Thursday, July 20, 2006

மத்திய அமைச்சர் அன்புமணியின் மறுப்பக்கம்....

வாசிங்டன்.
மத்திய அமைச்சர் அன்பு மணியைப் பற்றி நமக்கு என்ன தெரியும்? அவருடைய கட்சியில் அவரை "சின்ன அய்யா" என்று கூறுவார்கள். ராஜ்ய சபா உறுப்பினராகி அமைச்சர் ஆனவர், பசுமை தாயகம் என்ற அமைப்பை வைத்து இருப்பவர் என்று தானே நமக்குபரிச்சயம், ஆனால் எல்லா வற்றிக்கும் மேலாக அவர் சுகாதரத் துறைக்கு முழு தகுதியான மந்திரி என்பதும், இதற்கு முன்னாள் இருந்த எந்த சுகாதரத் துறை மந்திரியை விட அவருக்கு பல மடங்கு விசயம் தெரியும் என்பதை அவரின் அமெரிக்க சுற்றுப் பயணத்தின் பொழுது தெரிந்து கொண்டது உங்கள் கவனத்திற்கு கொண்டுவர விரும்புகிறேன்.

கடந்த 3 வாரங்களில் நடந்த சுவையான பல சம்பவங்களை உங்களுக்கு தெரியப் படுத்துவது என் கடமை. காரணம் நம் தமிழ் பத்திரிக்கைகள் நம் தமிழரின் பெருமைகளை சாதிக்கு அப்பாற்பட்டு, மதத்திற்கு அப்பாற்பட்டு, அரசியலுக்கு அப்பாற்பட்டு கடைக் கொடியில் உள்ள தமிழனுக்கு செய்திகளை தருவது இல்லை. தமிழ்நாட்டில் உள்ள மயிலாடுதுறை அருகே உள்ள பூம்புகார் சட்டமன்ற தொகுதியில் உள்ள ஓர் சாராசரி மீன் பிடிக்கும் ஓர் தொழிலாளி மத்திய அமைச்சர் அன்பு மணியின் செயல் பாடுகளை தெரிந்து கொள்ள ஆசைப் பட்டால் அவனுக்கு தெரிய படுத்துவது நம் தமிழ்ப் பத்திரிக்கைகளின் கடமை.

அமெரிக்கா முதல் நிகழ்ச்சி - மேரிலாந்து - John Hopkins University
====================================================

மூன்று வாரங்களுக்கு முன்பு

அமைச்சர் அன்புமணி John Hopkins University School of Medicineல்ஓர் கருத்து அரங்கிற்கு வந்து இருந்து, இந்தியாவில் எயிட்ஸ் விழிப்புணர்வுப் பற்றி பேசினார். கிட்டதட்ட 45 நிமிடங்கள் அழகு ஆங்கிலத்தில், தெளிவாக, அமைதியாக எந்த ஓர் ஆர்பாட்டம் இல்லாமலும் உரையாற்றினார். அதாவது தமிழகத்தில் இருந்து வந்த ஓர் மத்திய அமைச்சர் அழகு ஆங்கிலத்தில் எல்லோருக்கும் புரியும் வண்ணம், மத்திய அமைச்சர் சிதம்பரத்திற்குப் பிறகு இவரைத்தான் நான் பார்க்கிறேன். அவருடைய பேச்சின் பொழுது ஒரு முறை கூட எந்த குறிப்புகளையும் அவர் சரி பார்த்துக் கொள்ளவில்லை. அதுமட்டும் அல்ல, அனைத்து புள்ளி விவரங்களையும் விரல் நுனியில் வைத்து இருந்தார். சில சில இடங்களில் நகைச் சுவையாகவும் பேசினார். அங்கு வந்து இருந்த அனைத்து மக்களும் நிரம்ப படித்தவர்கள், மருத்துவர்கள், மருத்துவ விஞ்ஞானிகள், மாணவர்கள் அனைவரும் அவருடைய பேச்சை மிக ரசித்தார்கள். மொத்ததில் அந்த 3 மணி நேரங்கள் போனதே தெரியவில்லை. ஓர் தமிழனாக அன்பு மணியின் செயல் பாடுகளில் பெருமைப் பட்டு கொள்ள நிறைய இருக்கிறது.

எனது சக நண்பர்கள் பலர் மெத்த படித்தவர்கள், அதாவது இந்தியாவில் முனைவர் பட்டம் பெற்று விட்டு பின்னர் அமெரிக்காவிலும் படித்தவர்கள் பலர், வாரிசு அரசியலையும், சாதியை முன் வைத்து (தலித் தவிர)அரசியல் பண்ணுவதை கடுமையாக விமர்சனம் பண்ணும் பலர் மத்திய அமைச்சர் அன்பு மணியின் பேச்சை ரசித்துவிட்டு, அய்யா இராமதாசு தன்னுடைய மகனைப் பற்றி பெருமைப் பட்டு கொள்ள முழுத் தகுதி உண்டு என சொன்னார்கள். நம்முடைய பிரதமர் மன்மோகன் அவர்கள் அமைச்சரைப் பற்றி சொல்லும்பொழுது, "Our country should be proud of Dr Anbu Mani" என்றார்.

அமெரிக்கா இரண்டாவது நிகழ்ச்சி - நியூயார்க் - வட அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவை
===============================================================
இரண்டு வாரங்களுக்கு முன்பு...

Free Image Hosting at www.ImageShack.us

இந்த ஆண்டு நடந்த தமிழ்ச் சங்க பேரவைக்கு மத்திய அமைச்சர் அன்பு மணி கலந்துக் கொண்டு விழாவை சிறப்பித்தார். விழாவில் அன்பு மணிக்கு நல்ல வரவேற்ப்பும் கொடுத்தார்கள். அன்பு மணிபேசும் பொழுது "ஈழ மக்களுக்கு நிச்சயம் நல்ல விடிவு ஏற்படும்" என்று சொன்னார். அது மட்டும் அல்ல தமிழகத்தில் ஈழ் மக்களின் பிரச்சினைகளை பேச பயந்த காலத்தில் எனது அப்பா, அய்யா இராமதாசு எங்களை பேசச் சொல்லி வளர்த்ததாக நினைவு கூர்ந்தார். இந்தியாவிற்கும் ஏன் தமிழ்நாட்டிற்கும் மத்திய சுகாதரத் துறை எண்ணற்ற வளமையான திட்டங்களை கொண்டு வர நிச்சயம்பாடு படும் என்றார். சாரச்சரி இந்தியனுக்கும் அடிப்படை மருத்துவ வசதிகள் செய்து தர நிச்சயம் ஏற்பாடு பண்ணுவேன் என்றார். விழாவிற்கு வந்து இருந்த வைரமுத்து, சரத்குமார், ராதிகா எல்லோரும் அன்பு மணியை பாராட்டி பேசினார்கள். தமிழ்நாட்டு இளைஞராக, மத்திய அமைச்சர் ஆகி தில்லியை கலக்குவதாக அனைவரும் பாராட்டி பேசினார்கள்.

அமெரிக்கா முன்றாவது நிகழ்ச்சி - வாசிங்டன் - லூதர் எல் டெரி விருது
======================================================
ஒரு வாரத்திற்கு முன்பு....

Image Hosted by ImageShack.us

இந்தியாவில் புகையிலைக்கு எதிராக கடுமையான சட்டங்கள் மூலம் மக்களின் நல் வாழ்விற்கு பங்கு அளித்த மத்திய சுகாதரத் துறை அமைச்சர் அன்பு மணிக்கு அமெரிக்க புற்று நோய் நிறுவனம்"லூதர் எல் டெரி" என்று விருதை வழங்கி கெளரவித்தது. உலக அளவில் கிட்டதட்ட 7 அல்லது 8பேர்கள் மட்டுமே இந்த விருதைப் பெற்றார்கள். அதுவும் நம் தமிழ் நாட்டு மத்திய அமைச்சர் விருதுப் பெற்றது மிக மகிழ்ச்சியான விசயம். அந்த விழாவிலும் அமைச்சர் அன்புமணி எந்த குறிப்பும் இல்லாமல் உரையாற்றினார். விழா வாசிங்டன்னில் வரலாற்று புகழ் மிக்க Convention Centerல் நடைப் பெற்றது. அந்த விழாவிற்கு அன்புமணியின் தந்தை மருத்துவர் அய்யா இராமதாசு வந்து இருந்தார்கள். வாசிங்டன் தமிழ்ர்கள் சார்பாக இருவருக்கும் மிகச் சிறப்பான வரவேற்ப்பை செய்ய தமிழ்ச் சங்கம் தயாராக இருந்தது. ஆனால் நேரம் குறைவான காரணத்தால் அந்த வரவேற்ப்பை நியுசெர்சியில் செய்தார்கள். இந்த விருதுப் பற்றி தினந்தந்தியில் செய்தி வந்தது. பாராட்டுகள் பல.

நன்றி
மயிலாடுதுறை சிவா...

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

43 Comments:

Blogger SnackDragon said...

சிவா, செய்திகளுக்கு நன்றி. வழக்கம் போல பிரபல பத்திரிகளைல் இந்தச் செய்திகள் வரவில்லை.

Thursday, July 20, 2006 10:57:00 AM  
Blogger VSK said...

Good one!
Congratulations!

கிட்டத்தட்ட அனைத்து அரசியல்வாதிகளைப் பற்றியும் இப்படிச் சொல்லமுடியும் என்பதே உண்மை நிலை, நான் கண்டவரை.
இவரும் அப்படி இருக்கிறார் என அறிந்து மகிழ்ச்சி.

Thursday, July 20, 2006 11:04:00 AM  
Blogger மயிலாடுதுறை சிவா said...

நன்றி கார்த்திக்

ஸீ நீங்கள் சொல்வது போல நானும் எங்கோ
செய்தி படித்தாக ஞாபகம்

மயிலாடுதுறை சிவா...

Thursday, July 20, 2006 11:29:00 AM  
Blogger Nakkiran said...

//இந்தியாவில் புகையிலைக்கு எதிராக கடுமையான சட்டங்கள் மூலம் மக்களின் நல் வாழ்விற்கு பங்கு அளித்த மத்திய சுகாதரத் துறை அமைச்சர் அன்பு மணிக்கு///

என்ன சட்டம் கொண்டு வந்தார்..

சினிமாவில் புகைபிடிக்கும் காட்சி இருக்க கூடாது என்பதா????

இது புகையிலைக்கு எதிரான சட்டமில்லை... சினிமாவிற்கு எதிரான சட்டம்...

Thursday, July 20, 2006 1:11:00 PM  
Blogger Thangamani said...

சிவா செய்திகளுக்கு நன்றி.

ஸ்ரிநிதி:

அமைச்சகத்துக்கு விருது வழங்கப்பட்டாலும், ஒவ்வொரு சுகாதாரத் துறை அமைச்சரும் வின் அழுத்தம், தேசிய முனைப்புகள் மற்றும் தனிப்பட்ட விருப்பங்கள் இவைகள் சார்ந்தே இயங்குகிறார்கள். இதில் புகையிலைக்கு எதிராக வின் அழுத்தம் இப்போது இருப்பதாக அறிகிறேன். தவிர அமைச்சரின் தனிப்பட்ட ஆர்வமும் இதற்குக் காரணம். எனவே இவ்விருதுக்கு அவரது அளவில் தகுதியானவர் என்றே நினைக்கிறேன்.

நிற்க. தவறான தகவல்களை வழங்கியதாக நீங்கள் குறிப்பிடும் செய்தி குறித்து ஏதாவது பத்திரிக்கை, அல்லது துறை சார்ந்த சுட்டிகள் கொடுக்கமுடிந்தால் நல்லது. ஏனெனில் லல்லுபிரசாத் யாதவ் பற்றி எப்படி கேவலமான மின்னஞ்சல்கள் கேலிகள், தகவல்கள் என்றபெயரில் அனுப்பி இரசித்து சிரித்துக்கொண்டார்கள் ஒருசாரார் என்பதை இது நினைவுபடுத்துகிறது.
நன்றி.

Thursday, July 20, 2006 1:16:00 PM  
Blogger Thangamani said...

சிவா செய்திகளுக்கு நன்றி.

ஸ்ரிநிதி:

அமைச்சகத்துக்கு விருது வழங்கப்பட்டாலும், ஒவ்வொரு சுகாதாரத் துறை அமைச்சரும் WHOவின் அழுத்தம், தேசிய முனைப்புகள் மற்றும் தனிப்பட்ட விருப்பங்கள் இவைகள் சார்ந்தே இயங்குகிறார்கள். இதில் புகையிலைக்கு எதிராக WHOவின் அழுத்தம் இப்போது இருப்பதாக அறிகிறேன். தவிர அமைச்சரின் தனிப்பட்ட ஆர்வமும் இதற்குக் காரணம். எனவே இவ்விருதுக்கு அவரது அளவில் தகுதியானவர் என்றே நினைக்கிறேன்.

நிற்க. தவறான தகவல்களை வழங்கியதாக நீங்கள் குறிப்பிடும் செய்தி குறித்து ஏதாவது பத்திரிக்கை, அல்லது துறை சார்ந்த சுட்டிகள் கொடுக்கமுடிந்தால் நல்லது. ஏனெனில் லல்லுபிரசாத் யாதவ் பற்றி எப்படி கேவலமான மின்னஞ்சல்கள் கேலிகள், தகவல்கள் என்றபெயரில் அனுப்பி இரசித்து சிரித்துக்கொண்டார்கள் ஒருசாரார் என்பதை இது நினைவுபடுத்துகிறது.
நன்றி.

(சிவா முந்தைய பின்னூட்டத்தை அழித்துவிடலாம். அதில் என்பதை குறிப்பிட மறந்துவிட்டேன்.)

Thursday, July 20, 2006 1:25:00 PM  
Blogger Srikanth Meenakshi said...

பெருமதிப்பிற்குரிய திரு சிவா அவர்களுக்கு,

வணக்கம். சிறப்பான தங்களது கட்டுரை எனது அகக்கண்களைத் திறந்தது.

ஒரே ஒரு சந்தேகம். உங்கள் கட்டுரையில்,

//இதற்கு முன்னாள் இருந்த எந்த சுகாதரத் துறை மந்திரியை விட அவருக்கு பல மடங்கு விசயம் தெரியும் என்பதை அவரின் அமெரிக்க சுற்றுப் பயணத்தின் பொழுது தெரிந்து கொண்டது //

என்று குறிப்பிட்டுள்ளீர்கள். இந்த முடிவுக்கு நீங்கள் வர ஊக்கியாக இருந்தவற்றைக் கூற இயலுமா?

Google-ஐத் துழாவாமல், அன்புமணிக்கு முன்னால் சுகாதார அமைச்சராக இருந்தவர் யாரென்று தங்களால் சொல்ல முடியுமா?

பணிவன்புடன்,

ஸ்ரீகாந்த்

Thursday, July 20, 2006 2:54:00 PM  
Blogger சீமாச்சு.. said...

அன்பு சிவா,
இதி சம்பந்தமான எனது பதிவு இங்கே..

அன்பு நண்பர் சிவா.. உங்கள் மேல் எனக்கு எந்த கோபமும் கிடையாது. நாமிருவரும் மயிலாடுதுறை தான்.. நாமிருவரும் சென்றவருடம் இதே நேரத்தில் மணிக்கணக்கில் உரையாடியிருக்கிறோம். தயவு செய்து இதை உங்களை நோக்கிய ஒரு தனிமனித தாக்குதலாக நினைக்காதீர்கள்.. இது உங்களை நோக்கியது அல்ல. இது என் மனதின் ஆதங்கம் மட்டுமே.


என்றென்றும் அன்புடன்,
சீமாச்சு...

Thursday, July 20, 2006 4:52:00 PM  
Blogger மயிலாடுதுறை சிவா said...

சாம்பார், சீரிகாந்த், நக்கீரன், கார்திக், தங்கமணி,
சீமாச்சு எல்லோருக்கும் நன்றிகள் பல.

Thursday, July 20, 2006 5:47:00 PM  
Blogger மயிலாடுதுறை சிவா said...

சீமாச்சு
உங்கள் மீது எனக்கு எந்த கோபமும் இல்லை.
நாம் இருவரும் ஓரே ஊர், ஆனால் நிறைய மாற்று
கருத்துள்ள நபர்கள்.

அன்பு மணி நகைச் சுவையாக பேசினார் என்று நான் சொல்ல வில்லை, அதாவது பேசும் பொழுது அவ்வொப்பது நகைச் சுவை கலப்பது ஓர் நல்ல விசயம் அதைத் தான் நான் குறிப்பிட்டேன்.

அன்பு மணி தன்னுடையத் துறையில் அவருக்கு நல்ல விசயங்கள் தெரிந்து இருக்கின்றன என்பதுதான் இங்கு முக்கியம்.

மயிலாடுதுறை சிவா...

Thursday, July 20, 2006 5:51:00 PM  
Blogger மயிலாடுதுறை சிவா said...

சீரிகாந்த்

உங்களுக்கு இதற்கு முன்னால் இருந்த சத்ருகின் சின்ஹா சுகாதரத் துறை அமைச்சர் பற்றி கேள்வி பட்டுள்ளீர்களா? அவரைவிட அன்பு மணிக்கு நிறைய தெரிந்துள்ளது என்றுதான் நான் குறிப்பிடுகிறேன்.

கடந்த 15 ஆண்டுகளில் சுகாதரத் துறை அமைச்சர் யார் சிறப்பாக ஆற்றினார் என்பது எனக்கு தெரிந்து யாரும் இல்லை, ஆனால் நம் தமிழ் நாட்டை சார்ந்த அன்பு மணி சிறப்பாகச் செயல் படுகிறார் என்பதுதான் என் கருத்து.

மயிலாடுதுறை சிவா...

Thursday, July 20, 2006 5:54:00 PM  
Blogger மயிலாடுதுறை சிவா said...

நக்கிரன் நீங்கள் சொல்வது சரி.

திரையில் புகைப் பிடிப்பதை தடை செய்வது நல்ல
விசயம்தானே?

அன்பு மணியிம் எண்ணம் புகையிலை பயன்பாட்டை குறைக்க பாடுபடுவது இதில் தவறு
எதுவும் இல்லேயே...

மயிலாடுதுறை சிவா...

Thursday, July 20, 2006 5:56:00 PM  
Blogger கருப்பு said...

தகவலுக்கு நன்றி சிவா.

குழலிக்கு நான்கு போத்தல் பிலிப்பாலை ஒரேநேரத்தில் அடித்தது போன்ற தெம்பு இந்நேரம் வந்திருக்கும்!

[பி;கு- :))புலிப்பால் என்பது என்னவென்று குழலியிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்!)

Thursday, July 20, 2006 6:08:00 PM  
Blogger துளசி கோபால் said...

கேள்வியை கேக்கறதுக்கு முன்னாலேயே ஒரு 'டிஸ்கி' போட்டுக்கறேன்.
ஒரு அப்பாவி கேக்கறதுன்னு நினைச்சுக்குங்க.

ஏங்க, ஒரு .... துறையைச் சேர்ந்த அமைச்சருக்கு தன் துறையைப் பத்தி அதிகமாத் தெரிஞ்சிருக்குன்றது
ஒரு எக்ஸ்ட்ரா க்வாலிஃபிகேஷனா?

//ராஜ்ய சபா உறுப்பினராகி அமைச்சர் ஆனவர், பசுமை தாயகம் என்ற அமைப்பை வைத்து
இருப்பவர் என்று தானே நமக்குபரிச்சயம்,.....//

நீங்க சொல்றவர் அமைச்சரா ஆனபிறகுதான் எம்.பி ஆனார்ன்னு கேள்விப்பட்டேன். அது உண்மையா?

Thursday, July 20, 2006 6:51:00 PM  
Blogger மயிலாடுதுறை சிவா said...

விடாது கருப்பு

தங்கள் வருகைக்கு நன்றி. அதுமட்டும் அல்ல,
குழலிப் போல் எனக்கு அய்யா மற்றும் அன்பு மணியைப் பற்றி நிறைய தெரியாது, நேரில் பார்த்ததை சொன்னேன்.

மயிலாடுதுறை சிவா...

Thursday, July 20, 2006 7:11:00 PM  
Blogger மயிலாடுதுறை சிவா said...

துளசி கோபல்

சட்டப் படி அவர் அமைச்சர் ஆனதில் எந்த தவறு
இல்லை. அப்படி பலப் பேர் வட மாநிலங்களில்
ஆனவர்கள் பலர் உண்டு.

பல அமைச்சர்கள் அவர்கள் துறையில் ஆழ்ந்த அறிவு இல்லாமல் இருக்கிறார்கள்.

மயிலாடுதுறை சிவா...

Thursday, July 20, 2006 7:17:00 PM  
Blogger ஜோ/Joe said...

//ஏங்க, ஒரு .... துறையைச் சேர்ந்த அமைச்சருக்கு தன் துறையைப் பத்தி அதிகமாத் தெரிஞ்சிருக்குன்றது
ஒரு எக்ஸ்ட்ரா க்வாலிஃபிகேஷனா?//

துளசியக்கா,
சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் சட்டசபைக்கு சென்றதையே பெரிய புரட்சி போலவும் ,சாதனை போலவும் சொல்லும் போது ...என்னமோ போங்க ..உங்க சிஸ்டர் -ஐ சொல்லுறேன்னு கோவிச்சுக்காதீங்க..ஹி.ஹி

Thursday, July 20, 2006 7:21:00 PM  
Blogger துளசி கோபால் said...

மறுபடிக்கு நன்றி சிவா.

Thursday, July 20, 2006 7:43:00 PM  
Blogger Unknown said...

//குழலிக்கு நான்கு போத்தல் பிலிப்பாலை ஒரேநேரத்தில் அடித்தது போன்ற தெம்பு இந்நேரம் வந்திருக்கும்!//
:-)))

கறுப்பு,
பிலிப்பால் என்னன்னு சொல்லுங்க நாங்களும் தெரிஞ்சுக்கிறோம்.

துளசி,
வில்லங்கமான அரசியல் கேள்விகளைக் கேட்டுவிட்டு அப்பாவின்னு சொல்லக்கூடாது.

சிவா,
//இந்தியாவில் எயிட்ஸ் விழிப்புணர்வுப் பற்றி பேசினார். கிட்டதட்ட 45 நிமிடங்கள் அழகு ஆங்கிலத்தில், தெளிவாக, அமைதியாக எந்த ஓர் ஆர்பாட்டம் இல்லாமலும் உரையாற்றினார்.//

//எனது சக நண்பர்கள் பலர் மெத்த படித்தவர்கள், அதாவது இந்தியாவில் முனைவர் பட்டம் பெற்று விட்டு பின்னர் அமெரிக்காவிலும் படித்தவர்கள் பலர், வாரிசு அரசியலையும், சாதியை முன் வைத்து (தலித் தவிர)அரசியல் பண்ணுவதை கடுமையாக விமர்சனம் பண்ணும் பலர் மத்திய அமைச்சர் அன்பு மணியின் பேச்சை ரசித்துவிட்டு,அய்யா இராமதாசு தன்னுடைய மகனைப் பற்றி பெருமைப் பட்டு கொள்ள முழுத் தகுதி உண்டு என சொன்னார்கள்.//


இதே ..இதேதான் மெத்தப் படித்த உங்க நண்பர்களுக்கும் அண்ணா,கலைஞர் போன்றோரின் தமிழ்ப் பேச்சைக் கேட்டு இரசித்து அதனையே ஓட்டாக போட்ட சாதாரண தமிழனுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை.ஆங்கிலம் தெரியாத அழகுத் தமிழில் பேசத் தெரியாத காமராஜ் போன்ற மக்கள் தலைவர்களும் அவர் வழி வந்த மற்றவர்களும் காணாமல் போனதற்கு தமிழனின் இந்த குணம் காரணம்.

1.இந்தியாவில் வளர்ந்து வரும் எயிட்ஸ் நோய்க்கு அன்புமணி முன்னின்று செயல்படுத்திய ஒரு நல்ல திட்டத்தைக் கூற முடியுமா?
மதுரைக்கு அருகே எயிட்ஸ் நோயாளிகளுக்காகவே நடத்தப்படும் ஒரு மருத்துவமனையின் செவிலியரிடம் சமீபத்தில் பேசினேன்.இந்தியா எப்போது ஒளிரப்போகிறது என்று தெரியவில்லை.இது இவரது துறைதானே? பேசினால் மட்டும் போதாது.

2.இவர் மட்டும் அல்ல சிதம்பரமும் வெளிநாட்டில் நன்றாகவே பேசுவார். பேசுவதைக் கண்டே புல்லரித்துப்போக வேண்டாம். சமீபத்திய தேர்தலில் சிதம்பரம் " இனிமேல் சிவகங்கை என்ற சன்னலின் வழியாக இந்தியாவைப் பார்ப்பேன்" என்று டயலாக் விட்டார். இவர் இதுவரை சிவகங்கை போன்ற ஊர் மக்களுக்கு என்ன உருப்படியான திட்டம் தீட்டினார். வாய்ஸ் ஆன் விங்ஸ்,sreegopi(http://www.pkblogs.com/sreegopi/),அசுரன் (http://pkblogs.com/poar-parai) போன்றோரின் பதிவுகளையும் படிக்கவும்.

3.அன்புமணியின் ஆழமான அறிவினால் அல்லது அவரின் அழகு அங்கிலப் பேச்சினால் ஒரு சாதரண மனிதனுக்கு அல்லது ஒரு எயிட்ஸ் நோயாளிக்கும் என்ன நன்மை என்று சொல்லவும்.

பி.கு:
உலக அரங்கில் இந்தியாவின் சார்பாக கலந்து கொண்டு சிறப்பாக பேசி பிறரின் கவனத்தைக் கவரும் அன்புமணி,சிதம்பரம் போன்றோர்களுக்கு எனது ஆதரவு உண்டு. இருந்தாலும் அவர்கள் தனது நாட்டில் என்ன செய்கிறார்கள் என்றும் பார்க்க வேண்டும்.

Thursday, July 20, 2006 7:54:00 PM  
Blogger மயிலாடுதுறை சிவா said...

கல் வெட்டு

தங்கள் வருகைக்கு நன்றி.

அழகு ஆங்கிலத்தால் நான் மயங்கி விடவில்லை.
வெளிநாட்டவர் மத்தியில் பேசியதை நான் ரசித்தேன். அவ்வளவே.

நம் மத்திய தமிழக அமைச்சர்கள் நிச்சயம் ஏதாவது
பண்ணுவார்கள் என்று நம்புகிறேன்.

மயிலாடுதுறை சிவா...

Thursday, July 20, 2006 8:39:00 PM  
Blogger மயிலாடுதுறை சிவா said...

நன்றி ஜோ

துளசி "சைக்கிள் கேப்பிலே லாரி" ஓட்டியதைப்
பார்த்தீர்களா? பரவாயில்லை

மயிலாடுதுறை சிவா...

Thursday, July 20, 2006 8:41:00 PM  
Blogger குழலி / Kuzhali said...

சிவா உங்கள் பதிவுக்கு நன்றி

//ஏங்க, ஒரு .... துறையைச் சேர்ந்த அமைச்சருக்கு தன் துறையைப் பத்தி அதிகமாத் தெரிஞ்சிருக்குன்றது
ஒரு எக்ஸ்ட்ரா க்வாலிஃபிகேஷனா? //
நம்ம மன்மோகன்சிங்,ப.சிதம்பரம் போன்றோர் பொருளாதாரத்தில் நல்ல அறிவு உடையவர்கள் என்பதால் அவர்கள் நிதியமைச்சரான போது மகிழ்ந்தோமே, அதுபோலத்தான்....

//ராஜ்ய சபா உறுப்பினராகி அமைச்சர் ஆனவர், பசுமை தாயகம் என்ற அமைப்பை வைத்து
இருப்பவர் என்று தானே நமக்குபரிச்சயம்,.....//

//நீங்க சொல்றவர் அமைச்சரா ஆனபிறகுதான் எம்.பி ஆனார்ன்னு கேள்விப்பட்டேன். அது உண்மையா?//
நிறைய பேர் அடிக்கடி இதை ஒரு குற்றசாட்டாக சொல்கிறார்கள் ஏற்கனவே சில இடங்களில் நான் பதில் சொல்லியுமுள்ளேன், சென்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பாமகவின் ஆறு பாராளுமன்ற உறுப்பினர்கள் பெயர் பின்வருமாறு
அமைச்சர் வேலு முன்னாள் ஐ.ஏ.எஸ்,
தன்ராஜ்-பேராசிரியர்,
பேராசிரியர் பாண்டி ராமதாஸ்,
முன்னாள் அமைச்சர்டாக்டர் பொன்னுசாமி,
முன்னாள் அமைச்சர், ஏ.கே.
மூர்த்தி
டாக்டர் செந்தில்

இதில் டாக்டர் செந்தில், பேராசிரியர் தன்ராஜ், அமைச்சர் வேலு ஆகியோரை கட்சி அல்லாமல் வேறு யாருக்கும் தெரியாது, முகம் தெரியாத இந்த மூவரும் வெற்றி பெரும்போது கட்சியில் இரண்டாமிடத்தில் இருப்பவர், பசுமை தாயகம் மூலம் அறிமுகமானவர், இராமதாசின் மகன் அன்புமணியால் நின்று வென்றிருக்க முடியாதா?
மேலும் இது இந்திய அரசியல் சட்டப்படி சரியானது தானே, அரசியல் சட்டத்தை மீறி ஒன்றும் செய்யவில்லையே....

//குழலிப் போல் எனக்கு அய்யா மற்றும் அன்பு மணியைப் பற்றி நிறைய தெரியாது, நேரில் பார்த்ததை சொன்னேன்.//
சிவா எனக்கு இவர்கள் நேரடி பழக்கமெல்லாம் இல்லை, பல முறைகள் பார்த்துள்ளேன், வெகு சில முறை பேசியுள்ளேன் அவ்வளவே, மற்றபடி சிறு வயதிலிருந்தே பாமக, இராமதாசு தொடர்பான விடயங்களில் ஆர்வம் அதிகம், நிறைய தகவல்கள் தெரிந்து கொள்வேன்...

//[பி;கு- :))புலிப்பால் என்பது என்னவென்று குழலியிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்!)//
டைகர் பியர் :-)

Thursday, July 20, 2006 8:46:00 PM  
Blogger Pot"tea" kadai said...

தகவலுக்கு நன்றி சிவா.

அன்புமணியின் செயல்பாடுகள் சிறந்ததாகவே இருக்கிறது. ஆனால் தரகு வர்க்கமாக இருக்கும் இந்திய ஊடகங்கள் அவரது சிறப்பான செயல்பாடுகளை அவ்வளவாக வெளிப்படுத்துவதில்லை. தமிழ்நாட்டிலும் பாமக சார்பில் நடத்தப்படும் போராட்டங்களுக்கு கொடுக்கும் (எதிர்மறையான) முக்கியத்துவத்தை பாமகவின் ஆக்கபூர்வமான செயல்களுக்கு கொடுக்கப்படுவதில்லை என்பது வருத்தத்திற்குறியது.

ராமதாசு அமெரிக்காவில் சுற்றுப்பயனம் செய்து கொண்டிருக்கும் வேலையில் ஆரவாரமின்றி பாமகவின் சார்பில் மாற்று பட்ஜெட்டை புதுச்சேரி நாடாளுமன்ற உறுப்பினர் ராமதாசு வெளியிட்டார். இந்தியாவில் வேறெந்த எதிர்கட்சியும் இதைச் செய்ததாக நினைவில்லை. இது இந்து நாளிதழில் மட்டும் வெளிவந்தது என்று நினைக்கிறேன்.

//சினிமாவில் புகைபிடிக்கும் காட்சி இருக்க கூடாது என்பதா????

இது புகையிலைக்கு எதிரான சட்டமில்லை... சினிமாவிற்கு எதிரான சட்டம்...//

சிரிப்பு தான் வருது...:-))

முந்தைய நாள் சிஎன் என்னில் தலைப்பு செய்தியாக ஒரு ஒளிப்பதிவு பார்த்தேன். ஹாலிவுட்டின் சில நடிகர்களும் சில இயக்குநர்களும் இன்னபிற ஊடகவியலாளர்களும் திரைப்படங்களிலிருந்து புகைப் பிடிக்கும் காட்சியை ஒழிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தனர். மிக விரைவில் இந்திய நடிகர்களும் அதே கோரிக்கையை முன் வைப்பார்கள் என நம்புவோம்(ஏன்னா ஹாலிவுட்டில் பிரியும் காற்றை சுவாசித்து தானே நம் நடிகர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்)

Thursday, July 20, 2006 8:53:00 PM  
Blogger சீமாச்சு.. said...

அன்பு சிவா,
அமைச்சர் அன்புமணியின் பேச்சின் முழு வீடியோப்பதிவையும் ஒரு மணி நேரம் அமர்ந்து பார்த்தேன்.

அமைச்சர் அவர்களின் பேச்சு மிகப் பொறுப்பான முறையிலேயே வழங்கப்பட்டிருக்கிறது. அவரின் முழுப் பேச்சின் வீடியோவையும் பார்த்தேன். மிகச் சிறப்பான முறையில் பேசியிருக்கிறார். குறிப்புக்களையும் அவ்வப்பொழுது பார்த்து கவனமுடன் தெளிவாகப் பேசியிருக்கிறார். அமைச்சரவர்களுக்கு என் மனங்கனிந்த பாராட்டுக்கள்.

அவர் பேச்சின் முழு வீடியோப் பதிவும் இங்கு உள்ளது

http://commprojects.jhsph.edu/_media/india_presentation_hi.ram

மற்றபடி கல்வெட்டு அவர்களின் எண்ணங்களுடன் ஒத்துப் போகிறேன்.

அமைச்சரின் பேச்சு பற்றிய தவறான புரிதல்களுக்கு வருந்துகிறேன்.

என்றென்றும் அன்புடன்,

சீமாச்சு.

Thursday, July 20, 2006 9:33:00 PM  
Blogger Muthu said...

பதிவுக்கு நன்றி.

பின்னூட்டங்கள் ரொம்ப சுவாரசியம்
அதுவும் எஸ்.கே வும் துளசியும்
பாராட்டவில்லை என்றால் பரவாயில்லை.தூற்றாமலாவது இருக்கலாமே.

Thursday, July 20, 2006 11:48:00 PM  
Blogger மயிலாடுதுறை சிவா said...

ஸ்ரீ

மீண்டும் நீங்கள் தவறாகப் புரிந்துக் கொண்டு உள்ளிர்கள்.

அதாவது நான் தமிழர்கள் மத்தியில் ஆங்கிலத்தில் மிக அருமையாக பேசினார் என்று சொல்லவில்லை, மெத்தப் படித்த விஞ்ஞானிகள் முன்பு, மருத்துவர்கள் முன்பு நன்றாகப் பேசினார் என்பதுதான் என் வாதம்.

2 ஆண்டுகளுக்கு முன்பு ஓர் தலைமை நீதிபதி வந்து இருந்தார், தமிழ்நாட்டில் உள்ள ஓர் பிரபல
அரசியல் தலைவர் நீதிபதியை வைத்து கூட்டம் போடச் சொல்லி கேட்டு கொண்டார். நாங்களும் போட்டோம். நீங்கள் நம்ப மாட்டீர்கள் மிக கேவலமாக, தவறாக ஆங்கிலத்திலும், தமிழிலும் பேசினார். கூட்டம் வாக்குவாதத்தில் முடிந்தது.

என்னுடைய கருத்து அன்புமணி அமைச்சர் நன்றாக செயல் படுகிறார் என்பது, நீங்கள் நான் தவறு செய்வதாக சொன்னால் அதற்கு நான் பொறுப்பல்ல...

மயிலாடுதுறை சிவா...

Friday, July 21, 2006 6:55:00 AM  
Blogger மயிலாடுதுறை சிவா said...

நன்றி குழலி, சாம்பார், பொட்டிகடை...

மயிலாடுதுறை சிவா...

Friday, July 21, 2006 6:56:00 AM  
Blogger மயிலாடுதுறை சிவா said...

சீமாச்சு

நீங்கள் புரிந்துக் கொண்டமைக்கு நன்றி.

சராசரி தமிழனாக எந்த தமிழன் சிறப்பாக செய்தால்
பாராட்ட தோன்றுகிறது. அவ்வளவுதான்...

உயர் சாதி இந்துகளைப் பாராட்ட மிக அதிகமான நபர்களும், நாளேடுகளும், பத்திரிக்கைகளும் உள்ளன. தயவு செய்து இதை கூட நீங்கள் தவறாக எண்ண வேண்டாம்.

மயிலாடுதுறை சிவா...

Friday, July 21, 2006 7:13:00 AM  
Blogger Boston Bala said...

மறுப்பக்கமா? மறுபக்கமா?? ரெண்டுமே சரியா

Friday, July 21, 2006 7:23:00 AM  
Blogger ரவி ஸ்ரீநிவாஸ் said...

உயர் சாதி இந்துகளைப் பாராட்ட மிக அதிகமான நபர்களும், நாளேடுகளும், பத்திரிக்கைகளும் உள்ளன. தயவு செய்து இதை கூட நீங்கள் தவறாக எண்ண வேண்டாம்.

How does caste matter.What matters is performance and committment.How many of the ministers from TN in
the central cabinet are doing a good job.One sees some of them
attending some meeting or function
in TN almost every other day.One sees their faces so often in media that one is tempted to think
that they are cabinet ministers based in chennai,not New Delhi :).

I appreciate Anbumani's efforts in
controlling use of tobacco and smoking but otherwise his performance as a minister is
disappointing.Part of the bans
he has proposed and implemented
are based on the International
Treaty to which India is a Party.
So any other person in his place
would have implemented them,
perhaps with lesser committment
or interest.

Friday, July 21, 2006 7:29:00 AM  
Blogger ரவி ஸ்ரீநிவாஸ் said...

http://ravisrinivas.blogspot.com/2005/05/blog-post_15.html

Friday, July 21, 2006 7:30:00 AM  
Blogger சன்னாசி said...

அன்புமணியின் பேச்சை இதற்கு முன்பு கேட்டதில்லை (தமிழிலும் கூட) - சீமாச்சுவின் பதிவிலிருக்கும் அவரது பேச்சுக்கான சுட்டியில் அவரது முழுப் பேச்சையும் கேட்டபோது, அந்த பல்கலைக்கழக audienceக்கு ஏற்ப வெகு தெளிவாக, தகவல்களுடன் பேசியது போலதான் எனக்குப் பட்டது. தன் முந்தைய பின்னூட்டமொன்றில் மயிலாடுதுறை சிவா சொல்லியிருப்பதுபோல எனக்கும் சில அனுபவங்களுண்டு - எவரையும் குறைத்துப் பேசுவதற்காக அல்ல - உடைந்த ஆங்கிலத்தில், anecdotes மூலமாகவே தங்களது மொத்தப் பேச்சையும் முடித்துவிட்ட, நமது அரசியல்வாதிகளின் ஊழல், மொண்ணைத்தனம் பற்றி வெறும் stereotype-reinforcementக்காக கேவலமான ஜோக்குகள் அடிப்பது என்று சொதப்பலாகப் பேசிய இந்தியர்கள் சிலரைப் பார்த்திருப்பதால், அன்புமணியின் பேச்சு அவை அனைத்தையும்விட மேம்பட்டதாக இருந்ததாகவே தெரிந்தது.

'எழுதிக் கொடுத்த உரையை'ப் படிப்பதை யாரும் செய்யலாம் என்பது போன்ற குற்றச்சாட்டுக்கள் - மேலும், ஆதாரப்பூர்வமாகப் பேசவேண்டிய உரைக்குத் தகவல் திரட்டிக்கொடுக்க, பேச்சைத் தயாரிக்க உதவியில்லாமல் ஆல் இன் ஆல் ஆறுமுகமாக மந்திரியே எல்லாம் செய்யவேண்டுமென்பதெல்லாம் ஷங்கர் சினிமாக்களில்தான் முடியும். தொழில்முறையிலான பேச்சுத் தயாரிப்பாளர்கள், உளவு நிறுவனங்கள், ஆலோசகர்கள் என்று பேச்சுத் தயாரிப்பில் உதவி, ஐ.நா சபையின் குறிப்பிட்ட ஹால் மாதிரி செட் போட்டுப் பேசிப் பயிற்சி எடுத்துக்கொண்டு அதன்பின் ஐக்கிய நாடுகள் சபையில் யுரேனியத்தை நைஜரிலிருந்து இராக் பெற்றது என்று காலின் பவல் பேசிய தகவலின் நம்பகத்தன்மையே பிறகு பல்லிளிக்கிறது - இங்கே ஒரு சுகாதாரத்துறை அமைச்சர் ஒரு சாதாரணப் பல்கலைக்கழகப் பேச்சைப் பேசியதைப் பாராட்டியதற்கு (அதில் நிஜமில்லாமல் இருந்தால், சொதப்பியிருந்தால் அதைத் தாக்கியிருக்கலாம்) இங்கே எத்தனை பேருக்குப் பொத்துக்கொண்டு வருகிறது!! ஆச்சரியம்தான். பேச்சைக் கேட்காதவர்கள் இங்கே கேட்கலாம்.

நகைச்சுவை அது இதென்று குற்றம் சொல்பவர்களுக்கு - அது இங்கேயுள்ள பேச்சுக்களில் வெகு சாதாரணமான ஒரு அம்சம். முக்கி முக்கித் தீவிரமாகச் சொன்னால்தான் இங்கே சொன்ன கருத்து ஏற்றுக்கொள்ளப்படுமென்பதில்லை - எத்தனையோ தீவிரமான அறிவியல் கருத்தரங்கப் பேச்சுக்களில், ஒன்றிரண்டு customary jokesஐச் சேர்ப்பது என்பது சர்வ சாதாரணம்.

Friday, July 21, 2006 7:32:00 AM  
Blogger மயிலாடுதுறை சிவா said...

சன்னாசி

"இங்கே ஒரு சுகாதாரத்துறை அமைச்சர் ஒரு சாதாரணப் பல்கலைக்கழகப் பேச்சைப் பேசியதைப் பாராட்டியதற்கு (அதில் நிஜமில்லாமல் இருந்தால், சொதப்பியிருந்தால் அதைத் தாக்கியிருக்கலாம்) இங்கே எத்தனை பேருக்குப் பொத்துக்கொண்டு வருகிறது...."

மிகச் சரியாக சொன்னீர்கள்...

மிக்க நன்றி
மயிலாடுதுறை சிவா....

Friday, July 21, 2006 7:39:00 AM  
Blogger மயிலாடுதுறை சிவா said...

ரவி

நீங்கள் வருவீர்கள் என்று தெரியும். என்னை பொறுத்தவரை சிதம்பரம், அன்புமணி, தயாநிதி, டிஆர் பாலு எல்லோரும் நன்றாக செயல் படுகிறார்கள் என்று நான் நம்புகிறேன்.

அன்பு மணிக்கு இன்னும் 3 ஆண்டுகள் மீதம்
உள்ளது. பொறுத்து இருந்து பார்க்கலாம்.

தயவு செய்து நீங்கள் வேறு நல்ல அமைச்சர்களின்
பெருமைகளை சொல்லுங்கள்...

மயிலாடுதுறை சிவா....

Friday, July 21, 2006 8:14:00 AM  
Blogger aathirai said...

இப்பொழுது சிகரெட் பேக்கெட்டில் மண்டை ஓடு படம் போட சொல்லி
உத்தரவு என்று எங்கோ படித்தேன்.

கமலஹாசன் பதிவிலேயே எழுத நினைத்தது. ஒருவர் தவறு செய்தால்
அவரை அக்கு வேறு ஆணி வேறாக பிய்க்கும் வலைப்பதிவில் ஒருவர்
உருப்படியாக செய்த காரியத்துக்கு பாராட்டுவதுக்கும் சிலருக்கு மனது
வரவில்லை.

இதுவே அன்புமணியின் மறுபக்கம்- நடிகையுடன் ஜல்சா என்று
எழுதியிருந்தால் கும்மியடித்திருக்க மாட்டோமா?

Friday, July 21, 2006 9:25:00 AM  
Blogger Nakkiran said...

//அன்பு மணியிம் எண்ணம் புகையிலை பயன்பாட்டை குறைக்க பாடுபடுவது இதில் தவறு
எதுவும் இல்லேயே...
//

சிவா அவர்களே..
இது தான் உண்மையான எண்ணம் என்றால் சினிமாவில் தடை செய்வதால் நிச்சயம் குறையப் போவதில்லை...இன்றும் பள்ளிகளுக்கு அருகில் சிகரெட் விற்கிறார்கள்.. இன்னும் 18 வயதிற்கு குறைவானவர்களுக்கு சிகரட் மிக சுலபமாக கிடைக்கிறது
இன்னும் பொது இடத்தில் சிகரட் பிடிக்கிறார்கள்...

சில ஆண்டுகளுக்கு முன்னால் பான்பாரக் விற்பனையை தடை செய்த போது (நிச்சயம் அன்புமணி அல்ல) பான்பாரக் கிடைக்காமல் என் நண்பர்கள் அல்லாடியதை பார்த்து சந்தோஷபட்டிருக்கிறேன்.. சிறிது நாட்களில் பான்பரக்கை மறந்து சாதரண பாக்குக்கு மாறி கொஞ்ச நாட்களில் அதையும் மறந்து போனர்கள்...அந்த பான்பாரக் தடை மற்றும் இல்லாமல் போயிருந்தால் என் நண்பர்கள் பலர் இந்நேரம் நோயாளியாகிருப்பர்கள்..

இது தான் அய்யா.. உண்மையான நோக்கம் உள்ளவர்களின் செயல்பாடு..
அதை செயல்படுத்தியவரை கவுரவித்திருக்க வேண்டும்..

எதற்கெடுத்தாலும் சினிமாவை வறுக்க கூடாது...ITC எனும் மிகப்பெரிய நிறுவனத்தை ஒரு நல்ல நோக்கத்திற்காக கூட எதிர்க்கும் தைரியும் அன்புமணிக்கு மட்டும்ல்ல எந்த அமைச்சருக்கும் இல்லை..

அன்புமணி ஒரு சராசரிஅமைச்சர் தான்..

Friday, July 21, 2006 10:55:00 AM  
Blogger ரவி ஸ்ரீநிவாஸ் said...

I have conditionally supported his moves on control of tobacco use.See the link I have given.
I have criticised him in some other issues.Yet how many of you
are willing to acknowledge this.

Friday, July 21, 2006 11:05:00 AM  
Blogger ரவி ஸ்ரீநிவாஸ் said...

இன்னும் பொது இடத்தில் சிகரட் பிடிக்கிறார்கள்...

Anbumani cannot do much in this
as this is an issue for the state govts to act.In railways there
is a ban and i think it is effective.In Kerala the ban was the result of a judgment by
high court.In Tamil Nadu i
think there is no ban on smoking in public places.I dont
think DMK govt. will impose
a ban either.

Friday, July 21, 2006 11:15:00 AM  
Blogger Srikanth Meenakshi said...

சிவா,

எனது முந்தைய நக்கல் பின்னூட்டத்தை வாபஸ் பெற்றுக் கொள்கிறேன். மேலுள்ள ஒரு பின்னூட்டத்தில் உள்ள தளம் சென்று உரையைப் பார்த்தேன். அது ஒரு நல்ல, தெளிவான, சரளமான, விஷய சாரம் பொதிந்த உரை என்பதில் ஐயமில்லை. இந்த (எய்ட்ஸ்) விஷயம் குறித்து அமைச்சரது முனைப்பையும் நன்கு காண்பிக்கிறது. இவரை மற்ற சுகாதார அமைச்சர்களோடு ஒப்பிட்டுக் கொண்டாடுவது மிகையாகத் தோன்றினாலும், ஒரு சிறப்பாகச் செயல்படக் கூடிய அமைச்சர் இவர் என்ற நம்பிக்கையை உண்டாக்கும் வண்ணம் இந்த உரை உள்ளது என்பது ஏற்கப்படவேண்டியது.

நன்றி,

ஸ்ரீகாந்த்

Friday, July 21, 2006 3:58:00 PM  
Blogger மு. சுந்தரமூர்த்தி said...

இந்த பதிவுக்காக சிவாவுக்கும், அதன் மூலம் முழு உரையை சுட்டிய சீமாச்சுக்கும் நன்றி.

இதற்கு வந்துள்ள பின்னூட்டங்கள்(உரையைக் கேட்ட பிறகு சீமாச்சு, ஸ்ரீகாந்த் இருவரும் திருத்திக்கொண்டாலும்) நாம் எதையும், எவரையும் முன்சாய்வில்லாமல் அணுகமுடிவதில்லை என்பதை இன்னொரு முறை உறுதிப்படுத்துகிறது.

இவ்வளவு knee jerk reactionகளையும் பார்த்த பிறகும் "How does caste matter.What matters is performance and committment" என்று ரவி அப்பாவித்தனமாக கேட்பது நகைமுரண். srinidhi ஒருவரின் கருத்துக்கள் போதுமே ஜாதியக் கண்ணோட்டத்தைப் புரிந்துகொள்ள.

ஏராளமான சாதனையாளர்கள் இருக்கக்கூடிய உயர்ஜாதியினருக்கு வேண்டுமானால் அன்புமணியின் பேச்சும், பணிகளும் சுண்டுவிரலில் ஒதுக்கித் தள்ளக்கூடியதாக இருக்கலாம். ஆதர்ஷப் புருஷர்கள் அதிகம் காணக்கிடைக்காத பிற்பட்ட ஜாதியினருக்கு, அன்புமணி போன்றவர்களைக் கொண்டாடவும், முன்மாதிரிகளாகக் கொள்ளவும் காரணங்கள் உண்டு. அப்படிச் செய்யாமல் விடுவது தான் தவறு.

பி.கு. ஸ்ரீகாந்த் சிவாவிடம் கேட்ட கேள்வியை வைத்து கூகிளில் தேடாமல் யோசித்துப் பார்த்தேன். 77 இல் ஜனதா கட்சி அரசில் சுகாதார அமைச்சராக இருந்த ராஜ்நாராயண் தவிர வேறு எந்த பெயரும் உடனடியாக நினைவுக்கு வரவில்லை.

Friday, July 21, 2006 8:22:00 PM  
Blogger குழலி / Kuzhali said...

//ஸ்ரீகாந்த் சிவாவிடம் கேட்ட கேள்வியை வைத்து கூகிளில் தேடாமல் யோசித்துப் பார்த்தேன். 77 இல் ஜனதா கட்சி அரசில் சுகாதார அமைச்சராக இருந்த ராஜ்நாராயண் தவிர வேறு எந்த பெயரும் உடனடியாக நினைவுக்கு வரவில்லை.
//
ஹி ஹி எனக்கு "நீங்க, நான் நம்ம பேக்பைப்பர்" என்று சரக்குக்கு விளம்பரம் செய்த (அட அது சரக்கு விளம்பரம் அல்ல, தண்ணி பாட்டில், கண்ணாடி குடுவைக்குனு கூட சொல்வாங்க:-) ) என்ற பா.ஜ.க அமைச்சர் சத்ருகன்சின்கா, மற்றும் அப்போது பா.ம.கவிலிருந்து அமைச்சராக இருந்த தலித்.இரா.எழில்மலை இருவரும் நினைவுக்கு வருகின்றனர்.

என்னங்க துளசியக்கா நீங்க, நான் நம்ம பேக்பைப்பர்னு சரக்குக்கு விளம்பரம் கொடுத்தவர் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்ததை விட டாக்டர்.அன்புமணி சுகாதாரத்துறை அமைச்சராக இருப்பது எக்ஸ்ட்ரா குவாலிகேஷன்னு எடுத்துக்கலாமாங்க?

Sunday, July 23, 2006 4:48:00 AM  
Blogger ரவி ஸ்ரீநிவாஸ் said...

ஏராளமான சாதனையாளர்கள் இருக்கக்கூடிய உயர்ஜாதியினருக்கு வேண்டுமானால் அன்புமணியின் பேச்சும், பணிகளும் சுண்டுவிரலில் ஒதுக்கித் தள்ளக்கூடியதாக இருக்கலாம். ஆதர்ஷப் புருஷர்கள் அதிகம் காணக்கிடைக்காத பிற்பட்ட ஜாதியினருக்கு, அன்புமணி போன்றவர்களைக் கொண்டாடவும், முன்மாதிரிகளாகக் கொள்ளவும் காரணங்கள் உண்டு. அப்படிச் செய்யாமல் விடுவது தான் தவறு.

If Kuzhali has written this
i would not have been surprised.

Sunday, July 23, 2006 6:10:00 AM  
Blogger சீமாச்சு.. said...

//இதற்கு வந்துள்ள பின்னூட்டங்கள்(உரையைக் கேட்ட பிறகு சீமாச்சு, ஸ்ரீகாந்த் இருவரும் திருத்திக்கொண்டாலும்) நாம் எதையும், எவரையும் முன்சாய்வில்லாமல் அணுகமுடிவதில்லை என்பதை இன்னொரு முறை உறுதிப்படுத்துகிறது.
//
அன்பின் சுந்தரமூர்த்தி, எனது முதல் கருத்து.. சிவாவின் பதிவை வைத்து மட்டுமே எழுதப்பட்டது. அந்த பதிவு சொன்ன செய்தியும் நடையும் எனக்குப் புரிய வைத்தது அவ்வளவுதான். எனது முதல் கருத்தில் அன்புமணி பற்றியான எந்தவித முன்சாய்வும் இல்லை என்பதை உளமறியக் கூறிக்கொள்கிறேன்.
அடுத்து .. எனது கருத்துக்களின் அடிப்படைகளின் (சிவாவின் பதிவு) உண்மை நிலை அறிவதற்காக நானே பல்கலைக்கழகத்தின் தளம் சென்று அந்த வீடியோக்களைப் பார்வையிட்டேன். அதன் பேரில் எனது கருத்துக்களைத் திருத்திக் கொண்டேன்.
இதிலும் எந்த முன்சாய்வும் இல்லை.
என்னை பொறுத்தவரை எனது கருத்துக்களை "காய்தல் உவத்தலின்றி" அமையுமாறு பார்த்துக் கொள்கிறேன்.

சீமாச்சு

Sunday, July 23, 2006 6:29:00 AM  

Post a Comment

<< Home

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது