"ஆசிரியர்" கீ. வீரமணி - ஒர் சந்திப்பு
இரண்டு வாரங்கள் முன்பு விடுதலை ஆசிரியர் திரு கீ வீரமணி அவர்கள் வாசிங்டன் வட்டாரம் வந்து இருந்தார்கள். அப்பொழுது வாசிங்டன் வட்டார தமிழ்ர்கள் சார்பாக அவரின் சிறப்பு பேச்சும் மற்றும் கலந்து உரையாடலும் இருந்தது. அவருக்கு வயது கிட்டதட்ட 73, ஆனால் அவருடைய பேச்சில் இருந்த வேகம், தளர்ச்சி இல்லாமை, கொள்கை பிடிப்பு என்னை மிக ஆச்சரிய படுத்தியது. அரசியல் கருத்து வேறு பாடுகளுக்கு அப்பாற்பட்டு அவரின் பேச்சு மிக அருமையாக இருந்தது. நான் இதுவே முதல் முறை அவரின் பேச்சை கேட்டேன், உண்மையை சொல்லப் போனால் சமூக விடுதலைக்கு போராடிய நம் தந்தை பெரியாரின் கருத்துகளை பலவிதமான புத்தகங்களை படித்து இருந்தாலும், அவருடைய கட்சியின் திராவிட இயக்கத்தின் தலைவராக இருக்கும் ஐய்யா வீரமணியின் பேச்சு ஓர் புத்துணர்வை தந்தது என்றால் அது மிகை ஆகாது.
தந்தை பெரியாரின் கருத்துகளை, கொள்கைகளை அழுகு தமிழில், எளிய தமிழில் மிக அருமையாக எல்லோருக்கும் புரியும் படியாக "நேற்றும், இன்றும், நாளையும்" என்ற தலைப்பிலே பேசினார். கிட்டதட்ட ஒன்றரை மணி நேரம் போனதே தெரியவில்லை.
நான் பெரியார் கட்சியின் தலைவர் அல்ல, மிக சாதரண பெரியார் கருத்துகளை பரப்பும் ஓர் பெரியார் அடிப்படை தொண்டன் என்று குறிப்பிட்டார். இன்று தமிழகம் கண்டு இருக்கும் மிகப் பெரிய சமூக விழிப்புணர்விற்கு பெரியாரின் "ஈரோடு பாதையே" காரணம் என்று சொன்னார்.
தந்தை பெரியாரின் வைக்கம் போராட்டமே, தமிழ்நாட்டின் மிகப் பெரிய சமூகநீதிக்கான போராட்டம் என்றும், அதன் பலன் மற்றும் வெற்றியின் பலனாக இந்தியாவின் மிகப் பெரிய பதவியான முதல் குடிமகன் திரு கே ஆர் நாரயணன் பதவிக்கு வந்ததிற்கு பெரியார் இட்டு கொடுத்த தளம் அதன் பலன் என்றார். வைக்கம் போராட்டத்திற்கு எந்த மண்ணில் அதாவது கேரளாவில் பெரியார் போராடினாரோ அந்த மண்ணின் மைந்தன் கே ஆர் நாரயணன் குடியரசு தலைவர் ஆனது பெரியார் இட்ட விதைக்கு பலன் என்றபொழுது வந்த இருந்த அனைவரும் கைதட்டி ஆராவரித்தனர்.
"அனைவருக்கும் அனைத்தும்", "எல்லோருக்கும் எல்லாம்" என்ற கொள்கை, மக்களை சிந்திக்க வைத்த உன்னத தலைவனாக தந்தை பெரியார் வாழ்ந்து விட்டு போனார் என்றும், அறிஞர் அண்ணா தந்தை பெரியாரை "தமிழ்நாட்டின் முதல் பேராசிரியர்" என்று சொன்னதை நினைவு கூர்ந்தார் ஆசிரியர். மேலும் தான் வாழ்ந்த காலத்திலியே மக்களுக்காக போராடி அதன் பலனை தந்தை பெரியார் பார்த்துவிட்டு போனார் என அறிஞர் அண்ணா சொன்னார். அதன் பலனே அண்ணா ஆட்சி அமைத்த பொழுது சேரிவாழ் மக்கள் வாழும் இடத்தில் அனைத்து பேருந்துங்களும் நிற்கும் எனவும், சுயமரியாதை திருமணத்தை சட்டவடிவம் ஆக்கினார் என்றும் ஆசிரியர் சொன்னார்.
இட ஒதிக்கீடு, தாழ்த்தப் பட்ட மற்றும் பிற்படுத்தப் பட்ட மக்களின் நலனுக்காக போராடியது மக்களிடம் வர்ணா ஆசிரம் தர்ம எற்ற தாழ்வு கூடாது என்பதாற்காக பெரியார் போராடிய பல சம்பங்களை சுவைப் பட ஆனால் சிந்திக்க வைக்கும் படி ஆசிரியர் வீரமணி பேசினார். மேலும் சுயமரியாதை இயக்கத்தின் கொள்கைகள் என்ன என்பதை மிக எளிமையாக, பெண்களுக்கு சம உரிமை, சாதி ஏற்ற தாழ்வுகள் கூடாது, மக்களுக்கு உயிரை விட மானம் பெரிது, பேதமை கூடாது, எது தடையாக இருக்கிறதோ அதனை நீக்க வேண்டும், திருமணம் என்பது ஒருவழிபாதை அல்ல என்பது போன்ற என்ற பல கருத்துகளை மிக அழகாக ஆசிரியர் பகிர்ந்துக் கொண்டார். பார்வையாளர்களில் பல பெண்கள் அனைத்தையும் மிக பொறுமையோடும், ஆர்வத்தோடும் கேட்டு கொண்டனர்.
புலம் பெயர்ந்த தமிழ்ர்களை மனதார பாராட்டினார், காரணம் அவர்களிடம் உண்மையான மொழி உணர்வும், இன உணர்வும் அதிகம் என்றார். புலம் பெயர்ந்த தமிழ்ர்கள் கோவில்கள் கட்டுவதை விட "தமிழ் கலாச்சார மையம், பண்பாட்டு மையம்" கட்டுங்கள், அது வளரும் தலைமுறைக்கு மிக பலனாக இருக்கும் என்றார்.
73 வயதிலும் மிக ஆரோக்கியாமாக இருப்பது, பெரியார் கருத்துகளை தெளிவாக பரப்புவது, உலக நாடுகளில் தமிழன் எங்கு எல்லாம் வாழ்கிறானோ அங்கு சென்று மக்களை பார்ப்பது என்று சுறுசுறுப்பாக இருக்கிறார். மொத்ததில் நல்ல, இனிய மாலை பொழுது இனிதே சென்றது.
நன்றி
மயிலாடுதுறை சிவா...
1 Comments:
சிவா,
பதிவுக்கு மிக்க நன்றி.
/* புலம் பெயர்ந்த தமிழ்ர்கள் கோவில்கள் கட்டுவதை விட "தமிழ் கலாச்சார மையம், பண்பாட்டு மையம்" கட்டுங்கள், அது வளரும் தலைமுறைக்கு மிக பலனாக இருக்கும் என்றார். */
அருமையான கருத்து. கட்டாயம் நடைமுறைப்படுத்த வேண்டிய ஒரு விடயம் இது.
Post a Comment
<< Home