இயக்குனர் சேரனுக்கு மனந்திறந்த மடல்....ஓர் ரசிகனாக....
வாசிங்டன் 2007
மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய இயக்குனர் சேரன் அவர்களுக்கு,
ஓர் சராசரி ரசிகனாக உங்களுக்கு ஓர் மனந்திறந்த மடலை எழுத ஆசைப் படுகிறேன்.
தமிழ்த் திரைப்பட வரலாற்றில் அடுத்த பாரதிராசா எனப் பேசப் பட்டவரும், தமிழ்த் திரைப் படத்தில் நல்ல பல சமுதாய கருத்துகளை இளைஞர்கள் கவரும் வண்ணம் மிக யதார்த்தமாக சொல்லி வருபவரும், கடைக் கோடி தமிழனும் ஓர் தரமான திரைப் படத்தை குடும்பத்தோடு சென்று பார்க்கத் தூண்டுபவருமான உங்களுக்கு தற்பொழுதைய படைப்பான "மாயக் கண்ணாடி" ஓர் சறுக்கலை அல்லது ஓர் சிறிய தோல்வியை உங்களுக்கு கொடுத்து இருக்கலாம். அதற்கு முன் தாங்கள் கடந்த வந்த பாதையை நாம் சற்று பின்னோக்கி பார்க்கலாமா?
கடுமையான போராட்டங்களுக்கு பிறகு, நீங்கள் முதன் முதலாய் திரைப் படம் எடுக்க ஆரம்பித்துவீட்டீர்கள்...!
பொற்காலம் : உங்களது படைப்புகளில் இந்தப் படம் ஓர் அற்புதமான படைப்பு என்றால் மிகையில்லை. சாரசரி அண்ணன் தன் ஊனமான தங்கைக்கு திருமணம் செய்ய பாடுபடுவதை கண் முன்னேநிறுத்தி இருந்தீர்கள், உடல் ஊனத்தை விட மன ஊனமே தவறு என்று மிக அழகாக வெண் திரையில்படம் பிடித்து காண்பித்து இருந்தீர்கள். கதையின் முடிவில் கதாநாயகன் ஓரு ஊனமான பெண்ணைத்திருமணம் செய்து கொண்டதாக காட்டி தமிழ் ரசிகர்களை ஓர் மாறுபட்ட தளத்தில் சிந்திக்க வைத்தீர்கள் என்றால் அது மிகை அல்ல. இந்த படத்தை ரஜினி பார்த்துவிட்டு நான் அழுதேன் எனவும்அவருடைய 100வது நாள் பட விழாவில் உங்களுக்கு "தங்க சங்கலி" பரிசு அளித்தார் என்பதும்அனைவரும் அறிந்த விசயம். பாராட்டுகள் பல.
பாரதி கண்ணம்மா: இந்த படமும் ஓர் அருமையான படம். தேவர் வீட்டு பெண் தாழ்த்தப்பட்ட பையனைத் திருமணம் செய்துக் கொண்டால் என்னென்ன சமுதாய சிக்கல்கள் வரும் என்பதைஓரு அருமையான காதல் கதை மூலம் சமுதாய கண்ணோட்டத்தின் பின் புலத்தோடு சொல்லி வெற்றி அடைந்தீர்கள். "இந்த பூமியில் நிறைவேறிய காதலை விட நிறைவேறாத காதலே அதிகம்"என்று பாரதி ராசா ஓர் விழாவில் சொன்னதைப் போல இந்த படம் நிறைவேறாத காதலைகதாநாயகியின் தற்கொலை மூலம் காண்பித்து காண்போரை கண்ணீர் கொள்ள செய்தீர்கள்.
தேசிய கீதம் : இது உங்களுக்கு ஓர் வெற்றி படமாக இல்லை எனலாம், ஆனால் நம் சமுதாயம்நல்லப் பல தலைவர்களைக் கொண்டு உருவாக்கப் பட்டது, அந்த சமுதாயத்தை மீண்டும் நல்லஅரசியல் தலைவர்களோடு கொண்டு செல்லப் பட வேண்டும் இளைஞர்களின் துணையோடு என்பதைசொல்ல நினைத்தப் படம். நிச்சயம் இது வெற்றி படம் அல்ல. அதே சமயம் மிக அறுவையான படமும் அல்ல.
வெற்றிக் கொடி கட்டு : மிகப் பெரிய வெற்றிப் படமாக இல்லாமல் இருக்கலாம், ஆனால் தரமானசமுதாய சிந்தனை உள்ள படம். இளைஞர்கள் வெளிநாட்டு மோகத்தில் எப்படி தவறான தரகர்கள் மூலம்ஏமாந்து விடுகிறார்கள் என்பதை சிந்தனையை தூண்டும் விதமாக வடிவமைத்து இருந்தீர்கள். இந்த நற்செயலுக்காக குடிஅரசு தலைவரின் விருதுப் பெற்று படம் ஆயிற்று. இந்த பரிசு உங்களை நிச்சயம்மிகப் பெரிய உந்துதலாக இருந்து இருக்கும், இதுப் போல் மேலும் நல்ல தரமான படங்களைத் தரஉங்களுக்கு தூண்டு கோலாக இருந்து இருக்கும்.
பாண்டவர் பூமி : இதுவும் ஓர் தரமான குடும்ப சித்திரம். கிராம வாழ்க்கையை விட்டு விட்டு பிழைப்புத்தேடி எல்லோரும் நகர வாழ்க்கைக்கு சென்றவிட்டதன் தவற்றை மிக அழகாக, தான் வாழ்ந்த கிராமத்திலேயேஓர் அழகான வீடு கட்ட ஓர் குடும்பம் மீண்டும் அதே கிராமத்திற்கு வருவதை ஓர் கவிதைப் போல் வடிவமைத்துஇருப்பீர்கள். வீட்டை கொஞ்சமாக செதுக்குவதைப் போல கதையும் நல்ல குடும்ப சூழலில் சொல்லி இருப்பீர்கள்.இது ஓர் அருமையான படமும் கூட.
ஆட்டோகிராப் : தமிழ் திரைப் படத்தை மாறுப்பட்ட பார்வையில் புதிய களத்தில் புதிய பரிமாணத்தோடுஓர் இளைஞனின் கடந்த கால வாழ்க்கையில் கடந்த வந்த பெண்களைப் பற்றி மிக அழகாக அருமையாக மிக யாதர்த்தமாக சொல்லி அனைத்துத் தரப்பு மக்களையும் கவர்ந்த படம் என்றால் அது மிகை அல்ல. பலவெளிநாட்டு விருதுகளை குவித்தப் படம். ஓர் அழகான கவிதை. இந்த படத்தில் நீங்கள் கதாநாயகனாக நடித்து, இயக்கம் மற்றும் நடிப்பு இரண்டிலும் வெற்றி பெற்றீர்கள். மொத்ததில் தமிழ்த் திரை உலகத்தை உங்களை அண்ணாந்து பார்க்க வைத்தீர்கள்.
தவமாய் தவமிருந்து : தமிழ்த் திரை உலகம் எப்பொழுதும் தாயின், மனைவியின் அருமை பெருமைகளைச் சொல்லிகொண்டு இருந்தக் காலத்தில் தந்தையின் உணர்ச்சிகளை, கனவுகளை, லட்சியங்களை மகனின் பார்வையில் திரையில்செதுக்கி இருந்தீர்கள். இதுவும் தமிழ் திரைப் பட வரலாற்றில் ஓர் மாறுபட்ட சித்திரம். தந்தையாக நடித்து இருந்தராஜ்கிரண் வாழ்ந்து இருந்தார். எல்லோராலும் பேசப் பட்ட படம். இதிலும் நீங்கள் கதாநாயகனாக நடித்து இருந்தீர்கள்.
இப்படி நீங்கள் கடந்து வந்த பாதையில் ஓரே ஓரு படம் தவிர மற்ற எல்லா படங்களும் வேறு வேறு கதை களங்களைஎடுத்து குடியரசு விருது வரை உயர்ந்த வரலாற்றை தமிழ்த் திரை உலகம் மறக்காது. ஓர் சராசரி ரசினாக நான் பெருமைஅடைகிறேன். மாற்று சினிமாவை கொடுக்க, சமுதாய சிந்தனைகளை எடுக்க, நம் இளைஞர்களின் கலை தாகத்திற்குஓர் வழிகாட்டியாக, அடுத்த பாரதிராசாவாக வெற்றி என்னும் ஏணிப் படிகளில் ஏறிக் கொண்டு இருந்த பொழுதுதான், இப்பொழுதுப் பேசப் படுகின்ற "மாயக் கண்ணாடி" படம். இது தோல்வி படம் என்றும், தயாரிப்பாளர் பஞ்சு அருணாசலத்திற்கு ஏகப் பட்ட நட்டம் என்றும், நம் பழைய சேரன் ஏங்கே? என்றும் ஊடகங்கள் கவலையோடு இருப்பதை நீங்கள் ஏற்றுக் கொள்ள தயாராக இல்லை.
உங்களது பேட்டி நக்கீரனில் விடியோவில் பார்க்கும் வாய்ப்பு ஏற்பட்டது. அதில் நீங்கள் உங்களின் தோல்விகளை ஏற்றுக் கொள்ள தயாராக இல்லை என்பது தெளிவாக தெரிகிறது. கடந்த ஓர் ஆண்டு உழைப்பு நீங்கள் எதிர்பார்த்த வெற்றி அடைய வில்லை என்றால் எவ்வளவு மனம் வேதனைப் படும் என்பது ஓர் சாரசரி ரசினாக புரிந்துக் கொள்ள முடிகிறது. ஆனால் நீங்கள்?பெருந்தன்மையோடு "மாயா கண்ணாடி" மக்கள் எதிர்பார்க்கும் அளவிற்கு எளிமையாக சொல்லப் படவில்லை, அது மக்களால் முழு மனத்தோடு அதனை ஏற்றுக் கொள்ள வில்லை என்பதை நீங்கள் இந்த ஒரு வாரத்திற்குள் உணரவில்லையே என்றுதான் மனம் வருத்தப் படுகிறது.
ஆனால் நீங்கள் உங்களது கதையை ரசிகர்கள் புரிந்துக் கொள்ளவில்லை என்று சொல்லுகிறீர்கள். இதுவரை நீங்கள் இயக்கிய படத்தை ரசித்த அதே ரசிகன்தான் இதனை புரிந்துக் கொள்ளவில்லை என்கிறீர்களா? நான் யாருக்கு ஏதை சொல்ல நினைத்தோனே அதை அவர்கள் புரிந்து கொண்டால் போதும் என்கிறீர்கள்!!!ஒரு தடவை இந்த படத்தை பார்த்தா உங்கள் கருத்து புரியாது என்கிறீர்கள்!!! அப்ப மீண்டும் மீண்டும் இதனை பார்க்க வேண்டுமா?!எல்லாவற்றிற்கும் மேலாக நான் எதை நினைத்து எடுத்தேனோ அதை அப்படியே சொல்லும் இளைஞனுக்குஒரு லட்சம் பரிசு என்று சொல்லுகிறீர்கள்!!! இது சினிமாவை ஓட வைக்க யுக்தி அல்ல என்றும் சொல்லுகிறீர்கள்!உங்கள் எண்ணத்தை பிரதிபலிக்கும் இளைஞனுக்கு "உதவி இயக்குனர்" வாய்ப்பு என்கிறீர்கள்!!! குலகல்வியை நீங்கள் ஆதரிக்கீறீர்கள் என்ற குற்றசாட்டை கூட ஓரு கலைரசிகனாக அதனை நான் ஏற்று கொள்ளவில்லை!!!சேரன் உங்களுக்கு என்னாவாயிற்று?!
பல தரமான வெற்றி படங்களை கொடுத்த உங்களுக்கு ஓர் சிறிய தோல்வியை தாங்கிக் கொள்ள முடியவில்லையா? உங்களை கலர் அடித்த முடியோடு பார்க்க மக்கள் தயாராக இல்லை என்பதை புரிந்துக் கொள்கிறீர்களா? உங்களால் மீண்டும் தரமான மற்றோரு படத்தை தர முடியும் என்றும் இன்னமும் என்னை போல் சாரசரி ரசிகனுக்கு நம்பிக்கை உள்ளது. இந்த தோல்வி உங்களுக்கு ஓர் மன மாற்றத்தை, ஓர் பாடத்தை, ஓர் அனுபவத்தை கொடுத்து, உங்களை அடுத்து ஓர் வெற்றிக்கு தயார் படுத்துகிறது என்று வைத்து கொள்ளலாமே?! ஆட்டோகிராப் மற்றும் தவமாய் தவமிருந்து இரண்டு படங்களும் உங்கள் நடிப்பு நன்றாக இருந்திதற்கு காரணம் அதன் கேரக்டர் அப்படி பட்டது. ஆகையால் அது எடுப்பட்டது. இந்த திரைத் துறைக்கு வருவதற்கு முன்பு நடிக்க வரவில்லை நீங்கள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். நீங்களே கூட எனக்கு நடிப்பை விட இயக்கமே ரொம்ப பிடிக்கிறது என்று முன்பே சொல்லி உள்ளீர்கள். பெருந்தன்மையோடு இந்த சிறிய தோல்வியை அல்லது சறுக்கலை ஏற்றுக் கொண்டு மற்றொரு ஒரு உன்னத படைப்பை நிச்சயம் உங்களால் தர முடியும் அதுவரை சராசரி ரசிகனின் விமர்சனத்தை வெறுக்க வேண்டாமே?
தமிழ்த் திரை உலகம் பல ஜாம்பவான்களை பார்த்து இருக்கிறது, அதில் எத்தனை பேரை இந்த தமிழ்ச் சமூகம் இன்னமும் நினைவில் வைத்து இருக்கிறது?
இதில் வரும் நல்ல / கெட்ட பின்னூட்டத்துடன் சூலை மாதம் அமெரிக்கா வரும் சேரனுக்கு இந்த கடிதம் மேலும் சுருக்கியோ அல்லது சிலக் கருத்துகள் சேர்த்தோ நேரில் கொடுக்கப் படும்....
நன்றி
மயிலாடுதுறை சிவா...
13 Comments:
படம் இன்னும் பார்க்கவில்லை. அதனால் "Judgement Reserved" :-)
நன்றி சத்ய ப்ரியன்
கிட்டதட்ட 10 விமர்சனங்கள் படித்தாயிற்று. சேரனின் பேட்டி நக்கீரனில் உள்ளது. அவரின் பேட்டி பார்த்து நொந்து நூலாகி போய்விட்டேன்...
மயிலாடுதுறை சிவா...
//இதில் வரும் நல்ல / கெட்ட பின்னூட்டத்துடன் சூலை மாதம் அமெரிக்கா வரும் சேரனுக்கு இந்த கடிதம் மேலும் சுருக்கியோ அல்லது சிலக் கருத்துகள் சேர்த்தோ நேரில் கொடுக்கப் படும்....
//
தயவு செய்து என் பதிவையும் அச்செடுத்து கொடுங்கள் சேரனுக்கு....
நன்றி
குழலி
வணக்கம். உங்கள் பதிவை படித்தேன்.
நிச்சயம் அவரிடம் கொடுக்க முயற்சிக்கிறேன். அவர் சற்று கோவகாரர். ஏற்கனவே அவரிடம் கிட்டதட்ட 5 மணி நேரம் கலந்து உரையாடி இருக்கிறோம்.
உங்களது பதிவின் பார்வை நிச்சயம் வித்தியாசமானது. உண்மையில் சேரன் "குலகல்வியை" ஆதரிக்கிறார் என்று ஆழமாக நம்புகீறீர்களா குழலி?!
மயிலாடுதுறை சிவா...
//
அவர் சற்று கோவகாரர்
//
அவர் அப்படி இருந்தால் அதை அவருடன் வைத்துக் கொள்ளட்டும். நம்மிடம் காட்ட முற்பட்டால் தக்க பதிலடி கிடைக்கும்.
இதில் கோபம் எங்கே வந்தது சிவா? அவருக்கும் நமக்கும் உள்ள உறவு ஒரு வாடிக்கையாளர் - விற்பனையாளர் உறவை போன்றது. நாம் அவரது வாடிக்கையாளர்கள். காசு குடுத்து படம் பார்க்கிறோம். ஒரு சட்டை வாங்குவது போல தான். அதை பிடிக்கவில்லை என்றால் பிடிக்கவில்லை என்று கூற நமக்கு முழு உரிமை இருக்கிறது.
ஏன் சட்டையாவது ஒரு முறைக்கு பல முறை பார்த்து வாங்குகிறோம். ஆனால் சினிமா? உலகிலேயே நாம் பார்ப்பதற்கு முன்னால் காசு கொடுத்து வாங்கும் ஒரே விஷயம் சினிமா தான்.
படம் நன்றாக இருக்கு என்று கூறும் போது தலையில் தூக்கி வைத்து ஆடும் இவர்கள், நன்றாக இல்லை எனும் போது காலால் மிதிப்பது ஒன்றும் ஆச்சரியம் அல்ல.
சத்யன்
உங்கள் கூற்று நியாமானது. நான் ஏன் அப்படி சொன்னேன் என்றால் நம்மக்கள் சினிமா மோகத்தின் காரணமாக அவரிடம் நிறைய கேள்விகள் கேட்கவும், சிலச் சமயம் சற்று கோப பட்டார். முடிந்தால் நக்கீரன் பேட்டி பாருங்கள் ரசிகர்களை அவர் சற்று கோப பட்டுதான் பேசி உள்ளார்.
அதே சமயத்தில் அவர் ஓர் நல்ல படைப்பாளி என்பதில் மாற்று கருத்து இல்லை!
மயிலாடுதுறை சிவா...
குழலி
நீங்கள் ஓய்வாக இருக்கும் பொழுது ஓர் மின் அஞ்சல் அனுப்புங்களேன்...
சிவா...
மயிலாடுதுறை சிவா,
வழக்கம் போல இந்த விடயத்திலும் நமது அலை வரிசை ஒத்து வருகிறது .சேரன் படமென்றால் விரைந்து சென்று தியேட்டரில் பார்க்கும் நான் இன்னும் 'மாயக்கண்ணாடி' பார்க்கவில்லை .நீங்கள் பார்த்து விட்டீர்களா ? பார்த்திருந்தால் உங்கள் கருத்தை அறிய ஆவலாயிருக்கிறேன்.
//உண்மையில் சேரன் "குலகல்வியை" ஆதரிக்கிறார் என்று ஆழமாக நம்புகீறீர்களா குழலி?!
//
நிச்சயமாக, படத்தில் கடைசியாக ராதாரவி பேசும் டயலாக்கில் ஒவ்வொரு வார்த்தையிலும் ஒளிந்துள்ளது அவரின் குலக்கல்வி நம்பிக்கை, இதற்காக ஆழமாக நோண்டி எல்லாம் படத்தை பார்க்க வேண்டுமென்ற அவசியமில்லை, சேரன் அந்த படத்தில் செய்யும் வேலை, ராதாரவியின் வேலை வசனம் இதுவே போதும் அவரின் எண்ண ஓட்டத்தை புரிந்து கொள்ள.... உண்மையில் சேரனுக்கு அப்படியான எண்ணம் இல்லையென்றால் இது அவரின் படைப்பின் தவறு சொல்லவந்ததை சரியாக சொல்ல முடியாமல் சேரன் தோல்வியடைகிறார்....
பாரதி கண்ணம்மாவிற்கு பின் சேரன் படம் மீதான எதிர்மறை விமர்சனம் எனக்கு இப்போது தான், தவமாய் தவமிருந்து நான் மிகவும் ரசித்த ஒரு படம்....
This comment has been removed by the author.
குழலி
நிச்சயம் மின் அஞ்சல் அனுப்புகிறேன்.
குலகல்வியை சேரன் ஆதரிக்கிறார் என்பதில் நான் முழு உடன் படவில்லை. அதே சமயத்தில் உங்கள் கருத்தை கவனத்தில் கொள்கிறேன்.
ஜோ
வருகைக்கு நன்றி
நிச்சயம் எழுதுகிறேன்.
சிவா
இவ்வுலகில் வாழ்வதற்கான எளிய வழி/சமன்பாடு எல்லாம் நாம் பார்ப்பதில் இருந்து எதிர்மறையாகவே இருக்கிறது.
ஆனால் ,
பரமபத விளையாட்டில் ஏணியில் ஏறி செல்வதைவிட பாம்பினால் கொத்தப்படுவதுதான் நமக்கு இன்பமாய் உள்ளது.
மனிதன் போட்டியில் தான் மிக உயர்ந்த படைப்புகளை படைக்கிறான் என நாம் நினைக்கறோம்.ஆனால் மனிதனின் மிக உயர்ந்த படைப்புகள் அவன் தன்னை மறந்த நிலையிலேயே உருவாகின்றன.
அது போல மனிதன் பணம் ஆடம்பரத்துக்காக போட்டியிட்டு வெல்ல முயலுவதால் பெரும்பாலோரின் முடிவு தோல்வி தான்.
ஆனால் அவனின் அறிந்து கொள்வதற்கான (கலை,இலக்கியம்,ஆராய்ச்சி இன்ன பிற)ஆர்வத்திற்கான முயற்சியே பெரும்பாலோருக்கு வெற்றியை கொடுக்கும். அப்படியில்லாதபடி மற்றவர்களை விட அதிக பொருளாசையின் முயற்சிக்குபதில் அவன் இருக்கும் நிலையிலேயே இருப்பதுதான் சரி என்பதுதான் அவர் சொல்ல வந்ததாக இருக்கும்.
நான் இன்னமும் படம் பார்க்கவில்லை,ஆனால் சேரனின் பல்ஸ் பார்க்க தெரியும் :)
மெளனம்
Post a Comment
<< Home