தொல்.திருமா - சிங்கப்பூர் பயணம் (சூன் 24,25,26)
அண்ணன் தொல்.திருமாவிடம் கலைஞர் அறிக்கை சம்பந்தமாக பேசுவதற்கு கடந்த 3 நாட்களாக தொடர்புக் கொள்ள முயற்சித்து தற்பொழுது பேசும் வாய்ப்பு ஏற்பட்டது. வெள்ளி, சனி, ஞாயிறு சிங்கையில் உள்ளார்.
சிங்கை நண்பர்கள் பேசி, பார்த்து உங்கள் கேள்விகளை தொடுக்கலாம்.
வருகிற சூலை 1முதல் 5தேதி வரை கனடா-டொரோண்டோ திருமா வருகிறார் என்பது கூடுதல் செய்தி.
நன்றி
மயிலாடுதுறை சிவா...
19 Comments:
இத்தகவலுக்கு நன்றி சிவா!!
மனிதன்
வணக்கம். தாழ்த்தப் பட்ட, ஒடுக்கப் பட்ட, உரிமைகள் மறுக்கப் பட்ட மக்களுக்கு போராடும் தொல்.
திருமாவின் பெரும் ரசிகன். அமெரிக்காவில் அவருடைய எழுச்சிப் பேச்சில் என் மனதை பறிக் கொடுத்தவன்.
அவருடைய தமிழ் பாதுகாப்பின் இயக்கத்திற்கு பெரும் ஆதரவாளன்.
அண்ணன் தொல். திருமாவிடம் தொடர்புக் கொண்டதால்
அவருடைய பயணச் செய்தியை வலைப்பூ மக்களிடம் பகிர்ந்துக் கொண்டேன்.
நன்றி
மயிலாடுதுறை சிவா...
நன்றி சிவா!
சிங்கப்பூரில் எங்கு வரப்போகிறார். எங்குப் பேசப்போகிறார் என்று விரிவான விளக்கம் அளித்தால் சந்திக்க முயற்சி பண்ணுவோமே?
விஜய்
நான் தொலைப் பேசியில் தொடர்புக் கொண்ட பொழுது அவர் சென்னை விமான நிலையத்தில் இருந்தார்.
சென்ற வாரம் அவர் மலேசியா சென்று இருந்தராம். அந்த அமைப்பினரோ அல்லது வேறு யாரோ அவரை
சிங்கை வரச் சொல்லியதால் அவர் அங்கு வந்து இருக்கிறார்.
விஜய் அவரை எப்படியாவது பார்க்க முயற்சி செய்யுங்கள். உங்கள் சிந்தனைக்கு நிச்சயம் ஏதாவது தீனீக் கிடைக்கும்.
பார்த்துப் பேசினால் நிச்சயம் வலைப் பூவில் பதிய வையுங்கள்.
நன்றி
மயிலாடுதுறை சிவா...
சிவா இப்படி மொட்டையாகச் சொன்னால் என்ன செய்வது திருமாவளைவனைச் சந்திக்க மிகுந்த ஆவலுடன் உள்ளேன்.யாரைத் தொடர்புகொள்ளவேண்டும் என்று கூறுங்கள் ஒரு சந்திப்புக்கு ஏற்பாடு செய்யலாம்.
எனது மின்னஞ்சல் eelanathan at yahoo.com
சிவா,
கிண்டலுக்காக அல்ல, நிஜமாகவே தெரிந்து கொள்ளவேண்டுமென்பதற்காக சீரியஸாக கேட்கிறேன். வை.கோ, ராமதாஸ், திருமாவளவன் போன்றவர்கள் உலகம் பூராவும் சுற்றி வந்து என்னதான் செய்கிறார்கள்? இவர்களை வரவேற்பது யார்? சொந்தக்காசில்தான் வருகிறார்களா? சம்பந்தப்பட்ட நாடுகளில் தாழ்த்தப்பட்டவர்களெல்லாம் எப்படி இருக்கிறார்கள் என்பதை பற்றி தெரிந்து கொள்கிறார்களா? வெளிநாட்டு தமிழர்களில் பெரும்பாலேனோர் மேல் ஆதிக்க ஜாதியினர்தான். அவர்களிடம் திருமாவளவன் போன்றவர்களுக்கு வரவேற்பு எப்படி இருக்கிறது? கொஞ்சம் பொதுவாக, விரிவாக எழுதுங்களேன்.
ராம்கி
நிச்சயம் எழுதுகிறேன். நல்ல கேள்வி. உங்களுக்கு பதில் சொல்லுவதன் மூலம் மற்ற நண்பர்களுக்கும் இது தெரிய வாய்ப்பு.
தனி பதிவாகவே போட்டு விடுகிறேன்.
நன்றி
மயிலாடுதுறை சிவா
நீங்கள் சொல்வதைப் பார்த்தால், வெளிநாடுகளில் பிராமணர்கள் தவிர வேறு யாருமே இல்லை என்ற அர்த்தம் வருகிறது டோண்டு அவர்களே.
அதெல்லாம் ரொம்பக் காலத்துக்கு முன்னே மாறிப்போச்சு. y2k, dotcom முதலான பிரிவுகளில் demand அதிகமானதும், ஏகப்பட்ட இந்தியர்கள் இங்கே வந்தார்கள் - முக்கியமாய் தெலுங்கர்கள். இந்தியாவிலுள்ள் எல்லா(?!!!) பிராமணர்களையும் எடுத்துவிட்டும் (?!!!) இன்னமும் ஆள் வேண்டி இருந்த்தால், மற்ற ஜாதியினரையும் ( கம்யூனிட்டி சர்டிஃபிகேட் பாத்துட்டு) அமெரிக்காகாரன் எடுத்துக் கொண்டு விட்டான். எனவே அமெரிக்காவில், பிராமணரல்லாத ஜாதியரும் பெருமளவில் இருக்கிறார்கள். பிராமணர்களுக்கு எப்படியோ தெரியாது, ஆனால் தலித் அல்லாத பிற ஜாதியினருக்கு, திருமாவளவனை வரவேற்பதிலும், பேசுவதிலும், எந்த "தீட்டும்" வருவது இல்லை. ஈவிகேஎஸ் இளங்கோவனும், வைகோவும், மற்றெல்லா அரசியல் தலைவர்களும் வெளிநாடுகளுக்கு சுற்றுப் பயணம் போய் என்ன கிழிக்கிறார்களோ, அதையேதான் திருமாவளவனும் கிழிக்கிறார். உங்களுடைய பொல்லாத கண்களுக்கு அது மட்டும் இள்க்காரமாய் தெரிகிறது.
ம்..என்ன சொல்றது ஸார்..அரைஞாணை கூட அவிழ்த்து விடுவீர்கள் போலிருக்கு. ஆனால், இந்தக் கருமம் பிடிச்ச யோசனை மட்டும் அவிழவே மாட்டேங்குது.
என்னவோ போங்க...நல்லா , தீர்க்காயுசா இருங்க...
மூக்கு சுந்தர் அவர்களே,
மேலே என் பெயரில் வந்த பின்னூட்டம் என்னுடையதல்ல. போலி டோண்டு மீண்டும் வந்து விட்டார். ப்ளாக்கர் எண்ணை சரி பாருங்கள். இப்பதிவு அனானி பின்னூட்டங்களை ஏற்காததால் இம்மாதிரி சரி பார்த்து கொள்ளலாம்.
ஆனால் அனானி கமெண்டுகள் ஏற்றுக்கொள்ளும் பதிவுகளில் அந்தப் போலி பேர்வழி என் பெயர் மற்றும் ப்ளக்கர் எண்ணுடன் பதிவு செய்கிறார். என் பெயரில் வரும் பின்னூட்டங்கள் என்னுடைய இதற்காகவே போட்டுள்ளப் பதிவிலும் வருகிறதா என்று பார்க்கவும். அங்கும் அது வந்தால் ப்ளாக்கர் எண்ணைப் பார்க்கவும். See my latest blog as well to this effect.
என்னுடைய பிரத்தியேகப் பதிவின் உரல் கீழே.
http://dondu.blogspot.com/2005/05/blog-post_25.html
அன்புடன்,
டோண்டு ராகவன்
ப்ளாக்கர் எண் 4800161
(எலிக்குட்டியைப் ப்ளாக்கர் ஐ.டி.யின் மேல் வைத்து கீழே அதே எண் தெரிகிறதா என்று பார்க்கவும்)
(அனானிப் பதிவுகளைச் செயலிழக்கச் செய்யும் வரை இதில் பலன் உண்டா எனத் தெரியவில்லை. என் குறிப்பிட்டப் பதிவிலும் பார்த்துக் கொள்ளுங்கள்.)
அன்பு சுந்தர்,
பதிலளித்தது டோ ண்டு தானா இல்லையா...அல்லது டோ ண்டு அது போல எல்லாம் லூசுத்தனமாக
பேசுவாரா என்றெல்லாம் யோசிக்காமல், ஏதோ வாய் புளித்ததோ அல்லது மாங்காய் புளித்ததோ
என்று பேசுவது, உங்களைப் போன்றோருக்கு அழகா என்று யோசித்துப் பாருங்கள். அதைத் தான் தமிழ் இணையத்தில் சிலர் செய்து கொண்டிருக்கிறார்கள். எனவே, இது போல விஷயங்களெல்லாம் பதிவதற்கு முன்னால் சிறிது யோசித்து போட்டால் நன்றாயிருக்கும்.
- அருண் வைத்யநாதன்
ஒரிஜினல் டோண்டு ஸார்,
மன்னிக்கவும். இந்த மாதிரி முகமுடி கண்றாவி, ஆள்மாறாட்ட அக்கப்போர் எல்லாம் எனக்குப் பழக்கம் இல்லை. அதனால் நீங்களென்றே நினைத்துவீடு பதிலிறுத்து விட்டேன். மன்னிக்கவும்.
ஆனால், பதில் சொன்னது உங்களுக்கு மட்டுமல்ல, ராம்கிக்கும் சேர்த்துத்தான் என்பதை நண்பர் அருண் அறியத் தருகிறேன்.
அடடே ..அருண், மறுபடியும் வேறொரு வீடல் இடிச்சுக்க வர்றீங்களே....?? " என் போன்றவர்களுக்கு அழகா" என்றெல்லாம் கேட்காதீர்கள். என்னைத்தான் ஏற்கனவே இணைய பிராமண துவேஷி என்று பட்டம் கட்டியாகி விட்டதே..?? இந்த மாதிரி ஜன்மங்களின் வாயில் இருந்து இந்த மாதிரி தான் வார்த்தைகள் வரும் நினைத்துக் கொண்டு போய் விடுங்கள். பவம்..உங்கள் டைம் வேஸ்ட்..:-)
வாய் புளித்ததோ, மாங்காய் புளித்ததோ என்று ஏகப்பட்ட பேர் ஏகப்பட்ட முனைகளில் பேசிக் கொண்டிருந்தபோதெல்லாம், வாளாவிடுந்த நீங்கள், சுந்தர் ஏதாவது நியாயமான காரணத்துக்கு வாய் திறந்தால் மட்டும் இப்படி ஓடி வந்து விடுகிறீர்கள். உங்களுடைய நியாய உள்ளம் வாழ்க,
வணக்கம்.
// இந்த மாதிரி முகமுடி கண்றாவி // எந்த அர்த்தத்தில் இப்படி சொல்கிறீர்கள் என்று தெரிந்து கொள்ளலாமா??
//அல்லது டோ ண்டு அது போல எல்லாம் லூசுத்தனமாக
பேசுவாரா ..//
அருணுக்கு இப்படி கேள்வி கேட்பது நியாயம்தான். அதையெல்லாம் 'வெளிப்படையான எண்ணங்களாய்' ஒப்புகொள்பவர்களுக்கு இப்படி சந்தேகம் வராது.
"ஆனால், பதில் சொன்னது உங்களுக்கு மட்டுமல்ல, ராம்கிக்கும் சேர்த்துத்தான் என்பதை நண்பர் அருண் அறியத் தருகிறேன்."
மகிழ்ச்சி. ஆனால் இங்கு சில விஷயங்களை வெளிப்படையாகப் பேசிவிடுவது நல்லது.
1. ராம்கி அவர்கள் பொதுப்படையாக உயர்சாதியினர் என்று கூறினார்.
2. மணிக்கூண்டு அவர்கள் அதை ஒரு நல்ல கேள்வி என்று ஒத்துக்கொண்டு அதன் பதிலை தனிப்பதிவாகத் தருவதாகக் கூறினார்.
3. போலி டோண்டு நடுவில் புகுந்து குட்டையை குழப்பி அவ்வாறு கூறப்பட்ட உயர் சாதியினர் அனைவரும் பார்ப்பனர் என்று உண்மையான டோண்டுவாகிய நான் கூறியது போன்ற தோற்றத்தினைத் தந்தார்.
4. அதை அப்படியே நம்பிய மூக்கு சுந்தர் அவர்கள் எனக்கு "உரைக்கும்படியானப் பதிலைக்" கொடுத்தார். சிறிது நேரத்திற்கு அவர் பார்வையில் நான் தாழ்ந்து போனேன்.
5. அதைத்தான் போலி டோண்டு விரும்பினார். அவர் விருப்பம் நடந்தேறியது
6. அவ்வாறு ஒருவரது பெயரைக் கெடுப்பது அவரைக் கொலை செய்வதை விடக் கொடுமையானது என்பது பாதிக்கப்பட்ட அனைவருக்குமே தெரியும். நான் அதை தனிப்பட்ட முறையில் மறுபடியும் கூற வேண்டியதில்லை.
7. "வெளிப்படையான எண்ணங்கள்" பற்றி பேச்சு வரவே இங்கு வெளிப்படையாக எழுத நேர்ந்தது.
நன்றி.
அன்புடன்,
டோண்டு ராகவன்
ப்ளாக்கர் எண் 4800161
(எலிக்குட்டியைப் ப்ளாக்கர் ஐ.டி.யின் மேல் வைத்து கீழே அதே எண் தெரிகிறதா என்று பார்க்கவும்)
(அனானிப் பதிவுகளைச் செயலிழக்கச் செய்யும் வரை இதில் பலன் உண்டா எனத் தெரியவில்லை. என் குறிப்பிட்டப் பதிவிலும் பார்த்துக் கொள்ளுங்கள்.)
இந்தை வி(வ)காரம் இத்துடன் நிற்கப்போவதில்லை என்று தோன்றுகிறது.
டோண்டு ஸார் அதை சொல்லவில்லை என்று சொன்னாலும், இந்த மாதிரியான விடயங்களில் அவருடைய நிலைப்பாடு என்ன என்பது ஏற்கனவே நான் அறிந்ததுதான். இன்னமும் சொல்ல்ப்போனால், சொன்னது டோண்டு சார் அல்ல என்று தெரிந்த பின்பே அருண் வந்து, " இது மாதிரி லூசுத்தனமாக எல்லாம் அவர் பேசுவாரா" என்று கேட்கிறார். டோண்டு ஸாரே இதை சொல்லி இருந்தால், பின்னொரு நாள் அவர் பதிவில் போய் " உங்களுடைய மேற்கூறப்பட்ட பதிவைப் படித்தேன். சபாஷ் " என்று ஏதாவது சொல்லி இருப்பார்.
கு.கு: முகமூடி கண்றாவி என்று சொன்னது தனிப்பட்ட வலைப்பதிவரைக் குறிப்பதல்ல. முகமூடி என்பது முகமில்லாத
"எல்லாருக்கும்" பொதுவான" பெயர்.
என்பதறிக. போகிற போக்கைப் பார்த்தால் பெயரிலி போல முகமூடியும் புழக்கத்தில் இருந்து போய் விடும் போலிருக்கிறது. ஐயகோ :-). என் செய்வேன்.
டோண்டு ஸார்,
உங்கள் பெயரில் போலி பின்னூட்டங்கள் இடுவதை நான் வன்மையாய் கண்டிக்கிறேன். இது குறித்து நாம் எல்லோரும் சேர்ந்து ஏதாவது செய்ய முடியுமெனில் என்னுடய ஒத்துழைப்பையும் அதற்கு தருவதில் பிரச்சனையில்லை. இது போன்ற விஷயங்களில் என் அறிவு மிகவும் குறைவு என்பதால் அலோசனைகள் தர என்னால் முடியாது.
ஆனால் நான் சொல்ல வந்த விஷயம் அருண் எழுதியது குறித்து மட்டுமே. மூக்கு சுந்தர் தவறாக எடுத்துகொண்டு எழுதிய காரணத்தினால் அருண் கேட்ட கேள்விக்கு மட்டுமே என் பதில். மூக்கு சுந்தர் சொன்னது போல் நீங்கள் இப்படி எழுதீருந்தால் அதில் ஆச்சரியப்பட எதுவும் இல்லை. இதற்கு முன் வெளிப் படுத்திய 'வெளிப்படையான எண்ணங்களுடன்' ஒத்ததாகவே இருக்கிறது. அதில் லூஸுத்தனம் இல்லையெனில் இதிலும் இல்லை என்பது என் கருத்து and vice verse.
அவ்வளவே நான் சொல்ல விரும்பியது.
அன்பு சுந்தர்,
இனி நீங்கள் போடும் மறுமொழிகளுக்கோ அல்லது பதிவுகளுக்கோ அபிப்ராயம் சொன்னால், என்னை ஏனென்று கேளுங்கள். எங்கெங்கே எல்லாம் தவறுகள், யார் யார் எல்லாம் செய்கிறார்கள் என்று அங்கெங்கே எல்லாம் நான் சென்று எதுவும் எழுதப்போவதில்லை. அந்த அனானிமஸ் சும்மா எல்லா பதிவுகளிலும், இந்த அசிங்கத்தை செய்து வருகிறார். அருண் இப்படி சொல்லி இருப்பார், அப்படி சொல்லி இருப்பார் என்ற உங்கள் ஆருடங்கள் எல்லாம் வேண்டாமே!
உங்கள் அன்புக்கும், புரிதலுக்கும் நன்றி!
சிவா, மன்னிக்கவும். உங்களது பதிவை இந்த விஷயங்களுக்கு உபயோகப்படுத்திக் கொண்டதற்கு.
- அருண் வைத்யநாதன்
"(எலிக்குட்டியைப் பிடித்து உப்பு மிளகாய் வெங்காயம் போட்டு பிரட்டல் செய்து சாப்பிடவும்)"
அந்த மனம் பிறழ்ந்தவர் என்னவேல்லாம் எழுத ஆரம்பித்து விட்டார் பாருங்கள்? இனிமேல் என் பின்னூட்டங்கள் என் புகைபடத்துடன் வரும். மேலும் அவை என் தனிப்பதிவில் நகலிடப்படும். பார்க்க: http://dondu.blogspot.com/2005/05/blog-post_25.html#comments
லாடு லபக்தாஸ் ஒரு முறை சொன்னதுபோல இந்த ஆள் ஏன் இன்னொருவர் இனிஷியலைத் தேடுகிறார் என்பது புரியவில்லை.
அன்புடன்,
டோண்டு ராகவன்
Post a Comment
<< Home