தமிழ்மணம் சன் தொலைக்காட்சியில்...
தமிழ் மணம் சன் தொலைக்காட்சியில்..
வாசிங்டன். சூன் 08 2006 இன்று காலை 9 மணி (அமெரிக்க நேரப் படி) சன் தொலைகாட்சியில் செய்திபார்த்து கொண்டு இருந்த பொழுது, நமது எண்ணங்களை, சிந்தனைகளை தமிழில் எழுதி வலைப் பூக்களில் பதிய வைக்கலாம் என்றார்கள்.
தமிழ்மணத்தின் முகப்பு பக்கம் காண்பிக்கப் பட்டது.
தமிழ்மணத்திற்கு - வாழ்த்துகள்.
திரு பத்ரி பேசினார். மிக தெளிவாக வலைப் பூக்களில் என்னவெல்லாம் எழதலாம் என்பதை ரத்தின சுருக்கமாக சொன்னார். பத்ரிக்கு வாழ்த்துகள்.
கில்லி தொகுப்பாளர் திரு இகாரஸ் பிரகாஷ் பேசினார். பிரகாஷ்க்கு வாழ்த்துகள்.
தமிழ்மணத்தையும் நம் வலைப்பதிவாளர்களையும் சன் தொலைகாட்சியில் பார்த்தது மனதிற்கு மகிழ்ச்சியாய் இருந்தது.
தமிழ்மணம் மென்மேலும் வளர திரு காசிக்கு மனப் பூர்வமான வாழ்த்துகள்.
நன்றி
மயிலாடுதுறை சிவா..
3 Comments:
மிக நன்று!
சிவா,
தகவலைப் பரிமாறிக் கொண்டமைக்கு நன்றிகள். கேட்கவே மகிழ்ச்சியாக உள்ளது.
//நமது எண்ணங்களை, சிந்தனைகளை தமிழில் எழுதி வலைப் பூக்களில் பதிய வைக்கலாம் என்றார்கள்.
தமிழ்மணத்தின் முகப்பு பக்கம் காண்பிக்கப் பட்டது.//
உண்மைதான். ஆனால் ஒரு சிலர் இத் தளத்தை தவறாக [misuse]பயன்படுத்துவது வேதனையாக உள்ளது.
//தமிழ்மணம் மென்மேலும் வளர திரு காசிக்கு மனப் பூர்வமான வாழ்த்துகள்.
//
தமிழ்மணம் மென்மேலும் மணம்வீச காசியண்ணரையும், தமிழமண நிர்வாகிகள், மற்றும் தமிழ்மண வலைப்பதிவர்கள் அனைவரையும் நானும் வாழ்த்துகிறேன்.
நன்றி.
அன்புடன்
வெற்றி
இதையெல்லாம் சம்பிரம்மமாக சோபாவில் உட்கார்ந்து கொண்டு தோசை சாப்பிட்டபடி பார்த்துவிட்டு சிவா பதிவெழுதினார். சிவாவுக்கு வாழ்த்துக்கள்.
;-)
Post a Comment
<< Home