அமெரிக்காவின்-Prom(Dance)-இந்திய /தமிழக பிள்ளைகள்
அமெரிக்காவின்-Prom(Dance)-இந்திய /தமிழக பிள்ளைகள்
நேற்றைய வாசிங்டன் போஸ்டில் நியூயார்க்கில் அருகில் உள்ள லாங் ஐலண்ட என்ற ஊரில் உள்ள ஓர் பள்ளியில் அதன் தலைமை ஆசிரியர் இந்த வருடம் Prom கிடையாது என்றும், அதற்காக செலவு செய்வது, அதன் காரணமாக விடுதியில் தங்குவது, அதன் தொடர்பான அனைத்து விதமான விசயங்களும் இந்த ஆண்டு கிடையாது என்று சொல்லி இருக்கிறார். ஆனால் பெற்றோர்கள் தம் பிள்ளைகள் இதனால் வருத்தம் அடையகூடும் என்பதால் பள்ளி நிர்வாகம் தலையிடாதப் படி தனிப்பட்ட முறையில் நடத்தலாம் என்று முடிவு செய்து உள்ளார்கள்...இது செய்தி....
அமெரிக்கா வந்த பொழுது Prom என்றால் என்னவென்று கேள்வி பட்டது இல்லை. நாளடைவில் அதனை கூர்ந்து கவனித்து, கேட்டு, பல ஆங்கில படங்கள் பார்த்து தெரிந்துக் கொண்டேன். அதாவது இங்கு படிக்கும் பிள்ளைகள் பனிரெண்டாவது படிக்கும் பொழுது பள்ளி படிப்பு முடியும் தருவாயில் ஓர்பெரிய நடன விழாவை ஏற்பாடு செய்வார்கள். அதற்கு ஆண் மாணவர்கள், தன்னோடு படிக்கும் பெண் நண்பர்களுடன் நடனம் ஆடுவார்கள். எதிர்காலத்தில் அவர்களே திருமணம் செய்து கொள்வதும் உண்டு. எந்த ஆணுடன் அல்லது எந்த அழகான பெண்ணுடன் ஆடுவது என்ற போட்டி இருக்குமாம். அது மட்டும் அல்ல ஓர் ஆண் ஓர் பெண்ணிடம் வந்து என்னோடு நடனம் ஆட வருகிறாயா என்று கேட்பது அந்த பெண்ணிற்கு ஓர் மகிழ்ச்சியான விசயமாம். எந்த ஓர் பெண்ணையும் யாரும் கேட்கவில்லை என்றால் அந்த பெண் நிச்சயம் மனம் வருத்த படுவாள் என்றும், அதற்காக பெற்றோர்களே வேறு ஊரில் உள்ள மற்றொருஆண் மாணவனை ஏற்பாடு செய்வார்கள் என்று நான் கேள்வி பட்டு இருக்கிறேன். பள்ளி படிப்பு முடிக்கும் தருவாயில் வரும் நடப்பு ஆண்டில் வேறு ஊர் சென்று பட்ட படிப்புற்கு செல்லும் மாணவர்கள் வாழ்க்கையில் இந்த நடன விழா சீரும் சிறப்புமாக கொண்டாட பட்டு வருகிறது.
ஆனால் இதன் பிண்ணியில் பல சம்பவங்கள் உள்ளன. அதாவது இந்த நடனத்திற்கு பெண் தன்னை திருமணப் பெண் போல் அலங்கரித்து, நல்ல பல உடைகளை வாங்குவதும் அதனை வாங்குவதற்கு அப்பா அம்மா நிறைய பணம் தரவில்லை என்றால், பகுதி நேர வேலை பார்த்து தனக்கு மிகப் பிடித்தமான உடைகள் வாங்குவதும், தன்னை நன்கு அலங்கரித்து கொள்ள அலங்கார பொருட்களை வாங்குவதும், அழகு நிலையம் சென்று தன்னை மிக அழகாக அலங்கரித்து கொள்வதும் இந்த நடன விழாவிற்கான சிறப்பு அம்சம்.
அதே போல் ஆண் நபர்களும் விலை உயர்ந்த கோட் சூட் சமாசாரங்களை வாங்குவதும், பெண்களை கவர நல்ல ஆடம்பரமான கார்களைவாடகைக்கு எடுப்பதும், குறிப்பாக லீமோ என்ற வகையான கார்களை எடுத்து அவர்கள் பெண் நண்பர்களோடு சேர்ந்து போவதும், சிறப்பானவிழா முடிந்தவுடன், நல்ல விலை உயர்ந்த விடுதிகளை வாடகைக்கு எடுத்து இருப்பார்கள். இரவு முழுவதும் அரட்டை. நல்ல சாப்பாடு, உயர்ந்த மது வகைகள், புகைப் பிடித்தல், சில சமயம் நண்பர்களோடு போதை ஏற்றும் பொருட்களை வாங்கி சுவைத்தல் இதுப் போலஅந்த நாள் கழியும்.
அந்த இரவில், அந்த நடன விழாவின் மகிழ்ச்சியில், நன்கு மது அருந்திய நேரத்தில் ஆண் நபர்கள் நடனம் ஆடிய பெண்களோடு அவர்கள் அனைவரும் தனி அறையில் தங்குவார்கள். அப்பொழுது 90% பேர்கள் உடல்உறவு கொள்வார்கள். அதற்கு முன்னரே அல்லது ஏற்கனவேஅந்த பெண்ணோடு உடல் உறவு வைத்து இருப்பார்கள். அந்த பெண் அந்த ஆண்ணோடு உடல் உறவு வைத்து இருப்பது அவளின் தனிப்பட்டவிசயம். பனிரெண்டாவது படிக்கும் பொழுது அல்லது அதற்கு முன்னரே ஓர் ஆண் அல்லது பெண் குறைந்தது 5 அல்லது 6 பேரோடு தொடர்பு(உடல் உறவு) வைத்து இருப்பார்கள் என்பது ஓர் ஆய்வு சொல்லுகிறது. இது முழுக்க அமெரிக்க கலாச்சாரத்தில் பிறந்து வாழ்ந்து படிக்கிற ஆண்கள் பெண்கள் சம்பந்தப் பட்ட விசயம். இது நல்லதா அல்லது கெட்டதா என்பதை அவர் அவர் தனிபட்ட கருத்திற்கே விட்டு விடுகிறேன்.
கடந்த 6 ஆண்டுகளாக நான் பல இந்திய குடும்பங்களை பார்த்து இருக்கிறேன். இந்த இந்திய/தமிழக/அமெரிக்க சூழ்நிலையில் வளரும் நம்பருவ ஆண் / பெண்கள் இந்த மாதிரி திருமணத்திற்கு முன்பே உடல் உறவு கொள்வார்களா? அதனை அமெரிக்க பெற்றோர்கள் போல நம் இந்திய/ தமிழக பெற்றோர்கள் அனுமதிக்கறார்களா? அல்லது பெற்றோர்களுக்கு தெரியாமல் இந்த பிள்ளைகள் அதனை விரும்பி செய்கிறார்களா?அல்லது இந்த அமெரிக்க கலாச்சார பிள்ளைகளிடம் இருந்து தனித்து விடப் பட்டார்களா? எங்களுடைய குடும்ப நண்பர்(பெற்றோர்கள்) தங்களுடையபெண் யாரிடமாவது படுத்து, தாய்மை அடையாமல் இருந்தால் அதுவே எங்களுக்கு பெரிய நிம்மதி என்றனர். கேட்கும் பொழுது மனதிற்கு ரொம்பவருத்தமாக இருந்தது. இன்னொரு குடும்ப நண்பர் (பெற்றோர்) அவர் மருத்துவர் அவர் தன் பெண்ணிடம் பள்ளியில் எது நடந்தாலும் எங்களிடம்சொல்லிவிடு, அப்படி தவிர்க்க முடியாத காரணத்தால் உன் ஆண் நண்பர்களோடு உடல் உறவு ஏற்பட்டால் பாதுகாப்பாக உடல் உறவு கொள் என்றுதன் பெண்ணிடம் சொன்னதாக சொன்னார். அதற்கு அந்த பெண் Daddy, I am ok, please don't worry என்றாளாம். இன்னொரு பெற்றோர்கள் தன்பையனை பள்ளியில் மாலை அழைத்துவர சென்ற பொழுது அந்த பையன் ஓர் வெள்ளைகார பெண்ணோடு மிக நெருக்கமாக இருந்ததையும், அவர்கள்பிரியும் பொழுது அவர்கள் உதட்டோடு உதடு வைத்து முத்தம் குடுத்ததை பார்த்த அப்பா, வீட்டிற்கு வந்து அம்மாவிற்கு செம டோஸ் விழந்ததாம். ஆனால்அவருடைய பையனை கண்டிக்க தைரியம் இல்லை. அந்த வகுப்பில் படிப்பில் அந்த பெண் முதல் மாணவி, இவன் இரண்டாவது.
நம் இந்திய / தமிழக பிள்ளைகள் அமெரிக்காவில் வளர போவதால் பெற்றோர்களும் அதன் நல்லது கெட்டதுகளை ஏற்று கொண்டு அவர்களை அவர்கள்போக்கில் விடுவது நல்லதா கெட்டதா? பருவ வயது பெண்களை பெற்ற பெற்றோர்கள் அனைவரும் மன அழத்ததில் இருப்பார்கள் என்று கேள்வி பட்டுஇருக்கிறேன். ஏனில் பெரும்பான்மையான நம் இந்திய / தமிழக பிள்ளைகள் படிக்கும் பொழுதே அவர்கள் மனதிற்கு பிடித்த ஆண் / பெண்களை அவர்கள் தேர்ந்து எடுத்து கொள்வதில்லை. காரணம் குழப்பமான சூழ்நிலை காரணமாக அவர்கள் அந்த வயதில் நல்ல ஓர் துணையை தேர்ந்து எடுக்காமல் போய்விடுகிறது. அமெரிக்க பையனா, அல்லது இந்திய பையனா? அப்பா அம்மா ஒத்து கொள்வார்களா என்ற குழப்பமான மனநிலையில் உள்ளார் நம் பெண்கள்.25 வயது ஆன பல பெண்கள் இன்னமும் திருமணம் ஆகமால், பெற்றோர்கள் வருத்த படுவதை நான் பார்த்து இருக்கிறேன்.
என்னதான் நாம் அமெரிக்கா வந்துவிட்டாலும் இன்னமும் ஒரு சிலர் (மட்டும்) நம் சாதியிலே ஏதாவது வரன் கிடைக்காதா என்று ஏங்குவது உண்டு. ஆனால் அது குதிரை கொம்பான விசயம். அதே சமயத்தில் பெற்றோர்கள் நம் பெண் பிள்ளைகள் நல்ல இந்திய ஆண்ணை தேர்ந்து எடுத்து விட்டால் நலம் என்று கருதுகிறார்கள். வெள்ளைகார பையனை பிடித்துவிட்டால் சில பேர் பெருமையாக நினைக்கிறார்கள், சில பேர் பயப்படுகிறார்கள், இந்த வெள்ளைகார பையன் கடைசிவரை நம் மகளோடு இருப்பானா என்று சந்தேகம் உள்ளது. ஆனால் கறுப்பின ஆண்ணை தேர்ந்து எடுத்துவிட்டால் மிக மிக வருத்த படுகிறார்கள். எனக்கு தெரிந்தஓர் தமிழ் பெண் ஓர் கறுப்பரை திருமணம் செய்து கொண்டு மகிழ்ச்சியாக வாழ்க்கை நடத்துகிறார்கள். இருவருமே வக்கீல் தொழில் புரிகிறார்கள். ஆனால் நம்தமிழ் சமுதாய மக்கள் ஏதாவது விழாவில் கூடினால் அந்த பெண் கறுப்பரைத் திருமணம் செய்து கொண்டதாம் என்று புறம் பேசுகிறார்கள். இன்னோரு குடும்பத்தில் பெண் இங்குள்ள பையனை பார்த்து திருமணம் செய்து கொண்டு 5 ஆண்டுகள் கழித்து மணவிலக்கு ஆகிவிட்டது. அந்த பெண் நல்ல வேலையில்தான் உள்ளார், ஆனால் பெற்றோர்கள் மனம் ஒடிந்து காணப்படுகிறார்கள், மிக விரக்தியாக உள்ளனர். நாம் என்ன ஆறுதல் சொல்வது?
சிறிய வயதில் இருந்து நம் மீது படர்ந்து இருக்கும் போலியான இந்திய / தமிழக கலாச்சார போர்வையில் இருந்து வெளியே வந்து இயற்கையோடு இயந்து மனிதன், சுதந்திர சிந்தைனையோடு, நல்ல ஆரோக்கியமான வாழ்க்கையை எப்படி அமைத்து கொள்வது என்பதை காலம்தான் நல்ல பதிலை சொல்ல வேண்டும். ..
நன்றி!!!
மயிலாடுதுறை சிவா...
3 Comments:
பாவம்.
இந்தியக் கரையை விட்டு பறக்கும் அந்தத் தருணத்தில் - பெற்றவர்களின் காலம் உறைந்து போகிறது. அன்றைய தினத்தில், எந்த மனநிலை கொண்டிருந்தார்களோ, அதுவே இனி வாழ் நாள் முழுக்க அவர்கள் வைத்திருக்கப் போகிறார்கள்.
Be a Roman in Rome என்பார்கள். ஆனால், இவர்களால் அவ்வாறு இருக்க முடியாது. இது தான் வாழ்க்கை எனும்பட்சத்தில், அதை ஏற்றுக் கொள்ளாமல் தவிக்கும் தவிப்பின் முன், அந்த நாட்டின் பொருளாதாரச் சுபிட்சம், எந்த ஒரு மகிழ்ச்சியையும் தராது.
அல்லது அதையும் மீறி அந்த பொருளாதார சுபிட்சத்தை அனுபவிக்க வேண்டுமென்றால் - அதற்கு ஒரு விலை கொடுக்க வேண்டி இருக்கத் தான் செய்கிறது.
ஏற்றுக் கொள்ளுங்கள் - மனம்கிழ்ச்சியுடன், உங்கள் குழந்தைகள் முகமறியா நண்பர்களுடன் உறவு கொள்வதை.
அல்லது, திரும்பி விடுங்கள் - போதும் பணம். அதைவிட, வாழ்க்கையை இனிக்கச் செய்ய தாயகத்தில் எத்தனயோ உண்டு.
Prom என்ற சொல்/நடனம் பற்றி இன்றுதான் கேள்விப்படுகிறேன். தகவலுக்கு நன்றி.
படித்தவுடன் நேரடி அதிர்ச்சி இருந்தாலும், முன்னர் மூக்கு சுந்தர் எழுதியிருந்தபடி இதுவும் ஒருவகை 'டாண்டியா' ஆட்டம்தான். ஸோ ஆட்டம் எங்கும் நடக்கிறது, ஆடுவோர் ஆடிக்கொண்டுதான் இருக்கின்றனர் :(
Post a Comment
<< Home