முகவரி திரைப் படம் - ஓர் பார்வை
இந்திய தொலைக் காட்சிகளில் முதன் முறையாக ஒளிப்பரப்ப படும் சூரிய தொலைக் காட்சியில் காண்பிக்கப் படும் திரைப் படங்களை எப்பொழுதும் பார்ப்பது இல்லை. முக்கியமாக வார இறுதியில் அதனைப் பார்க்கவும் தோணாது. ஆனால் இந்த வாரம் ஞாயிறு மாலை துரை இயக்கத்தில் அஜீத் / ஜோதிகா நடித்த "முகவரி" படம் பார்க்கும் வாய்ப்பு ஏற்பட்டது. அந்த படத்தை ஏற்கனவே பார்த்து, ரசித்து டிவிடி வாங்கி வைத்து விட்டாலும், மீண்டும் தொலைக் காட்சியில் பார்த்த போதிலும் மனதை வெகுவாக தொட்டப் படம் எனலாம். இப்படி பட்ட தரமான படங்களில் அஜீத் நடித்து தற்பொழுது ஆழ்வார், முன்பு சிட்டிசன், பரமசிவன், வரலாறு போன்ற படங்களில் நடிப்பதும் கொடுமையிலும் கொடுமை!!!
அண்ணன் கதாபாத்திரத்தில் வரும் ரகுவரன், கலக்கலாக நடித்து இருப்பார். இப்படி ஓர் அண்ணனும் இப்படி பட்ட குடும்பமும் நம் சமுதாயத்தில் இருக்க வாய்ப்பு உள்ளதா? என்று ஏக்கமாக உள்ளது. அஜீத் சோர்ந்து போகும் எல்லா சந்தர்ப்பத்திலும் அண்ணன் ரகுவரன் ஆறுதலாக தட்டி கொடுப்பதும், நீ நிச்சயம் ஜெயித்து விடுவாய் என்று சொல்லுகின்ற காட்சி அனைத்தும் மிக அழகாக எடுக்கப் பட்டு இருக்கும். ஓர் கல்யாண வீட்டில் ஜோதிகாவை ரகுவரன் குடும்பம் சந்திக்கின்ற காட்சியில் "உலகம் ரொம்ப சிறுசு
நல்லவங்களை நல்லவங்கள் சந்தித்து தீர வேண்டும்" என்பார். எவ்வளவு அருமையான எளிமையான வசனங்கள்.
ஜோதிகாவிடம் தந்தை ஜெய் கணேஷ், அஜீத்துடன், ஜோதிகா திருமணம் பற்றியும், அவர்கள் எதிர்கால வாழக்கை பற்றியும் பேசுகின்ற காட்சி என்ன அழகாக, ஆழமாக, அருமையாக கோவிலின் மேற் புற பிரகாரத்தில் வைத்து
எடுக்கப் பட்டு இருக்கும். தந்தையாக மிக எதார்த்தமாக அஜீத்திடம், நீங்கள் கிட்டதட்ட 7, 8 ஆண்டுகளாக இசை அமைப்பாளராக ஆக வர முயற்சிப் பண்ணிக் கொண்டு வருகீறீர்கள். இன்னும் 6, 7 ஆண்டுகள் வரை இசை அமைப்பாளாராக வர முடியாமல் போய்விட்டால் என்ன பண்ணுவீர்கள் என்பார். அவர் அருகிலேயே கதாநாயகி ஜோதிகா நின்று மெலிதாக அழுதுக் கொண்டே இருப்பார். அப்பொழுது அஜீத், இது 7, 8 ஆண்டுகள் முயற்சி இல்லை, "7, 8 ஆண்டுகள் தவம்" என்பாரே அங்கு இயக்குனரின் கனவு, வருத்தம், முயற்சி, லட்சியம் நன்கு வெளிப்படுகிறது. அதுமட்டும் அல்ல, அஜீத் இன்னும் 7, 8 ஆண்டுகள் இசை அமைப்பாளாராக ஆக முடியா விட்டாலும் அப்பொழுதும் அதற்குதான் முயற்சி பண்ணி கொண்டே இருப்பேன் என்பார், அதனை கேட்டு விட்டு நொந்து நூலாகி ஜெய் கணேஷ் விலகி சென்று விடுவார். அருகில் உள்ள ஜோதிகா தேம்பி தேம்பி அழுதுக் கொண்டு இருப்பார். அஜீத் என்னை மன்னித்து விடு என்பார், அதற்கு ஜோதிகா உங்களை பற்றி நன்கு எனக்கு தெரியும், உங்களை நான் தவறாக எண்ண மாட்டேன் என்று அவரும் அழுதுக் கொண்டே போய் விடுவார். இந்த காட்சி படத்தில் கிட்டதட்ட 15 நிமிடங்கள் வரும், இந்த காட்சி அமைப்பும் மிக அருமையாக இருக்கும். ஒட்டுமொத்த இந்த காட்சி அமைப்பு ஓர் சாரசரி இளைஞன் வாழ்க்கையில் ஜெயிக்க எப்படி நீண்ட காலம் போராட வேண்டி உள்ளது என்பதும், நல்ல சுயநலம் இல்லா காதலும் எப்படி விட்டு
போகும் எனபதும், மிக தெளிவாக சொல்லப் பட்டுள்ளது.
இப்படி பட்ட அஜீத் அண்ணன் ரகுவரன் நெஞ்சுவலி காரணமாகவும், குடும்ப பொருளாதார சூழ்நிலை காரணமாகவும், மிகப் பெரிய லட்சியத்தை தூக்கி எறிந்து, மிக சதாரண மாத வேலை சம்பளத்திற்கு செல்ல ஆரம்பித்து விடுவார் அஜீத். அப்பொழுது அவரின் நீண்ட நாள் நண்பர் மணிவண்ணன், வாப்பா, போய் ஓர் புது முக இயக்குனரை பார்த்து விட்டு வரலாம் என்பார், அதற்கு அஜீத், வேண்டாண்ணே, இத்தனை பகல் பொழுதுகள், எத்தனை நாட்கள், எத்தனை வருடங்கள் இப்படி காத்து இருப்பது? இதுவரை நான் காத்து இருந்தது போதும் எனவும், "வாழ்க்கையில் வெற்றி முக்கியம், ஆனால் நான் வெற்றி பெற்று விட்டு திரும்பி பார்க்க என் குடும்பம் இருக்காது என்பார்" "ஒருவன் என்னதான் சமுதாயத்தில் வெற்றி அடைந்து விட்டாலும் அவனது தனிப்பட்ட குடும்ப சந்தோஷம் மிக முக்கியம்" என்று அஜீத் சொல்வது, பார்ப்பவர்கள் கண்களை பனிக்க செய்யும், இதயத்தை
ஏதோ ஒன்று அழுத்தும். அப்பொழுது மணிவண்ணன் ஏப்பா இந்த முடிவை அப்பொழுதே எடுத்து இருந்தால் அந்த பெண்ணை திருமணம் செய்து இருக்கலாமே என்பார். அதற்கு அஜீத் அன்றைய சூழ்நிலையில், இசையா? அவளா? என்று கேட்ட பொழுது இசை என்று அன்று தோன்றியது, இன்று இசையா? குடும்பமா? என்ற வருகின்ற பொழுது குடும்பம் என சொல்ல தோணுது அண்ணே என்று சொல்லி அழுது கொண்டு இருப்பார். இதுதான் வாழ்க்கையின் யாதார்த்தமோ?
இயக்குனர் துரை தமிழ் சினிமாவில் மிக கடினப் பட்டு ஜெயித்து இருப்பார் என்று தோன்றுகிறது. கதாநாயகனின் பாத்திர அமைப்பு, அன்பான பண்பான குடும்பம், நல்ல குடும்ப நண்பர்கள் இப்படி பல நல்ல விசயங்களை விரசம்
இல்லாமலும், வன்முறை இல்லாமலும் வைத்து இருப்பது அவர் ஓர் நல்ல இயக்குனாராக பரிமாணம் அளித்தார் இந்த திரைப் படத்தில். இப்படி பட்ட இயக்குனர் துரை ஏன் அடுத்த அடுத்த படங்கள் கொடுக்க முடியவில்லை?
அஜீத் கதாபாத்திரம் இவர்தானோ? இதே இயக்குனர் சிம்புவை வைத்து கிட்டதட்ட 4 ஆண்டுகளுக்கு பிறகு வன்முறை காட்சிகள் நிறைந்த "தொட்டி ஜெயா" என்ற படத்தையும் கொடுத்து, நானும் ஓர் சாரசரியான தற்பொழுது சமூகத்தில் எடுக்கின்ற / ஒடுகின்ற படங்களை எடுப்பவன் என்று சொல்லமல் சொல்லுவிட்டார் என்றே தோன்றுகிறது.
இயக்குனர் துரை "முகவரி" போல ஓர் நல்ல படத்தை மீண்டும் எடுப்பாரா?
மயிலாடுதுறை சிவா...
6 Comments:
உண்மைதான், "பொறமைபட வைக்கிற" குடும்பம்தான். !
நல்ல விமர்சனம்!
வசனம்: பால குமாரன் -ங்க!
இந்த படம் வெற்றி பெற்றதுக்கு, பால குமாரனும் ஒரு காரணகிறது என் எண்ணம்!
முகவரி எனக்கு மிகவும் பிடித்த படம்.
நீண்ட நாட்களுக்கு பிறகு எழுதுகிறீர்கள். வாழ்த்துக்கள்.
முகவரியின் கரு துரையின் சொந்தக்கதை தான் என்று அவருக்கு நெருங்கிய நண்பர்கள் சொன்ன செவிவழிச்செய்தி.
அதில் வரும் சூழல்கள், முக்கியமாக அஜீத்தின் அண்ணன் ரகுவரனின் நண்பராக வரும் ராஜீவ் போன்ற கதாபாத்திரங்கள் அவர் வாழ்வில் இருந்ததும் அது அவரை மிகவும் பாதித்ததும் அதே நண்பர்கள் வழியாகக் கிடைத்த செய்தி
எந்த அளவு உண்மை எனத் தெரியவில்லை...
பால குமரன் வசனமா? சூப்பர்..
நன்றி தென்றல்...
சத்யா தங்கள் வருகைக்கு நன்றி...
மயிலாடுதுறை சிவா...
அஜித் நடித்த கடைசிப்படம் .;) இந்தப்பட வெற்றிக்குப்பிறகும் அவர் தல வாலு என்று ஏன் போனார் என்று தெரியவில்லை . முகவ்ரி எனக்குப்பிடித்த எதார்த்தமான கதை.. அருமையான முடிவு
ரொம்ப நல்லா விமர்சனம் எழுதியிருக்கீங்க, சிவா.. இந்தப் படம் பார்த்ததில்லை. சந்தர்ப்பம் கிடைத்தால் பார்க்க வேண்டும் என்ற ஆவலைத் தூண்டிவிட்டீர்கள்..
நன்றி.
மயிலாடுதுறை விஜயம் பற்றி இன்னும் ஒரு பதிவும் காணோமே!!
அன்புடன்,
சீமாச்சு
Post a Comment
<< Home