உங்களுக்கு இது போல் நடந்து இருக்கா?
சிறிய வயதில் சில சில சம்பவங்கள் நடந்து இருக்கும். அதை இப்பொழுது நினைத்து பார்த்தாலும் வருத்தமாக அல்லது அனுபவமாக தோன்றலாம். உங்களுக்கு இதுப் போல் நடந்தது உண்டா?
சிறிய வயதில் அல்லது பள்ளி செல்லும் வயதில் (6ம் வகுப்பில் ஆரம்பித்து 11 வகுப்பு வரை) நீங்கள் நன்றாக உடையணிந்துக் கொண்டு செல்லும் வழியில் செறுப்பு அறுந்து போய் நொந்து நூலாகி போனது உண்டா?
யாராவது பார்த்து விடுவார்களோ என வெட்கமாக இருந்தது உண்டா?
நல்ல மழை காலத்தில் கறுப்பு குடையில் கம்பி நீட்டிக் கொண்டு துணி பிய்ந்து, குடை பழுது பார்ப்பவரிடம் "ட" போல் மற்றும் குடையின் மேல் "ஓ" போல தைத்தது உண்டா?
நல்ல வெயில் காலத்தில் சைக்களில் செல்லும் பொழுது "பஞ்சர்" ஆகி ஓட்ட முடியாமல் தள்ளிக் கொண்டு போனது உண்டா? அல்லது சைக்களில் செயின் அறுந்து கடைக்கு சென்று பழுதை சரி பார்த்தது உண்டா?
பள்ளி பருவத்தில் அழகான "Geometry Box" வைத்துக் கொள்ளவில்லையே என்று ஏங்கியது உண்டா?
பள்ளி பருவத்தில் நல்ல அழகு அழகாய் "ஸ்டெப் கட்டிங்" வைத்து கொள்ள அப்பா அம்மா அனுமதி தரமால் அப்பா அம்மா மேல் செம வெறியாக இருந்தது உண்டா?
கோடை விடுமுறையில் நல்ல அழகான கலர் பட்டமும், நல்ல நிறைய நூல் வைத்து ரொம்ப தூரம் பட்டம் பறக்க விட முடியவில்லையே என்று ஏங்கியது உண்டா?
கல்லூரி விட்டு வரும் பொழுது நல்ல பசியோடு இருக்கும் பொழுது கையில 1.50 பைசா இருக்க, நகர பேருந்தில் சென்றால் 1.00 ரூட் பேருந்தில் சென்றால் 2.00 கட்டணம் கொடுத்து என்றாவது ஒரு நாள் கூட செல்ல முடியவில்லையே என்று இருந்தது உண்டா?
கல்லூரி படிக்கும் காலத்தில் ரேசன் கடையில் மண்ணெண்ய், கோதுமை, சக்கரை வாங்கும் பொழுது இல்லாத கூச்சம் ஏன் அரிசி வாங்கும் பொழுது மட்டும் இருந்தது?
இவை அனைத்தையும் நினைத்து பார்க்கும் பொழுது சற்று வருத்தம் இன்னமும் மிச்சம் இருக்கலாம். அவை அனைத்தும் நல்ல அனுபவமாக இருக்கலாம். அல்லது நம் ஏழ்மையின் அடையாளமாக இருக்கலாம். நடுத்தர குடும்பத்தின் திட்டம் இடமால் இருக்கலாம். என் நண்பர்களில் சிலர் இந்தவிதமான அனுபவமே இல்லாமல் இன்றும் நலமாக இருக்கிறார்கள்.
கடந்த காலத்தில் இதுப் போல் ஏற்பட்ட சிறு சிறு சம்பங்கள் மீண்டும் தற்பொழுது நடக்க வேண்டும், அதனை மீண்டும் நிதானமாக ரசிக்க வேண்டும் என்று உங்களுக்கு தோன்றியுள்ளதா?
நன்றி
மயிலாடுதுறை சிவா...
3 Comments:
//நடுத்தர குடும்பத்தின் திட்டம் இடமால் இருக்கலாம்.//
எனக்கு இந்த இடம் உதைக்கின்றது, என்னளவில் என்னை சுற்றியும் நான் பார்த்த நன்பர்கள் அவர்களின் குடும்பங்களின் அளவில் தம்மை வருத்திக்கொண்டு பிள்ளைகளை படிக்க வைத்து, பிள்ளைகளின் நலனிற்காக தன் தேவைகளை திட்டமிட்டு குறைத்து வாழ்ந்த பெற்றோர்கள் சரியான திட்டம் இட்டுதான் வாழ்ந்தார்கள், ஆனால் ஒன்று அன்று எரிச்சலாக இருந்த பல விடயங்கள் இன்று அன்றைய அறியாமையை நினைத்து வருத்தமும் சிரிப்பும் தான் வருகின்றது
சிவா., இது நம்ம அனுபவம்., நேரம் இருக்கும்போது பாருங்க.,
http://tamilkudumbam.blogspot.com/2005/05/blog-post_10.html
என் பதிவிற்கு வந்தமைக்கு நன்றி.
குழலி உங்கள் வாதம் சரியே. ஆனால் எல்லா பெற்றோரும் அப்படி அல்ல. எனக்கு தெரிந்த சில பெற்றோர்கள் சரியாக திட்டம் இடவில்லை என்பது என் தாழ்மையான கருத்து.
அப்படிபோடு
தங்கள் "மஞ்சள் பை" படித்தேன், ரசித்தேன், எப்படி தவறவிட்டேன் என்று தெரியவில்லை.
நன்றி
சிவா...
Post a Comment
<< Home