில்கள் மசூதிகளாக மாற்றப்பட்டன
காஷ்மீரில் பல நூறு கோவில்கள் இஸ்லாமியரால் இடிக்கப்பட்டுள்ளன
இது நடக்கும் கதை.
அதெப்படி மற்றவர்கள் புனிதம் என்று கருதும் கோவில்கள் (காசி மதுரா அயோத்தியின் முக்கிய கோவில்களிலெல்லாம் மசூதி உட்கார்ந்து கொண்டிருக்கிறது? இரவோடு இரவாக அல்லா அங்கே பேய்களை விட்டு மசூதி கட்டி விட்டாரா?
நீங்கள் போய் மற்றவர்களின் புனித இடங்களில் உட்கார்ந்து கொள்வீர்கள். திருப்பிக்கேட்டால் பச்சை புழுகு, விதண்டாவாதம், கலவரமா? என்ன சார் இது?
இதே போல் ஒரு நாள் மக்காவும் மதீனாவும் கோவிலாகவோ சர்ச்சாகவோ ஆகப்போகிறது பாருங்கள்
ennamopo.blogspot.com
//இதே போல் ஒரு நாள் மக்காவும் மதீனாவும் கோவிலாகவோ சர்ச்சாகவோ ஆகப்போகிறது பாருங்கள்//
::ஆரோக்கியமான:: சிந்தனை!!!
//ஒரு ஆண் எந்தனை பெண்ணுடன் வேண்டுமானாலும் உறவு வைத்துக் கொள்ளலாம்.//
சரி.
//ஒரு பெண் எந்தனை ஆணுடன் வேண்டுமானாலும் உறவு வைத்துக் கொள்ளலாம். //
தவறு.
முஸ்லிம் ஆண்கள் ஏக காலத்தில் பல பெண்களை மணந்து கொண்டு அவர்களோடு உறவு வைத்துக் கொள்ளலாம்...அதையே பெண்கள் செய்வதாக ஒரு வாதத்திற்கு வைத்துக் கொண்டால்கூட அது எப்படி தவறாகும்??
தஸ்லிமா பல பேருடன் உறவு வைத்துக்கொண்டு அதில் பிரச்னைகள் எழுந்ததினால் அந்த உரிமை தனக்கு வேண்டி போராட வரவில்லை..முஸ்லிம் சமுதாயத்தின் பெண்/சமூக விரோத நடவடிக்கைகளினால் அவர் எதிர்மறை மனோபாவம் கொண்டு இப்பிரச்னையை ஒரு குறியீடாகக் கொண்டு போராடினார்...
சொல்லப்போனால் இணையம் இன்னபிற மீடியாக்கள் மற்றும் உலகெங்கும் முஸ்லிம்களுக்கு எதிராக வைக்கப்படும் விமர்சனங்கள், எடுக்கப்படும் நடவடிக்கைகள், முஸ்லிம்களின் சமூக விரோத நடவடிக்கைகளால் எழுந்த எதிர்மறை மனோபாவமே ஆகும்.
நேசக்குமார் ஏன் முஸ்லிம்களை/குரானை விமர்சிக்கிறார்? இவ்விவாதத்தில் ஏன் இவ்வளவு பேர் வரிந்து கட்டிக் கொண்டு முஸ்லிம்களுக்கு எதிராக எழுதவேண்டும்...??
ஒரு எளிய கேள்விக்கு இவ்வளவு குதர்க்கமான பதில்களா என்று கேட்பவர்கள் அக்கேள்விக்கு அப்பால், அப்பதில்களின் மூலகாரணி எது என சிந்திக்கக் தொடங்குவது எப்போது?
இந்த எதிர்மறை மனோபாவம் உலக நடப்புக்களால் தானாக உருவானதன்றி உற்பத்தி செய்யப்பட்டதல்ல என்பதை குறைந்தபட்சம் "படித்த" முஸ்லிம்களாவது ஏற்றுக்கொள்ளும் காலம் என்றாவது வருமா?
(வரும் என எனக்குத் தோன்றவில்லை:))
ராம் நிவாஸ், ஒரு ஆண் பல பெண்களுடன் (திருமண) உறவு வைத்துக் கொள்வதால் ஒவ்வொரு பெண்ணும் சுமக்கும் குழந்தைக்கு அந்த ஆணே தந்தை. இதில் எவ்வித விவாதமும் இல்லை. ஆனால் ஒரு பெண் பல ஆண்களுடன் அதே உறவு கொண்டு கருத்தரித்தால் உண்டாகும் சிக்கல்களை பட்டியலிட வேண்டுமா?
கருப்பை சுதந்திரம் என்ற பெயரில் விபச்சாரத்திற்கு குர்ஆனின் மூலம் அங்கீகாரம் கேட்டதற்குத்தான் தஸ்லீமா நஸ்ரின் எதிர்க்கப்பட்டார்.
//விமர்சனங்கள், எடுக்கப்படும் நடவடிக்கைகள், முஸ்லிம்களின் சமூக விரோத நடவடிக்கைகளால் எழுந்த எதிர்மறை மனோபாவமே ஆகும்.//
சமூகத்திற்கு விரோதமான கொள்கை உடையவர்கள் எல்லா மதங்களிலும், கொள்கைகளிலும் இருக்கிறார்கள். தனிப்பட்ட அவர்களை விமரிசிப்பதில் எந்த ஆட்சேபனையும் இல்லை. ஒரு முஸ்லிம் பெயர் தாங்கி செய்தால் அவன் விமரிசிக்கப் படுவதைவிட இஸ்லாம் விமரிசிக்கப் படுகிறது.
சரி சமமாக நடத்தாமல் ஒன்றுக்கு மேல் கல்யாணம் செய்வதை ஹராம் என்று சொல்லும் இஸ்லாம், விமரிசனவாதிகளின் பார்வையில் படுவதில்லை.
சின்னவீடு, ஆசைக்கு ஒன்று அந்தஸ்த்துக்கு ஒன்று என பல பெண்களை 'வைத்துக்' கொள்பவர்கள் விமரிசிக்கப் பட்டதை விட, நீதமாக நடக்க முடிந்தால் நான்கு கல்யாணம் வரை (அதை 99% பயண் படுத்தியது இல்லை என்பது வேறு) செய்து அந்த பெண்களை சரி சமமாக நடத்தச் சொல்லும் இஸ்லாம் விமரிசிக்கப் படுவது அதிகம்.
கண்ணியமாக உடை உடுத்தி கெளரவமாக இருங்கள் என சொன்னால் அது ஆணாதிக்கம், பழமைவாதம். அழகிப்போட்டி, மாடலிங் என்ற பெயரால் அரைகுறை ஆடையில் பெண்மையை விபச்சார மயமாக்குவதற்கு பெண்ணுரிமை என்ற அங்கீகாரம்.
ஏன் இந்த ஓரவஞ்சனை பார்வை என்பதுதான் என் போன்றவர்களின் ஆதங்கம்.
//தவறாகப் புரிந்து கொண்டீர் டோண்டு, தஸ்லிமாவை விபச்சாரி என சொல்லவில்லை. பலருடன் உறவு கொண்டாலும் கருப்பையில் யாரின் கருவை சுமப்பது என்ற உரிமை பெண்ணுக்குத்தான் உண்டு. கல்யாணம் என்ற சடங்குகளால் அவளின் ::உரிமை:: யில் தலையிட குர்ஆனுக்கு உரிமையில்லை என்ற தஸ்லிமா நஸ்ரீனின் கருத்துக்களில் நியாயம் இருப்பதாக சொல்கிறீர்களா?//
தஸ்லீமாவின் கருத்து நியாயமானதே. தன்னுடைய கருப்பையில் யாரின் கருவைச் சுமப்பது என்ற உரிமை எந்தப் பெண்ணுக்கும் இயற்கை அடிப்படையில் உண்டு. அதை கீதையைக் கொண்டோ குரானைக் கொண்டோ பைபிளைக் கொண்டோ மறுப்பது மூடத்தனம்.
விபச்சாரி என்று யாரோ இழிவாகச் சொன்னார்கள். சொன்னவர்களுக்கு ஒரு கோரிக்கை. அவர்கள் எந்தச் சூழலில் அந்த நிலைக்கு வந்தார்கள் என்று கேட்டுப் பாருங்கள். நீங்கள் காலமெல்லாம் கடவுளுக்கு நன்றி சொல்ல வேண்டியிருக்கும். யார் தன்னோடு புணர வேண்டும் என்று எந்தப் பெண்ணும் முடிவு செய்யலாம். அதற்கு பணம் வாங்கினால் ஏன் கேவலமாகப் பார்க்கின்றீர்கள். பசித்திருந்து பார்த்திருந்தால் உங்களுக்குக் கொடுமை தெரிந்திருக்கும். வேண்டாம். இங்கே இதோடு நிறுத்திக் கொள்கிறேன்.
மதங்களில் ஆழமான அறிவு எனக்குக் கிடையாது. ஆனால் எனக்குத் தெரிந்த வரை குறையில்லாத மதமென்று எதுவுமேயில்லை. இந்து மதமாகட்டும் இஸ்லாமாகட்டும் கிருஸ்துவமாகட்டும் பௌத்தமாகட்டும். எல்லாம் இரத்தக் கறை படிந்த பொய்யும் புனை சுருட்டுக் கதைகளும் நிறைந்த சகிப்புத் தன்மையற்ற மாயக் கொடுங்கோன்மை.
தனி மனித சுதந்திரத்தையும், ஆண்-பெண் சமநிலையையும், மனிதர்களிடையே பாகுபாடு பார்க்காமையையும், ஏற்றுக் கொள்ளாத எந்த மதமும் மந்தமே. இதை மறுக்காத எந்த நூலையும் புறக்கணிப்பதே அறிவுள்ளோர் செயல்.
//ராம் நிவாஸ், ஒரு ஆண் பல பெண்களுடன் (திருமண) உறவு வைத்துக் கொள்வதால் ஒவ்வொரு பெண்ணும் சுமக்கும் குழந்தைக்கு அந்த ஆணே தந்தை. இதில் எவ்வித விவாதமும் இல்லை. ஆனால் ஒரு பெண் பல ஆண்களுடன் அதே உறவு கொண்டு கருத்தரித்தால் உண்டாகும் சிக்கல்களை பட்டியலிட வேண்டுமா?//
நல்லடியார், இதென்ன வாதம்? குழந்தை பெற்றுக் கொள்ளத்தானா ஆண் பெண் உறவு. ஆறாயிரம் ஏழாயிரமாண்டுகள் பின்னால் போய் விட்டீர்கள்.
ஆண்-பெண் அல்லது கணவன் - மனைவி உறவு என்பது மிகவும் நுணுக்கமானது. மனமொத்த கணவனுக்கும் மனைவிக்கும் இடையில் யாரும் வரமுடியாது. உறவில் என்றைக்கும் ஒருவனுக்கு ஒருத்தி. அல்லது ஒருத்திக்கு ஒருவன்.
பெண் பல ஆண்களுடன் உறவு கொள்வது தவறென்றால், ஒரு ஆண் பல பெண்களிடம் உறவு கொள்வதும் தவறுதான். எல்லாப் பெண்களுக்கும் தகப்பன் ஒருவனே என்ற காரணம் சொல்வது...வேண்டாம் விடுங்கள். கற்பென்பதை இருபாலாருக்கும் பொதுவில் வைப்போம் என்று ஒரு பைத்தியக்காரன் தமிழில் பாடி வைத்திருக்கின்றான். அவனுக்கு உண்மையிலேயே கோயில் கட்டத்தான் வேண்டும். உங்கள் பதிப்புகளைப் படிக்கும் பொழுது, தமிழர்கள் இப்படியுமா சிந்திப்பார்கள் என்று தோன்றுகிறது. ஆனால் ஒன்று. இப்படிப் பேசுகின்றவர்கள் எந்த மதத்திலும் உண்டு.
//ஒரு ஆண் பல பெண்களுடன் (திருமண) உறவு வைத்துக் கொள்வதால் ஒவ்வொரு பெண்ணும் சுமக்கும் குழந்தைக்கு அந்த ஆணே தந்தை. இதில் எவ்வித விவாதமும் இல்லை. ஆனால் ஒரு பெண் பல ஆண்களுடன் அதே உறவு கொண்டு கருத்தரித்தால் உண்டாகும் சிக்கல்களை பட்டியலிட வேண்டுமா?//
இரு உறவுகளிலுமே சமூகத்தை எதிர்கொள்ளுவதில் பல சிக்கல்கள் உள்ளன.ஒரு ஆண் 4 பெண்களை மணந்துகொண்டு 4 பிள்ளைகள் பெற்றால், அப்பிள்ளைகள் இங்கு சாதாரணமாக வாழ்ந்துவிட நம் சமூக சூழல் அனுமதிக்குமா?? முடியுமெனில் பெண்கள் மட்டும் அவ்வாறு செய்யக்கூடாது என மதம் எவ்வாறு வலியுறுத்த முடியும்?
/சமூகத்திற்கு விரோதமான கொள்கை உடையவர்கள் எல்லா மதங்களிலும், கொள்கைகளிலும் இருக்கிறார்கள். தனிப்பட்ட அவர்களை விமரிசிப்பதில் எந்த ஆட்சேபனையும் இல்லை. ஒரு முஸ்லிம் பெயர் தாங்கி செய்தால் அவன் விமரிசிக்கப் படுவதைவிட இஸ்லாம் விமரிசிக்கப் படுகிறது.//
உலகின் மிகப்பெரும் வன்முறைகளில் பெரும்பாலானவை முஸ்லிம்களாலேயே நிகழ்த்தப்படுகின்றன.முஸ்லிம்கள் மட்டும் ஏன் இவ்வளவு வன்முறைகளில் ஈடுபடுகின்றனர் என்ற கேள்வி எழும்போது இயல்பாகவே
வாழும் முறைகள், பின்பற்றப்படும் மதம்/மத நூல்
போன்றவை ஆராயப்படுவது இயல்பானதே.ஒரு மனிதனின்/சமூகத்தின் மன அமைப்பு அது வாழும் முறைகளை ஒட்டியே அமையும் என்பது புரிந்தால் இது விளங்கும். இது உற்பத்தி செய்யப்படுவதாக நினைப்பது முஸ்லிம்களின் மற்றொரு பிரச்னை.
//சின்னவீடு, ஆசைக்கு ஒன்று அந்தஸ்த்துக்கு ஒன்று என பல பெண்களை 'வைத்துக்' கொள்பவர்கள் விமரிசிக்கப் பட்டதை விட, நீதமாக நடக்க முடிந்தால் நான்கு கல்யாணம் வரை (அதை 99% பயண் படுத்தியது இல்லை என்பது வேறு) செய்து அந்த பெண்களை சரி சமமாக நடத்தச் சொல்லும் இஸ்லாம் விமரிசிக்கப் படுவது அதிகம்.//
விமர்சிக்கப்படுவது ஆண்கள் ஏன் நான்.கு கல்யாணம் செய்து கொள்கிறார்கள் என்பதல்ல..அவ்வாறு செய்யப்பட்டாலும் அது சனத்தொகையை கணக்கில் கொண்டே இருக்கும்...விமர்சிக்கப்படுவது பெண்கள் ஏன் அவ்வாறு செய்யக்கூடாது என "நிர்ப்பந்தப்படுத்தப்படுகிறார்கள்" என்பதுதான்..
//கண்ணியமாக உடை உடுத்தி கெளரவமாக இருங்கள் என சொன்னால் //
சொல்லப்படுவதில்லை...நிர்ப்பந்தப்படுத்தப்படுகிறது..
//கண்ணியமாக உடை உடுத்தி கெளரவமாக இருங்கள் என சொன்னால் //
சொல்லப்படுவதில்லை...நிர்ப்பந்தப்படுத்தப்படுகிறது..
காரணம் ::நம்பிக்கை:: திரு. நேசகுமார், இத்தனை நாள் நிபந்தனையற்று நம்பி வந்ததை போய் என்று திடீரென்று எற்க மணம் அடையும் அதிர்ச்சிதான் காரணம். அத்துடன் பயமும்கூட, கடவுள் தண்டிதுவிடுவாரோ என்கிற பயமும் ஒரு காரணம்.
//ஆனால் ஒன்று. இப்படிப் பேசுகின்றவர்கள் எந்த மதத்திலும் உண்டு. //
---
ராகவன்,
ஆம். உண்மைதான், மறுப்பதற்கில்லை. ஆனால் ஒன்றைக் கவனியுங்கள், மற்ற மதங்களிலெல்லாம் நாலு பேர் இப்படி பேசினால், நியாயப் படுத்த முயன்றால், அம்மதத்திற்குள்ளாகவே நானூறு பேர் எழுந்து இதற்கு எதிராக குரலெழுப்புவார்கள்.
===================================
ஒத்துக்கொள்கிறேன் நேச குமார்.
contivity சொன்னார் நான் பச்சை பொய் புழுகுகிறேன் என்று.
நான் உரல்களைக் கொடுத்திருக்கிறேன்.
எங்கே அவர்? என்ன பதில்?
*
நல்லடியார்,
ஏன் மெக்கா மெதீனா சர்ச்சாகவோ கோவிலாகவோ ஆகக்கூடாது? இத்தனைக்கும் அவை முகம்மது ஆக்கிரமிப்பதற்கு முன்னால் பாகன் கோவில்கள்தானே? இஸ்லாமின் முக்கியமான மதக்கோவிலே பாகன்களது கோவிலை ஆக்கிரமித்துதான் உருவானது என்பதால், மற்றவர்களின் கோவில்கள் மீதே கட்டுகிறீர்களா? அதனால்தான் வேறொரு இடத்தில் மசூதி கட்டிக்கொள்ள இடம் தருகிறேன் என்றாலும் மறுத்து அடம் பிடிக்கிறீர்களா? இதே போல மற்றவர்கள் உங்களது மசூதியை ஆக்கிரமிப்பதும் சரி என்றுதானே நீங்கள் சொல்லவேண்டும்? இஸ்லாமுக்கு ஒரு நீதி மற்ற மதங்களுக்கு வேறொன்றா?
அன்புடையீர்,
கடவுள் தண்டித்துவிடுவார் என்று பயப்படுபவர்கள் எல்லா மதங்களிலும் ஒரே விகிதத்தில்தான் இருப்பார்கள். அதே விகிதத்தில்தான் கடவுள் தண்டிப்பதற்கு பயப்படாத மனிதர்களும் இருப்பார்கள்.
ஆனால், கடவுள் "தண்டிப்பதற்கு" பயப்படாத மனிதர்களும், இதர மனிதர்களால் தண்டிக்கப்படுவதற்கு பயப்படுவார்கள்.
அதனால்தான், "இஸ்லாமை விட்டு வெளியேறினால் கொல்" என்ற கட்டளையை இஸ்லாம் கொண்டிருக்கிறது.
அதனாலேயே நாகூர் ரூமி போன்ற படித்தவர்கள் கூட "இஸ்லாம் என்ற அமைதி மதத்தை" பற்றி 2000 பக்க புத்தகம் எழுத வைக்கிறது. கத்தி கம்புடன் உங்கள் வீட்டு கதவை சிலர் தட்டினால், நீங்கள் கூட 3000 பக்கத்துக்கு இஸ்லாத்தை பற்றி உயர்வாக புத்தகம் எழுதுவீர்கள்.
உயிர் பயம் அய்யா, உயிர் பயம். ஸ்டாக்ஹோம் சின்ற்றோம் என்று கேள்விபட்டதுண்டா? அதுதான் இது.
உயிர் பயத்தால்தான் இப்படி இஸ்லாத்தை பற்றி உயர்வாகப் பேசுகிறோம் என்ற உணர்வு கூட மழுங்கடிக்கப்பட்டு ஏதோ இதுதான் உலகத்திலேயே சிறந்த மதம் என்று உண்மையிலேயே நம்பும் அளவுக்குப் போகிறது..
எங்கே இது புரியப் போகிறது? உயிர் பயம் வந்தால், புரிய வேண்டியது கூட புரியாமல் போய்விடும்..
ஆரோக்கியம்
ennamopo.blogspot.com
Repeated:
babu said...
கணினியில் ப்ரச்னை காரணமாக கால தாமதம்.
நேச குமார்,
//ஆனால், மனித குலத்திற்கு முழுமையான வழிகாட்டியாக விளங்கும் உங்களின் மார்க்கம், ஏனைய மனிதர்களை காபாவிற்குள் அனுமதிப்பதில்லையே? காபாவின் கஸ்டோடியனாக ஒரு இந்திய முஸ்லிமை நியமிக்க வழியிருக்கின்றதா? நீங்களும் உங்கள் மனைவியும், உங்கள் மசூதியில் சென்று வழிபாடு செய்ய முடியுமா? காபாவின் கஸ்டோடியனாக ஒரு இந்திய முஸ்லிமை நியமிக்க வேண்டும், ஒரு கறுப்பின முஸ்லிமை நியமிக்க வேண்டும் என்று முஸ்லிம்களில் யாராவது எந்த நாட்டிலாவது போராட்டம் நிகழ்த்தியிருக்கின்றார்களா?//
உங்களின் முதல் கேள்விக்கு என் முந்தைய பின்னூட்டத்தில் பதில் இருக்கிறது.
இரண்டாவது கேள்வி உலக அரசியல் நிர்வாகம் சம்பந்தப்பட்டது. புனித நகரங்கள் பூகோள ரீதியாக எந்த நாட்டில் இருக்கிறதோ அவர்கள் தானே கஸ்டோடியனாக வர முடியும். இந்தியாவில் அவை அமைந்திருந்தால் இந்திய அரசு. ஈரானில் அமைந்திருந்தால் ஈரான் அரசு.
மூன்றாம் கேள்விக்கு பதில், 'ஆம் - ஓ, செய்து வருகிறோமே.' என்பது தான்.
(இஸ்லாத்தில் தரப்பட்டுள்ள உரிமைகளையே ஆ? விகுதி போட்டு கேள்வியாக மாற்ற உங்களைப் போன்றவர்களால் தான் முடியும்.
இந்தியாவில் அப்படி முடியாமல் இருப்பதற்கு ஆயிரம் சமூக, அரசியல் காரணங்கள் உண்டு.
(ஆனால் அதையெல்லாம் எடுத்துச் சொன்னாலும் இஸ்லாத்தை தாக்குவதில் தான் உங்கள் குறி என்பதும் எனக்கு தெரியும் (இஸ்லாம் அனுமதித்துள்ள நிலையிலும்). (பெண்கள் பள்ளிக்குச் சென்று தொழ தடையில்லை என்பதை விளக்கி 'சுடர்' என்பவர் உங்களுக்கு எதிர்வினையாக எழுதிய தனிப் பதிவையும் நீங்கள் படிக்கவில்லை என்பதை வெளிச்சம் போட்டு காட்டுவதற்கு உங்களின் இக்கேள்வி உதவுகிறது. நன்றி).
நான்காம் கேள்வி தேவையே படாத ஒன்று.
ஒரே ஒரு செய்தி: என் அலுவலகத்திற்கு அருகில் உள்ள ஒரு பெரிய மசூதியின் தலைமை இமாம் இந்தியாவின் ஹைதராபாத்தைச் சேர்ந்தவர். இன்று சவூதி குடிமகனாக - சவூதியர் உட்பட நிறைய முஸ்லிம்களுக்கு மார்க்க விளக்கம் அளிப்பவராகவும் - தன்னுடைய தேனினுமினிய குரலோசையால்- சவூதி மற்றும் வளைகுடா நாடுகளின் வானொலிகளில் - குர் ஆன் ஓதலையும் வழங்கி வருகிறார்.
எனவே............ உங்களின் இக்கேள்விகள் மல்லாந்து படுத்து துப்பும் எச்சில் போன்றதே என்பதை வீம்புக்காக எத்தனை நாளைக்குத் தான் உணராது இருப்பீர்கள்?
(பி. கு: இந்த சாதாரண பதில் கூடத் தெரியாதவறாக உங்களை நான் நினைக்கவில்லை- எனவே.... என் இப்பின்னூட்டமானது உங்களின் குழப்ப வலையில் அறியாமல் வீழ்ந்து விடுகிறவர்களுக்குத் தான்.)
கடைசியாக என் முந்தையக்கருத்தை உறுதிப்படுத்தி:
நம் பாட்டன் சொன்னதிலிருந்து அனைவருக்குமாக:
"எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் - அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பதறிவு"
குறிப்பாக மதங்கள் என்றாலே பாய்ந்து வருகிற 'அறிவு ஜீவி' தோற்றத்தார் விஷயத்தில்.
நச்சுக்கருது நாரதர்கள் சிந்திப்பார்களாக
நந்தலாலாவின் 'தலாக்' பதிவிலே 'இந்து மதத்தின் குறைகளையும் நான் சாடியிருக்கிறேன்' என்ற உங்கள் பொய்யை எடுத்துக்காட்டி ஒரே ஒரு உதாரணம் கேட்டவருக்கு காட்ட 'சட்டியிலும் இல்லை - அகப்பையிலும் இல்லை' தானா?
4:02 AM
வேலைப்பளுவின் காரணமாக அடிக்கடி வந்து பார்க்க முடியவில்லை..
ஐயா ஆரோக்கியம், நீங்கள் கொடுத்த சுட்டிகளைப்பற்றி...சான்றுகள் ஆதாரங்கள் எவ்வாறு இருக்க வேண்டும் என அப்துல்லா, சலாஹுத்தீன், அபுமுஹை, சுடர், சுட்டுவிரல் போன்றோர் விரிவாக விளக்கி உள்ளனர்..
விரைவில் மேலும் எழுத எண்ணம் உள்ளது இறைவன் நாட்டப்படி..
ஆனாலும் நேசக்குமார் போன்றோர் பலமுறை மேற்கண்ட அன்பர்களின் விளக்கங்கள் / கேள்விகள் / விவாதங்கள் இவற்றை "வசதியாக" மறந்துவிட்டு அடுத்தடுத்து "வேண்டுமென்றே" புதிய அவதூறுகளை வீசுவது கண்கூடு..
//அதனால்தான் வேறொரு இடத்தில் மசூதி கட்டிக்கொள்ள இடம் தருகிறேன் என்றாலும் மறுத்து அடம் பிடிக்கிறீர்களா?//
ஆரோக்கியம், உங்கள் அவதூறுகளுக்கு ஆதாரம் கேட்டு வீண்டிக்க விரும்பவில்லை.
மசூதியை விடுங்க. உங்கள் வீட்டை இடித்து, தடுப்பவர்களை கொன்று, குடியிருப்பவர்களை வெளியேற்றி, வேறு இடத்தில் வீடு கட்டித் தந்தால் உங்களால் ஏற்றுக்கொள்ள முடியுமா?
மனசாட்சியுடன் வேண்டாம் கொஞ்சமாவது அறிவுப்பூர்வமாக எழுத முயற்சியுங்கள்.
மிக்க நன்றி நல்லடியார்,
::உங்கள் வீட்டை இடித்து, தடுப்பவர்களை கொன்று, குடியிருப்பவர்களை வெளியேற்றி, வேறு இடத்தில் வீடு கட்டித் தந்தால் உங்களால் ஏற்றுக்கொள்ள முடியுமா?::
இது போன்ற அழுத்தமான வாதத்தை நான் கூட வைத்திருக்க முடியாது. ஆகவே, செயிண்ட் சோபியா சர்ச்சை கிரிஸ்துவர்களிடமும், டெம்பில் மவுண்ட் யூதக்கோவிலை யூதர்களிடமும், ராம் ஜென்ம பூமியை இந்துக்களிடமும் திருப்பி கொடுத்துவிடுவீர்கள் என்ற நம்பிக்கையை கொடுத்திருக்கிறீர்கள். இதே வார்த்தையை நீங்கள் சக முஸ்லீம்களிடமும் சொல்ல வேண்டும் என்பது என் அவா. மெக்கா மெதீனா கோவில்கள் அரபிப் பாகன்களைக் கொன்று அவர்களின் ரத்தத்தின் மீது ஆக்கிரமிக்கப்பட்டது என்பதும் நீங்கள் அறிந்ததே. அதனை திருப்பி கேட்க இன்று அரபிப்பாகன்கள் யாரும் இல்லாத வண்ணம் அரபி முஸ்லீம்கள் அவர்களைக் கொன்று விட்டார்கள். எந்த அரபியாவது மீண்டும் பாகன் மதத்துக்குத் திரும்பி அந்த கோவிலை மீண்டும் கேட்டால் கொடுத்துவிடுங்கள்.
நன்றி
ஆரோக்கியம்
ennamopo.blogspot.com
எழுத்துத் தீவிரவாதத்தை இங்கே எப்படி அரங்கேற்றுகிறார்கள்! உடைமை என்பதன் சரியான பொருள் தெரியாததால், அறிவுடைமை, ஒழுக்கமுடைமை, நன்றியுடைமை என்பன போன்ற சொல்லாளுமைகளின் பொருள்களயும் மாற்றவேண்டும் என குழப்பியடிப்பார் போலும் 'புனிதப்பணி' செய்து வரும் தாரகை ஒருவர்.
ஒரு ஊரில் உள்ள அனைவரும் ஒரு நம்பிக்கையை ஏற்றுக்கொண்டபின் அந்நம்பிக்கைக்குரியவாறு வழிபாட்டுத்தலங்களை மாற்றியமைத்துக் கொள்வதில் தவறு காணும் ஆரோக்கியமானவர், அந்தலுஸ் என்றறியப்பட்ட தற்கால ஸ்பெயினில் உள்ள அழிக்கப்பட்ட சர்ச்சுகளாக மாற்றப்பட்ட மசூதிகளை மீட்டுத் தருவதில் முதன்மை வகிப்பாரா? அங்குக் கொன்றொழிக்கப்பட்ட, துரத்தியடிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கு தகுந்த நீதி கிடைக்கப் போராடுவாரா?
நல்லடியார் அவர்கள் கூறுகிறார்:
"1400 வருடங்களுக்கு முன் வந்த கொள்கைகள் தற்காலத்திற்கு ஒவ்வாது என வாதிடுவதை ஏற்க முடியவில்லை. காலத்திற்கு ஏற்ப மாற்றப்படும் கொள்கைகள் எப்படி வாழ்க்கை நெறியாக முடியும்?"
அவருக்கு நாகூர் ரூமியின் கல்லடிக்கு எதிரான பதிவில் பின்னூட்டமிட்ட ஹுஸேன் என்பவர் கூறியதை இங்கு மறுபடியும் கூறுவேன்:
"ஹுசேன் 11/16/2004 , 9:33:20 காலை.
"அய்யா ரூமி தயவுசெய்து உங்களுடைய இஸ்லாம்/குரான் சம்பந்தமான கட்டுரைய இனிமேலாவது நிறுத்துங்க. "அப்பன் குதிருக்குள் இல்லை" என்பது போல் நீங்களே எல்லாத்தையும் போட்டுக் கொடுத்து விடுவீர்கள் போல் தெரிகிறது. எல்லாச் சமய/மத நூல்களும் பல வருடங்களுக்குமுன் எழுதப்பட்டவை. அவைகள் அந்தக் கால சூழ்நிலைகளுக்கு பொருந்தி இருக்கலாம். இப்போது நிச்சயம் பொருந்தாது. தயவு செய்து இம்சை செய்யாதீர்கள். மதவாதியாக வாழாமல் "மனிதனாக" வாழ முயற்சி செய்யவும்.
உங்களுக்கு பதில் சொல்லும் சாக்கில் திண்ணையில் "நேசக் குமார்" என்ற ஒரு நபர் எழுதியிருப்பதை தயவு செய்து படிக்கவும்."
இதுதான் விஷயம். பழைய சட்டங்கள் இப்போதைய வாழ்க்கை முறைக்கு பொருந்தாது என்பது இசுலாமியர்கள் தங்களுக்குள் பேசிக் கொள்ளும்போது ஒப்பு கொள்கிறார்கள். ஆனால் வெளி ஆட்களுடன் பேசும்போது தோரணையே வேறுபட்டு விடுகிறது.
இனிய நண்பர் ராஜ சிம்ஹன் அவர்கள் எழுதுகிறார்:
"அது சரி, இது போன்ற பேச்சுகளெல்லாம் சரிதான் என்று எத்தனை பெண்கள் ஆதரவு தெரிவித்திருக்கிறார்கள்? தஸ்லீமா சொல்வது சரிதான் என்று ஒரு பெண் எழுதினால் நன்றாக இருக்கும். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? எதற்காக ஆண்களாகிய நாம் இதற்கு பரிந்துரை செய்ய வேண்டும்?"
பூனைக்குட்டி வெளியே வந்து விட்டது. இசுலாமிய ஆண்கள் ஏன் இதில் இனிஷியேடிவ் எடுக்க வேண்டும்? தற்போதைய இசுலாமிய சட்டம் ஆண்களுக்கு அல்லவா சாதகமாக இருக்கிறது? இசுலாமியப் பெண் ஒருவர் கூட நான் கூறும் வாதங்களை ஆதரித்து ஏன் பின்னூட்டமிடமிடவில்லை என்று கேட்கிறார். அதே கேள்வியை அப்படியே அவருக்கு திருப்புகிறேன். நீங்கள் கூறும் வாதங்களை ஆதரித்து எந்தப் பெண்ணாவது இங்கு எழுதியிருக்கிறாரா? அதை விடுங்கள், இப்பதிவில் ஏதாவது ஒரு இசுலாமியப் பெண்ணாவது பின்னூட்டமிட்டாரா? முதலில் இதைக் கூறுங்கள், தமிழ் மணத்தில் எத்தனை இசுலாமியப் பெண்வலைப்பதிவர் உண்டு? என் கண்ணுக்கு யாரும் தென்படவில்லை. பொதுவாகவே விவாதங்களில் இசுலாமியப் பெண்கள் வருவதில்லை என்றுதான் நினைக்கிறேன். வந்தவர்களுக்கும் விபசாரிப் பட்டம்தான் என்றிருந்தால் எந்தப் பெண்தான் வருவார் என்று கேட்கிறேன்.
மறுபடி கூறுவேன். இந்து பெண்களும் பலவழிகளில் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கெதிரானச் சட்டங்கள் தவறானவை என்பதை எங்களில் அனேகம் பேர் ஒத்துக்கொண்டு விட்டோம். அரசும் சட்டங்கள் இயற்றிப் பாடுபடுகிறது. ஆனால் இசுலாமியப் பெண்களுக்கு நீதி தேவை என்பதை உங்கள் மதச் சட்டம் ஒத்து கொள்ளவில்லை, பெரும்பான்மை இசுலாமிய ஆண்கள் ஒத்து கொள்ளவில்லை. இதுதான் நிலை.
அன்புடன்,
டோண்டு ராகவன்
பின் குறிப்பு: (இப்பதிவுக்கு சம்பந்தமில்லாதது) நண்பர்களே என் பெயரில் இன்னொருவர் தாறுமாறாக பின்னூட்டங்கள் இட்டு வருகிறார். அதைப் பற்றி என் பதிவு http://dondu.blogspot.com-ல் குறிப்பிட்டுள்ளேன். அப்படிப்பட்ட பின்னூட்டங்கள் என் பெயரில் வந்தால் அந்தப் பெயருடன் கூட வரும் எண்ணைப் பார்த்து சரி செய்து கொள்ளவும்.
By the way, my original blogger number is 4800161, whereas the number of the misleading blogger is 9267865. I request the fellow bloggers to remember that such a thing can happen to anybody else.
//ஹுஸேன் என்பவர் கூறியதை இங்கு மறுபடியும் கூறுவேன்://
டோண்டு சார்,
ஹுஸேன் என்ற பெயரில் இந்த பின்னூட்டம் இட்டவர் ஒரு முஸ்லிம்தான் என்பது உங்களுக்கு நிச்சயமாக தெரியுமா?
சலாஹுத்தீன்
"ஹுஸேன் என்ற பெயரில் இந்த பின்னூட்டம் இட்டவர் ஒரு முஸ்லிம்தான் என்பது உங்களுக்கு நிச்சயமாக தெரியுமா?"
சத்தியமாகத் தெரியாது சலாஹுத்தீன் அவர்களே. ஆனால் ஒன்று, நாகூர் ரூமியின் அந்த வலைப்பதிவில் யாரும் இக்கேள்வியை எழுப்பவில்லை. அதற்காக நீங்கள் இப்போது கூறுவதையும் அலட்சியப் படுத்தக்கூடாது. எனக்கு நேர்ந்த அனுபவத்துக்கு பிறகு எதுவும் சாத்தியமே. குறைந்த பட்சம் நாகூர் ரூமி அவர்கள் இசுலாமியர் என்பதில் சந்தேகம் இல்லைதானே?
அது போகட்டும், இப்போது நான் எழுப்பிய கேள்விகளுக்கென்ன பதில் உங்கள் தரப்பிலிருந்து?
அன்புடன்,
டோண்டு ராகவன்
டோண்டு சார்,
ஹுஸேன் என்பவர் எழுதிய பின்னூட்டத்தை ஆதாரமாக வைத்து //பழைய சட்டங்கள் இப்போதைய வாழ்க்கை முறைக்கு பொருந்தாது என்பது இசுலாமியர்கள் தங்களுக்குள் பேசிக் கொள்ளும்போது ஒப்பு கொள்கிறார்கள். ஆனால் வெளி ஆட்களுடன் பேசும்போது தோரணையே வேறுபட்டு விடுகிறது.// என குறிப்பிட்டிருந்தீர்கள். இஸ்லாத்தின் அடிப்படைக்கொள்கைகளை நன்கு புரிந்து கொண்ட முஸ்லிம்கள் யாரும் இத்தகைய கருத்தைக் கொண்டிருக்க மாட்டார்கள். அதனால் தான் இந்த ஹுஸேன் என்பவர் குறித்த சந்தேகம் எனக்கு வந்தது.
நாகூர் ரூமி முஸ்லிம்தான் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் அவரது கருத்துக்கள் எல்லாம் இஸ்லாத்தின் கருத்துக்களாகத்தான் இருக்கும் என்ற கட்டாயமில்லை. எனது சமீபத்திய பதிவையும் சற்று பார்த்து விடுங்கள் http://islamanswers.blogspot.com/2005/05/blog-post.html
தஸ்லிமாவைப்பற்றி எனக்கு அதிகம் தெரியாது. தங்களுக்கு சிரமமில்லையென்றால் இஸ்லாம் குறித்த தங்கள் கேள்விகளை மீண்டும் இடுங்கள். இன்ஷா அல்லாஹ் விளக்கமாக பதிலளிக்க முயற்சிக்கிறேன். நான் ஒரு மார்க்க அறிஞனல்ல. அதனால் விளக்கங்களை நான் முதலில் பெற்று பிறகு உங்களுக்கு பதிலளிக்க சற்று தாமதமாகலாம். பொறுத்துக்கொள்ளுங்கள். நன்றி!
சலாஹுத்தீன்
/அது குறித்து இப்போது எதற்காக பேசுகிறீர்கள் நல்லடியார்? //
ஈரோட் பிலிம்ஸ்,'ஆரோக்கிய' கேடாக எழுதுபவரின் குற்றசாட்டுக்குத்தான் பதிலிட்டேன். வாதங்களை திசை திருப்புவதை சில தாரகைகளும் ஆரொக்கியங்களும் செய்து வருகின்றனர். அதையும் கொஞ்சம் கண்டிச்சு வைங்க.
டோண்டு சார்,
இஸ்லாமியப் பெண்கள் கல்வியில் பின் தங்கி இருப்பதற்கு முஸ்லிம்களும் காரணம் என்பதை ஒப்புக் கொண்டுதான் ஆக வேண்டும்.
மேலும் 1:2 என்ற பெண்களின் நிலை பற்றிய விபரங்களை சேகரித்து வருகிறேன். இதை தனிப்பதிவாக தொடங்கவும் எண்ணம்.
சில திடீர் தாரகைகளின் நேர்முகத்தில் உங்களால் அவரின் இஸ்லாமிய குரோதம் அன்றி நடு நிலையை காண முடிகிறதா?
நான் நம்பும் கொள்கையை பழி சொல்லும் போது மட்டும்தான் என் பதிலீடுகளை வைக்கிறேன். அவர் கொள்கை(?) விமரிசிக்கப் பட்டுவிடுமோ என 'பகுத்தறிவு' Escapism த்தில் அவர் எழுதிவருகிறார் என்பதை நடு நிலையாளர்கள் அறிவர்.
இஸ்லாத்தை விமரிசிப்பவர்களுக்கு தாரகை பட்டங்கள் கிடைப்பதில் வியப்பில்லைதானே.
//மேலும் 1:2 என்ற பெண்களின் நிலை பற்றிய விபரங்களை சேகரித்து வருகிறேன். இதை தனிப்பதிவாக தொடங்கவும் எண்ணம்.//
1:2 பிரச்னைக்கு நல்லடியாரின் பதில் இப்போதே ரெடி...அப்பதிலுக்கான விளக்கங்கள் தேடி சேகரிக்கப்பட்டு reverse engineering செய்யப்பட்டவுடன் ஒரு தனிப்பதிவில் சமர்ப்பிக்கப்படும்...பின் அது முடிவுறாப் பின்னூட்டங்களுடன் வளரும்.
நேசக்குமார் இனி உங்கள் வரிக்கு வரி விளக்கங்களுடன், இப்பிரச்னையை (முடியுமெனில்) தத்துவார்த்தமாகவும், உளவியல் ரீதியாகவும் அணுக வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.
ஐயா ஈரோடு,
//நம்ம ஊரில் உள்ள கதையைப் பற்றி பேசினால் உடனே மாசுகோவை பாருங்கள், சீனாவைப் பாருங்கள் என்று தெருவோர பொதுக்கூட்டத்தில் காமரேட் பேசுவது போல அள்ளி விடுவது சரியா?//
ஆரோக்கியம் அவர்களின் பதிலைப் படித்துவிட்டுதான் மேற்படி பதிலை எழுதியிருப்பீர் என்று தெரிகிறது. அதற்காக நன்றி!
//அதனை ஏற்ற ஜனாதிபதி அது குறித்து மக்கள் சபையில் அறிவிப்புத் தர
அதனை செவிமடுத்த ஒரு சாதாரண கிழவி ‘உமரே! மஹரை நிர்ணயிக்கும் உரிமை உமக்கில்லை’ என்று கர்ச்சிக்க ஜனாதிபதியும் தன்னிலை உணர்ந்து ‘ஆம். அந்த அதிகாரம் எனக்கில்லை’ என்று சாதாரண குடிமகனின் முன் தலை குனிந்தாரே அது இஸ்லாம் செய்த புரட்சியல்லவா! //
அம்மா, இது நீங்கள் சொல்லும் ஒரு கதை என்பது தவிர இதில் ஒரு முக்கியத்துவமும் இல்லை..என்றோ நடந்தததாக நீங்கள் நம்பும் இக்கதையைச் சொல்லி நபி அவர்கள் கருணையையும் அதன் மூலம் இஸ்லாமின் அன்பையும் நீங்கள் நிரூபிக்க முனைவது துரதிர்ஷ்டம்..இது போன்ற லட்சோபலட்சம் கதைகள் இந்து மதத்தில் உள்ளன.சிந்திக்கத் தெரிந்த மனிதன் இதையெல்லாம் உதாரணம் காட்ட மாட்டான்.
மோடி,புஷ்....இதைப் பற்றி எழுதுவதே வீண்...இவர்கள் படு அயோக்கியர்கள், பிழைப்புக்காக மக்கள் உணர்வுகளைச் சுரண்டுகிறவர்கள் என எல்லோரும் புரிந்து கொண்டாயிற்று.முஸ்லிம்கள் மட்டும் இவ்விஷயம் ஏதோ அவர்களுக்கோ, மற்றவர்களுக்கோ புரியாததுபோல் நடித்துக்கொண்டு திரும்பத்திரும்ப இதையே எழுதுகிறார்கள்..
ஈராக்கின் இன்றைய அவல நிலைக்கு புஷ்-ஐ விட சதாம் உசேன் முக்கிய காரணம்.டைக்ரிஸ், யூப்ரடிஸ் போன்ற ஜீவ நதிகளை அரசியலுக்காக விஷமாக்கி , கடல் நீரைக் குடிநீராக்கி உபயோகிக்கும் குவைத்திடம் நீருக்காக கையேந்தும் ஒரு கேவலமான நிலைக்கு மக்களைக் கொண்டு சென்றவர் அவர்.உலகின் எண்ணை வளம் மிக்க நாடுகளில் ஒன்றான ஈராக்கின் மக்கள் இன்று பிச்சைக்காரர்கள் போல வாழ்வதும் அவரால்தான்..புஷ்-ஐயும், அமெரிக்காவையும் ஒழித்துக்கட்ட உலகம் முழுதும் ஜிகாதிகள் புறப்பட்டிருக்கிறார்கள்...ஆனாள் சதாம் உசேன் ஒரு hero...இதிலிருந்து மதவெறி சார்ந்த விஷயம் ஏதேனும் உங்களுக்குப் புரிகிறதா யாஸ்மின் அவர்களே...
டோண்டு சார் மற்றும் ராம் நிவாஸ்,
2:1 என்ற விவாதம் பற்றிய எனது தனித் தொகுப்பை காணவும். நன்றி.
http://www.athusari.blogspot.com
//உடலுறவு என்பது கணவனும் மனைவியும் ஒருவரோடு ஒருவர் உட்கார்ந்து பேசி, இன்றைக்கு உடலுறவு வைத்துக் கொள்வோமா, அனுமதிக்கிறீர்களா என்று பேச்சு வார்த்தை நடத்திவிட்டா உடலுறவு கொள்வார்கள்?//
மேற்கணவடாறு tamilblogger எழுதியுள்ளார். பெண்ணுரிமை பேசுபவர்கள் விளக்கம் கொடுப்பார்களா?
Post a Comment
<< Home