முதலில் என் ஆசிரியர்களுக்கு சமர்பணம்...
எல்லோருக்கும் எனது பணிவான வணக்கங்கள்.
இந்த வாரம் என்னை நட்சத்திர பதிவாளராக இருக்கும்படி கேட்டுக் கொண்ட மதி அவர்களுக்கும் காசி அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.
நமது வலைப் பூக்கள் பூங்காவில் எத்தனையோ எழுத்துக்களைப் படித்து பிரமித்து, அசைப் போட்டு இருக்கிறேன். அவர்களை எல்லாம் பார்க்கும் பொழுது நான் ஒரு மிக சதாரணமாக எழுதும் ஒர் சராசரி வலைப் பூ பதிவாளன். என் எழுத்துக்கள் மூலம் பிறரை கவர்ந்து இழுக்க முடியும் என்றோ, பிறரை சிந்திக்க வைக்க முடியும் என்றோ நான் நிச்சயம் நம்பவில்லை. நமக்கு தெரிந்தக் கருத்துகளை வலைப்பூவில் பதிய வைப்பது ஓர் சுகம். சில பின்னூட்டம் வந்தால் மேலும் ஒர் சுகம். அவ்வளவே!!!
ஆனால் எனக்கு இங்கு கொடுக்கப் பட்டு இருக்கும் வாய்ப்பை என்னால் முடிந்தவரை எனக்குப் பிடித்த விசயங்களை உங்களோடு பகிர்ந்துக் கொள்ளப் பிரியப் படுகிறேன்.
முதலில் என் ஆசிரியர்களுக்கு சமர்ப்பணம்...
நாம் கடந்த வந்த பாதையில் நாம் எத்தனையோ பேர்களிடம் பழகுகிறோம், பார்த்து இருக்கிறோம். சிலர் மனதை கிள்ளியவர்கள், சிலர் மனதை அள்ளியவர்கள், சிலர் மனதை தொட்டவர்கள், சிலர் மனதை பாதித்தவர்கள், சிலர் மனதை நோக அடித்தவர்கள், சிலர் நம் சிந்தனையை தூண்டியவர்கள், இப்படி எத்தனை எத்தனை பேர்கள்? இப்படி நம் வாழ்வை சுற்றி அறிந்தும் அறியாமலும் எத்தனை மனித உறவுகள்? எல்லா உறவுகளும் நம்மோடு இருப்பதும் இல்லை, நம்மோடு வருவதும் இல்லை. இது இயற்கையின் விளையாட்டோ? ஆனால் அந்த உறவுகள் விட்டுவிட்டு சென்ற தடங்கள் நம் கூடவே பயணம் செய்துக் கொண்டுதான் இருக்கிறது...
அப்படி நாம் கடந்து வந்த பாதையில் நம் ஆசிரியர்களுக்கு ஓர் குறிபிட்ட பங்கு இருப்பதாகவே நான் நம்புகிறேன். அப்படி பட்ட ஆசிரியர்களுக்கு, எந்தவித சுயநலம் இல்லாத ஆசிரியர்களுக்கு, நான் என்றும் என்றும் கடமைப் பட்டவன். நாம் அளவு கடந்த அன்பும், மரியாதையும், பண்பும், வைத்து இருப்பதன் காரணந்தான் என்ன? அவர்களுக்கு தெரிந்த பாடங்களை மிக தெளிவாக நடத்துவது, அவர்களுடைய வெளி உலக பார்வை, எல்லாவற்றிற்கும் மேலாக அவர்களிடம் உள்ள ஏதோ ஒர் தனித்துவம் மற்றும் மனித நேயமாககூட இருக்கலாம் அல்லவா?
அப்படி என் வாழ்வில் என் மனதில் இன்றும் கொடிகட்டி பறக்கும் என் மனவெளியில் சிம்மாசனம் போட்டு அமர்ந்து இருக்கும் சில ஆசான்களை ஓர் சில வார்த்தைகளில் உங்களோடு பகிர்ந்துக் கொள்ள ஆசைப் படுகிறேன். இந்த என் பார்வை உங்களில் யாருக்கேனும் அவர்கள் ஆசிரியர் நினைவு வந்தால் அதைப் பற்றி ஒர் சில நேரம் சிந்தித்தால் அதுவே எனக்கு கிடைக்கும் மகிழ்ச்சி!!!
6 ஆம் வகுப்பு : இராமநாதன் ஆசிரியர். மிக அருமையாக கணிதம் மற்றும் ஆங்கிலம் நடத்திய ஆசிரியர். மாணவர்களோடு மிக அன்பாக நடந்துக் கொள்பவர். எனக்கு தெரிந்த விடியகாலை எழுந்து குளித்துவிட்டு 4 அல்லது 5 கீ.மீ நடந்து செல்பவர். சிரித்த முகத்தோடு இருப்பவர்.
7ஆம் வகுப்பு : விஜயலச்சுமி ஆசிரியை. என் பள்ளி பருவத்தில் நான் பார்த்த முதல் மிக அழகான ஆசிரியை. அறிவியல் எடுத்தார். சற்று கண்டிப்பானவர்.
8ஆம் வகுப்பு : தமிழ் ஆசிரியர் மணி. அழகுத் தமிழில் அருமையாக பாடம் எடுக்க கூடியவர். தமிழ் இலக்கணங்களை புரியம்படி நடத்தியவர். தமிழ் ஆசிரியர் என்றப் பெருமையோடு பாடம் நடத்துபவர்.
9 ஆம் மற்றும் 10ஆம் வகுப்பு : வெங்கட்ராமன் ஆசிரியர். பள்ளியிலும் மற்றும் மயிலாடுதுறையிலும் மிக பிரபலமான ஆசிரியர். கணிதத்திலும் ஆங்கிலத்திலும் வல்லவர். எனக்கு நினைவுத் தெரிந்து எந்த உணவகத்திலும் சாப்பிடாத மனிதர். அவர்கள் வீட்டிற்கு எப்பொழுது வேண்டுமானலும் போய் அவரை பார்க்கலாம் பேசலாம் அரட்டை அடிக்கலாம். நல்ல ஜாலியான மனிதர். மிகச் சிறந்த அனுமார் பக்தர்.
11 மற்றும் 12ஆம் வகுப்பு : பாலகிருஷ்ணன் கணித ஆசிரியர். மிக அருமையாக எளிமையாக கணக்கு நடத்துபவர். வகுப்பில் சுமாராகப் படிக்கும் மாணவனை அடையாளம் கண்டு அவர்கள் வெற்றிப் பெற தனி கவனம் செலுத்துபவர். இவரின் அன்பும் எளிமையும் நக்கலும் இன்னமும் மனக் கண் முன்னே
நிழலாடுகிறது. தற்பொழுது அவருக்கு வயதாகி விட்டது. அவரை பார்த்து பேசிய பொழுது அவருடைய வயோதிகம் என்னை ரொம்ப பாதித்தது.
கல்லூரி இளங்கலை : தமிழ் பேராசிரியர் சோ.சிங்காரவேலன். மிகச் சிறந்தத் தமிழ் பேராசிரியர். இலக்கியவாதி, இவர் இல்லத்தில் தினம் தினம் ஒர் திருக்குறளை எழுதும் பழக்கம் உள்ளவர். தற்பொழுது உயிருடன் இல்லை.
பேராசிரியர் செம்பியன் : மிக கலகலப்பாக அன்போடு எளிய தமிழில் உரையாடகூடிய ஆசிரியர். சிறந்த பட்டிமன்ற மற்றும் மேடைப் பேச்சாளர். தலித் முன்னேற்றத்தில் அக்கறைக் கொண்டவர். சமுதாய சேவைகளை செய்து வருபவர். தமிழில் கையொப்பம் இடும் ஆசிரியர்.
முதுகலை : ஆங்கில பேராசிரியர் மேத்யூ தாரகன். கல்லூரியில் சற்று முரண்பாடான ஆசிரியர். ஆனால் அவருடைய இலக்கிய அறிவு ஏராளம். மிக அருமையாக ஆங்கில நாடகம், பாடல்கள், உரைநடை எல்லோருக்கும் புரியும் வண்ணம் மனதில் பதியும் வண்ணம் ஆங்கிலம் நடத்த கூடிய ஆற்றல் படைத்தவர். அவருடைய ஆங்கில அறிவை, நடத்தும் ஆற்றலை பார்த்து அவரை 20 வயது பெண் அவரைத் திருமணம் செய்துக் கொண்டது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். (அவருக்கு அப்பொழுது வயது 46). பைபிளை கரைத்து குடித்தவர். அவர் ஆங்கில இலக்கியங்களை நடத்தியவிதம் சாகும்வரை மறவாது.
இப்படி பல ஆசிரியர்கள் திறம்பட நடத்தி என் மனதை தொட்டவர்கள். தனக்கு தெரிந்த பாடத்தை மாணவனுக்குப் புரியும் படி ஆழமாக பதியும் வண்ணம் நடத்தும் ஆசான்களை நினைத்து பிரமிக்கிறேன். ஆத்ம திருப்தி தரும் தொழில்களில் ஆசிரியர் தொழில் முக்கியமான தொழில், தொண்டு, கைமாறு, இன்னும் இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். நண்பன் போல பழகும் ஆசிரியர் மீது மேலும் ஓர் தனி மரியாதை.
என்னுடைய நிகழ்கால மற்றும் எதிர்கால வெற்றிகளுக்கு எனது அருமை ஆசிரியர்களுக்கு ஒரளவு பங்கு உள்ளது என்றே நான் நினைக்கிறேன்.
தமிழகம் செல்லும் பொழுது எல்லாம் அவர்களை தேடி தேடி சென்றுப் பார்க்கிறேன்...
நீங்களும் அவ்வப்பொழுது உங்கள் ஆசிரியரை நினைத்து பார்ப்பது உண்டா?
நாளை சந்திப்போமா?...
நன்றி...
மயிலாடுதுறை சிவா...
28 Comments:
வாருங்கள் (ஸ்டார்) சிவா,
ஸ்டாரன பின்தான் உங்கள் வலைக்கு வந்தேன்.
சொல்றேன்னு தப்பா எடுத்துக்க கூடாது,
உங்கள் பதிவை பற்றின கருப்பொருளுரையில் காவிரியை "ஓ"ட விட்டு பின்பு எ"ழு"த-வும். பதிவென்றால் போகிறது அவசரமாக இருக்கலாம்னு விட்டுரலாம். நெத்தியடி மாதிரி துரறந்தவுன்னே தெரியுதே.
மிக சரியான ஆரம்பம். யோசித்து பார்க்கும்பொழுது நம்முடைய ஆசிரியர்களிடமிருந்து ஏதோ ஒன்றினை
(சொல்லிக் கொடுத்ததை தவிர)கட்டாயம் கற்றிருப்போம், நமக்குத் தெரியாமலே.
தொடருங்கள்.
சுரேஷ்
vaanga vaanga, kalakkungaaa!
ம்..நடத்துங்க மாயவரத்தான்..:-)
வாழ்த்துகள்
வாங்க சிவா. நட்சத்திர வாழ்த்துக்கள். இந்த வாரம் முழுக்க படிச்சு பின்னூட்டமிட முடியாது, அதனால அட்வான்ஸ் வாழ்த்துக்கள். கலக்கல் வாரமாக இருக்குமாறு கலக்குங்கள்
வாங்க சிவா!
வாழ்த்துக்கள்!!!!
வருக; இவ்வாரம் இனிதாகட்டும்.
நல்ல வாரமாக அமைய வாழ்த்துகள்!
மயில் ஆடும் துறையிலிருந்து வந்த நீங்கள் இந்த ஸ்டார் வாரா கோடை மழையை முன்னிட்டு அழகாக ஆடி அசத்துங்க தலீவா. படிக்க நாங்க இருக்கோம். கவலைப்படாமா சிக்ஸர் அடிச்சி விளாசுங்க.
வரவேற்பு! நட்சத்திர வாழ்த்தும்!
எல்லாம் சரிதான். ஆனால் அரசியல்வாதியாகணும்னு ஆசைப்படுறீங்களே...
சிவா
வணக்கம். இன்னொரு வலைப்பதிவரோடு பேட்டி என்ற வழக்கமான சடங்கைத் தவிர்த்து மாறுதலாக ஆசிரியர்களோடு துவங்கியதற்கு மகிழ்ச்சி. தொடருங்கள்.
அனுராக்:
//ஆனால் அரசியல்வாதியாகணும்னு ஆசைப்படுறீங்களே... //
இதில் என்ன பிரச்சினை?
மாயவரத்து மாபியா கும்பல் சார்பாக வாழ்த்துக்கள். ஏவிசி காலேஜ் பத்தியே தனி போஸ்ட் போடலாமே... இணையத்துல அதிகமா அடிபடுற ஊருங்கிற பேரை காப்பாத்துவோம்!
சிவா ஏற்கனவே தேர்ந்த அரசியல்வாதிதான் (நீங்கள் நினைக்கும் அதே அர்த்தத்தில்தான்) .... யாரை பார்த்தாலும் தமிழ் ஆர்வம் இல்லையோ என்று சந்தேகம் கொள்ளாமல், எல்லோரிடமும் எப்போ ஊருக்கு போரீங்க என்று கேட்டுக்கொண்டு திரியாமல் இந்த வாரத்தை சிறப்பான முறையில் பயன்படுத்துங்கள் சிவா... வாழ்த்துக்கள்...
நெகிழ்ச்சியான பதிவு. நான் பள்ளியில் பெரிதும் விரும்பியது மொழியாசிரியர்களையே!
வருக.. வருக... மாயுரத்து மக்களுக்கு மண்டையில் மசாலா நெறயவே உண்டு என்று நிருபிக்க வருக!! வாழ்த்துக்கள்
சிவா,
ஆரம்பம் நன்றாக இருக்கிறது. வாழ்த்துக்கள்!
கல்வி கற்றலில் ஆசிரியர்களின் பங்கு மகத்தானது. அவர்களை நன்றியுடன் நினைவு கூர்ந்தமைக்குப் பாராட்டுக்கள்.
கல்வி மட்டுமல்லாமல் மாணவர்களின் சொந்த வாழ்விலும் குடும்பச் சூழல், வறுமை போன்ற காரணங்களால் பாதிக்கப் பட்ட மாணவர்களுக்காக தனிப்பட்ட முறையில் உதவிய நல்ல ஆசிரியர்கள் பலரைக் கண்டிருக்கிறேன். அவர்களையெல்லாம் பார்க்கும் பொழுது நாம் எதையாவது உருப்படியாகச் சாதித்தது உண்டா என்று அடிக்கடி எண்ணுவதுண்டு.
நன்றி - சொ. சங்கரபாண்டி
வணக்கம் இவ்வார நட்சத்திரம். நன்றாக எழுதுங்கள். மயிலாடுதுறை என்று உங்கள் ஊருக்கு எப்படிப் பெயர் வந்தது. மயில்கள் நன்னாக நடனம் ஆடுமா? இது பற்றிறும் முடிந்தால் எழுதுங்கள்.
சிவா!... கலக்குங்க...! 'ஆசிரியர் பணி அறப்பணி! அதற்கே உன்னை அற்பணி' எங்கோ கேட்ட ஞாபகம். எப்படி ஒருவர் தாய், தந்தையரின் பாதிப்பின்றி இருக்க முடியாதோ, அதே போல் ஆசிரியர்களின் பாதிப்பு இன்றியும் இருக்க முடியாது!. எனக்கு, "ஸ்கர்ட்டை எடுத்து தலையில் மாட்டிக்கொண்டு (அப்பத்தான் 'சிஸ்டர்' மாதிரி இருக்கும்) கையில் ஸ்கேலுடன் மாடிப்படியை அடித்து டீச்சர் விளையாட்டு, சிறிய வயதில் விளையாடியது இன்றும் நினைவில் உள்ளது. அனேகமாக எல்லாப் பெண்களும் ஒரு காலத்தில், ஆசிரியை ஆக கனவு கண்டிருப்போம்!.
வாங்க சிவா வாங்க. கலக்குங்க.
//மயிலாடுதுறை என்று உங்கள் ஊருக்கு எப்படிப் பெயர் வந்தது. மயில்கள் நன்னாக நடனம் ஆடுமா? //
கறுப்பி உங்க நோலெட்ஜ் குவெஸ்ட்-க்கு ஒரே அளவேயில்லையா? ;-)
Kathirkamas (*_*) <(:(((((((>
வாழ்த்துக்கள் சிவா. ஆசிரியர்களோடு நான் பெற்றோரையும், நண்பர்களையும் சேர்த்துக் கொள்வேன்.
ஆசிரியர்கள் பற்றி எழுதியுள்ளது ரொம்ப நல்ல விடயம்.
" ஊர் பற்றி எழுதவிருந்தால், பாஷ்யம் அய்யங்கார் ( சாண்டில்யன்), கல்கி மற்றும் ஜெகசிற்பியன் என வரலாற்று புதினங்களில் சரித்திரம் படைத்த 3 ம.துறைக்காரர்கள் பற்றி எழுதுங்கள் "
தியாகி சாரங்கபாணி பற்றி, அவர் உயிரிழந்த மொழி போராட்டம் பற்றியும் கூட எழுதலாம் நீங்கள்.
ம.துறை மாப்பிள்ளை என்ற மதர்ப்பில் கருத்து சொல்லவில்லை ;) ..பக்கத்தூர் சீயாழிக்காரன் என்ற முறையிலும்,சித்தர்காடு எமது hub ( தமிழ்x) என்ற உரிமைகளோடும்...
நல்வாழ்த்துகள்.
வாசன்
கறுப்பி.... மயிலாடுதுறையில் இருக்கும் சிவனின் பெயர் மயூரநாதர்... அதுதான் மாயூரம் என்று மருவியது.... ஒரு சாபத்தை போக்க பார்வதி தேவி, மயிலாக பிறந்து மயூரநாதரை நோக்கி தவம் இருந்ததாக வரலாறு. அதான் மயிலாடுதுறை... அப்புறம் எங்க திருவிழந்தூர் கோவில் தமிழக அளவில் (இந்தியா அளவில் கூட இருக்கலாம்) ஒரு சிறப்பு பெற்றது.... யாராவது சொல்லுங்க பாக்கலாம்... (என்னையும் மாயவர மாபியா கும்பல்ல சேத்துக்குவீங்களா ராம்கி... )
இவ்வாரம் நல்வாரமாட்டும்.
//நீங்களும் அவ்வப்பொழுது உங்கள் ஆசிரியரை நினைத்து பார்ப்பது உண்டா?
//
அவ்வவ்போது :-).
என்றாலும் உங்களைப் போல ஆரம்பகால ஆசிரியர்களின் பெயர்கள் எல்லாம் அந்தளவுக்கு ஞாபகமில்லை :-(.
வாங்க, சிவா. வாழ்த்துக்கள்.
//முகமூடி: யாரை பார்த்தாலும் தமிழ் ஆர்வம் இல்லையோ என்று சந்தேகம் கொள்ளாமல், எல்லோரிடமும் எப்போ ஊருக்கு போரீங்க என்று கேட்டுக்கொண்டு திரியாமல் இந்த வாரத்தை சிறப்பான முறையில் பயன்படுத்துங்கள் சிவா...//
நல்ல சீண்டல். ரசித்தேன்.
நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லையே?
சுரேஷ், என்டிமணி,மூக்கன், நரேன், துளசி கோபல், பெயரலி, இராதகிருஷ்ணன், அல்வாசிட்டி விஜய், அனுராக், சுந்தரமூர்த்தி, ரஜினி ராம்கி,
முகமூடி, சுந்தரவடிவேல், இராமசந்திரா உஷா, சுடலை மாடன், கறுப்பி, அப்படிபோடு, கார்திராம்ஸ், கிஸோகண்ணன், வாசன் மற்றும்
ஐய்யா பாவலர் க.மீ மற்றும் என்னை ஊக்குவித்த அவர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள்...
உங்களின் ஆசியோடு
மயிலாடுதுறை சிவா...
சிவா,
நல்ல பதிவு. இந்த பதிவை படித்துகொண்டிருக்கும் போது என் ஆசிரியர்களையும் நினைத்துப் பார்த்தேன்.
வாழ்த்துக்கள் மற்றும் அன்புடன்
தேசிகன்
மொழியாசிரியர்கள் தாம் பெரும்பாலும் மனதில் நிற்கின்றனர். ஒரு வேளை கதை சொல்லும் வாய்ப்பு இவர்களுக்கு அதிகம் கிட்டுகிறதோ.....
நல்ல நட்சத்திர துவக்கம்... கலக்குங்க சிவா
//எங்க திருவிழந்தூர் கோவில் தமிழக அளவில் (இந்தியா அளவில் கூட இருக்கலாம்) ஒரு சிறப்பு பெற்றது//
வாங்க...வாங்க.. (கூடிய சீக்கிரம் முகமூடி யாருன்னு வலையுலகத்துக்கு அம்பலப்படுத்திட்டா ஜென்ம சாபல்யம் கிடைச்சுடும்!)
Post a Comment
<< Home