புடவை கட்டுவதில் இப்படியும் ஓர் பலனா?
புடவை கட்டுவதில் இப்படியும் ஓர் பலனா?
சென்ற வாரம் அலபாமாவில் இருந்து என் மனைவியின் அம்மா வந்து 10 நாட்கள் தங்கி இருந்தார்கள். சரி மனைவி தன் அம்மாவிடம் ஜாலியாக அரட்டை அடிக்கட்டும் நாம் ஏன் தொந்தரவு என்று, நான் நைசாக என் அண்ணன் வீட்டிற்கு நியுசெர்சிக்கு எஸ்கேப் ஆனேன். போன வாரம் சனி மற்றும் ஞாயிறு நன்றாக பொழுது போனது. எப்பொழுது அண்ணன் வீட்டிற்கு சென்றாலும் நல்ல திரைப்படம் மற்றும் நல்ல சாப்பாடு, விடிய விடிய சீட்டு இப்படி பொழுது போவதே தெரியாது. இப்படி ஜாலியாக இருந்த காரணத்தால் இரண்டு நாட்கள் மனைவியை தொலைபேசியில் கூப்பிடவே இல்லை. இதனால் மனைவி வருத்தப் பட்டது வேறு விசயம். அப்பொழுது என் அண்ணன் இரண்டு குடும்ப நண்பர்களை சாப்பிட கூப்பிட்டு இருந்தார்கள். அவர்களையும் எனக்கு முன்பே தெரியும்.
நல்ல சாப்பாடு வழக்கம் போல் நல்ல அரட்டை. நான் ஒர் பெண் நண்பரிடம் நீங்கள் கட்டி இருக்கும் சேலை மிக நன்றாக இருக்கிறது என்றேன். அந்த பெண்மணியும் மிக்க நன்றி என கூறினார். பிறகு அவரே நான் சென்ற ஆண்டு தமிழகம் சென்ற பொழுது எடுத்தது என்றும், இதே போல் குடும்ப நண்பர்கள் வீட்டிற்கு சென்றால் கட்டுவது வழக்கம் என்றார். நான் என் மனைவிக்கு வாங்குவதற்காக அதன் கடை பெயரை மனதில் குறித்துக் கொண்டேன். மேலும் அப்பெண் நண்பர் பேசிக் கொண்ட இருந்த பொழுது இந்த விசயம் எல்லோரும் பங்கு பெறும் படி பேசி கொண்டு இருந்தோம். அப்பொழுது இன்னொரு ஆண் நண்பர் நான் ஓரு கருத்தை சொல்லலாமா? என்றார், அனைவரும் அவரை நோக்க அவர் ஆணித்தரமாக அதாவது ஒர் பெண்ணிடம் உங்கள் பொட்டு, புடவை, நகைகள் அழகாக இருப்பதாக ஒர் ஆண் சொன்னால் இதில் மகிழ்ச்சி அடைய ஒன்றுமே இல்லை எனவும், அது பெண்களின் வீக்னெஸ் என்றும் சொன்னார். அவ்வளவுதான் டாப்பிக் சூப்பராக பற்றி கொண்டது.
அங்கு வந்து இருந்த எல்லோருமே வேலைக்கு செல்லும் பெண்மணிகள். அனைவருமே நன்கு படித்தவர்கள். அனைவருக்கும் ஓரளவு நாட்டு நடப்பும் தெரியும். நான் முன்பு புடவையை பாராட்டிய பெண்மணி தன் கணவனை வைத்துக் கொண்டே, தைரியமாக " நான் நல்ல அழகான பொட்டு வைத்துக் கொள்வது, நல்ல அழகான புடவை கட்டுவது என் கணவருக்காக மட்டும் அல்ல, மற்ற ஆண் நபர்களும் என்னை பார்த்து பாராட்டதான், இதை நான் சொல்ல கூச்சப் படவில்லை என்றார்." அந்த கணவர் ஒன்றும் சொல்லவில்லை அமைதியாக இருந்தார்.
தனிப் பட்ட முறையில் அந்த பெண் அப்படி சொன்னதில் எனக்கு மகிழ்ச்சியே. ஆனால் எனக்கு மற்ற பெண் வலைப் பூ நண்பர்களின் கருத்து அறிய ஆவல். ஆகையால் அந்த பெண் நண்பரின் முன் அனுமதியோடு இதனை இங்கு பதிய வைக்கிறேன்...
நீங்கள் என்னை நினைக்கிறீர்கள்...?
நன்றி...
மயிலாடுதுறை சிவா...
6 Comments:
இதில் என்ன சிவா இருக்கிறது..?? உங்கள் ஸ்நேகிதி தன் மனதில் பட்டதை பளிச்சென்று சொல்லி இருக்கிறார். ஆண் நண்பர்களு"ம்" என்றுதானே சொல்லி இருக்கிறார். நறுவிசாக உடையும்/அலங்காரமும் செய்து கொண்டால் , பிறர் ( ஆன்களும் பெண்களும்) பார்த்து காம்ப்ளிமெண்ட் தரும்போது மனம் மகிழ்வது இயல்புதானே..?? அது பால் வித்தியாசங்கள் கடந்ததாயிற்றே..!!! முன்னே நம் பெண் மக்கள் இப்படி ஃப்ராங்க ஆக சொல்ல மாட்டார்கள். இப்போது கேஷுவலாக சொல்கிறார்கள். உருவத்தோற்றமும் பெண்களின் தன்னம்பிக்கையை உயர்த்த பெருமளவில் உபயோகப்படுவதாக எங்கேயோ படித்த நினைவு.
ம்..மாயவரத்து மைனாக்களையே பார்த்து பழகிய உங்களுக்கு, இவ்விதமான வெளிப்பாடுகள் ஆச்சரியம் போலும் :-)
நன்றி சுந்தர்
நம்ம கிட்ட பல மாயவரத்து மைனாக்கள் கதை நிறைய இருக்கு, எதை எப்படி எழுதுவது என்று
குழும்பி போய் இருக்கிறேன்.
சிவா...
சில சமயம் frivolous sexual harassment cases போடுவது அமெரிக்காவில் சகஜம் என்பது தெரிந்ததே. அப்படிப்பட்ட ஒரு கேஸ் நடந்த சமயத்தில் ப்ரெஞ்ச் நாட்டுப் பெண் ஒருத்தி ஒரு பேட்டியில் சொன்னாள், "நான் பார்த்து பார்த்து உடுத்துவதே என் ஆபீஸில் உள்ள ஆண் நண்பர்கள் பாராட்டத்தான் என்று.' So, ஓரளவு இது கலாசாரத்தையும் பொறுத்த விஷயம்.
மூக்கு சுந்தர் சொல்வது சரி. பாகுபாடின்றி பழகுகிறோம். அதனால் ஆண் நண்பர்களிடமிருந்து கண்ணியமாக வரும் எந்த நல்ல commentடும் எனக்கு சந்தோஷத்தை தான் அளிக்கும்.
மிக்க நன்றி ரம்யா
சிவா...
//உருவத்தோற்றமும் பெண்களின் தன்னம்பிக்கையை உயர்த்த பெருமளவில் உபயோகப்படுவதாக எங்கேயோ படித்த நினைவு.//
உண்மைதான்
எப்பவாவதுதான் புடவை கட்டிக்க ச்சான்ஸ் கிடைக்குது. அப்ப அதை யாருமே பாராட்டலைன்னா எப்படி இருக்கும்? ஒரு பொண்ணு அதைப் பாராட்டறதைவிட ஒரு ஆண் பாராட்டுனா அதோட மதிப்பே தனி.ஆனா அது கண்ணியமாக இருக்கணும்.
என்னங்க இன்னைக்கு சும்மா ஸூப்பரா இருக்கு இந்தப் புடவை'ன்னு நம்ம நணபர் தமிழ்ச் சங்க விழாக்களிலே சொல்றது வழக்கம்தான்.
பாராட்டுறதுலேயும் ஆண் பெண் அப்படி பாகுபாடு வேணுமா?
Post a Comment
<< Home