Monday, July 17, 2006

அமெரிக்கா பயணத்தில் அய்யா ராமதாசு...(தமிழ் குடிதாங்கி)

நியுசெர்சி...

பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அய்யா இராமதாசு அமெரிக்கா வந்து இருக்கிறார். உலக தமிழ் அமைப்பு அவரை நியுசெர்சியில் சந்திக்க ஏற்பாடு செய்து இருந்தது. அய்யா நியூயார்க்கில் இருந்து மாலை 7.30 மணிக்கு வந்து இருந்தார்கள். அய்யாவோடு செங்கல்பட்டு நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் ரயில்வே மந்திரியும் மூர்த்தி அவர்களும் வந்து இருந்தார்கள்.

Free Image Hosting at <a href=www.ImageShack.us" />


அய்யாவின் பேச்சு மிக எளிமையாக இருந்தது. மிக அன்பாகவும் ஆதரவாகவும் எல்லோருடனும்பேசிக் கொண்டு இருந்தார். அவர் ஓரு மிகப் பெரிய பேச்சாளர் அல்ல என்று ஒத்துக் கொண்டார். என் மனதில் பட்டதை ஒளிவு மறைவு இல்லாமல் பேசுவதாக சொன்னார். அமெரிக்காவில் தமிழர்களைபார்ப்பதும் அவர்களோடு உரையாடுவதும் மனதிற்கு மிகுந்த ஆறுதலாக உள்ளதாக சொன்னார்.

தமிழ்நாட்டில் இளைஞர்களுக்கு சரியான வழிகாட்டுதல் இல்லை என்று வருத்தப் பட்டார். இந்த கால இளைஞர்கள் வெள்ளி திரையின் மாயையை மிக நம்புவதாகவும், இளைஞர்கள் ரசிகர் மன்றத்தின் பின்னால் செல்லுகிறார்கள் என்று மிக மிக வருத்தப் பட்டார். தமிழ்நாட்டில் 39 சதவீதம் வறுமைக் கோடுக்கு கீழே இருப்பதை கோடிட்டு காட்டினார் இந்த கால இளைஞர்களுக்கு தமிழ், தமிழ் தேசியம், ஈழ மக்கள் பிரச்சினை, மொழி, பண்பாடு இவற்றில் ஓர் பற்று இல்லை என்றும் ஆதங்கப் பட்டார்.

தன்னுடைய கட்சி நிச்சயம் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு பாடுபடும் என்று உறுதி அளித்தார். அதுமட்டும் அல்ல ஈழ மக்கள் படும் துயரத்திற்கு தனி ஈழமே தீர்வு என்பதை மிக உறுதியாக எடுத்து உரைத்தார். தமிழ் நாட்டில் ஈழ மக்களின் படும் பாட்டை பேச பயந்த காலத்தில் இவருடைய கட்சி மிக தைரியமாக பேசியதை நினைவு கூர்ந்தார். ஈழ மக்களுக்கு அவர், அவருடைய மகன், அவருக்கு பிறகு அவர் பேரன் குரல் என்றும் கொடுப்பார்கள் என்றார் அதற்கு ஈழ மக்கள் கைகொட்டி ஆராவரித்தார்கள்.

கடந்த ஆட்சியில் ஈழ மக்களுக்கு ஆதரவான ஆட்சி இல்லை என்பதாலும் இந்த ஆட்சி நிச்சயம் ஈழ மக்களின் அமைதியில் முக்கிய அக்கறை உள்ளதாகவும் கலைஞர் மிக ஆதரவாக இருப்பார் என்றும் நம்பிக்கை அளித்தார்.இந்த 5 ஆண்டு கால ஆட்சியில் கலைஞர் நிச்சயம் மக்களுக்கு வேண்டியப் பலத் திட்டங்களை செய்வார் என்று உறுதி அளித்தார். எல்லாவற்றிக்கும் மேலாக கலைஞர் அரசு ஈழ மக்களின் துயரத்தில் இருந்து மீட்க நிச்சயம் ஆதரவாக இருக்கும் என்று பலமுறை சொன்னார். கலைஞரிடம் தனியாக பேச வாய்ப்பு கிடைக்கும் பொழுதுஎல்லாம் இதனை மறக்காமல் சொல்லுவதாக சொன்னார்.

எதிர்வரும் காலங்களில் தமிழ் பாதுகாப்பு இயக்கம் மூலமாகவும் அரசியல் அரங்கிலும் ஒடுக்கப் பட்ட மக்களுக்கு குரல் கொடுக்கும் அன்பு தம்பி திருமாவோடு நிச்சயம் கை கோர்த்து நடப்பேன் என்றும் நம்பிக்கை தெரிவித்தார். தரமான பத்திரிக்கைக்கு "தமிழ் ஓசையும்" தரமான திரைப் படத்திற்கு "இலக்கணம்" என்ற படமும்தரமான தொலைக் காட்சிக்கு "மக்கள் தொலைக் காட்சி" பார்த்து உங்கள் விமர்சனங்களை சொல்லுங்கள்என்றார். அவரைப் பற்றியும் அவரது மகன் மத்திய அமைச்சர் அன்பு மணியின் செயல் பாடுகளில் குறைகள் இருந்தால் சுட்டி காட்டுங்கள், நிறைவான விசயங்களை மனதில் நிலை நிறைத்துக் கொள்ளுங்கள் என்றார்.

புலம் பெயர்ந்த தமிழர்கள் அரசியலுக்கு, சாதிகளுக்கு அப்பாற்பட்டு தமிழ் மொழிக்கும், கலைக்கும், பண்பாட்டிற்கும், கலாச்சாரத்திற்கும், நம் சகோதர ஈழ மக்களின் விடுதலைக்கு யார் எல்லாம் குரல் கொடுக்கிறார்களோ அவர்களை என்றும் மனதார பாராட்டி, நன்றி தெரிவிப்பார்கள், அது இங்கும் நடந்தது என்றால் அது மிகை அல்ல...

இயற்கைத் தாய் அய்யா இராமதாசுக்கு நல்ல நீண்ட வாழ்நாளை தரட்டும் அவரது அயராத தமிழ் பணியும் ஈழ மக்களின் விடுதலைக்கு தமிழ் மக்களிடம் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தும் பணியும் தொடரட்டும்...

நன்றி
மயிலாடுதுறை சிவா...





Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

17 Comments:

Blogger வெற்றி said...

சிவா,
தகவலுக்கு நன்றிகள். உண்மைதான், உலகத்தமிழர்கள் யாவரும் ஒரு பொது வேலைத்திட்டத்தின் கீழ் இயங்க வேண்டிய காலகட்டம் இது. நாடுகளின் எல்லைகள் காலத்திற்குக் காலம் மாறலாம். நாம் வெவ்வேறு நாடுகளுக்குச் சென்று குடியேறி அந்தந்த நாட்டின் குடிவாசிகளாகலாம். அதனால் எமது பிரஜாவுரிமை மாறலாம். ஆனால் தமிழர் என்ற இன் அடையாளம் நிரந்தரமானது. என்றுமே மாறாது. எனவே நாம் அனைவரும் தமிழால் இணைவோம்.

Monday, July 17, 2006 10:11:00 PM  
Blogger மயிலாடுதுறை சிவா said...

மிக்க நன்றி வெற்றி.

நிச்சயம் நாம் தமிழால் இணைவோம்.

மயிலாடுதுறை சிவா....

Tuesday, July 18, 2006 7:14:00 AM  
Blogger மயிலாடுதுறை சிவா said...

ஸ்ரீநிதி

உங்கள் கேள்வியில் நியாயம் உள்ளது.

வன்னிய இன மக்களால் அவர் உயர்ந்து வந்தார்.
அந்த வாக்கு வங்கியை அவர் தக்க வைத்து கொண்டே ஆக வேண்டும்.

நன்றி
மயிலாடுதுறை சிவா...

Tuesday, July 18, 2006 8:33:00 AM  
Blogger மயிலாடுதுறை சிவா said...

தீ

தமிழ் ஊடகங்கள் 90% மேல் சாதி இந்துகளிடம் உள்ளது. ஆகையால் இராமதாசு அல்லது அன்புமணி அல்லது திருமா பற்றி போராட்டங்கள் அவர்களுக்கு கவலை இல்லை.

உங்கள் கருத்தோடு நானும் ஒத்துப் போகிறேன்.

நன்றி
மயிலாடுதுறை சிவா...

Tuesday, July 18, 2006 11:21:00 AM  
Blogger Nakkiran said...

முதலில் அவரை தமிழ்நாட்டின் பால்தாக்ரே போல் நடப்பதை நிறுத்தச் சொல்லவும்.

வன்முறை வேண்டாமென்று அவர் கட்சியினருக்கு எடுத்துச் சொல்ல சொல்லவும்

மாற்றுக் கருத்துக்களை ஏற்றுக்கொள்ளும் மனபக்குவத்தை வளர்த்துக் கொள்ளச் சொல்ல்வும்.

சிகரெட் தயாரித்தலையும், விளம்பரபடுத்தலையும் கண்டுகொள்ளாமல், சினிமாவில் புகை பிடிக்கும் காட்சியை தடை செய்யும் அதிமேதாவி தனத்தை நிறுத்தச் சொல்லவும்.

Tuesday, July 18, 2006 1:55:00 PM  
Blogger Nakkiran said...

//...(மருத்துவ குடிதாங்கி)" //

அல்ல.... மருத்துவர்.. தமிழ் குடிதாங்கி...

Tuesday, July 18, 2006 1:57:00 PM  
Blogger மயிலாடுதுறை சிவா said...

சரி நக்கீரன்

தமிழ் குடிந்தாங்கி - அவரசத்தில் மாறி விட்டது.

தமிழ்த் திரை உலகில் ஆங்கிலத்தில் பேர்
வைக்கும் நம் ஆட்களுக்கு ராமதாசு போல் ஆள்
தேவைதான்...

மயிலாடுதுறை சிவா...

Tuesday, July 18, 2006 2:43:00 PM  
Blogger -L-L-D-a-s-u said...

//அவர், அவருடைய மகன், அவருக்கு பிறகு அவர் பேரன் குரல் //

ஏன் கொள்ளுப்பேரனை விட்டுவிட்டார் .. பேரன் குரல் கொடுப்பது வரை ஈழப்பிரச்சினை இருக்கவேண்டுமா என்ன? இதற்கு கைதட்டல் வேறா?

உங்கள் ஊரில் ஈழத்தமிழர் மிக அதிகமோ? வருகிறவர்களெல்லாம் (மருத்துவரை மட்டும் சொல்லவில்லை ) கண்ணீர் விடுகிறார்களே , அதனால் கேட்கிறேன். அல்லது தமிழ்னாடு தாண்டினால் மற்ற தமிழரெல்லாம் ஈழத்தமிழர் என்று நினைக்கிறார்களா? சோழியன் குடுமி சும்மா ஆடாதாமே ?

Tuesday, July 18, 2006 4:53:00 PM  
Blogger மயிலாடுதுறை சிவா said...

தாசு

ஈழ மக்களின் கண்ணீர் கதை உங்களுக்கு எப்படி
புரியும்?

உங்களது அப்பாவும், அம்மாவும், அக்கா தங்கையும் போரில் இழந்தால் அதன் உணர்வு புரியும்.

மயிலாடுதுறை சிவா...

Tuesday, July 18, 2006 9:14:00 PM  
Blogger வெற்றி said...

srinidhi,

/In TamilNadu you will discriminate
against some Tamils in the name of caste based reservations and try to deny opportunities to the so called forward castes/

உங்களின் கருத்துக்கள் மிகவும் நியாயமானதுதான். சாதி, மத பேதமற்ற தமிழினமாக நம் இனத்தைக் கட்டியெழுப்ப வேண்டுமென்பது தான் என் கனவும். இந்தச் சாதி வேற்றுமைகள் தமிழினத்தின் பண்பல்ல. பல ஆயிரம் வருடங்களுக்கு முன்னர் வந்தவர்கள் எம்மை அடக்கியாள்வதற்காக எம்மீது திணித்த ஒன்று. ஆனால் இன்று நாமே அந்த சாதி எனும் பேயைத் தூக்கிப்பிடித்துக் கொண்டு எம் சகோதர சகோதரிகளையே பிரித்துப் பார்க்கிறோம். இன்னும் எத்தனை காலத்திற்கு இந்த மடமைத்தனத்துக்குள் சிக்குண்டு இருக்கப்போகிறோம்?
யாதும் ஊரே யாவரும் கேளீர் என்று வாழ்வதல்லவா தமிழ்ப்பண்பு!

Tuesday, July 18, 2006 10:46:00 PM  
Blogger மயிலாடுதுறை சிவா said...

நன்றி ஸ்ரீநிதி

மயிலாடுதுறை சிவா...

Wednesday, July 19, 2006 5:13:00 AM  
Blogger -L-L-D-a-s-u said...

ஆஹா நன்றாக திசைமாற்றிவிட்டீர்கள் .. முடிந்தால் .. மூளை என்று ஒன்று இருந்தால் , தமிழ் படிக்கத்தெரியுமென்றால் , திருப்பி படித்து பாருங்கள்..

நான் ஈழ பிரச்சினை சீக்கிரம் முடிந்துவிடவேண்டும் என்றுதான் எழுதியுள்ளேன் ..சோழியன் என்று குறிப்பிட்டதும் இங்கு எல்லாவற்றையும் பொத்திக்கொணடு , வெளிநாட்டுக்கு போய் வாய்கிழிய பேசும் அரசியல்வாதிகளைப் பற்றிதான் .

Wednesday, July 19, 2006 5:26:00 AM  
Blogger ரவி ஸ்ரீநிவாஸ் said...

What did he do in Kandadevi issue and elections in Keeripatti,Pappapatti.Where was the solidarity with dalits in these issues.DPI had filed a case in the court so that the panchayts are not dereserved.Even after two months the govt. has done nothing
in this issue.In Kandadevi they prevented Dr.Krishnaswamy and Thirumavalavan from entering that
place.They stage managed a show with 26 dalits joining in pulling
the temple car. So all the talk about tamil unity is an eyewash.

Wednesday, July 19, 2006 6:44:00 AM  
Blogger Pot"tea" kadai said...

சிவா,
பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி!

Wednesday, July 19, 2006 4:51:00 PM  
Blogger மயிலாடுதுறை சிவா said...

தாசு

ஈழப் பிரச்சினை சீக்கரம் முடிவிற்கு வந்தால் எல்லோருக்கும் நலமே.

உங்கள் அளவிற்கு எனக்கு அறிவு மற்றும் மூளை
இல்லை என்பதை தாழ்மையோடு ஓத்துக் கொள்கிறேன்.

மயிலாடுதுறை சிவா...

Wednesday, July 19, 2006 5:13:00 PM  
Blogger மயிலாடுதுறை சிவா said...

ரவி ஸ்ரீநீவாஸ்

கண்டதேவி பிரச்சினை நிச்சய்ம் தலித் மக்களுக்கு
உரிமையும், நியாயமும் கிடைக்க வேண்டும். வருடா வருடம் திருமாவும். கிருஷ்ணசாமியும் தங்கள் எதிர்ப்புகளை காட்டாமல் எப்படி இருக்க முடியும்?

ராமாதாசு கண்டதேவிக்கு என்ன செய்தார் என்பது உண்மையில் எனக்கு தெரியவில்லை.

ஆனால் ராமதாசுக்கு திருமாமீது ஓர் பாசம் இருக்கிறது.

ரவி ஏன் நீங்கள் எப்பொழுதும் ஆங்கிலத்திலேயே எழுதுகிறீர்கள்?

நன்றி
மயிலாடுதுறை சிவா...

Wednesday, July 19, 2006 5:21:00 PM  
Blogger மயிலாடுதுறை சிவா said...

நன்றி பொட்டி கடை...

பாலா எனக்கு எந்த பின்னூட்டும் எதுவும் வரவில்லையே...

மயிலாடுதுறை சிவா...

Wednesday, July 19, 2006 5:22:00 PM  

Post a Comment

<< Home

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது