கலைஞர்-ரவிகுமார்-அகதிகள் முகாம்
கலைஞர்-ரவிகுமார்-அகதிகள் முகாம்
இந்த வார விகடனில் திரு ரவிக்குமார், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சட்டமன்ற உறுப்பினர்இலங்கை அகதிகள் வாழ்வு பற்றி உண்மை நிலவரத்தை மிக அருமையாக யார் படித்தாலும்மனம் பாரமாய் உள்ளப்படி எழுதி இருந்தார்.
அதனை முதல்வர் கலைஞர் விகடனில் அதிகாலை படித்துவிட்டு ரவிக்குமாரை தொலைப் பேசியில்கூப்பிட்டு அந்த கட்டுரையை பாராட்டிவிட்டு ரவிக்குமாரை இராமேஸ்வரம் சென்று அகதிகள் முகாமை பார்த்துவிட்டு ஓர் அறிக்கை ஒன்றை கேட்டு இருக்கிறார்.
கலைஞரின் இந்த செயல் மிக மிக பாராட்டுக்குரியது. கலைஞர் அதிகாலையில் அப்படி பாராட்டியதுரவிக்குமாருக்கு மிகுந்த ஆச்சிரியத்தை நிச்சயம் கொடுத்து இருக்கும். இலங்கையில் இருந்து வரும்அகதிகள் தமிழ் மக்கள் மீது கலைஞர் மரியாதை வைத்து இருந்த காரணத்தால் ரவிக்குமாரையே போகச்சொல்லி அறிக்கை கேட்டதை மனதிற்கு பெரும் ஆறுதலை தருகிறது.
ஒடுக்கப் பட்ட, உரிமைகள் மறுக்கப் படுகின்ற தலித் மக்களின் பிரதிநிதி ரவிகுமார் அவர்கள். பிரச்சினைகளின் ஆழமும், மூலமும் நன்கு அறிந்தவர், நல்ல சிந்தனையுள்ள எழுத்தாளர். இதுப் போல அவர் பல கட்டுரைகள் பல அவர் எழத வேண்டும். வாய்ப்பு கிடைக்கும் பொழுதுதெல்லாம்சட்டமன்றத்தில் பேச வேண்டும். கலைஞர் கவனத்திற்கு நிறைய இதுப் போல செல்லட்டும். தமிழுக்கும் தமிழ் மக்களுக்கும் நல்லது நடக்கட்டும்.
நன்றி
மயிலாடுதுறை சிவா...
நன்றி விகடன்
நன்றி தினகரன்
9 Comments:
ஆறுதலான செய்தி!
ஈழத்தமிழ்ச் சகோதரர் வாழ்வு விடியட்டும்!
குறிப்பிட்ட விகடன் கட்டுரை படிக்கவில்லை. ஆனால் இராமேஸ்வரம் அகதிகள் முகாம் அங்குள்ள மக்களின் நிலைமைகள் குறித்து யாரேனும் ஏதாவது செய்ய முடிந்தால் பெரிய காரியம்.
மனதை பாரமாக்கக்கூடிய அங்குள்ள மனிதர்கள் பற்றி ஊடகங்கள் பேசவில்லையே ஒழிய, அரசியல்வாதிகளிற்குத் தெரியாதது அல்ல.
பொது வெளியில் ரவிக்குமார் இத்தகைய பக்கங்களைப் பேசுவது மிகவும் சந்தோசமளிக்கிறது.
காலையில் அனைத்தையும் படித்து விடுபவர் என்ற வாக்கினை உறுதி செய்திருக்கிறார் கருணாநிதி.
படித்ததும் பாராட்டுவதும் அவர் பண்பே!
ஆனால், ஒரு முதல்வர், தன் மாநிலத்து நடப்பை,
"அதுவும் இது போன்ற ஒரு செய்தியை,"
ஒரு பத்திரிக்கைக் கட்டுரை மூலமே படித்து அறிந்தார் என்பது கொஞ்சம் நம்ப முடியாததாக இருக்கிறது!
நல்லது நடக்க வேண்டுவோம்!
சிவா, பாராட்டத்தக்க இந்நிகழ்வைக் கவனத்திற்குக் கொண்டு வந்ததற்கு நன்றி!
ஏண்டா அம்பி, உன் மூஞ்சியில் என் பீச்சாங்கையை வைக்க! பாப்பானை வாழ்த்தி எழுதுன்னு சொன்னா வேற என்னவெல்லாமோ எழுதறே?
அன்பின் சிவா,
தகவலுக்கு நன்றிகள். அகதி முகாம் பிரச்சனையை எடுத்துரைத்த இரவிக்குமாருக்கும் , அதை உதாசீனம் செய்யாது உரிய நடவடிக்கை எடுக்க முனையும் கலைஞருக்கும் என் நன்றிகள்.
//அதை ஒரு பதிவாய் இங்கு இடுவீர்களேயானால் அனைவரும் படிக்க, அறிந்து கொள்ள உதவும்.//
சாராவின் அன்பு வேண்டுகோளை நானும் வழி மொழிகிறேன்.
நன்றி.
அன்புடன்
வெற்றி
நல்ல செயல்.
பாராட்டுக்கள் ரவிக்குமாருக்கும் கலைஞருக்கும்.
என் பதவிற்கு வந்து பின்னூட்டம் இட்ட ஜோ, பொடிச்சி, ஸ்கே, ஸ்ரீகாந்த, சாரா, வெற்றி மற்றும் முத்துக்கு
மனமார்ந்த நன்றிகள் பல.
சாரா மற்றும் முத்து வேண்டுகோளுக்கு இணங்க ரவிகுமாரின் அகதிகள் கட்டுரையை இங்கு பதிய வைக்கிறேன்.
நன்றி
மயிலாடுதுறை சிவா...
ரவிக்குமாருக்கும், கலைஞருக்கும் செய்தியை இங்கே இட்ட உங்களுக்கும், விகடனுக்கும்(ஆச்சரியமாயிருக்கே) பாராட்டுகளும் நன்றிகளும்
Post a Comment
<< Home