மாயக் கண்ணாடி வெற்றி படமா?
ஏப்ரல் 16 : தமிழ் திரைப் பட இயக்குனர்களில் சேரன் தனக்கென்று ஓரு பாதையை வைத்துக் கொண்டு மிக அருமையான தமிழ் திரைப் படங்களை கொடுத்துக் கொண்டு வருபவர். அடுத்த பாரதிராசா என்று சொல்லபடுபவர்.
ஆட்டோகிராப், தவமாய் தவமிருந்தை விட "பொற்காலம், பாரதி கண்ணம்மா" என் மனதை மிகவும் ஆழமாக பாதித்த படங்கள்.
"சிவாஜி" படத்தைவிட நான் "மாயக் கண்ணாடியை" ரொம்ப எதிர்பார்த்து வந்தேன். சிலப் பேர் படம் நன்றாக உள்ளது என்றும்? (Behindwoods) சிலப் பேர் சேரனுக்கு என்னாவாயிற்று(Sify) என்றும் சொல்கிறார்களே?
என்னைக்கு DVD வருவது என்றைக்கு அதனைப் பார்ப்பது? சேரன் பேட்டியெல்லாம் படிக்க போதே சற்று பயந்து கொண்டுதான் இருந்தேன்.
எப்படியாவது இந்த படம் சேரன் அல்லது தாயாரிப்பாளர் கை கடிக்காமல் ஓடிவிட்டால், மனம் தளராமல் அடுத்து நல்ல படங்கள் சேரன் கொடுப்பார்.
வலைப் பூ மக்களிடம் இருந்தும் மாயக் கண்ணாடி பற்றி விமர்சனங்கள் ஏதுவும் வரவில்லையே?!
நன்றி
மயிலாடுதுறை சிவா...
6 Comments:
Most likely the movie will tank in the box office. Hopefully he will stick to direction, his acting sucks, not a hero material.
சேரன் படங்கள் யதார்த்தமாக இருப்பதாக சொல்லப்ட்டாலும், கொஞ்சம் அமெச்சூர் நாடகத்தனமாக இருக்கிறது என நினைக்கிறேன். அதிலும் மெஸேஜ் சொல்லுகிறேன் பேர்வழி எனறு அவர் சில இடங்களில் மிக விலாவரியாக பாடம் நடத்த ஆரம்பித்து விடுகிறார். வெகுஜன புரிதலுக்கு அது உபயோகமாகிறது என்பது வேறு விஷயம். படங்கள் நன்றாக ஓடுகின்றன என்பது வேறு விஷயம். ஆனால் ஒரு கட்டத்தில் முபு அவர் படத்தைப் பார்த்த ரசிகனுக்கு கூட அவர் படம் அலுத்து விடுகிறது.ஏதும் சொல்ல விரும்பினால், சேரன் கொஞ்சம் நாசுக்காக சொல்வது எப்படி என்று தெரிந்து கொள்ள வேண்டும். அரசின் குடும்ப நல பிரசாரம் மாதிரி செய்யக் கூடாது.
மாயக்கண்ணாடி , மொக்கைக் கண்ணாடி என்று "கில்லி "ஆடியிருக்கிறார்களே பார்க்கவில்லையே..?? என்ன போங்க.!!!! :-) :-)
அட இதைப் பாருங்க...
http://balabharathi.blogspot.com/2007/04/blog-post_16.html
இன்றைய தினகரனில் விமர்சனம் உள்ளது. படத்தின் முன்னோட்டமோ விளம்பரமோ இடம்பெறாத சன் குழுமப் பத்திரிகையில் வந்த விமர்சனம் முழுமையாக ஏற்கமுடியுமா என்பது சந்தேகம்.
மயிலாடுதுறை சிவா,
படத்தின் முதற்கட்ட விமரிசனங்கள் என் போன்ற சேரன் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்திருக்கிறது . எனினும் படம் பார்த்தால் தான் உறுதியாக சொல்ல முடியும்.
Second half is like cheran film.First half is waste.Again behind behind the screen attack on reservation(Like desiya geetham).Slight varunashramam.You can see the film one time.
Post a Comment
<< Home