சைக்கிள் வாங்க வேண்டும்!!!
சைக்கிள்...
இன்றையத் தினத்தில் Two Wheeler இல்லாத வீடுகளே இல்லை எனலாம். எவ்வளவு வித விதமான அழகு அழகான Bikes. Hero Honda, Yamaha, TVs Suzuki, Bajaj, Scooter, Scooty, TVS 50, TVS Champ மற்றும் Luna இப்படி எத்தனை வகைகள். எந்த தொலைகாட்சியை நீங்கள் பார்த்தாலும் அதில் Two Wheeler இல்லாத விளம்பரங்களே இல்லை எனலாம்.
ஆனால் இவை எல்லாவற்றிற்க்கும் மூலம் “’சைக்கிள்”. எவ்வளவு அற்புதமான, எளிமையான, சுற்றுப் புறச் சூழல் பாதிக்காத வாகனம் இந்த சைக்கிள். ஏழைகளின் நண்பன்.
நாம் சின்ன வயதில் சைக்கிள் கற்றுக் கொண்டது 5ம் வகுப்பு படிக்கும் பொழுது. ஆரம்பத்தில் குரங்கு பெடல் ஒட்டுவது, பின்னர் Barல் உட்கார்ந்து ஓட்டுவது, பின்னர் சற்று வளர்ந்தவுடன் Seatல் உட்கார்ந்து ஓட்டியது நினைவிற்கு வருகிறது.
6ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை அப்பா என்னையும், தம்பியையும் சைக்களில் கொண்டு போய் பள்ளியில் விடுவார். சில பணக்கார பிள்ளைகள் சின்ன சைக்கிளில் வருவதைப் பார்த்தால் ஏக்கமாக இருக்கும்.
ஓரே வீட்டில் இருவர் அல்லது மூவர் ஓரே சைக்கிளை உபயோகப் படுத்துவது பயங்கர கடுப்பான விசயம். ஞாயிறு மாலை நண்பர்களோடு திரைப் படம் போகலாம் நாம திட்டம் போட்டு இருந்தா, தம்பி ஞாயிறு மாலை 4.30 - 6.00 ராகு காலத்திற்கு துர்கை அம்மன் கோவிலுக்கு போக சைக்கிள் வேணும் என்று கேட்பான், தம்பிக்கு வீட்டில் நம்மை விட செல்வாக்கு ஜாஸ்தி. வெறி தலைக்கு ஏறும். அப்ப எல்லாம் வேலைக்குப் போய் முதலில் சைக்கிள் வாங்க வேண்டும் என்பது பெரிய லட்சியமாய் இருந்தது.
கோடை விடுமுறையில் காலை வேளையில் சிலு சிலு காற்றில் சைக்கிளில் பயணம் செய்வது ஓர் ஆனந்தம். சில சில சமயம் எதிர் காற்றில் வேகமாய் போய் விட்டு வரும் பொழுது மெதுவாக வருவது மற்றொரு சுகம். அல்லது பெரிய பாலத்தில் வேகமாய் ஏறிவிட்டு இறங்கும் பொழுது ஹாயாக இறங்குவது சூப்பரோ சூப்பர்!!!
சைக்கிளில் நண்பர்களோடு கும்பலாக திரைப் படம் செல்லுவது, அருகில் உள்ள கோவில்களுக்கு செல்லுவது சுகமோ சுகம்.
வீட்டில் சைக்கிள் இல்லாத பொழுது வாடகை சைக்கிள் எடுத்து சுத்துவது அலாதியான அனுபவம். வாடகை கடையில் அழகு அழகாய் சைக்கிள் வரிசையாய் அடுக்கி வைக்கப் பட்டு இருக்கும். 1 மணி நேரத்திற்கு 1 ரூபாய்.
அந்த பணத்தை வீட்டில் வாங்குவதற்குள் போதும் போதும் என்று கிவிடும்.
சைக்கிளில் முன்பக்கம் காதலியை வைத்து வேகமாக ஓட்டிக் கொண்டு போனது உண்டா? அந்த சுகத்தை வார்த்தையால் விவரிக்க முடியாது. அதுவும் யாருக்கும் தெரியாமல்"escape" வது கலக்கல் கண்ணா, கலக்கல்..
சைக்கிளில் doubles, triples போய் போலிஸிடம் மாட்டி, சில சமயம் அவர் காற்றை புடுங்கி விட்டு, அவரிடம் கெஞ்சி கூத்தாடி வருவதற்குள் போதும் போதும் என்று ஆகி விடும்.
12வது முடித்தவுடன் BE சேர வேண்டிகிட்டு மயிலாடுதுறையில் இருந்து (15 கீ.மீ) சைக்கிளில் வைத்திஸ்வரன் கோவில் சென்றது ஓரு காலம்? ஓரு ஆண்டு நடந்து கூட போய் இருக்கிறேன். (BE கிடைக்கவில்லை என்பது அதைவிட பெரிய சோகம்)
சைக்கிள்தான் எல்லாவற்றிற்கும் மூலம். ரைட் சகோதரர்கள் கூட இதனை வைத்துதான் ஏரோபிளேன் வரை திட்டம் போட்டு கண்டுபிடித்தாக நினைவு.
ஹாலந்து, டென்மார்க் போல நாடுகளில் சைக்கிள் ஓட்டுவதை ஊக்கப் படுத்துவதைப் போல நம் நாட்டிலும் ஊக்கப் படுத்தினால், பாதி சுற்றுப் புறசுழல் காப்பாற்றப்படும்.
சைக்கிளை கண்டுபிடித்த ஜெர்மன் நாட்டை சேர்ந்த பேரான் வான் டிராஸ் மற்றும் ஸ்காட்லேண்டை சேர்ந்த கிர்பாட்ரிக் மேக்மிலன் அவர்களுக்கு மனதார நன்றிகள் பல...
சைக்கிளில் Raleigh, Hercules, Atlas, BSA, BSA XLR, BSA Sports இப்படி பல மாடல்கள் இருந்தன. தற்பொழுது என்னனென்ன உள்ளது என்று விசாரிக்க வேண்டும்.
காலை மாலை உடற்பெயர்ச்சி செய்யவாது சைக்கிள் வாங்கி ஓட்ட வேண்டும்...
என்னதான் சொந்த ஊரில் அழகான வீடுக் கட்டினாலும், மாருதி கார் வாங்கினாலும், Hero Honda, Bajaj Bike வாங்கினாலும் ஒரு சைக்கிள் வாங்கிய தீர வேண்டும்.
நன்றி...
மயிலாடுதுறை சிவா...
9 Comments:
" மிதிவண்டி ( சைக்கிள் ) கேட்டு நச்சரிக்காமலேயே அப்பா ஒன்று வாங்கி வைத்திருக்கிறார் " , என்ற செய்தி கிராமத்தில் விடுமுறையிலிருந்த போது கிடைத்தது. ஆவலுடன் வீடு வந்து பார்த்தால், கிளி பச்சை நிறத்தில், பெண்கள் ஓட்டும் - குறுக்கு குழாய் இல்லாத பேரீச்சம் பழ வாசனையோடு ஒரு வண்டி ;(
பள்ளிக்கூடத்திற்கு நாலைந்து தடவை எடுத்து சென்ற போது தோழர்கள் கேலி தாங்க முடியவில்லை. பூட்டாமலேயே பள்ளிக்கூடம் நுழைவாயில் அருகில் வைத்துவிட்டால், யாராவது திருடிவிட்டு போய்விடுவார்கள் என ஒருமுறை செய்து பார்த்து ஒன்றும் நடக்கவில்லை.
கொல்லையில் வைக்கோல்போரில் சில மாதங்கள் ஒளித்து வைத்திருந்தேன். வேறு வண்டி வாங்கித் தரப்படாமல் வேறு யாருக்கோ இலவசமாய் போய் சென்றது, இது 1975.
1980 ல் கோடை விடுமுறை வேலையில், கிடைக்க வேண்டிய முதற் சம்பளத்திற்கு மாற்றாக புது மிதிவண்டி கிடைத்தது - ஜெகநாதன் செட்டியார் கடையில் வாங்கியது. கரும்பச்சை பிஎஸ் ஏ வண்டியை ஒரு ஒன்றரை வருடம் ஓட்டோ ஓட்டு என ஊர் முழுக்க ஓட்டினேன். ஒரு தடவை நாகேசுவரன் கோவிலருகே எண்ணை வாங்கி சென்ற பெண்மணி மீது மோதியதில், பின் சக்கரத்திற்கு ஒரு லீடர் நல்லெண்ணை அபிஷேகம் கிடைத்தது. ஒப்பாரி வைத்த பெண்மணிக்காக, வாய்விட்டு சிரித்துக் கொண்டிருந்த மளிகைக்கடைகாரரிடம் எண்ணைக்கும், போத்தலுக்கும் சேர்த்து 20 ரூபாய் கொடுத்ததாகவும் மற்றும் அடுத்த நாள் லேனா கொட்டகையில் சினிமா போகவிருந்த திட்டம் ரத்து என தேவையில்லாத ஞாபகங்கள்.
1982ல் ஊரை விட்டு காலி செய்து அமேரிக்கா பக்கம் ஓடிய போது, தாய்மாமா ஒருவரிடம் கொடுத்துவிட்டு வந்தேன். 1992 ல் இந்தியா சென்ற போது, வண்டி திருடப்பட்டது, மீன்சுருட்டி போனால், பொலீசுக்கு கிம்பளம் கொடுத்தால், திரும்ப கிடைக்கும் என்றார்களாம்..எனது மாமா வேண்டாம் என விட்டு விட்டார்.
ஜீ.எஸ்.வாசன் என எழுதியிருக்கும்,சங்கிலி தகடுறை மீது. அவ்வவட்டாரத்து மக்கள் யாராவது பார்த்தால் சொல்லுங்க, பரிசு கொடுத்து உங்களிடமிருந்து காசு கொடுத்து வாங்கிக் கொள்கிறேன்...
இது எனது சைக்கிள் கதை அல்லது நீண்டவொரு 660 நொடிகள் பின்னூட்டம்.
வாசன்
மற்றொரு சைக்கிள் ஆர்வலரை பார்த்ததில் சந்தோஷம் :) நான் இன்றும் அலுவலகத்திற்கு சைக்கிளில்தான் சென்று கொண்டிருக்கிறேன். சாலையில் ஏற்றமிறக்கங்கள் மிகுதியாக உள்ள எங்களூரில் கொஞ்சம் கடினம்தான், இருந்தும் burnt caloriesஐ நினைத்துப் பார்த்தால் அதுவே ஒரு ஊக்குவிப்புதான். தெருவில்தான் ஒரு மாதிரி பார்க்கிறார்கள், முழு formals அணிந்துகொண்டு சைக்கிள் மிதித்துக் கொண்டு சென்றால். சைக்கிளில் நீங்கள் கூறியது போல் சூழலை மாசு படுத்தும் வெளியீடுகள் கிடையாது, சத்தமும் கிடையாது. இன்றுள்ள போக்குவரத்து நிலவரத்தில், அருகிலிருக்குமிடங்களுக்கு கிட்டத்தட்ட ஒரு ஸ்கூட்டர் எடுத்துக்கொள்ளும் அதே நேரத்தில் சைக்கிளிலும் சென்று விடலாம் (இது நான் அனுபவத்தில் அறிந்த உண்மை), பெட்ரோல் செலவுமில்லை.
உற்சாக மருந்துகள் அருந்தியபின் சைக்கிளில் சென்றால், ஏதோ ஆகாயத்தில் பறப்பது போலொரு உணர்வைத் தரும் :) இதுவும் அனுபவத்தில் அறிந்த உண்மைதான் ;-)
சைக்கிள் ஒரு அருமையான வண்டி. அதன் வசதிகள், எளிமை இவை தனித்துவமானவை. இவைகளை நினைவுபடுத்திய பதிவுக்கு நன்றி!
இன்றையத் தினத்தில் Two Wheeler இல்லாத வீடுகளே இல்லை எனலாம். நீங்க அப்படி சொல்லமுடியாதபடி - எங்கள் ஊரில் வீட்டில் சைக்கிள் இல்லை (மற்ற வாகனங்க்ளும் இல்லை என்பது இங்கே அனாவாசியம்தானே:)
அப்பா சின்னப்பையன்ல எங்கேயோ போய் சைக்கிளில் இருந்து விழுந்த அலர்ஜியிலாலும், எப்போதுமே வெளியூரில் வேலைபார்த்து வாரயிறுதியில்தான் வீடுதிரும்பியதாலும், நான் 9 முதல் விடுதி என்பதாலும் - அப்போது சைக்கிளுக்கு தேவையில்லாமலே இருந்தது. ஆனால், இப்போது சைக்கிள் சிலநேரம் பயன்படும் என்பதால் இங்கு வீட்டுமுன்னார் நிறுத்திவைத்திருக்கிறேன். ஆடிக்கொருமுறை அதை கீழிறக்குவேன். இருந்தாலும் சைக்கிளிலும் இறக்கத்தில் செல்லும் மகிழ்ச்சுக்கு அளவே கிடையாது - இப்போதும்தான்:)
வாசன்,
லேனா தியேட்டர் - இது எந்த ஊரில் இருக்கிறது? சிதம்பரம்தானே?
தாரா.
எனக்கு குரங்கு பெடல் போட்டு சைக்கிள் ஓட்டத் பிடிக்கும். இல்லேன்னா ஹேண்ட் பார் பிடிக்காம சைக்கிள் ஓட்ட பிடிக்கும். சைக்கிளே இல்லான்னாலும் சைக்கிள்ல போற ஃபிகரை பிடிக்கும்.
மூன்று வருஷம் முன்னால் பாலேஷ்வர், ஒரிஸ்ஸாவில் இருந்த போது அங்கே பெரும்பாலும் சைக்கிள் மட்டுமே ஓடுவதைப் பார்த்து ஆச்சரியமாக இருந்தது. அங்கே இருந்த வரை பேசாமல் சைக்கிள் ஓட்டிய என் பிள்ளைகள் சூரத் போய் ஒரு மாசத்திற்குப் பிறகு தொடக்கூட இல்லை. அங்கேதான் பத்து வயது வாண்டுகள் கூட பைக் ஓட்டிட்டு இருந்தாங்களே!
நிர்மலா.
பழைய நினைவுகளை நினைவு படுத்திய பதிவு. என் அப்பாவிடம் இருந்தது ஒரு பழைய சைக்கிள். வேலைக்கு போனால் நல்லதாய் ஒன்று வாங்கித்தரவேண்டும் என்று நினைத்துக்கொள்வேன்.இப்போது வசந்தம் வந்தால் என் மகனும், கணவனும் தங்கள் சைக்கிளில் போட்டி போட்டு கொண்டு ஓட்டுவது வழக்கமாகிவிட்டது. அமெரிக்காவில் உடற்பயிற்சி செய்ய தூண்டும் விதத்தில் இப்போதெல்லாம் அரசே "சைக்கிள் ரோடியோ" என்ற நிகழ்ச்சியை ஆரம்பித்து சலைகளில் சைக்கிள் ஒட்ட்டி பள்ளி/ அலுவலகம் செல்வதை ஊக்கப்படுத்தி வருகிறது.
ஒரு ஏழு , எட்டு வருடம் பின்னோக்கி உங்கள் சைக்கிளில் ( அய்யோ அய்யா வும் திருமா வும் அடிப்பார்க்ள்... மிதிவவண்டி ) அழைத்து சென்றீர்க்ள்... நல்ல இனிமையான் பயனம்.... நன்றி
http://arataiarangam.blogspot.com
Post a Comment
<< Home