ஆதி திராவிட பெண்கள் - விமான பணிப்பெண்கள் பதவிக்கு...
ஆதி திராவிட பெண்கள் - விமான பணிப்பெண்கள் பதவிக்கு...
கலைஞர் அரசு பல சாதனைகளை தொடர்ந்து செய்து வருகிறது. அதில் இன்று குறிப்பாக "ஆதி திராவிட" மாணவிகள் "விமான பணிப் பெண்ணாக வருவதற்கு வழி வகுக்க கிட்டதட்ட 100 மாணவிகளுக்கு கழக அரசு படிப்பதற்கு / பயிற்சிக்கு 1 லட்சமும் மாதம் ரூபாய் 200 தரவிருக்கிறது. அதன் முதல் காசோலை மற்றும் அனுமதியை தமிழக அமைச்சர் தமிழ் அரசி தருகிறார்.
தாழ்த்தப்பட்ட, உரிமைகள் மறுக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்கள் இன்று சமூகத்தில் மென் மேலும் உயர கலைஞர் அரசு ஆதரவாக இருப்பது பாராட்டுக்குரியது.
இது நிச்சயம் "பெரியார் அரசுதான்". வாழ்க கலைஞர்!!!
நன்றி
மயிலாடுதுறை சிவா....
4 Comments:
மயிலாடுதுறை சிவா நீங்கள் ஒன்றை புரிந்திக்கொள்ள வேன்டும். நீன்ட தூர விமான பயனத்தில் சிரித்த முகத்துடன் உபசரிக்க அழகுள்ள பனிப்பென்கள் தேவை.
அழகுள்ள ஆதி திராவிட" மாணவிகள் "விமான பணிப் பெண்ணாக வருவதில் எந்த ஆட்சேபனையும் இல்லை. ஏறகனேவே ஏர்-இன்டியா பனிப்பெணகளை விமர்சித்து நிறைய வந்துள்ளது.நான் பார்த்தவரை கோட்டா முறையில் உள்ளே வந்த பணிப்பென்களுக்கு 35 வ்யது கு மேல் திமிருடன் பணிவிடை பெற்றுருக்கிரேன்.
விமாண பயணத்தில் 18- 25 வயது வரை தான் பெண்களை அனுமதிக்க வேண்டும். (இது கூட ஒரு சினிமா நாயகி போலத்தான்)
அதனால் தான் தனியார் நிறுவனங்களில் சிறு வயது பெண்களை வேலைக்கு எடுக்கிறார்கள். அழகுடன்/சிரித்த முகம் ஒரு பிளஸ் பாயின்ட்.
நானும் ஒர் வலைப்பதிவாளர் தான், ஆனால் இந்த விடயத்தில் என் முகம் காட்ட விரும்பவில்லை.
சுந்தரா
வணக்கம். உங்கள் கருத்தில் ஓரளவு யாதர்த்தம் இருக்கலாம், ஆனால் அதுவே உண்மையாகி விடாது.
எல்லா விமான பணிப் பெண்களும் நீங்கள் சொல்வது போல அழுகு அல்ல!!!
உங்களுடைய பின்னூட்டத்தில் "ஆதி திராவிட பெண்கள் அழகற்றவர்கள்" என்ற தோணி உள்ளது. இந்த எண்ணம் தவறு.
கெட்ட எண்ணங்கள் மற்றும் சுயநலம் உள்ள மேல்சாதி பெண்களை விட, அப்பாவி மற்றும் கறுப்பு மற்றும் அமைதியான ஆதி திராவிட பெண்கள் எவ்வளவு தேவலை என்பது என் கருத்து.
நன்றி
மயிலாடுதுறை சிவா...
சிவா
வணக்கம்.சமீபகாலமாகத்தான் தங்கள் மணிக்கூண்டு பதிவுகளை படிக்கிறேன்.அருமை, வாழ்த்துக்கள் !
சுந்தரா கருத்தில் எனக்கும் உடன்பாடில்லை...
காலம் காலமாக சமுதாயத்தில் ஒடுக்கி வைக்கப்பட்டுள்ள மனிதர்களை உயர்த்த முற்படும் போது இத்தகைய சலசலப்புகள் வருவது இயல்பே . முதல்வரின் இந்த முயற்சி நிச்சயம் வரவேற்க்கப்பட வேண்டிய ஒன்று என்பதில் ஐயமில்லை !
மிக்க நன்றி காளீ.
நீங்கள் சொல்வது மிகச் சரி.
நாம் தொடர்ந்து அவர்களுக்கு குரல் கொடுத்துக் கொண்டு இருப்போம்.
மயிலாடுதுறை சிவா...
Post a Comment
<< Home