Friday, May 20, 2005

தன் வாழ்க்கையை நன்குப் புரிந்துக் கொண்ட கமல்...

அரசியலும், திரைப் படமும் நாம் வாழ்வோடு தெரிந்தோ, தெரியாமலோ கலந்து விட்ட ஓர் விசயம். சின்ன வயதில் இருந்தே எனக்கு கமலின் நடிப்பை பார்த்தோ, அல்லது அவரின் அழகை பார்த்தோ நாம் பிரம்மித்துப் போனது இல்லை.

ஆனால் அவரின் பேட்டிகளை சின்னத் திரையிலோ அல்லது பத்திரிக்கையிலோ பார்க்கும் பொழுது ஓர் கலைஞன் தன்னை எப்படி நன்கு புரிந்து வைத்து இருக்கிறான் என்று நான் வியந்தது உண்டு.

கமலின் போராடும் குணம் பிடித்து இருக்கிறது. தன்னை தக்க வைத்தக் கொள்ள அவர் கடுமையாக உழைப்பது எல்லோரும் அறிந்த ஓன்று. திரைப்படம் என்ற மிகப் பெரிய சக்தி வாய்ந்த சாதனத்தில் அவர் புதிது புதிதாக கற்றுக் கொள்வது பாராட்டபட வேண்டிய விசயம். இன்று புதிய பல இளைஞர்கள் வந்துவிட்ட இக்காலத்திலும் தனக்கென்று ஓர் இடத்தை தக்க வைத்துக் கொண்டது மிகவும் பாராட்டுக்கு உரியது. இப்படி கமலைப் பற்றிச் சொல்லிக் கொண்டே போகலாம்.

Image Hosted by Your Image Link


கமல் என்ற கலைஞனின் பேட்டியில் ஒரு சில என் மனதை பாதித்த அசைப் போட வைத்த பேட்டிகளை உங்களுக்கு மீட்டுக் கொடுக்க ஆசைப் படுகிறேன். இவற்றுள் பலதை நீங்கள் விகடன் (நன்றி : விகடன்) மற்றும் சின்னத் திரையில் பார்த்து இருக்கலாம்.

திருமண வாழ்க்கைப் பற்றி பேசுகையில் என்ன ஓர் தெளிவான சிந்தனை, தன் மனதில் பட்டதை அப்படியே அழகாக சொல்லும் பாங்கு. இவற்றை நாம் படிக்கும் பொழுது அவரின் அந்த ரணம் நமக்குப் புரிகிறது.

“திருமணம் என்கிற சடங்கிலேயே உடன்பாடில்லைனு சொன்னீங்க! ஆனாலும், இரண்டு முறை திருமணம் செய்து பிரிஞ்சிருக்கீங்க?”

கமல்: மா! எனக்கு அதில் உடன்பாடில்லை, இப்போதும்! ஆனாலும், இந்தச் சமூகத்தில் வாழ வேண்டி, சில விஷயங்களை சமரசம் செய்துகொள்ள வேண்டியது தேவையாகிறது. அப்படி ஆனதுதான் என் கல்யாணம். இப்போ நாங்க பிரிஞ்சுட்டாலும், அப்போ இருந்த அன்பும் காதலும் பொய்யாகிவிடாது. நான் உண்மையாகக் காதலித்தேன். குழந்தைகள் பெற்றோம். எல்லாம் சரியாக இருந்தது போல் இருந்தது. பிறகு கருத்து வேறுபாடுகளால், தவிர்க்க முடியாததாகிவிட்டது பிரிவு!”

“சில தவறுகளைச் சரி செய்யலாம். சிலவற்றைச் செப்பனிட முடியாமலே போகும். என் திருமண வாழ்க்கை அப்படிச் செப்பனிட முடியாத ஒன்றாகிவிட்டது”

எனக்கு இதில் பிடித்த விசயம் அவருடைய பழைய வாழ்க்கை நன்குதான் இருந்தது நாளடைவில் அது தவிர்க்க முடியாதாகிவிட்டது என்று அவர் சொல்லுகிற தெளிவு மற்றும் ஓத்துக் கொள்வது என்னை கவர்கிறது.

“பிரிவுக்குக் காரணம்தான் என்ன?”

... சுருக்கமா சொல்லணும்னா ஈகோ!”

எத்தனைப் பேர் இப்படி ஓத்துக் கொள்வார்கள் “ஈகோ” என்று?
எல்லாவற்றிற்கும் மேலாக இங்குதான் கமல் தன்னை மிக அழகாக ஓத்துக் கொள்ளும் விதம் மிக அருமையாக வெளிப்படுத்தி இருக்கிறார்.

“அவ்வப்போது ஏதாவது ஒரு பெண்ணுடன் இணைத்துப் பேசப்படுகிறீர்கள்... இப்போது புதிதாக கவுதமி!”

கமல்: பெண்கள் இல்லாமல் என்னால் வாழ முடியாது! நான் பெண்களோடு சேர்ந்து வளர்ந்தவன். அம்மா, பெரியம்மா, அக்கா, தங்கை, தோழி, காதலினு என்னைச் சுற்றி எப்போதும் பெண்கள் இருந்தார்கள், இருக்கிறார்கள்... இருப்பார்கள். எனக்குக் காதல் இன்னமும் இருக்கிறது. உணர்வுகள் இன்னும் இருக்கின்றன. இது மனித இயற்கை!

இதை விட தன்னுடைய உணர்வுகளை எப்படி மென்மையாக சொல்ல முடியும்?

என்னைப் பற்றி எழுதப்படுவதைத் தவிர்க்கணும்னு கூட நான் நினைக்கலை. ஏனென்றால், நான் அடுத்தவர்களுக்காக வாழவில்லை!”

நாம் இன்னமும் அடுத்தவரைப் பற்றியும் நம் சமுகத்தைப் பற்றியும் நினைக்கும் காலத்தில் நான் சமூகதிற்காக வாழவில்லை என்று சொல்லுகின்ற தைரியம், ஓர் ஆண்மைத் தனம், ஓர் தனி ஆளுமை கமலிடம் இருப்பதைப் பார்த்து நான் வியக்கிறேன்.
அடுத்து அவருடைய தற்கால பெண் நண்பர் கௌதமிப் பற்றி பேசும் பொழுது,

‘‘கௌதமிக்கும் உங்களுக்கும் இடையே இருப்பது வெறும் நட்பு மட்டும்தானா?’’

‘‘இல்லவே இல்லை. நட்பும் இருக்கிறது. ம்... குணா ஸ்டைலில் சொல்வதென்றால் இது அதையும் தாண்டிப் புனிதமானது.!’’

கலக்கல் கமல் கலக்கல்!!!

பத்திரிக்கை மக்கள் எப்போழுதும் பண்ணும் வேலை தேவை இல்லாத ஓப்புமை? இந்த கேள்வி கூட அப்படிதான்.

‘‘ரஜினி மாமனார் ஆகி விட்டார். உங்க வீட்ல எப்போ விசேஷம்?’’

‘‘அநேகமா இந்த மாசமே இருக்கலாம்! என் மகள் ஸ்ருதி மேற்படிப்புக்காக வெளிநாடு போறாங்க. இந்தியா மாதிரி பெண்ணடிமை சமூகத்தில் ஒரு பெண்ணை வெளிநாடு அனுப்பிப் படிக்க வைப்பதுதான் நிஜமாவே விசேஷம். மற்றபடி கல்யாணத்தை தான் விசேஷம்னு நினைச்சீங்கன்னா, அதை என் மகள்தான் தீர்மானிக்கணும். அவர் தன் விருப்பத்தைச் சொல்லும்போது, ஒரு தந்தையாக என்ன செய்ய வேண்டுமோ, அதைச் செய்வேன். அவ்வளவுதான்!’’

விசேஷம் என்றால் வெறும் கல்யாணம், குழந்தைப் பெற்றுக் கொள்ளுதல் என்று நினைக்கும் நம் சமுத்தாயத்தில் தன்னுடையக் கருத்துகளை மிக ஆழமாக தெளிவாக சொல்லுகிறார். இதைவிடத் தெளிவாக தன்னுடைய கருத்துகளை எப்படி சொல்ல முடியும்?

‘‘ஏன், ‘வேட்டையாடு விளையாடு’ என்று நல்ல தமிழ்ப் பெயருடன் அவசர அவசரமாகப் புதிய படம் தொடங்கினீர்கள்?’’

கமல் : ‘‘நான் தமிழில் பெயர் வைப்பதே செய்தியாகிறது என்பது எனக்குச் சிரிப்பை வரவழைக்கிறது. தொடர்ந்து என்னை ஒரு தமிழ்த் துரோகியாகவே புரிந்துகொள்வது ஏனென்று புரிய வில்லை. ஒருவேளை, தமிழனாகப் பிறந்து, நல்ல தமிழ் பேசி, தமிழிலேயே சிந்திப்பதால் என்னைத் தமிழ் விரோதியாகப் பார்க்கிறார்கள் போல! ‘வந்தாரை வாழவைக்கும் தமிழ்நாடு’. ஆனால், வீட்டில் இருக்கிற சகோதரனைக் கண்டுக்க மாட்டங்களோ, என்னவோ!’’

அதுமட்டும் அல்ல "குணா" என்றப் படம் எடுக்கும் பொழுது அந்தப் படத்திற்கு "மதி கெட்டான் சோலை" என்று வைக்க கமல் வைக்க ஆசைப் பட்டதாக சன் தொலைகாட்சியில் சொன்னார். ஆனால் தமிழ் திரைப்பட வர்த்தகம் அதற்கு ஓத்துக் கொள்ளவில்லை என்று ஆதங்கப் பட்டார்.

பழைய விகடன் பேட்டியில் கூட என்னுடையத் தனிபட்ட வாழ்க்கையை ஏன் எல்லோரும் குத்தி குதறுகீறீர்கள்? நீங்கள் காய்கறி கடைக் காரனிடம் காய்கறி வாங்கிவிட்டு அதோடு நடையை கட்டுகீறீர்கள். அந்த காய்கறி கடைக்காரிடம் முதல் நாள் உன் மனைவியுடம் உறவு வைத்து இருந்தாயா? என்று கேட்பதில்லையே? ஆனால் என்னிடம் மட்டும் ஏன் இப்படி? என் வீட்டில் என் சன்னலை மட்டும் திறந்து வைத்து இருக்கிறேன். னால் நீங்கள் என் வாச கதவு வழியாக வர முயற்சி செய்யாதீர்கள் என்று தாழ்மையாக கேட்டுக் கொண்டார்.

உலகத்திலேயே என்னை சரியாகப் புரிந்துக் கொண்ட ஓரே ஆள் நான் தான். ஆனால் நான் என்னைப் புரிந்துக் கொண்டதைப் போல் பிறரும் என்னைப் புரிந்துக் கொள்ள வேண்டும் என நினைப்பது எவ்வளவு தவறு? என்றார் கமல்.

கமல் என்ற மாபெரும் கலைஞனின் நடிப்பை சமூகம் போற்றலாம். ஆனால் அவரின் தனிப் பட்ட வாழ்க்கையில் அவர் போராடும் குணம் என்னை மிக கவருகிறது.

தன்னை நன்குப் புரிந்து மிக யாதர்த்தமாக அவர் கொடுக்கும் பேட்டிகள் என் மனதை கவருகின்றன. அதிலும் குறிப்பாக,

...என்னைப் பற்றி எழுதப்படுவதைத் தவிர்க்கணும்னு கூட நான் நினைக்கலை. ஏனென்றால், நான் அடுத்தவர்களுக்காக வாழவில்லை!”

இதைவிட கமல் வேறு நாகரீகமாக என்ன சொல்ல முடியும்? நடிகன் என்ற கமலைவிட வாழ்க்கை யாதர்த்ததை மிகத் தெளிவாகச் சொல்லும் பேசும் கமலை நான் ரசிக்கிறேன்...

நன்றி!
மயிலாடுதுறை சிவா...

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

12 Comments:

Blogger dondu(#11168674346665545885) said...

நல்ல பதிவு மயிலாடுதுறை சிவா அவர்களே. கமல் நல்ல நடிகன் மட்டுமல்ல. தன் குறை நிறைகளை மறைக்காமல் பேசுபவர் என்பது தெளிவு.
அன்புடன்,
டோண்டு ராகவன்

Friday, May 20, 2005 10:51:00 PM  
Blogger கொழுவி said...

கமலைப் புகழ்ந்து ஒரு பதிவு! அதற்கு முதல் பின்னூட்டம் டோண்டு அவர்களிடமிருந்து..
ஆகா.. வானம் கறுக்கிறது.. இடி இடிக்கிறது.. மின்னல் தெறிக்கிறது..

பலமான சூறாவளிப்பின்னூட்டங்கள் வருவதற்கான சாதியக் கூறுகள்.. மன்னிக்கவும் சாத்தியக் கூறுகள் தென்படுகின்றன.

இணையத்தில் தமிழின் வளர்ச்சியை கண்குளிர உய்த்துணர விரும்புகின்றவர்களை அழைக்கிறேன்.. நன்றி

Friday, May 20, 2005 11:28:00 PM  
Blogger குழலி / Kuzhali said...

//கமலைப் புகழ்ந்து ஒரு பதிவு//

அய்யோ இப்போது தான் கமலைப்பற்றி ஒரு பதிவு எழுதிகொண்டுள்ளேன், அடிவாங்கப்போகிறேன் என எண்ணுகின்றேன்.

Saturday, May 21, 2005 1:28:00 AM  
Blogger dondu(#11168674346665545885) said...

Welcome to the club, Kuzali. You can do one thing, start criticising Kamal. His haters will give you overwhelming support, while his supporters may shrug and not bother to respond. On the whole you can escape from brickbats.
Regrds,
Dondu Raghavan

Saturday, May 21, 2005 2:18:00 AM  
Blogger குழலி / Kuzhali said...

அய்யா மணிக்கூண்டு இப்போதான் கமலைப்பற்றி எழுதிய பதிவை போட்டேன், என்ன நான் கமலைப்பற்றி எழுதப்போகின்றேன் என உமக்கு முன்பே தெரிந்துவிட்டதா? பலரும் ஏதோ என் பதிவு இந்த பதிவிற்கு எதிர்வினை என எண்ணுவர் அப்படியெல்லாம் இல்லை, நான் முன்பே எழுதியதுதான் கடைசி சிலவரிகளை எழுதி இணையத்திலே ஏற்றியுள்ளேன்.

Saturday, May 21, 2005 2:42:00 AM  
Blogger எண்ணச்சிதறல்கள் said...

/*
‘வந்தாரை வாழவைக்கும் தமிழ்நாடு’. ஆனால், வீட்டில் இருக்கிற சகோதரனைக் கண்டுக்க மாட்டங்களோ, என்னவோ!’’
*/

இது கமலின் ஆதங்கமா? வெறுப்பின் வெளிப்பாடா?

Saturday, May 21, 2005 11:21:00 PM  
Blogger dondu(#11168674346665545885) said...

"what about vani ganapathy.she wrote that kamal forced to her to have an abortion as him image would be affected if they had a child.do we know the views of the
other side - why sarika left him
or why she had to leave him.he may be frank but that per se is not a
virtue."
விசிதா அவர்களே, உங்களைப் போல பேசுபவர்களுக்காக கமல் கொடுத்த பதில்:
"பழைய விகடன் பேட்டியில் கூட என்னுடையத் தனிபட்ட வாழ்க்கையை ஏன் எல்லோரும் குத்தி குதறுகீறீர்கள்? நீங்கள் காய்கறி கடைக் காரனிடம் காய்கறி வாங்கிவிட்டு அதோடு நடையை கட்டுகிறீர்கள். அந்த காய்கறி கடைக்காரிடம் முதல் நாள் உன் மனைவியுடம் உறவு வைத்து இருந்தாயா? என்று கேட்பதில்லையே? ஆனால் என்னிடம் மட்டும் ஏன் இப்படி? என் வீட்டில் என் சன்னலை மட்டும் திறந்து வைத்து இருக்கிறேன். னால் நீங்கள் என் வாச கதவு வழியாக வர முயற்சி செய்யாதீர்கள்

அன்புடன்,
டோண்டு ராகவன்

Sunday, May 22, 2005 3:54:00 AM  
Blogger dondu(#11168674346665545885) said...

ஜன்னல் வழியாகத் திருடன்தான் குதிப்பான். ஜன்னல் என்பது தகவல் பரிமாற்றத்துக்கான உருவகம். ஜன்னல் வழியாக பேசி விட்டு போங்கள், வீட்டிற்குள் நான் அழைக்காமல் வரவேண்டாம் என்று கமல் கூறுவதாக எனக்கு படுகிறது. அவர் நடிப்பை ரசிப்போம். மற்ற மூக்கை நுழைக்கும் காரியங்கள் வேண்டாமே. சிவாஜியின் வாரிசாக நான் கமலைப் பார்க்கிறேன். அவருக்குரிய மரியாதையை அளிப்போமே.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Sunday, May 22, 2005 9:17:00 AM  
Blogger dondu(#11168674346665545885) said...

அடுத்தவர் அந்தரங்கத்தில் மூக்கை நுழைப்ப என்பது ஃபேஷனாகவே ஆகி விட்டது. அதிலும் விசிதா அவர்களுக்கு இது ரொம்ப முக்கியமான வேலையாகி விட்டது. அவர் எழுதிய மிக சமீபத்தியப் பதிவைப் பாருங்கள். கிசு கிசு எழுத்தாளர் கெட்டார் போங்கள். அப்பதிவின் உரல் இதோ.

http://wichitatamil.blogspot.com/2005/05/blog-post_21.html#comments


அன்புடன்,
டோண்டு ராகவன்

Sunday, May 22, 2005 4:40:00 PM  
Blogger Chandravathanaa said...

This comment has been removed by a blog administrator.

Monday, May 23, 2005 2:07:00 AM  
Blogger Chandravathanaa said...

சிவா
நல்ல பதிவு.
எனக்கு கமலின் நடிப்பை நன்கு பிடிக்கும்.
அவரது தனிப்பட்ட வாழ்க்கையை நான் அலசுவதில்லை.
உங்கள் பதிவு ஒரு மனிதனின் சாதாரண இயல்புகளுக்கு உட்பட்ட கமலைக் காட்டுகிறது.

கிளின்ரனும் கமலும் இவர்கள் போன்ற இன்னும் பலரும் செய்யும் தவறுகள்
உலகளாவும். நல்ல பிள்ளைகள் போல் வீட்டுக்குள் இருக்கும் எத்தனையோ பேரின் தவறுகள்
யாருக்கும் தெரியாமலே யார்யாரையோ எல்லாம் துன்புறுத்திக் கொண்டிருக்கும்.

Monday, May 23, 2005 3:08:00 AM  
Blogger ஜோ/Joe said...

மிக நல்ல அலசல்! பாராட்டுக்கள் சிவா!

Wednesday, June 29, 2005 7:31:00 PM  

Post a Comment

<< Home

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது