அறிஞர் அண்ணா பிறந்த தினம் (செப் 15)
* திராவிட இயக்கத்தின் தூணாக விளங்கியது.
* "தமிழ்நாடு" என்று நம் மாநிலத்திற்கு பெயர் சூட்டியது.
* சுயமரியாதைத் திருமணத்திற்கு சட்ட அங்கீகாரம் வாங்கி தந்தது.
* முதன் முதலில் ஏழைகளுக்கு "படியரசி" வழங்கியது.
* நம் அன்னை தமிழில் சிறப்பாக உவமைகளோடு உரையாற்றியது.
* உன் கட்சி வேட்பாளர் "காமராசரை" தோற்க அடித்த பொழுது வருந்தியது.
* கடவுள் மறுப்பு கோட்பாட்டில் வளர்ந்தது.
* பெரியாரின் உண்மையான சீடனாக இருந்து, நீ முதல் அமைச்சர் ஆனவுடன் பெரியாருக்கு காணிக்கை ஆக்கியது.
* பிறர் கருத்துக்கு பெரும் மதிப்பு கொடுத்த பண்பாக இருந்தது.
இப்படி எத்தனை எத்தனை பண்புகள் உன்னிடம் பாராட்ட...
அண்ணாவின் புகழ் ஓங்குக!!!
நன்றி
மயிலாடுதுறை சிவா...
3 Comments:
பதிவுக்கு நன்றி
சிவா,
உலகில் வாழும் தமிழர்கள் அனைவரும் நன்றியுணர்வுடன் நினைவு கூரப்பட வேண்டிய உன்னதமான தலைவனின் பிறந்தநாள் தின நினைவுகூறல் பதிவுக்கு மிக்க நன்றி.
இருண்டு கிடந்த தமிழகத்திற்கு ஒளி தந்த ஒப்பற்ற தலைவன்.
இனமான உணர்வில்லாதிருந்த தமிழினித்திற்கு தமிழ்மான உணர்வூட்டிய பெருந்தகை.
எதிரியைக் கூட பண்போடு மதித்து நடந்த மாந்தருள் மாணிக்கம்.
"மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணமுண்டு" என நடிகர்திலகத்தைப் பாராட்டியவர்.
"ஈழத்தமிழர்கள் விடும் கண்ணீரால்தான் வங்கக் கடலே உப்பாகக் கசக்கிறது" என தமிழர்கள் படும் வேதனைகண்டு மனம் துடித்தவர்.
பெருந்தலைவர் காமராஜர், அறிஞர் அண்ணா போன்றோருக்குப் பின் தமிழகம் ஒரு சிறந்த தலைவரைப் பெறவில்லை என்பதுதான் என் எண்ணம்.
ஈழத்திலே கூட தமிழர்கள் தமது உரிமைகளுக்காக போராடத் துவங்க அண்ணாவின் பாதிப்பும் ஒரு உந்துசத்தியென வரலாறறிந்தவர்கள் அறிவார்கள்.
வாழ்க அண்ணாவின் புகழ்.
சாதி, மத பேதமற்ற சமதர்ம தமிழகம் என்பதே அவரின் கனவு. அக் கனவு நிறைவேற அனைவரும் இந் நன்னாளில் உறுதி எடுத்துச் செயற்படுவோம்.
மிக்க நன்றி சிவபாலன்.
வெற்றி உங்களின் தெளிவான பதிவிற்கு நன்றிகள் பல.
நிச்சயம் அண்ணா கனவு நிறைவேற
பாடுபடுவோம்.
மயிலாடுதுறை சிவா...
Post a Comment
<< Home