பேராசிரியர் அன்பழகன் - அம்மா செயலலிதா
முன்னாள் நடிகையும், முதல்வரும் ஆன செயலலிதா இன்றைய அறிக்கை ஓன்றில் திமுக பொதுச் செயலாளர் மற்றும் நிதி அமைச்சரை உதவி போராசிரியர் என்று சொல்லி, அவர் என்றுமே போராசிரியராக இருந்தது இல்லை, ஆகையால் எல்லோரும் சொல்லுகிறப் படி நான் அவரை அப்படி கூப்பிட முடியாது என்று சொல்லி உள்ளார்.மானமிகு போராசிரியர் அதனை நிச்சயம் விளக்குவார் என்று நம்புகிறேன்.
அதே சமயத்தில் அதிமுக விசுவாசிகள் செயலலிதாவை "அம்மா" என்று அழைகிறார்களே அவர் எப்பொழுது "அம்மா" ஆனார் என்பதை விளக்குவாரா? அது மட்டும் அல்ல "செல்வி" என்று சொல்கிறார்களே, உண்மையில் அவருக்கு வாழ்க்கையில் திருமணம் ஆனாதா அல்லது திருமணமே நடக்கவில்லையா? என்பதையும் அவர் நாட்டு மக்களுக்கு தெரிவித்தால் நல்லது...
மக்களால் ஓரம்கட்டப் பட்ட செயலலிதா பையனூர் பங்களாவில் வாடகைக்கு இருக்கிறார் என்பது அவர் ஆட்சியில் இருந்த பொழுது யாருக்காவது தெரியுமா?
நன்றி
மயிலாடுதுறை சிவா...
11 Comments:
ஜெயலலிதாவ அம்மன்னோ செல்வின்னோ புரட்சி தலைவின்னோ இன்னும் என்ன என்னவோ சொல்றாங்களே அப்படியெல்லாம் சொல்றது பிடிக்காம, வெறுமே ஜெயலலிதான்னு மட்டும்தான் விளிக்கிறது என்னோட வழக்கம்... அப்படியே கருணாநிதி, திருமாவளவன், ராமதாஸ்னு யாரா இருந்தாலும் அடைமொழி அடிபணிவது எல்லாம் இல்லாம வெறுமனே பெயர் சொல்லி எழுதறது பேசுவதுதான்... ஏன், தமிழ்நாட்டுல ஒரு நாய்க்கும் உண்மையிலேயே "தலைவன்" தகுதி இல்லைங்கிறது "என்னோட" கருத்துங்கிறதால யாரையும் மனசரிஞ்சி தலைவான்னு கூட சொல்றதில்ல....
ஆனா, பொதுமக்கள் சில பேரு, என்னையும் சேத்துதான், பொதுவில நிறைய பேர அம்மான்னு சொல்லக்கேட்டிருக்கேன்... பஸ்ல ரெயில்ல போகும்போது, "ஏம்மா கொஞ்சம் முன்ன போங்க... அந்தம்மாவ கொஞ்சம் இங்க வர சொல்லுங்க" இப்படி.... "வாங்கம்மா, என்னம்மா எப்படி இருக்கீங்க" அப்படீன்னு மக்கள் பேசும்போது எல்லாம் அவங்க தாய்மை தகுதிய அறியும் நோக்கில் விர்ஜினிட்டி சர்டிபிகேட் வாங்கி பாத்துட்டுதான் பேசுறாங்கன்னு எனக்கு தோணாம போயிடுச்சி... ஆனா இதே பொதுமக்கள் யாரும் சும்மாவாச்சிக்கும் ஒருத்தர பாத்து தொழில்முறை குறியீடுகளான "பேராசிரியர், பைலட், பஸ் கண்டக்டர்" அப்படீன்னு எல்லாம் சொல்லி நான் பார்த்தது இல்ல... நீங்க பாத்து இருக்கலாம், ஆனா அப்படி சொல்றவங்கள "மென்டல்"னு சொல்றவங்கள நான் பாத்துருக்கேன்...
// "செல்வி" என்று சொல்கிறார்களே, உண்மையில் அவருக்கு வாழ்க்கையில் திருமணம் ஆனாதா அல்லது திருமணமே நடக்கவில்லையா? என்பதையும் அவர் நாட்டு மக்களுக்கு தெரிவித்தால் நல்லது // ஏன் நன்னிலம் நடராசன், தீப்பொறி ஆறுமுகம், வெற்றி கொண்டான் ரேஞ்சுல பச்சையா கேக்க வேண்டியதுதான.. என்னத்துக்கு கண்ணிய போர்வை... நாமெல்லாம் விளக்கெண்ணையில வெண்டிக்காய் பொறிக்கிறதோட நிறுத்திக்கணும்... அப்படி இல்லையின்னா யாராவது குஞ்சு குளுவானுங்க வந்து, மயிலாடுதுறை சிவா அவர்களே, தொல். திருமா வை அண்ணன்னு போன பதிவு உட்பட எப்பவும் சொல்றீங்களே.. அவர் உங்க கூட பிறந்தவரா? இல்ல நீங்க அவர் கூட பிறந்தவரா? அம்பேத்கார் வழி தோன்றல்னா என்ன? திருமணம் கூட செய்யாம தலித் எழுச்சிக்காக போராடுறாருன்னு மாரு தட்டிக்கிறீங்களே, அவரு சத்தியமா திருமணம் (இந்து முறைப்படியோ, காந்தர்வ முறைப்படியோ) செஞ்சிக்கலையின்னு நாட்டு மக்களுக்கு தெரிவிக்க முடியுமா... அவருக்கு குழந்தை இருக்கிறதா இல்லையா (திருமணமே செய்யாதவருகிட்ட குழந்தைய பத்தி கேக்கலாமான்னு கோக்குமாக்கா கேட்டு சிரிக்க வைக்காதீங்க) என்பதையும் நாட்டு மக்களுக்கு தெரியப்படுத்தவும்... அப்புறம் கருணாநிதி ஆரம்பிச்சி ஏகப்பட்ட பேருக்கு சொல்லப்படுற வார்த்தைகளுக்கு உள் ஆராய்ச்சி பண்ணலாம் போல ஆசையா இருக்கு.. ஆனா (அடிவருடின்னா என்னன்னு விளக்கம் கொடுக்கிற அடிவருடி இல்லாம) உங்க கருத்து என்னன்னு தெரிஞ்சிக்கிட்டு பண்ணலாமின்னு வெயிட் பண்றோம்னு எதையாவது எளுதுவாய்ங்க... அப்ப என்ன பண்ணுவீங்க?
இத விட அண்ணன் அன்புமனி சொன்னது தான் டாப் (உடனே யாரு உங்க கூடப் பொறந்தவரான்னு முகமூடி கேக்கப் போறார்) எனக்கு தகுதி இல்லை என்று சொல்லும் இவர் ஒரு முன்னாள் நடிகை என்பதை தவிற எந்த தகுதியும் இல்லாமல் முதல்வராகும் போது, மருத்துவர் சுகாதார அமைச்சர் ஆகலாம்"
வயதால் பெரியவர்கள் வயதால் சிறியவர்களை --> பாப்பா,தம்பி என்று கூப்பிடுவது நடைமுறை.
வயதால் சிறியவர்கள் வயதால் பெரியவர்களை -->அண்ணா(அண்ணே),அக்கா,அம்மா,அய்யா,தாத்தா,பாட்டி,ஆண்ட்டி,அங்கிள்...கூப்பிடுவது நடைமுறை.
இதில் சொன்ன வழக்கங்கள் எல்லாம் ஒரு அழைப்பு (addressing ) முறையே தவிர இதற்கெல்லாம் உண்மையான உறவு முறைகளைத் தேட வேண்டாம்.
சில தாத்தா, பாட்டிகள் சிறியவர்களை --> "அய்யா சாமி " (அய்யா சாமி இந்த பஸ் எங்க போகுது?) என்று அழைப்பார்கள். அதற்காக அந்த சிறுவன் என்ன சாமியா? கிராமத்தில் எல்லா போலீஸ்காரர்களையும் அவர்களின் பதவி தெரியாமல் "ஏட்டையா" என்று அழைப்பார்கள். கவுண்டமணி ஒரு படத்தில் SI ஒருவரை ஏட்டு என்று அழைத்து வாங்கிக் கட்டிக் கொள்வார்.
பதவிகளைக் குறிக்கும் அடை மொழிகள் அனைவருக்கும் பொதுவானதல்ல.அதை வகிப்பவர்களுக்கு மட்டுமே பொறுந்தும். ஆரம்பப்பள்ளி ஆசிரியரை "பேராசிரியர்" என்று அழைக்க முடியாது.பதவி முடிந்தாலும் "முன்னாள் ______" என்று பழைய பதவியுடனேயே காலம் தள்ளுவார்கள் . எனது அப்பா ஓய்வு பெற்றுவிட்ட போதும் கிராமத்தில் இன்னும் அவரின் பழைய பதவியைச் சொல்லியே அழைப்பார்கள்.
நிற்க...இவை எல்லாம் சாதாரண மக்களுக்கு
தமிழக அரசியல்,சினிமா,ஆன்மிக வாதிகளின் அடைமொழிகளுக்கு விளக்கம் தேடுவது வீண் வேலை.
சாதாரணமாக அனைவரையும் நாம் ஏதோ ஒரு உறவு முறை வைத்துதான் அழைப்போம். அது சில நேரங்களில் ஆசிரியர், பேராசிரியர் என்று தொழில் சார்ந்தோ அல்லது அண்ணன், அக்கா, தலைவன், அம்மா என்று உறவு வைத்தோ அழைப்போம்.
//செயலலிதா இன்றைய அறிக்கை ஓன்றில் திமுக பொதுச் செயலாளர் மற்றும் நிதி அமைச்சரை உதவி போராசிரியர் என்று சொல்லி, அவர் என்றுமே போராசிரியராக இருந்தது இல்லை, ஆகையால் எல்லோரும் சொல்லுகிறப் படி நான் அவரை அப்படி கூப்பிட முடியாது என்று சொல்லி உள்ளார்.மானமிகு போராசிரியர் அதனை நிச்சயம் விளக்குவார் என்று நம்புகிறேன்.//
நம்புவோம். அப்படியே ஒரு வேளை அவர் உதவி பேராசிரியராக இருந்திருந்தால், அப்படி அழைப்பது ஒன்றும் தவறாக தெரியவில்லை.
ஆனால் அம்மா என்று ஒரு சாராரால் அழைக்கப்படும் செல்வி செயலலிதா, அதற்குரிய பண்புகளோடு இருக்கிறாரா அல்லது விளக்குவாரா?
முகமூடி sir,
//பஸ்ல ரெயில்ல போகும்போது, "ஏம்மா கொஞ்சம் முன்ன போங்க... அந்தம்மாவ கொஞ்சம் இங்க வர சொல்லுங்க" இப்படி.... "வாங்கம்மா, என்னம்மா எப்படி இருக்கீங்க" அப்படீன்னு மக்கள் பேசும்போது எல்லாம் அவங்க தாய்மை தகுதிய அறியும் நோக்கில் விர்ஜினிட்டி சர்டிபிகேட் வாங்கி பாத்துட்டுதான் பேசுறாங்கன்னு எனக்கு தோணாம போயிடுச்சி... ஆனா இதே பொதுமக்கள் யாரும் சும்மாவாச்சிக்கும் ஒருத்தர பாத்து தொழில்முறை குறியீடுகளான "பேராசிரியர், பைலட், பஸ் கண்டக்டர்" அப்படீன்னு எல்லாம் சொல்லி நான் பார்த்தது இல்ல... நீங்க பாத்து இருக்கலாம், ஆனா அப்படி சொல்றவங்கள "மென்டல்"னு சொல்றவங்கள நான் பாத்துருக்கேன்... //
பேருந்தில் பயணம் செய்யும் போது கண்டக்டர் டிக்கெட் கொடுங்கள் என்று கேட்பீர்களா? அல்லது அப்பா டிக்கெட் கொடுங்கள் என்று கேட்பீர்களா?
ஆசிரியரிடம் அய்யா/Sir எனக்கு சந்தேகம் என்று கேட்பிர்களா? அல்லது அப்பா/அம்மா எனக்கு சந்தேகம் என்று கேட்பீர்களா?
//ஆனா அப்படி சொல்றவங்கள "மென்டல்"னு சொல்றவங்கள நான் பாத்துருக்கேன்... //
உங்களுக்கும் இதை படிப்பவர்களுக்கும் தெரியும், யாரை "மென்டல்"னு சொல்லுவாங்கன்னு.... :-)
நீண்ட இடைவெளிக்கு பிறகு
முகமூடியின் பின்னூட்டம்...
என்னைப் பொறுத்தவரை போராசிரியர் ஓர் கண்ணியமிக்க அரசியல்வாதி...
அவரை குறைச் சொல்லும் தகுதி முன்னாள் நடிகைக்கு இல்லை என்பது என் வாதம்...
நன்றி
மயிலாடுதுறை சிவா...
மிக்க நன்றி வணக்கத்துடன், மகேந்திரன், கல்வெட்டு...
மாயுரம் சரவணன் வருக!
எங்கள் மயிலாடுதுறை மாஃபியா கும்பலில் ஐக்கியமாக வரவேற்ப்புகள் பல...
முகமூடி கூட மயிலாடுதுறை என்று கேள்வி...மிக்க மகிழ்ச்சியே...
நன்றிகள் பல...
மயிலாடுதுறை சிவா....
சிவா,
இது ஜெயலலிதாவின் விதண்டாவாதம். அமைச்சரை அதிகாரப்பூர்வப் பட்டத்தோடு அழைத்தாலே போதும் (அதாவது "மாண்புமிகு நிதி அமைச்சர்"). பெயரைச் சொல்லித்தான் அழைப்பதென்றால் மாண்புமிகு அல்லது திரு.அன்பழகன் என்றோ அழைத்துவிட்டுப் போகலாம். பேராசிரியர் என்று அழைக்கவேண்டும் என்று யாராவது வற்புறுத்தினார்களா என்று தெரியவில்லை.
நிற்க, இந்த விதண்டாவாதத்துக்கு உங்கள் எதிர்வினையும் மிகையானது. எப்போது அம்மா ஆனார், திருமணம் ஆனதா என்று கேட்பதெல்லாம் கிசுகிசு பத்திரிகைகளின் தரத்துக்கு உள்ளது. அதற்கு முகமூடியின் எதிர்வினையும் சூப்பர்.
அன்பழகன் அரசியலுக்கு வருமுன் பச்சையப்பன் கல்லூரியின் தமிழ்த்துறையில் உதவிப் பேராசிரியராகத் தான் இருந்தார். தொடர்ந்திருந்தால் பேராசியராகி ஓய்வும் பெற்றிருப்பார். இங்கு பேராசிரியர் என்பது பொதுவான தொழில். உதவி, இணை என்பதெல்லாம் வெவ்வேறு நிலைகளைக் குறிப்பது. பள்ளி ஆசிரியர்களிலும், தலைமை ஆசிரியர் உண்டு. மற்றவர்கள் எல்லாம் உதவி ஆசிரியர்கள் தாம். ஆசிரியர் பதவிப் பெயர்கள் higher grade assistant (elementary), secondary grade assistant (middle), BT assistant(high), PG assistant(higher secondary) என்று தான் அழைக்கப்படுகின்றன. அதனால் இவர்கள் ஆசிரியர்கள் இல்லை என்பதாகிவிடாது. ஆசிரியர்/வாத்தியார் என்று அழைப்பது தவறுமில்லை. அப்படித்தான் அழைக்கப்படுகிறார்கள்.
அதேபோல் கல்லூரி/பல்கலைக்கழக ஆசிரியர்கள் பேராசிரியர்கள் தாம். தொழில் (profession) - பேராசிரியர்
பதவிப் பெயர் (designation) - உதவிப் பேராசிரியர்.
அவ்வளவு தான்.
இதை ஒரு மேதாவித்தனமாக கண்டுபிடிப்பாக 'அவர் பேராசிரியராக இருந்ததில்லை. உதவிப்பேராசிரியராகத் தான் இருந்தார்' என்பது நகைச்சுவை.
அன்பழகன் பணியிலிருந்து விலகியபோது உதவிப் பேராசிரியராக இருந்தார் என்பதால் அவர் காலம் பூராவும் உதவிப் பேராசிரியராகவே இருந்திருப்பார் என்று எதிர்பார்ப்பது முட்டாள்தனமானது. ஒருவேளை IIT யில் வேண்டுமானால் சிலரை மட்டும் ஓய்வு பெறும்வரை பதவி உயர்வு கொடுக்காமல் வைத்திருப்பார்களோ என்னவோ!
மிக்க நன்றி சுமு அண்ணன்...
செயலலிதா ஆணவம், திமிறு, விதாண்டவாதம் அனைத்தும் தமிழ் மக்கள் அறிவார்கள்...
நன்றி
மயிலாடுதுறை சிவா...
சமீபத்தில் (அதாவது 10 வருடங்களுக்கு முன்) தாய்லாந்தில் இருந்து வரும் ஒரு ஆங்கில பத்திரிக்கையில் தொடர்ந்து ஆங்கில சொற்களை அறிமுகப்படுத்தி வந்தார்கள். அதில் ஒரு முறை "keep" எனற வார்த்தையை பற்றி எழுதியிருந்தார்கள். அதற்கு example ஆக பயன்படுத்தப்பட்டவர்கள் மாண்புமிகு புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களும், இந்தப் பாப்பாத்தியும் ஆவார்கள். அப்படிப்பட்டது தன்னுடைய mark sheet விவகாரம் சந்தி சிரித்ததும் இப்படியெல்லாம் புலம்புகின்றது. அதை சுட்டிக்காட்டியதும் அரிப்பெடுத்த சிலர் இங்கே வந்து வார்த்தை விளையாட்டு ஆடுவது வழக்கமான ஒன்றே.
இத விட அண்ணன் அன்புமனி சொன்னது
namma saathi, namma sontham, namma ratham
Post a Comment
<< Home