அருட்தந்தை ஜெகத் காஸ்பர் ராஜ்...
உலக வரலாற்றை புரட்டி பார்க்கும் பொழுது பேச்சின் மூலம் மக்களை மயக்கிய பலரை காணலாம். குறிப்பாக நமது தமிழ்நாட்டில் அழகு தமிழில் பேசியே நாட்டை பிடித்தவர்கள் உண்டு. அறிஞர் அண்ணா மிகச் சிறந்த மேடை பேச்சாளர் என்று கேள்வி பட்டு இருக்கிறோம். அடுத்து கலைஞர் சிறந்த பேச்சாளர் என்பதை அனைவரும் அறிவோம். அதுவும் இந்த 83 வயதிலும் இன்னமும் எத்தனை நிகழ்ச்சிகளில் பேசி வருவதை கண்கூடாகப் பார்த்து வருகிறோம். இந்த தலைமுறைக்கு மிகச் சிறந்த பேச்சாளராக வைகோ மற்றும் திருமா அனைவரும் அறிவர். அதுவும் தற்பொழுது நடைபெற்ற திருவாசகம் சிம்பொனி விழாவில் வைகோ கிட்டதட்ட ஒரு மணி நேரம் அழகு தமிழில், நம் அன்னை தமிழில், ஒர் இலக்கிய சொற்பொழிவை ஆற்றி இருக்கிறார். இளையராசா இசை அமைத்து பாடிய திருவாசக குறிப்பாக அந்த 6 பாடல்களில் உள்ள முக்கியத்துவம் என்னனென்ன? என்பதை அனைவரும் வியக்கும் வண்ணம் பேசி இருக்கிறார். ஆக அனைவரும் விரும்ப பேசுவது ஒரு கலை.
கலைகளில் பலவகை. நடனம் ஆடுவது ஓர் கலை, பாடுவது ஓர் கலை, நடிப்பது ஓர் கலை, இந்த வரிசையில் மக்களை மயக்கும் படி பேசுவது ஓர் மாபெரும் கலையாகாவே நான் எண்ணுகிறேன். எங்கு நல்ல மேடை பேச்சு இருந்தாலும் ஓடி ஓடி போய் பார்க்கிறேன், பேச்சை ரசிக்கிறேன், அதனை மனதில் நினைத்து அசைப் போடுகிறேன். நாகரீகமாக அரசியல் பேசும் தலைவர்களை, சமுதாய சிந்தனைகளை எடுத்தும் சொல்லும் சமுதாயத்தை பிரதி பலிக்கும் பேச்சாளர்களை, நல்ல வளமையான, ஆழமான நம் இலக்கியம் பேசும் இலக்கியவாதிகளை, நான் கண்டு ரசித்து இருக்கிறேன். என்னை மறந்து இருக்கிறேன்.
அந்த வரிசையில் சென்று ஆண்டும் இந்த ஆண்டும் வட அமெரிக்க தமிழ்ச் சங்க பேரவை நடத்திய விழாவில் நான் பார்த்து வியந்த, ரசித்த, என்றும் கேட்க துடிக்கிற ஓர் இளைஞர் அருட் தந்தை ஜெகத் காஸ்பர் ராஜ் அவர்கள். இவருடைய பலம் என்ன? நல்ல பல தமிழ் இலக்கியத்தை ஆழ்ந்து படித்து இருக்கிறார், தமிழ் மொழியின் மீது தீராத காதல் இருக்கிறது. எல்லாவற்றிக்கும் மேலாக நம் தொப்புள் கொடி உறவுள்ள ஈழத்தமிழர்களின் மிகுந்த ஆதரவாளர். இவர் ஓர் கத்தோலிக்க பாதிரியாரும் கூட. மதத்திற்கு அப்பாற் பட்டு தமிழ் இலக்கியத்தில் திருவாசகத்தை எழுதிய மாணிக்க வாசகரின் அருமையான வரிகளை தன்னுடைய பைபிளில் உள்ள வரிகளோடு ஒப்பிட்டு பேசும் பொழுது ஆக என்ன அருமை!!!. "தீதும் நன்று பிறர் தற வாரா", "வாடிய பயிறை கண்டபொழுதெல்லாம் வாடினேன்" "நாமார்க்கும் குடிஎல்லோம், நமனை அஞ்சோம்" இப்படி நம் இலக்கிய வரிகளை கோடிட்டு காண்பித்து, மகா கவி பாரதி பற்றி, பாரதி தாசன் பற்றி, மாணிக்க வாசகர் பற்றி இப்படி பல இலக்கியத்தில் சாதனைகளை படைத்தவர்கள் பற்றி அருட் தந்தை சொல்லும் பொழுது மக்கள் கூட்டம் மெய்மறந்து கேட்கிறது.
அவருக்கு ஆங்கிலம் மட்டும் அல்லாது பிரெஞ்சு, லத்தீன், கிரேக்கம் மொழிகளின் பரிச்சயம் இருந்தாலும் நம் தமிழ் மொழியின் ஆளுமை, செழுமை, தனித் தன்மை, ஏற்புன்மை பற்றி அவர் சொல்லும் பொழுது மனம் அடையும் மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. அதனாலேயே மகாகவி பாரதி "யாம் அறிந்த மொழிகளே தமிழ் மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்" என்று சொன்னான் என குறிப்பிட்ட பொழுது கூட்டம் ஆராவரித்து மகிழ்ச்சி கடலில் மூழ்கியது. அதுமட்டுமா?
நம் தொப்புள் கொடி உறவுள்ள நம் ஈழமக்கள் பட்ட, படுகின்ற துயரங்களை, அவலங்களை, போராட்டங்களை, அருட்தந்தை விவரித்த பொழுது மக்கள் உணர்ச்சிவசப்பட்டார்கள். உரிமைகள் மறுக்கப் பட்டு, நாடுகள் பறிக்கப் பட்டு, ஈழ மக்கள் அகதிகளாக வாழும் துயரத்தை என்ன வென்று சொல்லுவது. அனைத்து தமிழ் மக்களிடம் பாதம் தொட்டு ஒன்றை கேட்டு கொண்டார், ஈழ் மக்கள் படும் துயரங்களைப் பற்றி எதுவும் அக்கறை கொள்ளாமல், கவனியாமல் இருந்தால் பரவாயில்லை, ஆனால் கொச்சை படுத்தாமல் இருக்குமாறு வேண்டி கொண்டார். அப்படி இருந்தால் இதுவே நாம் ஈழ மக்களுக்கு நாம் செய்யும் மிகப் பெரிய உதவி என்றார். உலகெங்கும் வாழும் புலம் பெயர்ந்த தமிழர்களில் நம் தமிழ் மொழியை, கலையை, பண்பாட்டை, தமிழ் கலாச்சாரத்தை நம் தமிழர்களைவிட ஈழ் தமிழ்ர்களே போற்றி பாதுகாக்கிறார்கள் என்பதை நாகரீகமாக குறிப்பிட்டார்.
மொத்ததில் என்ன சொல்லுவது? அருட் தந்தையின் பேச்சில் மயங்கினேன், அவரின் தமிழ் ஆர்வத்தை பார்த்து ரசித்தேன், அவரின் திருவாசக ஆர்வம் மற்றும் இலக்கிய ஆர்வம் கண்டு வியந்தேன், அவரின் ஈழ் மக்களின் ஆர்வம் கண்டு பிரமித்து போகிறேன். இப்படி இன்னும் பல பல. இப்படிப் பட்ட நல்ல பல உள்ளங்களை எனக்கு அறிமுக படுத்திய வட அமெரிக்க தமிழ்ச் சங்க பேரவைக்கு நான் என்றும் கடமை பட்டவன்...
வாழ்க தமிழ்! வளர்க அதன் புகழ்!!!
நன்றி
மயிலாடுதுறை சிவா...
8 Comments:
சிவா,
நானும் கலந்துகொண்டதால் அருட்தந்தை பற்றி நீங்கள் சொல்வதை முற்றிலும் வழிமொழிகிறேன்.
இப்படி ஒருத்தர் இருக்காரே என்று அன்று முழுதும் ஆச்சரியப்பட்டுக்கொன்டே இருந்தேன். இந்தப்பதிவுக்கு மிக்க நன்றி. செளந்தர் முடிந்தால் வீடியோ போடுகிறேன் என்று சொல்லியுள்ளார் பார்க்கலாம்.
நன்றி கார்த்திக்
யார் அந்த செளந்தர்?
சிவா...
வணக்கம் செளந்தர்
கடந்த 6 ஆண்டுகளில் நான் வர முடியாமல் போன விழா டல்லஸ் விழா. வருந்துகிறேன்.
நீங்கள் அங்கு விடியோ எடுத்தீர்களா? எனக்கு அதன் DVD கிடைக்குமா?
நன்றி..
மயிலாடுதுறை சிவா...
மிக்க நன்றி செளந்தர்
நிச்சயம் தொடர்பு கொள்கிறேன்.
நன்றி.
மயிலாடுதுறை சிவா...
நன்றி... சிவா
நல்ல பதிவு சிவா!
நான் அடிகளாரை நேரில் சந்தித்தேன். (வன்னியில்). அருமையான மனிதர். வெரித்தாசில் அவரது குரலைக் கேட்டு அவர் பற்றி வைத்திருந்த விம்பத்தைவிட நேரில் இளமையாக இருந்தார்.
கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.
நல்ல பதிவு சிவா! பேச்சுக்கலையில் ஆர்வமுள்ளவன் என்ற முறையில் உங்கள் பதிவை மிகவும் ரசித்தேன் ! நன்றி!
சென்ற ஆண்டு பால்டிமோருக்கு வந்திருந்தேன். இவ்வருடம் இயலவில்லை. சௌந்தர், அருட்தந்தையின் உரையை எல்லோரும் பார்க்கும்படி ஏற்பாடு செய்ய முடியுமா?
Post a Comment
<< Home