Thursday, October 12, 2006

Roman Holiday (1953) - திரைப்படம் - ஓர் பார்வை

வார இறுதியில் Roman Holiday என்ற ஆங்கிலத் திரைப் படத்தை பார்க்கும் வாய்ப்பு ஏற்பட்டது. Hollywoodன் முண்ணனி நட்சத்திரங்கள் ஆன Gregory Peck ம், Audrey Hepburn னும் நடித்த ஓர் காவியம் என்றே சொல்லலாம். விகடனில் வார வாரம் டாப் 10 என்ற பகுதியில் இயக்குனர் ராதா மோகன் இந்த படத்தைப் பற்றி சொல்லி இருந்தார்.

Free Image Hosting at www.ImageShack.us

கதையின் கதாநாயகி (ஆன்) மிகப் பெரிய சாம்ராஜ்ய்த்தின் இளவரசி அல்லது மகாராணி என்றே சொல்லலாம்.ஓரு இளவரசியாக தினம் தினம் பல அரசாங்க தொடர்பு உடையவர்களை சந்திப்பது, பிரபல தொழில்அதிபர்களை சந்திப்பது, காலை முதல் இரவு படுக்க போகும் வரை மணிக்கு மணி என்ன செய்ய வேண்டும் என்ற குறிப்புகள் எல்லாம் அவளை ஓர் கட்டுபாடான அதே சமயத்தில் ஓர் இயந்திர வாழ்க்கைப் போல இருப்பதை அவள் வெறுக்கிறாள். அந்த படத்தை பார்க்கும் பொழுதுதான் தெரிகிறது, ஓர் இளவரசிக்கு எப்படிபட்ட ஓர் செயற்கை வாழ்க்கை இருக்கிறது என்று. கொஞ்சம்கூட பொறுந்தாத உடை அணிவது, எல்லோரையும் செயற்கையாக வாழ்த்துவது, சாதரண உடை அணிந்து கூட தூங்க முடியவில்லை என்பதை திரையின் ஆரம்ப காட்சிகளிலே இயக்குனர் மிக அழகாக காண்பிக்கிறார்.

இப்படிப் பட்ட ஓர் செயற்கையான வாழ்க்கையை அவள் ஒதுக்கி வைத்துவிட்டு ஓருநாள் இரவு வெளியே வரத் துணிகிறாள். அந்த அரண்மனைக்கு வரும் துப்புறவு வண்டியில் தப்பித்து நகரத்திற்கு செல்கிறாள். வெளியே மக்கள் சுதந்திரமாக இரவு உணவு விடுதியிலும், சாலை ஓர உணவகங்களில் நேரத்தை கழிப்பதை பார்த்து ரசிக்கிறாள் மற்றும் ஏங்குகிறாள். முடி திருத்தம் நிலையத்தில் தன்னுடைய முடியை நன்கு அழகாக அவளுக்கு பிடித்தமாதிரி திருத்திக் கொள்கிறாள். அப்படியே கலைத்துப்போய் சாலை ஓரத்தில் தூங்கியும் விடுகிறாள்.


அந்த வழியே வரும் கதாநாயகன் (ஜோ) அவளை பார்க்கிறான், அவள் தூக்கத்தில் அவள் அழகு ஆங்கிலத்தில்உளருவதும், ஆங்கில கவிஞர் ஷெல்லியின் கவிதைகளை சொல்வதை பார்த்துதும் அவனுக்கு புரிகிறதுஇவள் பெரிய எடுத்து பெண் என்பது, ஆனால் அவனுக்கு தெரியாது அவள் இளவரசி என்று.அவளை வாடகை காரில் அவள் போக வேண்டிய இடத்தில் அவளை இறக்கி விடலாம் என்றால் அவளோதூக்க கலக்கத்தில் இருப்பதாலும் வேறு வழி இல்லாத காரணத்தாலும் அவளை தன்னுடைய விடுதிக்கேஅழைத்துக் கொண்டு போய் தூங்க வைக்கிறான்.

கதாநாயகன் ஓர் அமெரிக்க செய்தி நிறுவன நிருபர். அடுத்த நாள் அவனுக்கு இதே இளவரசியுடன்பேட்டி எடுக்க வேண்டும். இந்த இளவரசி அரசாங்க மாளிகையில் இல்லாமல் ஓர் இரவு தப்பி விட்டதால்அவனுடைய பேட்டி எடுக்க முடியாமல் போய் விடுகிறது. அரசாங்க அறிவிப்பில் இளவரசியின் புகைப் படத்தை பார்த்து அதிசயப் பட்டு, ஆச்சர்ய பட்டு தன்னுடைய அறையில் இருப்பது இளவரசி என்றுதெரிந்தவுடன் அவளுடன் ஓர் நாள் இருந்து அவளைப் பற்றிய செய்திகளை சேகரிக்க ஓர் புகைப்படநிருபரையும் வாடகைக்கு அமர்த்துகிறான்.

ஓரே ஒரு நாள் ரோம் முழுக்க சுற்றுகிறார்கள் மூவரும். இளவரசி தன்னை மறந்து பொது மக்களோடுமக்களாக, இரவு விடுதியில் ஆடுவதும், அங்கு கலாட்டா நடப்பதும், அங்கு இருந்து அவர்கள் தப்பித்துமீண்டும் அவனது அறைக்கே வருகிறார்கள். அவள் சென்று உடை மாற்றிவிட்டு கிளம்ப வேண்டும் என்கிறாள்.அரசாங்க அறிவிப்பில் அவளின் உடல்நலம் சரி இல்லாத காரணத்தை மக்கள் கவனமாக கவனித்து வருவதாகசொல்லுகிறார்கள். இந்த நாள் அவளுக்கு வாழ்க்கையில் மறக்க முடியாத நாள் என்கிறாள். அவளின் அரசாங்ககடமை அவளை அழைப்பதாக சொல்கிறாள். அவளும் அரசாங்க இல்லத்திற்கு செல்ல தயாராக இருக்கிறாள்.ஜோ ஏதோ சொல்ல வேண்டும் என நினைக்கிறான், ஆனால் அவள் எதையும் கேட்கவோ சொல்லவோ தயாராக இல்லை, அவனை இறுக கட்டிஅணைத்து ஏக்க பெறுமூச்சு விடுகிறாள்.

Free Image Hosting at www.ImageShack.us

அவன் அவளை சென்று அரசாங்க மாளிகை முன்பு இறக்கி விடுவதற்கு முன்னால் இருவரும் பேசி கொள்வதுபடத்திற்கு மேலும் மேலும் உயிர் ஊட்டுகிறது. "இப்பொழுது உன்னை விட்டு நான் பிரியப் போகிறேன், நான்அந்த பக்கம் போனவுடன் நீ என்னை திரும்பி பார்க்க கூடாது, காரிலேயே அமர்ந்து கொள் என்கிறாள். உன்னிடம் இருந்து எப்படி பிரியப் போகிறேன் என்று தெரியவில்லை, என்னால் எப்படி வார்த்தைகளால் சொல்வது என்று தெரியவில்லை என்று சொல்கிறாள். ஜோ பரவாயில்லை நீ எதுவும் சொல்லவேண்டாம்என்கிறான். இருவரும் இறுக கட்டிஅணைத்து கொள்கிறார்கள், முத்தமிட்டு கொள்கிறார்கள். இருவரும்கலங்குகிறார்கள். அவள் காரின் கதவை திறந்து கொண்டு நடந்து சென்று விடுகிறாள், அவளை அவன்அமைதியாக பார்த்துக் கொண்டு இருக்கிறான்.

அடுத்த நாள் இளவரசி அரசாங்க கட்டிடத்தில் அனைத்து நிருபர்களையும் சந்திக்கிறாள். ஜோவும் அந்தபுகைப்படகாரனும் அங்கு வந்து இருக்கிறார்கள். அவனைப் பார்த்து கண்ணலேயே பேசுகிறாள். ஓரு நிருபர் உங்களுக்கு எந்த ஊர் பிடிக்கும் என்றதற்கு எல்லா ஊரும் என்ற சம்பிராதயமாக சொல்லமால் "ரோம்" என்கிறாள். புகைப் படங்கள் எடுக்க படுகின்றன. வழக்கத்துக்கு மாறாக இளவரசி இறங்கி வந்து எல்லோருக்கும் கை கொடுக்கிறாள். ஜோவுக்கும் கை கொடுக்கிறாள். மிக்க நன்றி என்கிறாள். மீண்டும் படி ஏறி அவனை ஓர் ஆழமானபார்வை பார்த்து விட்டு அந்த பெரிய மாளிகையின் உள்ளே அவள் அழைத்து செல்லப் படுகிறாள்.

எல்லோரும் சென்றுவிட்டு பிறகு அவன் அமைதியாக அவள் சென்ற இடத்தையே பார்த்து கொண்டு நடந்துமெதுவாக வருகிறான். அந்த அரசாங்க மிக பெரிய மாளிகையை ஓர் முறை திரும்பி பார்க்கிறான் படம்அப்படியே முடிந்துவிடுகிறது. இந்த பூமியில் நிறைவேறின காதலைவிட நிறைவேறாத காதலே அதிகம் என்று எப்பொழுதோ இயக்குனர் சிகரம் திரு பாரதிராசா சொன்னதாக நினைவு.

இந்த படம் ஓர் வரலாற்று காவியம், மிக சிறந்த காதல் கதை, நாயகி முதல் படத்திலேயே அமெரிக்காவின் மிகப் பெரிய விருதான ஆஸ்கார் விருதை பெற்றவர். இந்தப் படம் கிட்டதட்ட 10 ஆஸ்கார் விருதுகளுக்குபரிந்துரைக்கப் பட்டு 3 பரிசுகளை(சிறந்த திரைக் கதை, கறுப்பு வெள்ளைகான உடை, சிறந்த கதாநாயகி)தட்டி சென்றப் படம். Hollywood ன் மிகப் பிரபலமான இயக்குனர் William Wyler இந்தத் திரைப் படத்தை இயக்கி உள்ளார்.

ஓய்வு இருந்தால் பாருங்களேன். நீங்கள் கட்டாயம் பார்க்க வேண்டிய படமும் கூட.

நன்றி

மயிலாடுதுறை சிவா...




Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

8 Comments:

Blogger அருண்மொழி said...

எனக்கு பிடித்த ஆங்கில படங்களில் இதுவும் ஒன்று. DVD இருப்பதால் அவ்வப்போது பார்த்து ரசிப்பேன். முக்கியமாக கடைசி கட்ட காட்சிகள் மிகவும் அருமை.

இந்த கருவை வைத்து சில தமிழ் படங்கள் வந்து இருக்கின்றன என நினைக்கின்றேன் (சின்னத்தம்பி மற்றும் மோகன்,நதியா நடித்த படம்)

Thursday, October 12, 2006 8:32:00 PM  
Blogger மதி கந்தசாமி (Mathy Kandasamy) said...

Roman Holiday: எனக்குப் பிடித்த படங்களில் ஒன்று. Gregory Peckஉம் Audray Hepburnஉம் எனக்குப் பிடித்த நடிகர்கள். Audray Hepburnஇன் முதலாவது ஹொலிவூட் படம் இது. படத்தில் பார்த்தீர்களென்றால் சீனியரான Gregory Peckஇற்கு முதல் Audrey Hepburnஇன் பெயர் வரும். அப்படி வரச்செய்தது Gregory Peck. நம்மூர் சினிமாவுடன் ஒப்பிடும்போது ஆச்சரியமாக இருக்கிறது இல்லையா? :) Gregory Peck, Audrey Hepburn இந்தப் படத்திற்காகக் கட்டாயம் ஆஸ்கர் வெல்லுவார். அதனால், அவருடைய பெயரை முதலில் போடுங்கள் என்று சொன்னாராம்.

அப்புறம்.. படத்தில் ஒரு சிங்கத்தின் வாய்க்குள்ளே கிரெகொரி பெக் கை விடுவது போல ஒரு காட்சி இருக்கிறதில்லை. அதில் கையை வெளியே எடுத்து Shirt Sleeveற்குள்ளே மறைத்துவிட்டு உண்மையாகவே கை கடிபட்டதுபோல நடித்தாராம் கிரெகொரி பெக். அந்தக் காட்சியில் Audrey Hepburn உண்மையாகவே பயந்துபோய்விட்டாராம். :)

நன்றாக எழுதியிருக்கிறீர்கள் சிவா. இந்தச் சிவப்பு வண்ணம் வேண்டாமே. படிக்க மிகவும் சிரமமாக இருக்கிறது.

-மதி

Thursday, October 12, 2006 9:50:00 PM  
Blogger  வல்லிசிம்ஹன் said...

Ann தூக்க மாத்திரை கொடுக்கப் படுவதால் தூங்குகிறாள்.
மறுநாள் தான் இளவரசி இமேஜிலிருந்து சாதரணப் பெண் போல் ,ஹேர்கட்டிங்சலூனுக்குப் போய் அழகு செய்து கொள்கிறாள்.
மறக்க முடியாத இருவர் நினைவும் இன்னும் என்னைக் கேள்வி கேட்க வைக்கும்.
நன்றி.

Friday, October 13, 2006 1:12:00 AM  
Blogger மயிலாடுதுறை சிவா said...

நன்றி அருண் மொழி, மதி, வல்லி, நிர்மல்.

மதி நிறத்தை மாற்றி விடுகிறேன்.

மயிலாடுதுறை சிவா...

Friday, October 13, 2006 8:56:00 AM  
Blogger G.Ragavan said...

ரோமன் ஹாலிடே..........எனக்குப் பிடித்த படங்களில் முதல் வரிசைப் படங்கள். ஆகா......ஆகா......திரும்பத் திரும்ப எத்தனை முறையும் பார்ப்பேன்.

audrey heburnக்கு இது முதல் படமாம். நம்பவே முடியாது. முதலில் இளவரசியாக ஒரு விருந்தில் கலந்து கொள்ளும் பொழுது அவருடைய ஒரு காலணி கழண்டு விழும். அப்பொழுது அடுத்தவருக்குத் தெரியாமல் அதைக் காலில் மாட்டிக் கொள்ளப் படும்பாடு. :-)))))))))

ஐயோஓஓஒ.........நான் ஒவ்வொரு காட்சியாக சொல்லிக் கொண்டே வர வேண்டும் போல.... :-)

கடைசியில் வழக்கமான விடைகளைச் சொல்லாமல் தனக்குத் தோன்றிய நியாயமான விடைகளைச் சொல்லும் பொழுதும் அந்த முகத்தில் ஒரு கம்பீரம் வருமே. எடுத்த போட்டோக்களைக் கொடுத்ததும் ஒரு நொடி பழைய விளையாட்டு முகம் வருமே.....audrey hepburn....audrey hepburn.........ஐயோ ஐயோ

Friday, October 13, 2006 9:07:00 AM  
Blogger மயிலாடுதுறை சிவா said...

நன்றி ராகவன்

என்னையும் Audray மிகவும் பாதித்தாள்.
அதுமட்டம் அல்ல, அவள் பேசும் உயர்தர ஆங்கிலம் மிக ஆழகாக இருக்குமே.

கடைசி காட்டியில் அவள் கண்கள் பேசியதே, என்ன சொல்வேன்?

வலைப் பூ நண்பர்கள் இவ்வளவு பேர்
பார்த்து இருப்பது மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது.

இன்னும் இதுப் போல பலப் படங்களை இங்கு பதிய வைக்க வேண்டும்.

நன்றி
மயிலாடுதுறை சிவா...

Friday, October 13, 2006 9:51:00 AM  
Blogger Radha Sriram said...

Siva,

i have watched most of Audrey's movies. If you get a chance do watch Sabrina and Breakfast at Tiffanys.....something awesome and ofcourse ....Rex harrison, audrey starrer..My fair lady Oh boy!! (in Raghavan's language Iyyo Iyyo!!!)and also how to steal a million!!
Anyway thanks for reminding....roman holiday is going to be my weekend movie.....

Radha

Friday, October 13, 2006 4:31:00 PM  
Blogger சீனு said...

அட! சமீபத்தில் தான் இந்த படத்தை பார்த்து பாதி விமரிசனம் எழுதியிருந்தேன். பின் நிறுத்தி விட்டேன். இங்கே பூங்கா-வில் பார்த்தேன்.

மிக நல்ல படம். படத்தின் ஹீரோ பெக், Mackenna's Gold (1969), The Omen போன்ற படங்களில் நடித்தவர்.

Thursday, October 19, 2006 7:18:00 AM  

Post a Comment

<< Home

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது