Monday, April 23, 2007

அன்புடன் - சிநேகா - கெளதமி


இந்த வாரம் அன்புடன் சன் தொலைகாட்சியில் ஞாயிறு இரவு வருவதற்கு முன்பே இரண்டு மூன்று தினங்களாக, "பல்லாங்குழியில் வட்டம் பார்த்தேன் ஒற்றை நாணயம்" என்ற ஒரு பாடலை அரையிருட்டில் ஓர் உருவம் பாடிக் கொண்டே இருக்கும், அதனை கெளதமி அந்த பாடலை பாடுவது யார் தெரியுமா? ஞாயிறு இரவு அன்புடன், காணத் தவறாதீர்கள்! என்று சொல்லி கொன்று கொண்டு இருந்தார்.

அந்த ஞாயிறு இரவும் வந்தது அரையிருட்டில் பாடிக் கொண்டு இருந்த உருவம் முழு வெளிச்சத்தில்அந்த நடிகை சிநேகா பாட, கெளதமி உள்ளே இருந்து "Excellent, Excellent" என்று சொல்லிக் கொண்டுவந்தது படு கேவலமாக இருந்தது. சிநேகாவின் ப்ளஸ் பாயிண்ட் புடவை, அதற்கு நேர் மாறாக மிடியில் வந்து இருந்தார். உடம்பில் வயதான தோற்றம் நன்கு தெரிந்தது. தமிழில் நல்ல வாய்ப்பு இல்லை என்பதை நேரிடையாக ஒத்து கொள்ளமால் நல்ல கேரக்டர்காக காத்து இருப்பதாக சொன்னார். தங்கர் பச்சானின்"பள்ளி கூடம்" ரொம்ப எதிர்பார்ப்பதாக சொன்னார்.

உட்கார்ந்து ஆற அமர பேச ஆரம்பிப்பதற்குள் சிநேகா கடகடவென்று பேசித் தீர்த்து விட்டார். வழக்கம் போல் கெளதமியின் கேள்விகள் படு அபத்தமாகவும் தெண்டமாகவும் இருந்தது. அங்கே அங்கே "Lovely" என்றும்"Excellent" என்றும் "Wow" என்றும் "Really" என்றும் சொல்லி மேலும் மேலும் வெறுப்பேத்திக் கொண்டு இருந்தார். Commercial Break கிற்கு simple ஆக சொல்லமால் செயற்கையாக ஏதோ சொல்லிக் கொண்டு இருந்தார். Break முடிந்து மீண்டும் காட்சிக்கு செல்லும் பொழுது "உங்களை மீண்டும் ராஜாகங்கத்திற்கு அழைத்து செல்லவா?" என்று கேட்டு வெறுப்பு ஏத்தினார் என்றால் அது மிகையாகது.

சிநேகாவின் நெருங்கிய தோழர் நடிகர் "ஷ்யாம்" என்றார். இயக்குனர் சீமானின் மூலம் "தமிழ் மொழி"மீது ஆர்வம் வந்தது என்றார். அடிக்கடி எங்க அப்பா, அம்மா, அக்கா, அண்ணன் என்று குடும்பத்தைப் பேசிக் கொண்டு இருந்தார்.

அன்புடன் நிகழ்ச்சியில் ஏதாவது புதிதாக செய்ய வேண்டும் என்ற காரணத்தால் கெளதமி இந்த வாரம்சிநேகா அம்மா, சிநேகாவின் அக்கா பையன் நித்தின் வந்து நிகழ்ச்சியை மேலும் மேலும் வெறுப்புஏத்திக் கொண்டு இருந்தார்கள். இப்படியே சென்றால் எதிர்காலத்தில் அவர்கள் வளர்க்கும் ஜிம்மிநாய் குட்டி, எருமை/பசு மாடு, பூனைக் குட்டி எல்லாம் வர ஆரம்பித்து "சிநேகா" ரொம்ப நல்லடைப், தினமும் அவர்கள் பக்கத்தில் தான் சாப்பிடுவேன், தூங்குவேன் என்று சொன்னால் ஆச்சர்யம் இல்லை.

மொத்ததில் (சத்யராஜ் தவிர) எல்லா பேட்டிகளும் தெண்டம் மற்றும் செம அறுவை. கெளதமியின் பேச்சுகள் மற்றும் கேள்விகள் அனைத்தும் செயற்கையாக / போலியாக இருந்தது. பேட்டியில் ஓர் உயிரோட்டம் இல்லை. அத்தனை கொடுமைகளையும் பார்த்து எழுதுவதற்கு மன்னிக்கவும்.

நன்றி
மயிலாடுதுறை சிவா...

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

14 Comments:

Blogger SathyaPriyan said...

//
மொத்ததில் (சத்யராஜ் தவிர) எல்லா பேட்டிகளும் தெண்டம் மற்றும் செம அறுவை. கெளதமியின் பேச்சுகள் மற்றும் கேள்விகள் அனைத்தும் செயற்கையாக / போலியாக இருந்தது. பேட்டியில் ஓர் உயிரோட்டம் இல்லை.
//
இது உங்கள் கருத்து மட்டுமா? இல்லை உங்கள் குடும்பத்தினரும் அவ்வாறு தான் நினைக்கிறார்களா?

எனக்கென்னவோ சத்யராஜ் தவிர்த்த வெறு சிலவும் பிடித்திருந்தது சிவா. மாதவன் பங்கெடுத்த வாரம், சிம்புவின் சில கருத்துக்கள் போன்றவையும் பிடித்திருந்தன.

Monday, April 23, 2007 11:50:00 AM  
Blogger மயிலாடுதுறை சிவா said...

சத்யன்

வருகைக்கு நன்றி. இவைகள் என் கருத்து மட்டுமே. பருத்தி வீரன் கார்திக் பேட்டி பரவாயில்லை.

மாதவன் பேட்டியில் ஓர் சூப்பரியாட்டி காம்பள்க்ஸ் தெரிந்தது.

சத்யராஜ் தவிர நிறைய பேரிடம் யாதர்த்தம் இல்லை என்பது என் தாழ்மையான கருத்து.

சத்யன், யோசித்து பாருங்கள் சன் டிவியில் ஞாயிறு தோறும் இரவு ஒரு மணி நேரம் கிடைத்தால் பிரபலங்களிடன் பேட்டி எடுத்து எப்படி எல்லாம் அசத்தலாம்?!

கெளதமி சொதப்பவில்லை என்கீறீர்களா?

மயிலாடுதுறை சிவா...

Monday, April 23, 2007 12:05:00 PM  
Blogger SathyaPriyan said...

//
சத்யன், யோசித்து பாருங்கள் சன் டிவியில் ஞாயிறு தோறும் இரவு ஒரு மணி நேரம் கிடைத்தால் பிரபலங்களிடன் பேட்டி எடுத்து எப்படி எல்லாம் அசத்தலாம்?!

கெளதமி சொதப்பவில்லை என்கீறீர்களா?
//
அவரிடம் நான் இதைவிட பெரிதாக ஒன்றும் எதிர் பார்க்கவில்லை. முதல் வாரம் கமலின் பேட்டியை அவர் சொதப்பிய உடனேயே எனது எதிர்பார்ப்புகளை மூட்டை கட்டிவிட்டேன் சிவா. அதனால் ஏமாற்றம் இல்லையோ என்னவோ?

//
சத்யராஜ் தவிர நிறைய பேரிடம் யாதர்த்தம் இல்லை என்பது என் தாழ்மையான கருத்து.
//
உண்மை.

அவர் சினிமாவில் வாய்ப்புகள் வராமல் ஒதுங்கி இருந்த நேரம். தனது சம்பளத்தை மிகவும் குறைத்துக் கொண்டார். அதை பற்றி ஒரு பேட்டியில், நீங்கள் தயாரிப்பாளர்களின் கஷ்டத்தை உணர்ந்து சம்பளத்தை குறைத்துக் கொண்டீர்களா? என்ற கேள்விக்கு அவர் அளித்த பதில் கீழே.

அதற்கு மேல் எவன் எனக்கு சம்பளம் தருவான்? சூப்பர் ஸ்டார் சம்பளம் நான் கேட்டால் எவனும் தர மாட்டான், நிழல்கள் ரவி சம்பளம் (இருவரும் நெருங்கிய நண்பர்கள்) எனக்கு கொடுத்தால் நான் நடிக்க மாட்டேன். என்னால் அவ்வளவு தான் கேட்க முடியும் கேட்கிறேன்.

தமிழ் சினிமாவில் நான் மிகவும் மதிக்கும் நபர்களில் இவரும் ஒருவர்.

Monday, April 23, 2007 12:17:00 PM  
Blogger தென்றல் said...

முதல் நிகழ்சிலேயே, அம்மணி கமலுடன் ஆன பேட்டியல 'சொதப்பனுதலேயே' தெரிஞ்சிருச்சி .... இது 'அன்புடன்...' இல்ல 'எரிச்சலுடன் ...'தானு ;)

/இரவு ஒரு மணி நேரம் கிடைத்தால் பிரபலங்களிடன் பேட்டி எடுத்து எப்படி எல்லாம் அசத்தலாம்?!
/
அசத்தலான உதாரணத்துக்கு, 'Koffee with Anu' ..

/நிறைய பேரிடம் யாதர்த்தம் இல்லை என்பது என் தாழ்மையான கருத்து.
/
உண்மைதான், சிவா... கெளதமியும் சேர்த்து...

Monday, April 23, 2007 12:48:00 PM  
Blogger Unknown said...

I agree with you 100 percent. Gowthami is NO Barbara Walters. But she tries to portray it miserably. She is lifeless as well as fake and artificial. Sneha was a fly on broken pot (chatty Kathy) and self posting.

Rumya

Monday, April 23, 2007 3:19:00 PM  
Blogger கானா பிரபா said...

ஒவ்வொரு வாரமும் பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்னு சொல்லிச் சொல்லி இந்த நிகழ்ச்சியைப் பார்த்து வருகிறேன். ஒரு புரபெஷனல் நிருபர்/ அறிவிப்பாளினி என்ற ஸ்தானத்திற்கு வரவே மாட்டேங்கிறாங்க. திண்ணையில் இருந்து குசலம் விசாரிப்பது போல இருக்கிறது.

Monday, April 23, 2007 3:50:00 PM  
Blogger மயிலாடுதுறை சிவா said...

சத்யன்

நீங்கள் சொல்வது ஓகே!

தென்றல்

நீங்கள் சொல்வது மிகச் சரி!

ரம்யா

சிநேகா அலட்டல் தாங்க முடியவில்லை!

கானாபிரபா

நீங்கள் சொல்வதை போல இவர்கள் மிக அருமையாக பேட்டி எடுப்பார்கள் என்ற நம்பிக்கை
இல்லை...

என் வலைப் பூவிற்கு வருகை தந்த அன்பு நெஞ்சங்களுக்கு மனமார்ந்த நன்றிகள் பல...

மயிலாடுதுறை சிவா...

Monday, April 23, 2007 6:38:00 PM  
Blogger மங்கை said...

ஐயோ கொடுமை இந்த நிகழ்ச்சி

நம்ம வலைப்பதிவாளர் ஒருத்தர் இதப் பத்தி ஒரு பதிவு போட்டு இருந்தார்..

அதென்ன வாய தெறக்காமத்தான் பேசுவேன்னு ஒரு பிடிவாதம்னு தெரியலை கவுதமிக்கு...

முதல் எழுத்து மட்டும் தான் உச்சரிப்பார்.. அப்புறம் நாம தான் யூகிக்கனும் என்ன சொல்றார்னு...

Monday, April 23, 2007 6:50:00 PM  
Blogger இலவசக்கொத்தனார் said...

அவங்க பள்ளிக்கூடம் பத்தி எங்க பேசினாங்க? பல்லிக்கூடத்தைப் பத்தி இல்ல பேசினாங்க. ஹிஹி...

Monday, April 23, 2007 6:53:00 PM  
Blogger கார்த்திக் பிரபு said...

chk my latest post

Monday, April 23, 2007 11:34:00 PM  
Blogger பாரதிய நவீன இளவரசன் said...

அப்போ... நம்ப எல்லாருமே கவுதமி மேடம் நிகழ்ச்சியைத் தவறாமப் பாக்குறோம்னு சொல்லுங்க!

தலைவர் சத்யராஜ்... இந்த நிகழ்ச்சீன்னு இல்ல, எந்த நிகழ்ச்சியில வந்தாலும் யதார்த்தமான கலக்கல் இருக்கத்தான் செய்யும். அதுதான் அவருடைய ஸ்பெஷாலிடி!

Wednesday, April 25, 2007 1:28:00 AM  
Blogger இலவசக்கொத்தனார் said...

சிவா,

இந்த சனிக்கிழமை நியூ ஜெர்ஸியில் ஒரு வலைப்பதிவர் சந்திப்பு நடக்க இருக்கிறது. தாங்களால் கலந்து கொள்ள முடியுமா?

http://elavasam.blogspot.com/2007/04/floralia-2007_25.html

ஷைலஜா அவர்கள் தலைநகர பகுதியில் இருந்து யாராவது வந்தால் உடன் வர முடியுமா எனப் பார்க்கிறார்கள். தங்கள் சேவை நாட்டுக்குத் தேவை. :)

Wednesday, April 25, 2007 8:39:00 AM  
Blogger மயிலாடுதுறை சிவா said...

இலவச கொத்தனார்

நிச்சயம் வந்து இருப்பேன் முன்பே தெரிந்து இருந்தால்...வருகிற சனி / ஞாயிறு எனது சகோதரர் மற்றும் சகோதிரி வருகிறார்கள் வெளியூரில் இருந்து...

வலைப் பூ சந்திப்பு மிகவும் பிடித்த ஒன்று கலந்து கொள்ள முடியவில்லை என்று வருந்துகிறேன்.

தங்கள் அழைப்பிற்கு மிக மிக நன்றி

மயிலாடுதுறை சிவா...

Wednesday, April 25, 2007 7:32:00 PM  
Blogger -L-L-D-a-s-u said...

சிவா...

உங்களுடைய பல கட்டுரைகள் , பலரை பாராட்டியபடி தான் வந்துகொண்டிருக்கும். நான் கூட ஏன் இவர் இப்படி எல்லோருக்கும் ஜால்ரா(No hard feelings please ;)) அடிக்கிறார் என்று நினைப்பேன் .. இங்கே கௌதமியை பாராட்டியிருப்பீர்களோ என்று நினைத்து வந்தேன். நல்லவேளை..

அனு அழகாக செய்கிறார். விருந்தினரும் அருமையாக இருக்கும் பட்சத்தின் கேடகவே வேண்டாம். நான் பார்த்தவற்றில் ஜெயராம் கங்கை அமரன், ஷாம் , சந்தியா கலந்து கொண்ட நிகழ்ச்சிகள் அருமையாக இருந்தன.

Wednesday, April 25, 2007 9:24:00 PM  

Post a Comment

<< Home

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது