சுப வீரபாண்டியன் நேர்காணல்...
தேர்தல் 2006 - சுப வீரபாண்டியன் நேர்காணல்
இன்று காலை சூரிய தொலைகாட்சியில் வருகின்ற வணக்கம் தமிழகத்தில் "பேராசிரியர் சுப வீரபாண்டியனின்" நேர் காணல் இருந்தது. மிக அருமையான கருத்து செறிவுள்ள ஓர் பேட்டி என்றால் அது மிகைஆகாது.
ஓர் சாதாரண அரசியல்வாதி அவர் சார்ந்து இருக்கின்ற அரசியல் கட்சியை பற்றி பெருமையாக பேசும் பொழுது நமக்கு ஓர் மகிழ்ச்சி ஏற்படுவது இல்லை, ஆனால் சமுதாயத்திலும், அரசியலிலும், இலக்க்கிய வட்டாரத்திலும் நன்கு அறிமுகமுள்ள ஓர் படித்த பேராசிரியர் சுபவீ பேட்டியில் ஓர் ஆதங்கம், ஓர் அர்த்தம், ஓர் சிந்தனை இருக்கதான் செய்கிறது.
அவர் தன்னுடைய பேட்டியில் அவர் பட்ட இன்னல்களை, அதுவும் போடோவின் மூலமாக சிறைச் சாலையில் பட்ட துன்பங்களை வரிசையாகவும் அவருடன் மதிமுகவின் சக தோழர்களும் பட்ட துயரங்களை பொறுமையாக எடுத்துரைத்தார். கடந்த 5 ஆண்டுகளில் ஜெ வின் அடக்குமுறைகளை, அரசு அதிகாரிகளிடம் நடந்தவிதம், சாலைப் பணியாளர்களை நீக்கியவிதம், அவர் கொண்டு வந்த கடுமையானசட்டங்கள் என்று நிதானமாக பட்டியில் இட்டார்.
போடோ சட்டத்தின் மூலத்தையும் அதனை எவ்வாறு கலைஞர் தலையிட்டு நீக்கினார் என்பதையும் சொன்னார். நமக்கு தொப்புள்கொடி உறவுள்ள ஈழ தமிழர்களுக்கு "வாய் மொழி ஆதரவு" தருவதும் குற்றம் என்ற அறிக்கையை பிஜேபி அரசு கொண்டுவந்ததையும் அதனை கலைஞர் அதிகாலை ஹந்துவில் படித்துவிட்டு அமைச்சர் டீஆர் பாலுவை கூப்பிட்டு இந்த அறிக்கையை உடன் மத்திய அரசு மாற்றவிட்டால் அந்த அரசில் திமுக அங்கம் வகிக்காது என்று காட்டமாக கூற அதனை அமைச்சர் பாலு கேட்டு கொண்டு கடுமையாக போராடி "ஈழ மக்களுக்கு" "வாய் மொழி ஆதரவில்" தவறு இல்லை எனவும், அது குற்றம் ஆகாது எனவும், அதன் கீழ் போடோவில் கைது செய்ய முடியாது என்பதையும் திமுக பெற்று தந்தது என்றார் போராசிரியர் சுபவீ. மிக துல்லியமாக நாள், நேரம், பத்திரிக்கை குறுப்பீடுகள் எல்லாவற்றையும் சொன்னார் சுபவீ.
எல்லாவற்றிக்கும் மேலாக இந்த தேர்தலில் கலைஞர் தேர்தல் அறிக்கையை மனதார பாராட்டி விட்டு, அந்த அறிக்கையில் 34 பக்கத்தில் "மனித கழிவுகளை மனிதனே அகற்றுவது" என்று கொடுமையான வேலையை "ஆதி மக்கள் பேரவை" கேட்டு கொண்டதற்கு இணங்க கலைஞர் அரசு மீண்டும் வந்தால் அதனை நீக்க உரிய நடவடிக்கை உடன் எடுக்க படும் என்று சொல்லிய அந்த அறிக்கையை மனதார பாராட்டினார் சுபவீ. இது மனித நேயத்துடன், சமுதாய வளர்ச்சியை நோக்கி எடுக்கப் பட்ட நல்ல அறிக்கை என்றும் சொன்னார்.
18 மாதங்கள் போடோவில் கைது செய்யப் பட்ட வைகோ இந்த அரசியல் கூட்டணி ஏற்படுத்தியதை மனதார வருந்தினார். மேலும் வைகோ மேடையில் அநாகரீகமாக பேசுவதாக வருத்தப் பட்டார்.
மொத்ததில் போராசிரியர் சுப வீரபாண்டியனின் நேர்காணல் மிக அருமையாக, மிக தெளிவாக, மிக ஆழமாக, மிக சிந்தனையுள்ள, மிக்க கருத்து செறிவுடன், நல்ல அழுகு தமிழில் (ஆங்கிலம் கலக்காமல்) பேசியது நன்றாக இருந்தது.
தமிழ் தேசியத்திற்கு குரல் கொடுக்கும் போராசிரியர் சுப வீர பாண்டியணின் எண்ணம் நிறைவேற மனதார வாழ்த்துகள் பல...
நன்றி
மயிலாடுதுறை சிவா...
4 Comments:
பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி சிவா.
en sArbilum nanRikaL naNbarE! :)
சூப்பரான பதிவு சிவா.
siva,
தகவலுக்கு நன்றி!
Post a Comment
<< Home