கங்கை கொண்ட சோழப் புரம் மற்றும் திருவள்ளூவர் சிலை - கன்னியாகுமரி
வாசிங்டன் மே 23 2007
மூன்று மாதங்களுக்கு முன்பு தமிழகம் சென்ற பொழுது நண்பர்களோடு இரண்டு மறக்க முடியாத இடங்களுக்கு சென்று வந்தேன். ஒன்று எப்பொழுதும் செல்லும் இடம், மற்றொன்று கிட்டதட்ட 10 ஆண்டுகளாக மிகவும் பார்க்க ஆசைப் பட்ட இடம்.
முதலாவது கங்கை கொண்ட சோழப் புரம். தஞ்சை மாவட்டத்தில் மிகவும் புகழ் பெற்று விளங்கும் கோவில்களில் இதுவும் ஒன்று, ஆனால் பிரபலம் இல்லாமல் உள்ள கோவில் என்பது மனதிற்கு வருத்தமான செய்தி. தஞ்சை பெரிய கோவிலைப் போலவே இதுவும் இருக்கும். ஆனால் என்னைப் பொறுத்தவரை சோழப் பரம்பரையை சேர்ந்த ராஜா ராஜன் தந்தை கட்டியப் பெரிய கோவில் (பிரகதீஸ்வரர் ஆலயம்) விட மகன் ஆகிய ராஜேந்திர சோழன் கட்டிய கங்கை கொண்ட சோழப் புரமே தனி அழகு வாய்ந்தது என்றால் அது மிகை அல்ல.
www.ImageShack.us" />
மயிலாடுதுறையில் இருந்து குத்தாலம் வழியாகவும் செல்ல அல்லது ஆடுதுறை வழியாகவும் செல்ல வழி உள்ளது. மயிலாடுதுறையில் இருந்து கிட்டதட்ட 75 கீ.மீ தான் இருக்கும். ஆனால் குத்தாலத்திற்கு பிறகு சாலைகள் தரமானதாக இல்லை. கும்பகோணத்தில் இருந்து சென்னை செல்லும் வழியில் இடதுப் பக்கம் இந்த பிரமாண்டமான, அழகான, அதிகம் பக்தர்கள் காணப் படாத ஒர் அழகான ஆலயம்தான் இந்த கங்கை கொண்ட சோழப் புரம். தஞ்சை பெரிய கோவில் ஓர் நகரத்தின் உள்ளே இருப்பதாலும், அருகே தஞ்சையின் பேருந்து நிலையம் இருப்பதாலும், சற்று பிரபலமான கோவிலாக உள்ள காரணத்தால் பக்தர்களும், பார்வையாளர்களும் அதிகம் தென் படுகிறார்கள். ஆனால் கங்கை கொண்ட சோழப் புரம் அப்படி அல்ல, நகரத்தின் உள்ளே இல்லாததாலும், ஊருக்கு எல்லையில் எங்கோ உள்ளதாலும் இந்த கோவில் பிரபலம் இல்லாமலும், அதிக வருமானம் இல்லாமலும் காட்சி அளிக்கிறது.
www.ImageShack.us" />
இப்படி ஓர் சிவ ஸ்தலம், அதுவும் மிக பிரமாண்டத்துடன் காட்சி அளிக்கும் ஓர் ஆலயம் சென்னையிலோ, மதுரையிலோ, டெல்லியிலோ இருந்து இருந்தால் நிச்சயம் மேலும் மேலும் பிரபலம் அடைந்து அதிக பக்தர்களின் எண்ணிக்கையை தொட்டு இருக்கும். தஞ்சைப் பெரிய கோவிலைப் போலவே இருபுறமும் மிக அழகான புல்தரை பரந்து விரிந்து காணப்பட்டு இருக்கும். கங்கை கொண்ட சோழப் புரத்திற்கு என சோழர் காலத்து தல புராணம் நிறைய உள்ளது. தமிழகம் செல்லும் பொழுது தஞ்சை அல்லது நாகை மாவட்டம் சென்றால் அவசியம் பார்க்க வேண்டிய ஊர். புகைப் படம் எடுக்க அருமையான இடமும் கூட. இதோ என் புகைப் பட கருவியில் படமாக்கிய சில படங்கள் உங்கள் பார்வைக்கும்...
www.ImageShack.us" />
www.ImageShack.us" />
www.ImageShack.us" />
அடுத்து நான் நீண்ட நாட்களாக ஆசைப் பட்ட இடம், நமது தமிழின் பாரம்பரிய இலக்கியத்தின் முன்னோடியான திருக்குறளை தமிழுக்கு தந்த திருவள்ளுவர் சிலையை. கன்னியாகுமரியின் அழுகுக்கு அழுகு சேர்க்கிறது இந்த சிலை. "தமிழன் என்று சொல்லுடா, தலை நிமிர்ந்து நில்லுடா" என்ற
வாக்கிற்கு ஏற்ப நம் திருவள்ளூவர் சிலை பிரமாண்டமாய் 133 அடி உயரத்தோடு காட்சி அளிக்கிறது. கன்னியகுமரி கடல் அலைகளின் நடுவே இந்த சிலையை பார்க்கும் பொழுது தெல்லாம் மனம் எல்லையில்லா மகிழ்ச்சி அடைகிறது.
கலைஞருக்கு இலக்கியத்தின் மீது காதல் உள்ளது என்பது
எல்லோரும் அறிந்த விசயம், ஆனால் உலக வரலாற்றில் இலக்கிய படைத்த ஓர் ஆசான் திருவள்ளூவருக்கு சிலை வைத்து தமிழன் பெருமையை உலகு அறிய செய்து, குமரி முனைக்கு பெருமை சேர்த்தவர் நம் கலைஞர். இதனையும் எனது புகைப்பட கருவியில் சிலவற்றை தட்டினேன். இதுவும் உங்கள் பார்வைக்கு...
அடுத்த முறை தமிழகம் செல்லும் பொழுது அவசியம் போய் வாருங்கள்...
நன்றி
மயிலாடுதுறை சிவா...
7 Comments:
சிவா,
நீங்க குறிப்பிட்டது போல் கங்கை கொண்ட சோழபுரம் மிகவும் அற்புதமான அழகான கோவில்.
// நகரத்தின் உள்ளே இல்லாததாலும், ஊருக்கு எல்லையில் எங்கோ உள்ளதாலும் இந்த கோவில் பிரபலம் இல்லாமலும், அதிக வருமானம் இல்லாமலும் காட்சி அளிக்கிறது.
//
கூட்டம் அதிகமில்லாததும் கூட ஒருவிதத்தில் அழகு தான். பொதுவாக நம் கோவில்கள் commercial ஆகிவிட்டது. இக் கோவில் அதற்கு விதிவிலக்கு. கோவிலுக்குச் சென்றால் நிம்மதி கிடைக்கும் என்பது, இங்கு சென்றால் நிச்சயம் கிடைக்கும். பத்து ஆண்டுகளுக்கு முன்பு நானும் எனது நண்பர்களுடன் சென்றது இன்னும் நினைவில் இருக்கிறதென்றால் பாருங்கள்.
உங்கள் பதிவு என்னை மீண்டும் கங்கை கொண்ட சோழபுரத்திற்கு கொண்டு சென்று விட்டது.
நல்ல பதிவு.
என்றும் அன்புடன்
சதங்கா
தஞ்சை பெரிய கோயில் போலவே ஒற்றைக்கல்லால் விமானம் கட்டப்பட்டதாம்.சிறப்பு வாய்ந்ததாக இருந்தாலும் ராசி இல்லாத காரணத்தால்[அரசியல் வாதிகளுக்கு]மறக்கப்பட்ட,மறுக்கப்பட்ட பராமரிப்பு.
வேண்டுமானால் ரஜினியை ஒருதரம் போகச் சொல்லலாம்.அப்புறமென்ன திருவண்ணாமை கிரிவலம் மாதிரி கூட்டம் பிச்சிக்கும்.
சதங்கா
தங்கள் வருக்கைக்கு மிக நன்றி. தமிழகம் செல்லும் பொழுதுதெல்லாம் நான் அவசியம் அந்த வரலாற்று சின்னத்தை பார்த்துவிட்டு வருவேன். எத்தனை முறை பார்த்தாலும் அலுப்பு தராத இடம்....
கண்மணி
கொடுமையை பார்த்திங்களா? ஓர் வரலாற்று சின்னத்தை பிரபலப் படுத்த ஓர் நடிகர் தேவைப் படுகிறார்?....
மயிலாடுதுறை சிவா...
இரண்டு இடங்களுக்குமே கல்லூரியின் இறுதி ஆண்டில் சென்றது. பல வருடங்கள் ஆகிறது.
இரண்டாம் முறை நட்சத்திரம் ஆனதற்கு வாழ்த்துக்கள்.
நன்றி சத்ய ப்ரியன்
சிவா..
படங்களை எடுக்கும்போது காமிராவை சாய்க்கக் கூடாது என்பார்கள். உங்களின் படங்களில் அதிகம் சாய்ந்துள்ளது .
கேள்விப்பட்டுள்ளேன். இந்தியா வந்த போதும் தஞ்சையையே தரிசித்தேன். இதுவும் ஒரே மாதிரியான கட்டிட அமைப்பாக உள்ளது. காலடி படா புற்தரையே பிரபலமின்மைக்குக் சான்றாக உள்ளது.
அழகிய படங்கள்.
Post a Comment
<< Home