இந்திய தூதரகம் - வாசிங்டன்
பிப்ரவரி 05 2006
இந்த மாதம் என்னுடைய கடவு சீட்டு (Passport) காலாவதி ஆவதால், அதனை புதுப்பிக்க வாசிங்டன்னில் உள்ள Massachusetts Avenue சென்றேன். இந்த தூதரகத்தில் நண்பர்கள் பலரை நான் இறக்கி விட்டு இருக்கிறேன், ஆனால் நான் செல்லுவது இதுவே முதல் முறை.
வாசிங்டன்னில் உள்ள Massachusetts Avenue- வில் தூதரகங்கள் பல உள்ளன. Bahamas, Pakistan, Australia, Oman, Japan இப்படி பல தூதரகங்கள் உள்ளன. சாலையின் இருபுறமும் தூதரகங்கள் மிக அழகாக நல்ல அந்த நாட்டின் கட்டிட கலையோடு காட்சி அளிக்கும். நமது இந்திய தூதரகம் மிக சதாரணமாக காட்சி அளித்தது. அருகில் உள்ள மற்றோரு சாலையில் காரை நிறுத்திவிட்டு ஆவலோடு உள்ளே செல்ல ஆசைப்பட்டேன். அலுவலகத்தின் முன்புறம் எல்லோருக்கும் போகவேண்டிய அவசியம் இல்லை என்று நினைக்கிறேன்.
அதன் அருகே விசா மற்றும் கடவுசீட்டுபுதுபித்தல் கிழே(Basement) என்று போட்டு இருந்தது. அந்த அலுவலகத்திற்குள் சென்றேன். மிகச் சிறிய அறை. சுமார் 50 முதல் 60 பேர்கள் அமரலாம். கோயம்பேடு பேருந்து நிலையத்தில் காணப்படுகிற அதே வகையான நாற்காலிகள் (சேர்கள்). நான் அமெரிக்காவில் அதனைப் பார்ப்பது அதுவே முதல் முறை. மிக சாதரணமாக காட்சி அளிக்கப்பட்ட அந்த அறையில் தரை விரிப்புகள் நிறைய அழுக்காக காட்சி அளித்தது. சிறிய கண்ணாடி மூடப்பட்ட ஓர் சிறிய அறையில் இரண்டு இந்திய அதிகாரிகள். இருவரும் பெண்கள். ஒருவருக்கு வயது 55 இருக்கலாம், மற்றவருக்கு வயது 35 இருக்கலாம். இருவரும் ஹிந்தி பேசினார்கள். சிறிய அறை காரணமாக நீங்கள் அதிகாரிகளிடம் பேசுவதை அனைவரும் நன்றாக கேட்க முடியும். அருகே Bathroom (Rest Room)அது ஆணுக்கும் பெண்ணிற்கும் ஒன்றுதான் என்பதை மக்கள் மாறி மாறி போவதை கண்டு தெரிந்துகொண்டேன். நமது மக்கள் உள்ளே போய் திரும்பி வரும் பொழும் கதவை மடாரென்று சாத்துவதை பார்க்க முடியும்.
காலை நம்முடைய கோப்புகளை கொடுத்துவிட்டு மாலை சென்று நமது விசா அல்லது கடவுசீட்டு, கோப்புகளை பெற்று கொள்ளலாம். அந்தெந்த பணிக்கு தகுந்தாற்போல் சீட்டு (Ticket)நீலம், பச்சை, சிவப்பு என்று கொடுக்கிறார்கள். மாலை வேளைகளில் அவர்கள் அந்தெந்த நிறத்தை மற்றும் நமது எண்ணை கூப்பிடுவார்கள். ஓர் வயதான அம்மா மாறி கிட்டே சென்றவுடன், "No I called only Red Tickets" என்று சத்தமாக சொன்னவுடன் அந்த அம்மா ஓர் குற்ற உணர்வோடு வந்து அமைதியாக நாற்காலியில் அமர்ந்தார்கள். மற்றோரு African American பெண்மணி விசாவை வாங்கி பார்த்துவிட்டுநான் 6 மாதம் கேட்டு இருந்தேன், 4 மாதங்கள்தான் கொடுத்து உள்ளார்கள் என்றும், 4 புகைப்படங்கள்கொடுத்தேன் விசாவில் புகைப்படம் இல்லயே என்றும் வருத்தப் பட்டு கொண்டு இருந்தார்கள். அதனை அவர்களிடன் கேட்டால் என்னை சத்தமாக திட்டுவார்களா? என்று என்னிடம் கேட்ட பொழுது "இந்தியகலாசாரத்தின் பெருமை கருதி" வருத்தப் பட்டேன்.
நிறைய பஞ்ஜாப்பி மக்களை பார்க்க முடிந்தது. அவர்கள் நிறையப் பேர் அமெரிக்க குடியுரிமை வாங்கிவிட்டு இந்தியா செல்ல விசா வாங்க வந்தவர்கள் போலும். எல்லோரும் கடவுசீட்டை ஆர்வமாக வாங்கி இந்திய விசாவை பார்த்து கொண்டார்கள். ஓர் வட இந்திய பெண்மணி Palm with Cell Phone ஐ எப்படி இந்தியாவில் உபயோகப் படுத்த முடியும் என்பதை சத்தமாக மற்றோரு நபருடன் கத்தி கத்தி பேசிக் கொண்டு இருந்தது, மற்றோரு நபரும் ஏதோ C++ Coding போல அதனை கேள்வி கேட்டு குடைந்து கொண்டு இருந்தார். மொத்ததில் இந்தியா தூதரகத்தில் நம் இந்திய கலாச்சாரத்தை பார்க்க முடிந்தது.
எல்லாம் முடிந்து பாகிஸ்தான் தூதரகம் அருகே Belmont சாலையின் உட்புறம் காரை எடுக்க சென்றபொழுது இருபுறமும் அழகான குடியிருப்புகள் இருப்பதை பார்க்க முடிந்தது. ஓர் வயதான பாட்டி தன்னுடைய Benz காரை வீட்டின் உள்ளே எடுத்து செல்ல, அந்த பாட்டியின் கணவர் Lexusல் வெளிய சென்று கொண்டு இருந்தார். 4 மைல் தொலைவில் அமெரிக்க பாராளுமன்றம், 3 மைல் தொலைவில் அமெரிக்க வெள்ளைமாளிகை, 1 மைல் தொலைவில் பல தூதரங்கள், வாசிங்டன் போக்குவரத்தின் பரபரப்பு இல்லாமல் இந்த அழகான வீட்டின் அந்த பாட்டி ஓவ்வோருப் படியாக வீட்டின் உள்ளே செல்லுவதை ஏக்கத்தோடு பார்த்து நடையே கட்டினேன்.
நன்றி
மயிலாடுதுறை சிவா...
10 Comments:
நீங்கள் ஏர் இண்டியாவில் ஊருக்குப் போனதில்லையா சிவா? JFKல் ஏர் இண்டியா கவுண்டரில் போர்டிங் பாஸ் வாங்கும் போது நம் கலாச்சாரம் மிகமிகத் தெளிவாகத் தெரியுமே....
:((((
தங்கள் வருகைக்கு நன்றி குமரன்.
இதுவரை ஏர் இந்தியாவில் போனது இல்லை.
ஏதிர்காலத்தில் போகவும் விருப்பம் இல்லை.
நண்பர்கள் பலர் அதனைப் பற்றி நிறைய
சொல்லி உள்ளார்கள்...
நன்றி
மயிலாடுதுறை சிவா...
என்ன வருத்தமா நரேன்
என்ன செய்வது?
சிவா...
may be they are making ua feel at home..
I have been to the same counsulate..at least the person on the otherside of the couunter was very pleasing.
I could see a couple of great looking counsulates in the same block..unfortunately not ours.
இங்கே சிங்கையில் இருக்கிற இந்திய தூதரகம் மட்டும் என்ன வாழுகிறதாம்? விசாவுக்கு வந்த மற்ற நாட்டினர் கேவலமாக பேசியதை நானே கேட்டேன் ..இதுல வல்லரசு வேற?
eppo mayiladuthurai patthi?!
இங்கே பதிவுகளை விட்டுச் சென்ற அனைவரும் 'குறை' பட்டுக் கொள்ளவில்லை, வருத்தமே அதிகமுற்றுள்ளார்கள்.
இங்கே துபாயில் உள்ள தூதரகம் நீங்கள் சொல்லுகிற அளவுக்கு மோசமாக இல்லையென்றாலும், சேவையைப் பொறுத்த வரை மிகவும் பின் தங்கியே இருக்கிறது.
India and Indian Govt. Always Unique!
நன்றி!
ஷங்கர்.
ராம்கி விரைவில் மயிலாடுதுறையை பற்றி எழுதி விடுகிறேன்.
அலெக்ஸ், ஜோ, சங்கர் வருகைக்கு நன்றி.
இந்தியர்கள் தரமான நல்ல வேலைகளில்
இருப்பதும், இந்தியா பொருளாதர சந்தையில் நல்ல பங்கு வைப்பதும் மிக்க மகிழ்ச்சியே, ஆனால் நம் தூதரகம் மேலும் தரமாக முன்னேற்றப் படவேண்டும் என்ற ஆதங்கதில் எழதப் பட்டதுதான் என் பதிவு.
நன்றி
சிவா...
என்ன, இந்தியத் தூதரகங்கள் சரியாக சேவை வழங்குவதில்லையா?
தனியார்மயப்படுத்திவிடவேண்டியது தான்.
Post a Comment
<< Home