வி.சி வேட்பாளர் திரு ரவிக்குமார்...
மார்சு 30 2006
விடுதலைச் சிறுத்தைகள் வேட்பாளர் திரு ரவிக்குமார்
தமிழக தேர்தலில் எல்லா கட்சிகளும் வேட்பாளர் பட்டியலை அறிவித்து வருகின்றன. இன்று காலை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பொதுச் செயலாளர் திருமாவளவன் தனதுகட்சி வேட்பாளரை அறிவித்தார். அதில் குறிப்பிடும்படியான அம்சம் தான் எந்த தொகுதியிலும் போட்டியிடமாலும், காட்டு மன்னார் கோவில்(தனி) - எழத்தாளர் ரவிகுமார் பெயரை அறிவித்ததும் மிக மிக பாராட்டுதலுக்கு உரியது.
புதுவை ரவிக்குமார் மிக சிறந்த எழத்தாளர். நிறைய சிந்தனைகளை மாற்றகூடிய, மனதில் பதியும் படி, மிக எளிமையான பல கட்டுரைகளை எழுதியவர். ஓடுக்கப் பட்ட, உரிமைகள் மறுக்கப் படுகின்ற, தாழ்த்தப்பட்ட, அடிதட்டு மக்களின் உணர்வுகளை எல்லோருக்கும் புரியும் வண்ணம் மிக அருமையாக எழத கூடிய சிந்தனையாளர். அவர் எழுதிய "மால்கம் எக்ஸ்"என்ற புத்தகம் மிக மிக பிரசித்த பெற்ற நூல். காலச்சுவடில், தலித் முரசில், தாய்மண்ணில் நிறைய அரசியல் கட்டுரைகளை எழுதி வருபவர்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் வெற்றி வாய்ப்புப் பற்றி பரவலாக பேச படுவதில், மங்களூர் (செல்வமும்), காட்டு மன்னார் கோவிலில் (ரவிக்குமார்) வெற்றி வாய்ப்புகள் அதிகம் என்றே தோன்றுகிறது.
திரு ரவிக்குமார் போன்ற நபர் சட்டமன்ற சென்றால் நிச்சயம் அந்த தொகுதியின் மேம்பாட்டிற்குபாடுபடுவார் என்று நம்பலாம். அவருடைய எழுத்துகளில் தலித் மக்களின் அடிப்படைப்பிரச்சினைகளை, வெண்மணியின் வரலாற்றை, திண்ணியத்தின் கொடுமையை, அம்பேத்காரின் சட்ட நுணுக்கங்களை,பெரியாரின் இந்துமத எதிர்ப்பை, மிக ஆழமாக அலசி இருப்பதை பிரமிப்போடு பார்த்து இருக்கிறேன்.
இதுப் போல சமுதாய பிரச்சினைகளை நன்கு உணர்ந்த நபரை சட்டமன்ற செல்ல வாய்ப்பு கொடுத்து இருக்கும் திருமா என்றுமே பாராட்டுக்கு உரியவர்.
மிக்க நன்றி
மயிலாடுதுறை சிவா...
2 Comments:
ரவிக்குமார் பற்றி எனக்கு நிச்சயம் பலத்த விமர்சனம் உண்டு. ஆனால் அவரை போன்ற அரசியல் விழிப்புணர்வும், தலித் அரசியல் சார்பும், பல தார்மீக கோபங்களும்
கொண்ட ஒருவர் சட்டசபைக்கு செல்வது, தமிழக அரசியலில் மிகச் சிறந்த விஷயம். அதற்காக சில சமரசங்கள் நேர்ந்தால் தவறில்லை என்றே தோன்றுகிறது. தகவலுக்கு நன்றி.
நண்பரே நானும் மயிலாடுதுறையை சேர்ந்தவன் தான்.அருமையா எழுதுகிறீர்கள்.வாழ்த்துக்கள்.நானும் படித்தது,வளர்ந்தது வாழ்வது எல்லாம் நம்மூரிலேயே.நீங்கள் சொல்லுவது போல் ஒரு போதும் மணிகுண்டை மறக்க முடியாது.world links magesh உங்களுக்கு பழக்கமா.அவனும் நானும் ஒரே வகுப்பில் படித்தோம்.சிறு வயது முதல் நண்பர்கள்.நேரம் கிடைத்தால் மடலிடுங்கள்
நேசத்துடன்
முஜிப்
mujibudeen@gmail.com
Post a Comment
<< Home