100வது பதிவும், 1000 பின்னூட்டங்களும்....
வாசிங்டன். நவம்பர் 2007
வணக்கம். தமிழ் அன்பர்களே. கடந்த 3 மாதங்களாக நிறைய எழுத நினைத்தும், நேரம் இல்லை என்றுபொய் சொல்லமால் முழுக்க முழுக்க சோம்பேறி தனமாக இருந்துதான் முக்கிய காரணம் (சென்னைஆட்டோவில், மது, மாதுவை விட சோம்பேறிதனம் மோசம்) என்று படித்ததாக நினைவு?!
இது என்னுடைய 100வது பதிவு. கடந்த வந்த பாதையில் உருப்படியாக எழுதிய பதிவு கிட்டதட்ட20க்கும் குறைவு. ஆனால் கற்றவை ஏராளம். கிட்டதட்ட 1100 பின்னூட்டங்கள் வந்தன. அதில் சிலவழக்கம் போல் கடுமையாக விமர்சித்து வந்தன. எல்லாம் சுவையான மற்றும் மறக்க
முடியாத அனுபவம்.
கடந்த 3 ஆண்டுகளில் வலைப் பூ மூலம் நல்ல தமிழ் நண்பர்கள் கிடைத்தார்கள் என்றால் அது மிகைஅல்ல. ஒரு சில முகம் தெரியாத (?) விமர்சகர்களும் கிடைத்தார்கள். அவர்களில் சிலர் மயிலாடுதுறையை சேர்ந்தவர்கள் என்பது மேலும் ஓர் இனிப்பான செய்தி!!! வாழ்க மயிலாடுதுறை!!!
ஓய்வு கிடைக்கும் பொழுது தமிழ்மணம் படிக்க ஆரம்பித்த காலம் போய், அன்பு நண்பர் மூக்கு சுந்தர்அன்பு தொல்லையால் மணிகூண்டு என்ற பெயரில் வலைப் பூ ஆரம்பித்து கொஞ்சமாய் கொஞ்சமாய்எழுத ஆரம்பித்து இன்று 100ஐ எட்டியாகிவிட்டது. ஒவ்வோரு முறை ஏதாவது ஓர் புது பதிவு போடும்பொழுதும் இன்னும் நன்றாக எழுத வேண்டும் என்று மனம் சொன்னாலும், நான் நன்றாக எழதவில்லைஎன்றே மனசாட்சி சொல்லி கொண்டே உள்ளது. நன்கு எழுத நிச்சயம் முயற்சிக்க வேண்டும்.
கடந்த 3,4 ஆண்டுகளில் ஏராளமான எண்ணற்ற மனதை தொட கூடிய, சிந்தனை தூண்ட கூடிய, நல்ல பல கருத்து உள்ள கட்டுரைகள், சினிமா செய்திகள், விமர்சனங்கள், அரசியல் விழிப்புணர்வு மிக்க பதிவுகள், தரமான மாற்று கருத்துகள் கொண்ட பதிவுகள் இப்படி ஏராளமாக படித்தேன், படித்துக்கொண்டும் இருக்கிறேன் என்றால், அதற்கு தமிழ் மணத்திற்கு நன்றிகள் பல...
இனிமேல் நிச்சயம் மாதம் 2 அல்லது 3வது பதிவு எழுத வேண்டும் என்றுப் பிரியப் படுகிறேன். அடுத்த மாதம் தமிழகம் செல்லுகிறேன், மேலும் பல புதிய செய்திகளை எழுத வேண்டும் என்று ஆசை! குறிப்பாக என் பிறந்த மண் 'மயிலாடுதுறைப்' பற்றி நிறைய எழுதப் பிரியப் படுகிறேன்.
சீக்கரம் நல்ல தகவல்களோடு உங்களை சந்திக்கிறேன்.... இதுவரை என்னை வாழ்த்திய மற்றும் தொடர்ந்து விமர்சனம் செய்யும் என் நண்பர்களுக்கும் நன்றிகள் உரித்தாகட்டும்!!!
நன்றி
மயிலாடுதுறை சிவா....
8 Comments:
ம.சிவா
வாழ்த்துகள் - 100 பதிவுகளுக்கும் 1100 மறுமொழிகளுக்கும்.
எல்லாப் பதிவுகளுமே நல்ல பதிவுகள் தான். தமிழகம் வருக.
தொடர்க பதிவுகளை
நல் வாழ்த்துகள்
மிக்க நன்றி சீனா
மயிலாடுதுறை சிவா...
வாழ்த்துக்களுடன்...!
வரவேற்கும் அளவு தகுதியில்லை
மறு வரவில் மகிழும்....!!!
100 அடித்தும் ஆடாமல் அசையாமல் நின்றாடும் ம.சிவாவினை வாழ்த்த வயதில்லை வணங்குகிறோம்!(இந்த பாராட்டினை கண்டுப்பிடித்தவன் எவனோ தெரியலை வாழ்க அவன் குலம்)
எனக்கு ஒரு சந்தேகம் , உங்கள் பதிவுகளுக்கு வந்த பின்னூட்டங்களின் எண்ணிக்கையை எப்படிக்கண்டுப்பிடித்தீர்கள், ஒவ்வொரு பதிவா போய் எண்ணி பார்த்தேன்னு சொல்லிடாதிங்க :-)).எப்படினு சொன்னா எனக்கும் உபயோகமாக இருக்கும்.
அவன் அவன் இங்கே ஒரு பதிவுக்கே 1000 பின்னூட்டம்லாம் வாங்குறாங்க நீங்க என்னடானா 100 பதிவுக்கு 1100னு சொல்றிங்க என்னை விடப்பாவப்பட்ட சென்மமா இருப்பிங்க போல தெரியுதே :-))
நானும் ரொம்ப நாளா 100வது பதிவு வந்ததும் ஆத்தா நானும் 100 அடிச்சுட்டேன்னு சொல்லி ஒரு பதிவு போடனும்னு திட்டம் தீட்டி வைத்திருந்தேன், ஆனால் சோகம் என்னவென்றால், நான் 100 அடித்தது எனக்கே தெரியவில்லை, சமிபத்தில் டாஷ் போர்ட் பார்த்த போது 102 பதிவுகள்னு காட்டுது ::-((
இதே போல தான் 50 வது பதிவையும் தவற விட்டேன், இனிமே 150 வ்ரும் போது உஷாரா இருக்கணும்னு முடிவு செய்து இருக்கேன் :-))
நன்றி ஆயில்யன் மற்றும் வவ்வால்
என்னுடைய பின்னூட்டங்கள் அனைத்தும்
yahooவில் சேர்த்து வைத்து இருக்கிறேன்.
அல்லது
Blogger's page ல் ஒவ்வோரு பதிவிற்கும் அருகே எத்தனை என்று காட்டும்.
1000 பின்னூட்டங்கள் 100 பதிவிற்கு கம்மிதான், ஆனால் கிட்டதட்ட 1000 நபர்கள் வந்து இருக்கிறார்கள் மகிழ்ச்சிதானே?!
மயிலாடுதுறை சிவா...
வாழ்த்துக்கள் சிவா.
பின்னூட்டமிடுபவர்கள் மட்டுமே பதிவுகளை படிக்கிறார்கள் என்பது உண்மை இல்லையே. நான் தங்களின் பதிவுகளை தொடர்ந்து படித்திருந்தாலும் பின்னூட்டங்கள் இட்டது மிக சில பதிவுகளுக்கே.
மீண்டும் வாழ்த்துக்கள். தங்கள் பயனம் முடிந்ததும் பயனக் குறிப்புகளை பதியுங்கள்.
ஆவலுடன்,
சத்யா
வாழ்த்துக்கள் .. 100 பதிவுக்கும் 1000 பின்னூட்டத்திற்கும்..
\\குறிப்பாக என் பிறந்த மண் 'மயிலாடுதுறைப்' பற்றி நிறைய எழுதப் பிரியப் படுகிறேன்//
ரொம்ப மகிழ்ச்சி..
ஊக்கத்திற்கும் வாழ்த்திற்கும் நன்றிகள் பல : பாலா, சத்யன் மற்றும் முத்து லஷ்மி.
நன்றி
மயிலாடுதுறை சிவா...
Post a Comment
<< Home